| 1 | அன்றியும், சகோதரரே, ஆவிக்குரிய வரங்களைக்குறித்து நீங்கள் அறியாதிருக்க எனக்கு மனதில்லை. | 1கொரி 12:4-11 1கொரி 14:1-18 1கொரி 14:37-18 எபே 4:11 |
| 2 | நீங்கள் அஞ்ஞானிகளாயிருந்தபோது ஏவப்பட்டபடியே, ஊமையான விக்கிரகங்களிடத்தில் மனதைச் செலுத்தினீர்களென்று உங்களுக்குத் தெரியுமே. | 1கொரி 6:11 கலா 4:8 எபே 2:11 எபே 2:12 எபே 4:17 எபே 4:18 1தெச 1:9 தீத் 3:3 1பேது 4:3 |
| 3 | ஆதலால், தேவனுடைய ஆவியினாலே பேசுகிற எவனும் இயேசுவைச் சபிக்கப்பட்டவனென்று சொல்லமாட்டானென்றும், பரிசுத்த ஆவியினாலேயன்றி இயேசுவைக் கர்த்தரென்று ஒருவனும் சொல்லக்கூடாதென்றும், உங்களுக்குத் தெரிவிக்கிறேன். | மாற் 9:39 யோவா 16:14 யோவா 16:15 1யோவா 4:2 1யோவா 4:3 |
| 4 | வரங்களில் வித்தியாசங்கள் உண்டு, ஆவியானவர் ஒருவரே. | 1கொரி 12:8-11 1கொரி 12:28-11 ரோம 12:4-6 எபே 4:4 எபிரெ 2:4 1பேது 4:10 |
| 5 | ஊழியங்களிலேயும் வித்தியாசங்கள் உண்டு, கர்த்தர் ஒருவரே. | 1கொரி 12:28 1கொரி 12:29 ரோம 12:6-8 எபே 4:11 எபே 4:12 |
| 6 | கிரியைகளிலேயும் வித்தியாசங்கள் உண்டு, எல்லாருக்குள்ளும் எல்லாவற்றையும் நடப்பிக்கிற தேவன் ஒருவரே. | 1கொரி 12:11 1கொரி 3:7 யோபு 33:29 யோவா 5:17 எபே 1:19-22 கொலோ 1:29 பிலிப் 2:13 எபிரெ 13:21 |
| 7 | ஆவியினுடைய அநுக்கிரகம் அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது. | 1கொரி 14:5 1கொரி 14:12 1கொரி 14:17 1கொரி 14:19 1கொரி 14:22-26 மத் 25:14-30 ரோம 12:6-8 எபே 4:7-12 1பேது 4:10 1பேது 4:11 |
| 8 | எப்படியெனில், ஒருவனுக்கு ஆவியினாலே ஞானத்தைப் போதிக்கும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே அறிவை உணர்த்தும் வசனமும், | 1கொரி 1:5 1கொரி 1:30 1கொரி 2:6-10 1கொரி 13:2 1கொரி 13:8 ஆதி 41:38 ஆதி 41:39 யாத் 31:3 1இரா 3:5-12 நெகே 9:20 யோபு 32:8 சங் 143:10 நீதி 2:6 ஏசா 11:2 ஏசா 11:3 ஏசா 50:4 ஏசா 59:21 தானி 2:21 மத் 13:11 அப் 6:3 2கொரி 8:7 எபே 1:17 எபே 1:18 |
| 9 | வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே விசுவாசமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே குணமாக்கும் வரங்களும், | 1கொரி 13:2 மத் 17:19 மத் 17:20 மத் 21:21 மாற் 11:22 மாற் 11:23 லூக் 17:5 லூக் 17:6 2கொரி 4:13 எபே 2:8 எபிரெ 11:33 |
| 10 | வேறொருவனுக்கு அற்புதங்களைச் செய்யும் சக்தியும், வேறொருவனுக்குத் தீர்க்கதரிசனம் உரைத்தலும், வேறொருவனுக்கு ஆவிகளைப் பகுத்தறிதலும், வேறொருவனுக்குப் பற்பல பாஷைகளைப் பேசுதலும், வேறொருவனுக்குப் பாஷைகளை வியாக்கியானம்பண்ணுதலும் அளிக்கப்படுகிறது. | 1கொரி 12:28 1கொரி 12:29 மாற் 16:17 மாற் 16:20 லூக் 24:49 யோவா 14:12 அப் 1:8 ரோம 15:19 கலா 3:5 எபிரெ 2:4 |
| 11 | இவைகளையெல்லாம் அந்த ஒரே ஆவியானவர் நடப்பித்து, தமது சித்தத்தின்படியே அவனவனுக்குப் பகிர்ந்து கொடுக்கிறார். | 1கொரி 12:4 1கொரி 7:7 1கொரி 7:17 யோவா 3:27 ரோம 12:6 2கொரி 10:13 எபே 4:7 |
| 12 | எப்படியெனில், சரீரம் ஒன்று, அதற்கு அவயவங்கள் அநேகம்; ஒரே சரீரத்தின் அவயவங்களெல்லாம் அநேகமாயிருந்தும், சரீரம் ஒன்றாகவேயிருக்கிறது; அந்தப்பிரகாரமாகக் கிறிஸ்துவும் இருக்கிறார். | 1கொரி 10:17 ரோம 12:4 ரோம 12:5 எபே 1:23 எபே 4:4 எபே 4:12 எபே 4:15 எபே 4:16 எபே 5:23 எபே 5:30 கொலோ 1:18 கொலோ 1:24 கொலோ 2:19 கொலோ 3:15 |
| 13 | நாம் யூதராயினும், கிரேக்கராயினும், அடிமைகளாயினும், சுயாதீனராயினும், எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம்பண்ணப்பட்டு, எல்லாரும் ஒரே ஆவிக்குள்ளாகவே தாகந்தீர்க்கப்பட்டோம். | 1கொரி 10:2 ஏசா 44:3-5 எசே 36:25-27 மத் 3:11 லூக் 3:16 யோவா 1:16 யோவா 1:33 யோவா 3:5 அப் 1:5 ரோம 6:3-6 ரோம 8:9-11 எபே 4:5 எபே 5:26 கொலோ 2:11 கொலோ 2:12 தீத் 3:4-6 1பேது 3:21 |
| 14 | சரீரமும் ஒரே அவயவமாயிராமல் அநேக அவயவங்களாயிருக்கிறது. | 1கொரி 12:12 1கொரி 12:19 1கொரி 12:27 1கொரி 12:28 எபே 4:25 |
| 15 | காலானது நான் கையாயிராதபடியினாலே, நான் சரீரத்தின் அவயவமல்லவென்றால், அதினாலே அது சரீரத்தின் அவயவமாயிராதோ? | நியா 9:8-15 2இரா 14:9 |
| 16 | காதானது நான் கண்ணாயிராதபடியினாலே, நான் சரீரத்தின் அவயவமல்லவென்றால், அதினாலே அது சரீரத்தின் அவயவமாயிராதோ? | 1கொரி 12:16 1கொரி 12:22 ரோம 12:3 ரோம 12:10 பிலிப் 2:3 |
| 17 | சரீரம் முழுவதும் கண்ணானால், செவி எங்கே? அது முழுவதும் செவியானால், மோப்பம் எங்கே? | 1கொரி 12:21 1கொரி 12:29 1சாமு 9:9 சங் 94:9 சங் 139:13-16 நீதி 20:12 |
| 18 | தேவன் தமது சித்தத்தின்படி, அவயவங்கள் ஒவ்வொன்றையும் சரீரத்திலே வைத்தார். | 1கொரி 12:24 1கொரி 12:28 |
| 19 | அவையெல்லாம் ஒரே அவயவமாயிருந்தால், சரீரம் எங்கே? |
| 20 | அவயவங்கள் அநேகமாயிருந்தும், சரீரம் ஒன்றே. |
| 21 | கண்ணானது கையைப்பார்த்து: நீ எனக்கு வேண்டுவதில்லையென்றும்; தலையானது கால்களை நோக்கி: நீங்கள் எனக்கு வேண்டுவதில்லையென்றும் சொல்லக்கூடாது. | எண் 10:31 எண் 10:32 1சாமு 25:32 எஸ்றா 10:1-5 நெகே 4:16-21 யோபு 29:11 |
| 22 | சரீர அவயவங்களில் பலவீனமுள்ளவைகளாய்க் காணப்படுகிறவைகளே மிகவும் வேண்டியவைகளாயிருக்கிறது. | நீதி 14:28 பிரச 4:9-12 பிரச 5:9 பிரச 9:14 பிரச 9:15 2கொரி 1:11 தீத் 2:9 தீத் 2:10 |
| 23 | மேலும், சரீர அவயவங்களில் கனவீனமாய்க் காணப்படுகிறவைகளுக்கே அதிக கனத்தைக் கொடுக்கிறோம்; நம்மில் இலட்சணமில்லாதவைகளே அதிக அலங்காரம் பெறும்; | ஆதி 3:7 ஆதி 3:21 |
| 24 | நம்மில் இலட்சணமுள்ளவைகளுக்கு அலங்கரிப்பு வேண்டியதில்லை. | ஆதி 2:25 ஆதி 3:11 |
| 25 | சரீரத்திலே பிரிவினையுண்டாயிராமல், அவயவங்கள் ஒன்றைக்குறித்து ஒன்று கவலையாயிருக்கும்படிக்கு, தேவன் கனத்தில் குறைவுள்ளதற்கு அதிக கனத்தைக் கொடுத்து, இப்படிச் சரீரத்தை அமைத்திருக்கிறார். | 1கொரி 1:10-12 1கொரி 3:3 யோவா 17:21-26 2கொரி 13:11 |
| 26 | ஆதலால் ஒறு அவயவம் பாடுபட்டால் எல்லா அவயவங்களும் கூடப் பாடுபடும்; ஒரு அவயவம் மகிமைப்பட்டால் எல்லா அவயவங்களும் கூடச் சந்தோஷப்படும். | ரோம 12:15 2கொரி 11:28 2கொரி 11:29 கலா 6:2 எபிரெ 13:3 1பேது 3:8 |
| 27 | நீங்களே கிறிஸ்துவின் சரீரமாயும், தனித்தனியே அவயவங்களாயுமிருக்கிறீர்கள். | 1கொரி 12:12 1கொரி 12:14-20 ரோம 12:5 எபே 1:23 எபே 4:12 எபே 5:23 எபே 5:30 கொலோ 1:24 |
| 28 | தேவனானவர் சபையிலே முதலாவது அப்போஸ்தலரையும், இரண்டாவது தீர்க்கதரிசிகளையும், மூன்றாவது போதகர்களையும், பின்பு அற்புதங்களையும், பின்பு குணமாக்கும் வரங்களையும், ஊழியங்களையும், ஆளுகைகளையும், பலவித பாஷைகளையும் ஏற்படுத்தினார். | 1கொரி 12:7-11 லூக் 6:14 அப் 13:1-3 அப் 20:28 ரோம 12:6-8 எபே 2:20 எபே 3:5 எபே 4:11-13 எபிரெ 13:17 எபிரெ 13:24 1பேது 5:1-4 |
| 29 | எல்லாரும் அப்போஸ்தலர்களா? எல்லாரும் தீர்க்கதரிசிகளா? எல்லாரும் போதகர்களா? எல்லாரும் அற்புதங்களைச் செய்கிறவர்களா? | 1கொரி 12:4-11 1கொரி 12:14-20 |
| 30 | எல்லாரும் குணமாக்கும் வரங்களுடையவர்களா? எல்லாரும் அந்நிய பாஷைகளைப் பேசுகிறார்களா? எல்லாரும் வியாக்கியானம்பண்ணுகிறார்களா? |
| 31 | இப்படியிருக்க, முக்கியமான வரங்களை நாடுங்கள்; இன்னும் அதிக மேன்மையான வழியையும் உங்களுக்குக் காண்பிக்கிறேன். | 1கொரி 8:1 1கொரி 14:1 1கொரி 14:39 மத் 5:6 லூக் 10:42 |