images/new_theme/Promotion banner-4-2-min.jpg

 

 

   இருபதாம் நூற்றாண்டின் முதற்பாதியில் ஆர்தர் வால்கிங்டன் பிங்க் (Arthur Walkington Pink) அவர்களின் பத்திரிக்கை ஊழியம் ஆற்றிய மிகமுக்கிய பங்கு மிகக்குறைந்த அளவே கண்டுகொள்ளப்பட்டது. 1921ல் அவர் ‘வேதவாக்கியங்களில் ஆராய்ச்சி’ என்ற தலைப்பில் முழுமையாக அவரே எழுதும் ஒரு மாதாந்திரப்பத்திரிக்கையைத் தொடங்கி, முப்பது ஆண்டுகள் அதை நடத்தினார். அந்த காலக்கட்டத்தில் அவருடைய ஒட்டுமொத்த வாசகர்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கு மேல் இருந்ததில்லை. இது ஆர்தர் பிங்க் அவர்களை சோர்வுறசெய்யவே இல்லை. பரவலாகக் காணப்பட்ட ஆவிக்குறிய பெலவீனத்திற்கான குறைபாடுகளை அவர் அறிந்திருப்பதாக அவர் நம்பியதால், அவருடைய பத்திரிக்கையை முழுவதுமாக படித்த உலகமெங்கிலுமிருந்த நூற்றுக்கணக்கான வாசகர்களுக்கு ஊழியம் செய்யும்படி தன்னையே எந்த தயக்கமுமின்றி அற்பணித்தார். கிறிஸ்தவர்களில் சிறந்த அறிவையும், பரிசுத்த வாழ்க்கையையும், ஜெபத்தையும், தேவபக்தியையும் ஏற்படுத்தும்விதத்தில் வேதவிளக்கமளிக்க வேண்டுமென்பதே அவருடைய குறிக்கோளாயிருந்தது.

1952ல் அவருடைய மரணத்திற்குப்பிறகு, அவர் உண்மையாகக் காத்துக்கொண்ட அந்த சத்தியத்தை அறியவேண்டுமென்ற ஆர்வம் தட்டியெழுப்பப்பட்டபொழுது, அவருடைய படைப்புகள் பரவலாக மற்றவர்களுக்குத் தெரிய ஆரம்பித்து, பெரிதும் மதிக்கப்பட்டது. அவருடைய பத்திரிக்கையில் வெளிவந்த பல வேதவிளக்கங்கள் சமீபத்தில் உலகமுழுவதும் மறுபடியும் அச்சிடப்பட்டது.

அவருடைய படைப்புகள் வேதவிளக்கப் போதனையில் ஒரு எழுப்புதல் தீப்பொறியாயிருந்து அவருடைய வாசகர்களை பரிசுத்த ஜீவியத்திற்கு நேராய் வழி நடத்தியது. இந்த புத்தகத்தில் உள்ளக் கட்டுரைகளும் முதலாவதாக அவருடைய வேதவாக்கியங்களில் ஆராய்ச்சி என்ற மாதப்பத்திரிக்கையில் பிரசுரமானதே. இது ஆர்தர் பிங்க் அவர்கள் எழுதிய 'Profiting from the Word' என்ற ஆங்கில புத்தகத்தின் தமிழாக்கம்.

கட்டுரைகள்
More articles ...
More articles ...

தமிழ் வேதாகமம்

எங்கள் இணைத்தளத்தில் உள்ள கட்டுரைகள் மற்றும் புத்தகங்களைப் வாசகார்களின் வசதிக்காக, BSI இந்திய வேதாகம சங்கத்தாரால் வெளியிடப்பட்ட O.V. தமிழ் வேதாகமத்தின் வசனங்களை பயன்படுத்தியுள்ளோம்.

புத்தக அறிமுகம்
பரிசுத்த வேதத்தில் உள்ள ஒவ்வொரு புத்தகத்தை வாசிப்பதற்கு, முன் அந்த புத்தகத்தை குறித்த பின்னணி மற்றும் அறிமுகம் முழு அந்த புத்தகத்தை வாசிப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதை நாங்கள் உங்களுக்கு கிடைக்க செய்கிறோம்.

வாசிப்பதற்கு...
ஆடியோ மற்றும் வீடியோ
கட்டுரைகள் மற்றும் புத்தகங்களுடன் கூடுதலாக, ஆடியோ மற்றும் வீடியோகளும் இங்கே உங்களுக்குக்காக
01

ஆடியோக்கள்

YOUTUBE மூலம் இங்கே கிடைக்கும் பல ஆத்மீக செய்திகளையும், கட்டுரைகள் மற்றும் புத்தகங்களின் பதிவுகளையும் நீங்கள் கேட்கலாம்.
02

வீடியோக்கள்

YOUTUBE CHANNEL மூலம் பல கட்டுரைகள் மற்றும் புத்தகங்களின் வீடியோக்களையும் நீங்கள் காணலாம்.

Store

எங்களுடைய வெளியீட்டு புத்தகங்களை அச்சுவடிவல் பெற்றுக்கொள்ள தொடர்புக்கொள்ளுங்கள்.
புதிய புத்தகங்கள்
Intro Image
மார்ச் 09, 2026
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் மரிக்க வேண்டிய சமயம் நெருங்கியபோது, "பிதாவே, உமக்குச்...

Read More ...

Intro Image
மார்ச் 04, 2026
சுவிசேஷமே தேவன் தாம் தெரிந்துகொண்டவர்களை அழைப்பதற்குப் பயன்படுத்தும் கருவி!" என்பதே அதற்கான...

Read More ...

Intro Image
பிப்ரவரி 25, 2026
சர்வவல்லமையுள்ள தேவனுடைய உக்கிரம் மனந்திரும்பாத ஒவ்வொரு பாவியின் மீதும் தொங்கிக்கொண்டிருக்கிறது;...

Read More ...

Intro Image
பிப்ரவரி 25, 2026
"மாயையானதைப் பாராதபடி நீர் என் கண்களை விலக்கி, உமது வழிகளில் என்னை உயிர்ப்பியும்" "என் வாயின்...

Read More ...

Intro Image
பிப்ரவரி 25, 2026
நரகத்தை மனிதர்களாகிய நாம் யாரும் பார்த்ததில்லை என்றாலும், ஏறக்குறைய எல்லா மதத்தின் புனித நூல்களும் நரகத்தைப் பற்றிப்...

Read More ...

Intro Image
பிப்ரவரி 25, 2026
தமிழ் கிறிஸ்தவ திருச்சபைகளான ரோமன் கத்தோலிக்கம், லூத்தரன், மெதடிஸ்டு, சி.எஸ்.ஐ (CSI) மற்றும்...

Read More ...

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.