| 1 | அன்றியும், சகோதரரே, நான் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தை மறுபடியும் உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்; நீங்களும் அதை ஏற்றுக்கொண்டு, அதிலே நிலைத்திருக்கிறீர்கள். | 1கொரி 15:3-11 1கொரி 1:23 1கொரி 1:24 1கொரி 2:2-7 அப் 18:4 அப் 18:5 கலா 1:6-12 |
| 2 | நான் உங்களுக்குப் பிரசங்கித்தபிரகாரமாய், நீங்கள் அதைக் கைக்கொண்டிருந்தால், அதினாலே நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள்; மற்றப்படி உங்கள் விசுவாசம் விருதாவாயிருக்குமே. | 1கொரி 1:18 1கொரி 1:21 அப் 2:47 ரோம 1:16 2கொரி 2:15 எபே 2:8 2தீமோ 1:9 |
| 3 | நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, | 1கொரி 4:1 1கொரி 4:2 1கொரி 11:2 1கொரி 11:23 எசே 3:17 மத் 20:18 மத் 20:19 மாற் 16:15 மாற் 16:16 லூக் 24:46 லூக் 24:47 கலா 1:12 |
| 4 | அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம்நாளில் உயிர்த்தெழுந்து, | ஏசா 53:9 மத் 27:57-60 மாற் 15:43-46 லூக் 23:50-53 யோவா 19:38-42 அப் 13:29 ரோம 6:4 கொலோ 2:12 |
| 5 | கேபாவுக்கும், பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார். | லூக் 24:34 லூக் 24:35 |
| 6 | அதன்பின்பு அவர் ஐந்நூறுபேருக்கு அதிகமான சகோதரருக்கும் ஒரேவேளையில் தரிசனமானார்; அவர்களில் அநேகர் இந்நாள்வரைக்கும் இருக்கிறார்கள், சிலர் மாத்திரம் நித்திரையடைந்தார்கள். | மத் 28:10 மத் 28:16 மத் 28:17 மாற் 16:7 |
| 7 | பின்பு யாக்கோபுக்கும், அதன்பின்பு அப்போஸ்தலரெல்லாருக்கும் தரிசனமானார். | லூக் 24:50 அப் 1:2-12 |
| 8 | எல்லாருக்கும் பின்பு, அகாலப்பிறவிபோன்ற எனக்கும் தரிசனமானார். | 1கொரி 9:1 அப் 9:3-5 அப் 9:17-5 அப் 18:9 அப் 22:14 அப் 22:18 அப் 26:16 2கொரி 12:1-6 |
| 9 | நான் அப்போஸ்தலரெல்லாரிலும் சிறியவனாயிருக்கிறேன்; தேவனுடைய சபையைத் துன்பப்படுத்தினதினாலே, நான் அப்போஸ்தலனென்று பேர்பெறுவதற்கும் பாத்திரன் அல்ல. | 2கொரி 11:5 2கொரி 12:11 எபே 3:7 எபே 3:8 |
| 10 | ஆகிலும் நான் இருக்கிறது தேவகிருபையினாலே இருக்கிறேன்; அவர் எனக்கு அருளிய கிருபை விருதாவாயிருக்கவில்லை; அவர்களெல்லாரிலும் நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டேன்; ஆகிலும் நான் அல்ல, என்னுடனே இருக்கிற தேவகிருபையே அப்படிச் செய்தது. | 1கொரி 4:7 ரோம 11:1 ரோம 11:5 ரோம 11:6 எபே 2:7 எபே 2:8 எபே 3:7 எபே 3:8 1தீமோ 1:15 1தீமோ 1:16 |
| 11 | ஆகையால் நானாகிலும் அவர்களாகிலும் இப்படியே பிரசங்கித்துவருகிறோம், நீங்களும் இப்படியே விசுவாசித்திருக்கிறீர்கள். | 1கொரி 15:3 1கொரி 15:4 1கொரி 2:2 |
| 12 | கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்தாரென்று பிரசங்கிக்கப்பட்டிருக்க, மரித்தோரின் உயிர்தெழுதலில்லையென்று உங்களில் சிலர் எப்படிச் சொல்லலாம்? | 1கொரி 15:13-19 அப் 26:8 2தெச 2:17 |
| 13 | மரித்தோரின் உயிர்த்தெழுதலில்லாவிட்டால், கிறிஸ்துவும் எழுந்திருக்கவில்லையே. | 1கொரி 15:20 யோவா 11:25 யோவா 11:26 அப் 23:8 ரோம 4:24 ரோம 4:25 ரோம 8:11 ரோம 8:23 2கொரி 4:10-14 கொலோ 3:1-4 1தெச 4:14 2தீமோ 4:8 எபிரெ 2:14 எபிரெ 13:20 1பேது 1:3 வெளிப் 1:18 |
| 14 | கிறிஸ்து எழுந்திருக்கவில்லையென்றால், எங்கள் பிரசங்கமும் விருதா, உங்கள் விசுவாசமும் விருதா. | 1கொரி 15:2 1கொரி 15:17 சங் 73:13 ஏசா 49:4 ஆதி 8:8 மத் 15:9 அப் 17:31 கலா 2:2 யாக் 1:26 யாக் 2:20 |
| 15 | மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், தேவன் எழுப்பாத கிறிஸ்துவை அவர் எழுப்பினாரென்று நாங்கள் தேவனைக்குறித்துச் சாட்சிசொன்னதினாலே, தேவனுக்காகப் பொய்ச்சாட்சி சொல்லுகிறவர்களாகவும் காணப்படுவோமே. | யாத் 23:3 யோபு 13:7-10 ரோம 3:7 ரோம 3:8 |
| 16 | மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், கிறிஸ்துவும் எழுந்திருக்கவில்லை. |
| 17 | கிறிஸ்து எழுந்திராவிட்டால், உங்கள் விசுவாசம் வீணாயிருக்கும்; நீங்கள் இன்னும் உங்கள் பாவங்களில் இருப்பீர்கள். | 1கொரி 15:2 1கொரி 15:14 ரோம 4:25 |
| 18 | கிறிஸ்துவுக்குள் நித்திரையடைந்தவர்களும் கெட்டிருப்பார்களே. | 1கொரி 15:6 1தெச 4:13 1தெச 4:14 வெளிப் 14:13 |
| 19 | இம்மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம். | சங் 17:14 பிரச 6:11 பிரச 9:9 லூக் 8:14 லூக் 21:34 1கொரி 6:3 1கொரி 6:4 2தீமோ 2:4 |
| 20 | கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்தெழுந்து, நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார். | 1கொரி 15:23 அப் 26:23 ரோம 8:11 கொலோ 1:18 1பேது 1:3 வெளிப் 1:5 |
| 21 | மனுஷனால் மரணம் உண்டானபடியால், மனுஷனால் மரித்தோரின் உயிர்த்தெழுதலும் உண்டாயிற்று. | 1கொரி 15:22 ரோம 5:12-17 |
| 22 | ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள். | 1கொரி 15:45-49 ஆதி 2:17 ஆதி 3:6 ஆதி 3:19 யோவா 5:21-29 ரோம 5:12-21 |
| 23 | அவனவன் தன்தன் வரிசையிலே உயிர்ப்பிக்கப்படுவான், முதற்பலனானவர் கிறிஸ்து; பின்பு அவர் வருகையில் அவருடையவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள். | 1கொரி 15:20 ஏசா 26:19 1தெச 4:15-17 |
| 24 | அதன்பின்பு முடிவு உண்டாகும்; அப்பொழுது அவர் சகல துரைத்தனத்தையும் சகல அதிகாரத்தையும் வல்லமையையும் பரிகரித்து, தேவனும் பிதாவுமாயிருக்கிறவருக்கு ராஜ்யத்தை ஒப்புக்கொடுப்பார். | தானி 12:4 தானி 12:9 தானி 12:13 மத் 10:22 மத் 13:39 மத் 13:40 மத் 24:13 1பேது 4:7 |
| 25 | எல்லாச் சத்துருக்களையும் தமது பாதத்திற்குக் கீழாக்கிப்போடும்வரைக்கும், அவர் ஆளுகை செய்யவேண்டியது. | சங் 2:6-10 சங் 45:3-6 சங் 110:1 மத் 22:44 மாற் 12:36 லூக் 20:42 லூக் 20:43 அப் 2:34 எபே 1:22 எபிரெ 1:13 எபிரெ 10:12 எபிரெ 10:13 |
| 26 | பரிகரிக்கப்படுங்கடைசிச் சத்துரு மரணம். | 1கொரி 15:55 ஏசா 25:8 ஓசி 13:14 லூக் 20:36 2தீமோ 1:10 எபிரெ 2:14 வெளிப் 20:14 வெளிப் 21:4 |
| 27 | சகலத்தையும் அவருடைய பாதத்திற்குக் கீழ்ப்படுத்தினாரே; ஆகிலும் சகலமும் அவருக்குக் கீழ்ப்படுத்தப்பட்டதென்று சொல்லியிருக்கும்போது, சகலத்தையும் அவருக்குக் கீழ்ப்படுத்தினவர் கீழ்ப்படுத்தப்படவில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது. | சங் 8:6 மத் 11:27 மத் 28:18 யோவா 3:35 யோவா 13:3 எபே 1:20 பிலிப் 2:9-11 எபிரெ 1:13 எபிரெ 2:8 எபிரெ 10:12 1பேது 3:22 வெளிப் 1:18 |
| 28 | சகலமும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும்போது, தேவனே சகலத்திலும் சகலமுமாயிருப்பதற்கு, குமாரன் தாமும் தமக்குச் சகலத்தையும் கீழ்ப்படுத்தினவருக்குக் கீழ்ப்பட்டிருப்பார். | சங் 2:8 சங் 2:9 சங் 18:39 சங் 18:47 சங் 21:8 சங் 21:9 தானி 2:34 தானி 2:35 தானி 2:40-45 மத் 13:41-43 பிலிப் 3:21 வெளிப் 19:11-21 வெளிப் 20:2-4 வெளிப் 20:10-15 |
| 29 | மேலும் மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், மரித்தவர்களுக்காக ஞானஸ்நானம் பெறுகிறவர்கள் என்ன செய்வார்கள்? மரித்தவர்களுக்காக ஏன் ஞானஸ்நானம் பெறுகிறார்கள்? | 1கொரி 15:16 1கொரி 15:32 ரோம 6:3 ரோம 6:4 மத் 20:22 |
| 30 | நாங்களும் ஏன் எந்நேரமும் நாசமோசத்திற்கு ஏதுவாயிருக்கிறோம்? | 1கொரி 15:31 ரோம 8:36-39 2கொரி 4:7-12 2கொரி 6:9 2கொரி 11:23-27 கலா 5:11 |
| 31 | நான் அநுதினமும் சாகிறேன்; அதை நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவினால் உங்களைக்குறித்து, நான் பாராட்டுகிற மேன்மையைக்கொண்டு சத்தியமாய்ச் சொல்லுகிறேன். | ஆதி 43:3 1சாமு 8:9 எரே 11:7 சகரி 3:6 பிலிப் 3:3 |
| 32 | நான் எபேசுவிலே துஷ்டமிருகங்களுடனே போராடினேனென்று மனுஷர் வழக்கமாய்ச் சொல்லுகிறேன்; அப்படிப் போராடினதினாலே எனக்குப் பிரயோஜனமென்ன? மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், புசிப்போம் குடிப்போம், நாளைக்குச் சாவோம் என்று சொல்லலாமே? | ரோம 6:19 கலா 3:15 |
| 33 | மோசம்போகாதிருங்கள்; ஆகாதசம்பாஷணைகள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும். | 1கொரி 6:9 மத் 24:4 மத் 24:11 மத் 24:24 கலா 6:7 எபே 5:6 2தெச 2:10 வெளிப் 12:9 வெளிப் 13:8-14 |
| 34 | நீங்கள் பாவஞ்செய்யாமல் நீதிக்கேற்க விழித்துக்கொண்டு, தெளிந்தவர்களாயிருங்கள்; சிலர் தேவனைப்பற்றி அறிவில்லாதிருக்கிறார்களே; உங்களுக்கு வெட்கமுண்டாக இதைச் சொல்லுகிறேன். | யோவே 1:5 யோனா 1:6 ரோம 13:11 எபே 5:14 |
| 35 | ஆகிலும், மரித்தோர் எப்படி எழுந்திருப்பார்கள், எப்படிப்பட்ட சரீரத்தோடே வருவார்களென்று ஒருவன் சொல்வானாகில், | யோபு 11:12 யோபு 22:13 சங் 73:11 பிரச 11:5 எசே 37:3 எசே 37:11 யோவா 3:4 யோவா 3:9 யோவா 9:10 |
| 36 | புத்தியீனனே, நீ விதைக்கிற விதை செத்தாலொழிய உயிர்க்கமாட்டாதே. | லூக் 12:20 லூக் 24:25 ரோம 1:22 எபே 5:15 |
| 37 | நீ விதைக்கிறபோது, இனி உண்டாகும் மேனியை விதையாமல், கோதுமை, அல்லது மற்றொரு தானியத்தினுடைய வெறும் விதையையே விதைக்கிறாய். |
| 38 | அதற்கு தேவன் தமது சித்தத்தின்படியே மேனியைக் கொடுக்கிறார்; விதை வகைகள் ஒவ்வொன்றிற்கும் அதற்கேற்ற மேனியையே கொடுக்கிறார். | 1கொரி 3:7 ஆதி 1:11 ஆதி 1:12 சங் 104:14 ஏசா 61:11 மாற் 4:26-29 |
| 39 | எல்லா மாம்சமும் ஒரேவிதமான மாம்சமல்ல; மனுஷருடைய மாம்சம் வேறே, மிருகங்களுடைய மாம்சம் வேறே, மச்சங்களுடைய மாம்சம் வேறே, பறவைகளுடைய மாம்சம் வேறே. | ஆதி 1:20-26 |
| 40 | வானத்துக்குரிய மேனிகளுமுண்டு, பூமிக்குரிய மேனிகளுமுண்டு; வானத்துக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறே, பூமிக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறே; |
| 41 | சூரியனுடைய மகிமையும் வேறே, சந்திரனுடைய மகிமையும் வேறே, நட்சத்திரங்களுடைய மகிமையும் வேறே, மகிமையிலே நட்சத்திரத்துக்கு நட்சத்திரம் விசேஷித்திருக்கிறது. | ஆதி 1:14 உபா 4:19 யோபு 31:26 சங் 8:3 சங் 19:4-6 சங் 148:3-5 ஏசா 24:23 |
| 42 | மரித்தோரின் உயிர்த்தெழுதலும் அப்படியே இருக்கும். அழிவுள்ளதாய் விதைக்கப்படும், அழிவில்லாததாய் எழுந்திருக்கும்; | 1கொரி 15:50-54 தானி 12:3 மத் 13:43 பிலிப் 3:20 பிலிப் 3:21 |
| 43 | கனவீனமுள்ளதாய் விதைக்கப்படும், மகிமையுள்ளதாய் எழுந்திருக்கும்; பலவீனமுள்ளதாய் விதைக்கப்படும், பலமுள்ளதாய் எழுந்திருக்கும். | தானி 12:1 மத் 13:43 பிலிப் 3:20 பிலிப் 3:21 |
| 44 | ஜென்மசரீரம் விதைக்கப்படும், ஆவிக்குரிய சரீரம் எழுந்திருக்கும்; ஜென்மசரீரமுமுண்டு, ஆவிக்குரிய சரீரமுமுண்டு. | லூக் 24:31 யோவா 20:19 யோவா 20:26 |
| 45 | அந்தப்படியே முந்தின மனுஷனாகிய ஆதாம் ஜீவாத்துமாவானான் என்றெழுதியிருக்கிறது; பிந்தின ஆதாம் உயிர்ப்பிக்கிற ஆவியானார். | 1கொரி 15:47-49 ஆதி 2:7 ரோம 5:12-14 வெளிப் 16:3 |
| 46 | ஆகிலும் ஆவிக்குரிய சரீரம் முந்தினதல்ல, ஜென்மசரீரமே முந்தினது; ஆவிக்குரிய சரீரம் பிந்தினது. | ரோம 6:6 எபே 4:22-24 கொலோ 3:9 கொலோ 3:10 |
| 47 | முந்தின மனுஷன் பூமியிலிருந்துண்டான மண்ணானவன்; இரண்டாம் மனுஷன் வானத்திலிருந்து வந்த கர்த்தர். | 1கொரி 15:45 ஆதி 2:7 ஆதி 3:19 யோவா 3:13 யோவா 3:31 2கொரி 5:1 |
| 48 | மண்ணானவன் எப்படிப்பட்டவனோ மண்ணானவர்களும் அப்படிப்பட்டவர்களே; வானத்துக்குரியவர் எப்படிப்பட்டவரோ, வானத்துக்குரியவர்களும் அப்படிப்பட்டவர்களே. | 1கொரி 15:21 1கொரி 15:22 ஆதி 5:3 யோபு 14:4 யோவா 3:6 ரோம 5:12-21 |
| 49 | மேலும் மண்ணானவனுடைய சாயலை நாம் அணிந்திருக்கிறதுபோல, வானவருடைய சாயலையும் அணிந்துகொள்ளுவோம். | ஆதி 5:3 |
| 50 | சகோதரரே, நான் சொல்லுகிறதென்னவெனில், மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிக்கமாட்டாது; அழிவுள்ளது அழியாமையைச் சுதந்தரிப்பதுமில்லை. | 1கொரி 1:12 1கொரி 7:29 2கொரி 9:6 கலா 3:17 கலா 5:16 எபே 4:17 கொலோ 2:4 |
| 51 | இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம். | 1கொரி 2:7 1கொரி 4:1 1கொரி 13:2 எபே 1:9 எபே 3:3 எபே 5:32 |
| 52 | எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம். | யாத் 33:5 எண் 16:21 எண் 16:45 சங் 73:19 2பேது 3:10 |
| 53 | அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளவேண்டும். | ரோம 13:12-14 2கொரி 5:2-4 கலா 3:27 எபே 4:24 1யோவா 3:2 |
| 54 | அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறைவேறும். | ரோம 2:7 ரோம 6:12 ரோம 8:11 2கொரி 4:11 2தெச 1:10 |
| 55 | மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே? | ஓசி 13:14 |
| 56 | மரணத்தின் கூர் பாவம், பாவத்தின் பெலன் நியாயப்பிரமாணம். | ஆதி 3:17-19 சங் 90:3-11 நீதி 14:32 யோவா 8:21 யோவா 8:24 ரோம 5:15 ரோம 5:17 ரோம 6:23 எபிரெ 9:27 |
| 57 | நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம். | அப் 27:35 ரோம 7:25 2கொரி 1:11 2கொரி 2:14 2கொரி 9:15 எபே 5:20 |
| 58 | ஆகையால், எனக்குப் பிரியமான சகோதரரே, கர்த்தருக்குள் நீங்கள் படுகிறபிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக. | 2கொரி 7:1 2பேது 1:4-9 2பேது 3:14 |