| 1 | அன்பை நாடுங்கள்; ஞானவரங்களையும் விரும்புங்கள்; விசேஷமாய்த் தீர்க்கதரிசன வரத்தை விரும்புங்கள். | நீதி 15:9 நீதி 21:21 ஏசா 51:1 ரோம 9:30 ரோம 14:19 1தீமோ 5:10 1தீமோ 6:11 எபிரெ 12:14 1பேது 3:11-13 3யோவா 1:11 |
| 2 | ஏனெனில், அந்நிய பாஷையில் பேசுகிறவன், ஆவியினாலே இரகசியங்களைப் பேசினாலும், அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாதிருக்கிறபடியினாலே, அவன் மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான். | 1கொரி 14:9-11 1கொரி 14:16-11 1கொரி 14:21-11 1கொரி 14:22-11 ஆதி 11:7 ஆதி 42:23 உபா 28:49 2இரா 18:26 அப் 2:4-11 அப் 10:46 அப் 19:6 |
| 3 | தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவனோ மனுஷருக்கு பக்திவிருத்தியும், புத்தியும், ஆறுதலும் உண்டாகத்தக்கதாகப் பேசுகிறான். | 1கொரி 14:4 1கொரி 14:12 1கொரி 14:26 1கொரி 8:1 1கொரி 10:23 அப் 9:31 ரோம 14:19 ரோம 15:2 எபே 4:12-16 எபே 4:29-16 1தெச 5:11 1தீமோ 1:4 யூதா 1:20 |
| 4 | அந்நியப்பாஷையில் பேசுகிறவன் தனக்கே பக்திவிருத்தி உண்டாகப்பேசுகிறான்; தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவனோ சபைக்கு பக்திவிருத்தி உண்டாகப்பேசுகிறான். | 1கொரி 14:3 1கொரி 14:18 1கொரி 14:19 |
| 5 | நீங்களெல்லாரும் அந்நியபாஷைகளைப் பேசும்படி விரும்புகிறேன்; ஆகிலும், அந்நியபாஷைகளில் பேசுகிறவன் சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகும்படிக்கு அர்த்தத்தையும் சொல்லாவிட்டால், தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவன் அவனிலும் மேன்மையுள்ளவன்; ஆதலால் நீங்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவர்களாகவேண்டுமென்று அதிகமாய் விரும்புகிறேன். | 1கொரி 12:28-30 1கொரி 13:4 எண் 11:28 எண் 11:29 |
| 6 | மேலும், சகோதரரே, நான் உங்களிடத்தில் வந்து உங்களுக்கு இரகசியங்களை வெளிப்படுத்துவதற்காவது, அறிவுண்டாக்குவதற்காவது, தீர்க்கதரிசனத்தை அறிவிக்கிறதற்காவது, போதகத்தைப் போதிக்கிறதற்காவது ஏதுவானதைச் சொல்லாமல், அந்நியபாஷைகளில் பேசினால் என்னாலே உங்களுக்குப் பிரயோஜனம் என்ன? | 1கொரி 10:33 1கொரி 12:7 1கொரி 13:3 1சாமு 12:21 எரே 16:19 எரே 23:32 மத் 16:26 2தீமோ 2:14 தீத் 3:8 எபிரெ 13:9 |
| 7 | அப்படியே புல்லாங்குழல், சுரமண்டலம் முதலாகிய சத்தமிடுகிற உயிரில்லாத வாத்தியங்கள் தொனிகளில் வித்தியாசம் காட்டாவிட்டால், குழலாலே ஊதப்படுகிறதும், சுரமண்டலத்தாலே வாசிக்கப்படுகிறதும் இன்னதென்று எப்படித் தெரியும்? | 1கொரி 13:1 |
| 8 | அந்தப்படி எக்காளமும் விளங்காத சத்தமிட்டால் எவன் யுத்தத்திற்கு ஆயத்தம்பண்ணுவான்? | எண் 10:9 யோசு 6:4-20 நியா 7:16-18 நெகே 4:18-21 யோபு 39:24 யோபு 39:25 ஏசா 27:13 ஆமோ 3:6 எபே 6:11-18 |
| 9 | அதுபோல, நீங்களும் தெளிவான பேச்சை நாவினால் வசனியாவிட்டால் பேசப்பட்டது இன்னதென்று எப்படித் தெரியும்? ஆகாயத்தில் பேசுகிறவர்களாயிருப்பீர்களே. | 1கொரி 9:26 |
| 10 | உலகத்திலே எத்தனையோவிதமான பாஷைகள் உண்டாயிருக்கிறது, அவைகளில் ஒன்றும் அர்த்தமில்லாததல்ல. |
| 11 | ஆயினும், பாஷையின் கருத்தை நான் அறியாமலிருந்தால், பேசுகிறவனுக்கு அந்நியனாயிருப்பேன், பேசுகிறவனும் எனக்கு அந்நியனாயிருப்பான். | 1கொரி 14:21 அப் 28:2 அப் 28:4 ரோம 1:14 கொலோ 3:11 |
| 12 | நீங்களும் ஆவிக்குரிய வரங்களை நாடுகிறவர்களானபடியால், சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகத்தக்கதாக அவைகளில் தேறும்படி நாடுங்கள்; | 1கொரி 14:1 1கொரி 12:7 1கொரி 12:31 தீத் 2:14 |
| 13 | அந்தப்படி அந்நியபாஷையில் பேசுகிறவன் அதின் அர்த்தத்தையும் சொல்லத்தக்கதாக விண்ணப்பம் பண்ணக்கடவன். | 1கொரி 14:27 1கொரி 14:28 1கொரி 12:10 1கொரி 12:30 மாற் 11:24 யோவா 14:13 யோவா 14:14 அப் 1:14 அப் 4:29-31 அப் 8:15 |
| 14 | என்னத்தினாலெனில், நான் அந்நியபாஷையிலே விண்ணப்பம்பண்ணினால் என் ஆவி விண்ணப்பம்பண்ணுமேயன்றி, என் கருத்து பயனற்றதாயிருக்கும். | 1கொரி 14:2 1கொரி 14:15 1கொரி 14:16 1கொரி 14:19 |
| 15 | இப்படியிருக்க, செய்யவேண்டுவதென்ன? நான் ஆவியோடும் விண்ணப்பம்பண்ணுவேன்; கருத்தோடும் விண்ணப்பம்பண்ணுவேன்; நான் ஆவியோடும் பாடுவேன், கருத்தோடும் பாடுவேன். | 1கொரி 10:19 ரோம 3:5 ரோம 8:31 பிலிப் 1:18 |
| 16 | இல்லாவிட்டால், நீ ஆவியோடு ஸ்தோத்திரம்பண்ணும்போது, கல்லாதவன் உன் ஸ்தோத்திரத்திற்கு ஆமென் என்று எப்படிச் சொல்லுவான்? நீ பேசுகிறது இன்னதென்று அவன் அறியானே. | 1கொரி 14:2 1கொரி 14:14 |
| 17 | நீ நன்றாய் ஸ்தோத்திரம்பண்ணுகிறாய், ஆகிலும் மற்றவன் பக்திவிருத்தியடையமாட்டானே. | 1கொரி 14:4 1கொரி 14:6 |
| 18 | உங்களெல்லாரிலும் நான் அதிகமாய்ப் பாஷைகளைப் பேசுகிறேன், இதற்காக என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன். | 1கொரி 1:4-6 1கொரி 4:7 |
| 19 | அப்படியிருந்தும், நான் சபையிலே அந்நியபாஷையில் பதினாயிரம் வார்த்தைகளைப் பேசுகிறதிலும், மற்றவர்களை உணர்த்தும்படி என் கருத்தோடே ஐந்து வார்த்தைகளைப் பேசுகிறதே எனக்கு அதிக விருப்பமாயிருக்கும். | 1கொரி 14:4 1கொரி 14:21 1கொரி 14:22 |
| 20 | சகோதரரே, நீங்கள் புத்தியிலே குழந்தைகளாயிராதேயுங்கள்; துர்க்குணத்திலே குழந்தைகளாயும், புத்தியிலோ தேறினவர்களாயுமிருங்கள். | 1கொரி 3:1 1கொரி 3:2 1கொரி 13:11 சங் 119:99 ஏசா 11:3 ரோம 16:19 எபே 4:14 எபே 4:15 பிலிப் 1:9 எபிரெ 5:12 எபிரெ 5:13 எபிரெ 6:1-3 2பேது 3:18 |
| 21 | மறுபாஷைக்காரராலும், மறுவுதடுகளாலும் இந்த ஜனங்களிடத்தில் பேசுவேன்; ஆகிலும் அவர்கள் எனக்குச் செவிகொடுப்பதில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார் என்று வேதத்தில் எழுதியிருக்கிறதே. | யோவா 10:34 ரோம 3:19 |
| 22 | அப்படியிருக்க, அந்நியபாஷைகள் விசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல், அவிசுவாசிகளுக்கு அடையாளமாயிருக்கிறது; தீர்க்கதரிசனமோ அவிசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல், விசுவாசிகளுக்கு அடையாளமாயிருக்கிறது. | மாற் 16:17 அப் 2:6-12 அப் 2:32-36 |
| 23 | ஆகையால், சபையாரெல்லாரும் ஏகமாய்க் கூடிவந்து, எல்லாரும் அந்நியபாஷைகளிலே பேசிக்கொள்ளும்போது, கல்லாதவர்களாவது, அவிசுவாசிகளாவது உள்ளே பிரவேசித்தால், அவர்கள் உங்களைப் பைத்தியம் பிடித்தவர்களென்பார்களல்லவா? | 1கொரி 11:18 |
| 24 | எல்லாரும் தீர்க்கதரிசனஞ் சொல்லுகையில், அவிசுவாசியொருவன், அல்லது கல்லாதவனொருவன், உள்ளே பிரவேசித்தால், அவன் எல்லாராலும் உணர்த்துவிக்கப்பட்டும், எல்லாராலும் நிதானிக்கப்பட்டும் இருப்பான். | 1கொரி 2:15 யோவா 1:47-49 யோவா 4:29 அப் 2:37 எபிரெ 4:12 எபிரெ 4:13 |
| 25 | அவனுடைய இருதயத்தின் அந்தரங்கங்களும் வெளியரங்கமாகும்; அவன் முகங்குப்புற விழுந்து, தேவனைப்பணிந்துகொண்டு, தேவன் மெய்யாய் உங்களுக்குள்ளே இருக்கிறாரென்று அறிக்கையிடுவான். | ஆதி 44:14 உபா 9:18 சங் 72:11 ஏசா 60:14 லூக் 5:8 லூக் 8:28 வெளிப் 5:8 வெளிப் 19:4 |
| 26 | நீங்கள் கூடிவந்திருக்கிறபோது, உங்களில் ஒருவன் சங்கீதம் பாடுகிறான், ஒருவன் போதகம் பண்ணுகிறான், ஒருவன் அந்நியபாஷையைப் பேசுகிறான், ஒருவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான், ஒருவன் வியாக்கியானம்பண்ணுகிறான். சகோதரரே, இது என்ன? சகலமும் பக்திவிருத்திக்கேதுவாகச் செய்யப்படக்கடவது. | 1கொரி 14:6 1கொரி 12:8-10 |
| 27 | யாராவது அந்நியபாஷையிலே பேசுகிறதுண்டானால், அது இரண்டுபேர்மட்டில், அல்லது மிஞ்சினால் மூன்றுபேர்மட்டில் அடங்கவும், அவர்கள் ஒவ்வொருவராய்ப் பேசவும், ஒருவன் அர்த்தத்தைச் சொல்லவும் வேண்டும். |
| 28 | அர்த்தஞ் சொல்லுகிறவனில்லாவிட்டால், சபையிலே பேசாமல், தனக்கும் தேவனுக்கும் தெரியப் பேசக்கடவன். |
| 29 | தீர்க்கதரிசிகள் இரண்டு பேராவது மூன்றுபேராவது பேசலாம், மற்றவர்கள் நிதானிக்கக்கடவர்கள். | 1கொரி 14:39 1கொரி 12:10 1தெச 5:19-21 1யோவா 4:1-3 |
| 30 | அங்கே உட்கார்ந்திருக்கிற மற்றொருவனுக்கு ஏதாகிலும் வெளிப்படுத்தப்பட்டால், முந்திப் பேசினவன் பேசாமலிருக்கக்கடவன். | 1கொரி 14:6 1கொரி 14:26 |
| 31 | எல்லாரும் கற்கிறதற்கும் எல்லாரும் தேறுகிறதற்கும், நீங்கள் அனைவரும் ஒவ்வொருவராகத் தீர்க்கதரிசனஞ்சொல்லலாம். | 1கொரி 14:3 1கொரி 14:19 1கொரி 14:35 நீதி 1:5 நீதி 9:9 எபே 4:11 எபே 4:12 |
| 32 | தீர்க்கதரிசிகளுடைய ஆவிகள் தீர்க்கதரிசிகளுக்கு அடங்கியிருக்கிறதே. | 1கொரி 14:29 1கொரி 14:30 1சாமு 10:10-13 1சாமு 19:19-24 2இரா 2:3 2இரா 2:5 யோபு 32:8-11 எரே 20:9 அப் 4:19 அப் 4:20 1யோவா 4:1 |
| 33 | தேவன் கலகத்திற்குத் தேவனாயிராமல், சமாதானத்திற்குத் தேவனாயிருக்கிறார்; பரிசுத்தவான்களுடைய சபைகளெல்லாவற்றிலேயும் அப்படியே இருக்கிறது. | 1கொரி 7:15 லூக் 2:14 ரோம 15:33 கலா 5:22 2தெச 3:16 எபிரெ 13:20 யாக் 3:17 யாக் 3:18 |
| 34 | சபைகளில் உங்கள் ஸ்திரீகள் பேசாமலிருக்கக்கடவர்கள்; பேசும்படிக்கு அவர்களுக்கு உத்தரவில்லை; அவர்கள் அமர்ந்திருக்கவேண்டும்; வேதமும் அப்படியே சொல்லுகிறது. | 1கொரி 11:5 1தீமோ 2:11 1தீமோ 2:12 |
| 35 | அவர்கள் ஒரு காரியத்தைக் கற்றுக்கொள்ளவிரும்பினால், வீட்டிலே தங்கள் புருஷரிடத்தில் விசாரிக்கக்கடவர்கள்; ஸ்திரீகள் சபையிலே பேசுகிறது அயோக்கியமாயிருக்குமே. | எபே 5:25-27 1பேது 3:7 |
| 36 | தேவவசனம் உங்களிடத்திலிருந்தா புறப்பட்டது? அது உங்களிடத்துக்கு மாத்திரமா வந்தது? | ஏசா 2:3 மீகா 4:1 மீகா 4:2 சகரி 14:8 அப் 13:1-3 அப் 15:35 அப் 15:36 அப் 16:9 அப் 16:10 அப் 17:1 அப் 17:10 அப் 17:11 அப் 17:15 அப் 18:1-17 2கொரி 10:13-16 1தெச 1:8 |
| 37 | ஒருவன் தன்னைத் தீர்க்கதரிசியென்றாவது, ஆவியைப் பெற்றவனென்றாவது எண்ணினால், நான் உங்களுக்கு எழுதுகிறவைகள் கர்த்தருடைய கற்பனைகளென்று அவன் ஒத்துக்கொள்ளக்கடவன். | 1கொரி 8:2 1கொரி 13:1-3 எண் 24:3 எண் 24:4 எண் 24:16 ரோம 12:3 2கொரி 10:7 2கொரி 10:12 2கொரி 11:4 2கொரி 11:12-15 கலா 6:8 |
| 38 | ஒருவன் அறியாதவனாயிருந்தால், அவன் அறியாதவனாயிருக்கட்டும். | ஓசி 4:17 மத் 7:6 மத் 15:14 1தீமோ 6:3-5 2தீமோ 4:3 2தீமோ 4:4 வெளிப் 22:11 வெளிப் 22:12 |
| 39 | இப்படியிருக்க, சகோதரரே, தீர்க்கதரிசனஞ்சொல்ல நாடுங்கள், அந்நியபாஷைகளைப் பேசுகிறதற்கும் தடைபண்ணாதிருங்கள். | 1கொரி 14:1 1கொரி 14:3 1கொரி 14:5 1கொரி 14:24 1கொரி 14:25 1கொரி 12:31 1தெச 5:20 |
| 40 | சகலமும் நல்லொழுக்கமாயும் கிரமமாயும் செய்யப்படக்கடவது. | 1கொரி 14:26-33 1கொரி 11:34 ரோம 13:13 கொலோ 2:5 தீத் 1:5 |