| 1 | நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால், சத்தமிடுகிற வெண்கலம்போலவும், ஓசையிடுகிற கைத்தாளம்போலவும் இருப்பேன். | 1கொரி 13:2 1கொரி 13:3 1கொரி 12:8 1கொரி 12:16 1கொரி 12:29 1கொரி 12:30 1கொரி 14:6 2கொரி 12:4 2பேது 2:18 |
| 2 | நான் தீர்க்கதரிசன வரத்தை உடையவனாயிருந்து, சகல இரகசியங்களையும், சகல அறிவையும் அறிந்தாலும், மலைகளைப் பேர்க்கத்தக்கதாக சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை. | 1கொரி 12:8-10 1கொரி 12:28-10 1கொரி 14:1 1கொரி 14:6-9 எண் 24:15-24 மத் 7:22 மத் 7:23 |
| 3 | எனக்கு உண்டான யாவற்றையும் நான் அன்னதானம்பண்ணினாலும், என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் எனக்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை. | மத் 6:1-4 மத் 23:5 லூக் 18:22 லூக் 18:28 லூக் 19:8 லூக் 21:3 லூக் 21:4 யோவா 12:43 கலா 5:26 பிலிப் 1:15-18 |
| 4 | அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது, | நீதி 10:12 2கொரி 6:6 கலா 5:22 எபே 4:2 கொலோ 1:11 கொலோ 3:12 2தீமோ 2:25 2தீமோ 3:10 2தீமோ 4:2 யாக் 3:17 1பேது 4:8 |
| 5 | அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது, | 1கொரி 7:36 1கொரி 11:13-16 1கொரி 11:18-16 1கொரி 11:21-16 1கொரி 11:22-16 1கொரி 14:33-40 ஏசா 3:5 பிலிப் 4:8 2தெச 3:7 |
| 6 | அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும். | 1சாமு 23:19-21 2சாமு 4:10-12 சங் 10:3 சங் 119:136 நீதி 14:9 எரே 9:1 எரே 13:17 எரே 20:10 ஓசி 4:8 ஓசி 7:3 மீகா 7:8 லூக் 19:41 லூக் 19:42 லூக் 22:5 ரோம 1:32 பிலிப் 3:18 |
| 7 | சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும். | 1கொரி 13:4 எண் 11:12-14 உபா 1:9 நீதி 10:12 உன்ன 8:6 உன்ன 8:7 ரோம 15:1 கலா 6:2 எபிரெ 13:13 1பேது 2:24 1பேது 4:8 |
| 8 | அன்பு ஒருக்காலும் ஒழியாது. தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம், அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோகும், அறிவானாலும் ஒழிந்துபோம். | 1கொரி 13:10 1கொரி 13:13 லூக் 22:32 கலா 5:6 |
| 9 | நம்முடைய அறிவு குறைவுள்ளது, நாம் தீர்க்கதரிசனஞ்சொல்லுதலும் குறைவுள்ளது. | 1கொரி 13:12 1கொரி 2:9 1கொரி 8:2 யோபு 11:7 யோபு 11:8 யோபு 26:14 சங் 40:5 சங் 139:6 நீதி 30:4 மத் 11:27 ரோம 11:34 எபே 3:8 எபே 3:18 எபே 3:19 கொலோ 2:2 கொலோ 2:3 1பேது 1:10-12 1யோவா 3:2 |
| 10 | நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம். | 1கொரி 13:12 ஏசா 24:23 ஏசா 60:19 ஏசா 60:20 2கொரி 5:7 2கொரி 5:8 வெளிப் 21:22 வெளிப் 21:23 வெளிப் 22:4 வெளிப் 22:5 |
| 11 | நான் குழந்தையாயிருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன், குழந்தையைப்போலச் சிந்தித்தேன், குழந்தையைப்போல யோசித்தேன்; நான் புருஷனானபோதோ குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன். | 1கொரி 3:1 1கொரி 3:2 1கொரி 14:20 பிரச 11:10 கலா 4:1 |
| 12 | இப்பொழுது கண்ணாடியிலே நிழலாட்டமாய்ப் பார்க்கிறோம், அப்பொழுது முகமுகமாய்ப் பார்ப்போம்; இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன், அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே அறிந்துகொள்ளுவேன். | 2கொரி 3:18 2கொரி 5:7 பிலிப் 3:12 யாக் 1:23 |
| 13 | இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது. | 1கொரி 3:14 1பேது 1:21 1யோவா 2:14 1யோவா 2:24 1யோவா 3:9 |