| 1 | பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங்கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள். | உபா 13:1-5 நீதி 14:15 எரே 5:31 எரே 29:8 எரே 29:9 மத் 7:15 மத் 7:16 மத் 24:4 மத் 24:5 ரோம 16:18 2பேது 2:1 |
| 2 | தேவ ஆவியை நீங்கள் எதினாலே அறியலாமென்றால்: மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணுகிற எந்த ஆவியும் தேவனால் உண்டாயிருக்கிறது. | 1யோவா 5:1 யோவா 16:13-15 1கொரி 12:3 |
| 3 | மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது. | 1யோவா 2:18 1யோவா 2:22 2தெச 2:7 2தெச 2:8 2யோவா 1:7 |
| 4 | பிள்ளைகளே, நீங்கள் தேவனால் உண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள்; ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர். | 1யோவா 4:6 1யோவா 4:16 1யோவா 3:9 1யோவா 3:10 1யோவா 5:19 |
| 5 | அவர்கள் உலகத்துக்குரியவர்கள், ஆகையால் உலகத்துக்குரியவர்களைப் பேசுகிறார்கள், உலகமும் அவர்களுக்குச் செவிகொடுக்கும். | சங் 17:4 லூக் 16:8 யோவா 3:31 யோவா 7:6 யோவா 7:7 யோவா 8:23 யோவா 15:19 யோவா 15:20 யோவா 17:14 யோவா 17:16 வெளிப் 12:9 |
| 6 | நாங்கள் தேவனால் உண்டானவர்கள்; தேவனை அறிந்தவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறான்; தேவனால் உண்டாயிராதவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறதில்லை; இதினாலே சத்திய ஆவி இன்னதென்றும் வஞ்சக ஆவி இன்னதென்றும் அறிந்திருக்கிறோம். | 1யோவா 4:4 மீகா 3:8 ரோம 1:1 1கொரி 2:12-14 2பேது 3:2 யூதா 1:17 |
| 7 | பிரியமானவர்களே, ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக்கடவோம்; ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது; அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான். | 1யோவா 4:20 1யோவா 4:21 1யோவா 2:10 1யோவா 3:10-23 1யோவா 5:1 |
| 8 | அன்பில்லாதவன் தேவனை அறியான்; தேவன் அன்பாகவே இருக்கிறார். | 1யோவா 2:4 1யோவா 2:9 1யோவா 3:6 யோவா 8:54 யோவா 8:55 |
| 9 | தம்முடைய ஒரேபேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்கு தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது. | 1யோவா 3:16 யோவா 3:16 ரோம 5:8-10 ரோம 8:32 |
| 10 | நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது. | 1யோவா 4:8 1யோவா 4:9 1யோவா 3:1 |
| 11 | பிரியமானவர்களே, தேவன் இவ்விதமாய் நம்மிடத்தில் அன்புகூர்ந்திருக்க, நாமும் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூரக் கடனாளிகளாயிருக்கிறோம். | 1யோவா 3:16 1யோவா 3:17 1யோவா 3:23 மத் 18:32 மத் 18:33 லூக் 10:37 யோவா 13:34 யோவா 15:12 யோவா 15:13 2கொரி 8:8 2கொரி 8:9 எபே 4:31 எபே 4:32 எபே 5:1 எபே 5:2 கொலோ 3:13 |
| 12 | தேவனை ஒருவரும் ஒருபோதும் கண்டதில்லை; நாம் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூர்ந்தால் தேவன் நமக்குள் நிலைத்திருக்கிறார்; அவருடைய அன்பும் நமக்குள் பூரணப்படும். | 1யோவா 4:20 ஆதி 32:30 யாத் 33:20 எண் 12:8 யோவா 1:18 1தீமோ 1:17 1தீமோ 6:16 எபிரெ 11:27 |
| 13 | அவர் தம்முடைய ஆவியில் நமக்குத் தந்தருளினதினாலே நாம் அவரிலும் அவர் நம்மிலும் நிலைத்திருக்கிறதை அறிந்திருக்கிறோம். | 1யோவா 4:15 1யோவா 4:16 1யோவா 3:24 யோவா 14:20-26 ரோம 8:9-17 1கொரி 2:12 1கொரி 3:16 1கொரி 3:17 1கொரி 6:19 கலா 5:22-25 எபே 2:20-22 |
| 14 | பிதாவானவர் குமாரனை உலகரட்சகராக அனுப்பினாரென்று நாங்கள் கண்டு சாட்சியிடுகிறோம். | 1யோவா 1:1-3 1யோவா 5:9 யோவா 1:14 யோவா 3:11 யோவா 3:32 யோவா 5:39 யோவா 15:26 யோவா 15:27 அப் 18:5 1பேது 5:12 |
| 15 | இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று அறிக்கைபண்ணுகிறவன் எவனோ அவனில் தேவன் நிலைத்திருக்கிறார், அவனும் தேவனில் நிலைத்திருக்கிறான். | 1யோவா 4:2 1யோவா 5:1 1யோவா 5:5 மத் 10:32 லூக் 12:8 ரோம 10:9 பிலிப் 2:11 2யோவா 1:7 |
| 16 | தேவன் நம்மேல் வைத்திருக்கிற அன்பை நாம் அறிந்து விசுவாசித்திருக்கிறோம். தேவன் அன்பாகவே இருக்கிறார்; அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார். | 1யோவா 4:9 1யோவா 4:10 1யோவா 3:1 1யோவா 3:16 சங் 18:1-3 சங் 31:19 சங் 36:7-9 ஏசா 64:4 1கொரி 2:9 |
| 17 | நியாயத்தீர்ப்புநாளிலே நமக்குத் தைரியமுண்டாயிருக்கத்தக்கதாக அன்பு நம்மிடத்தில் பூரணப்படுகிறது; ஏனென்றால், அவர் இருக்கிறபிரகாரமாக நாமும் இவ்வுலகத்தில் இருக்கிறோம். | 1யோவா 4:12 1யோவா 2:5 யாக் 2:22 |
| 18 | அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல. | லூக் 1:74 லூக் 1:75 ரோம 8:15 2தீமோ 1:7 எபிரெ 12:28 |
| 19 | அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம். | 1யோவா 4:10 லூக் 7:47 யோவா 3:16 யோவா 15:16 2கொரி 5:14 2கொரி 5:15 கலா 5:22 எபே 2:3-5 தீத் 3:3-5 |
| 20 | தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன்; தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்? | 1யோவா 2:4 1யோவா 3:17 |
| 21 | தேவனிடத்தில் அன்புகூருகிறவன் தன் சகோதரனிடத்திலும் அன்புகூரவேண்டுமென்கிற இந்தக் கற்பனையை அவராலே பெற்றிருக்கிறோம். | 1யோவா 4:11 1யோவா 3:11 1யோவா 3:14 1யோவா 3:18 1யோவா 3:23 லேவி 19:18 மத் 22:37-39 மாற் 12:29-33 லூக் 10:37 யோவா 13:34 யோவா 13:35 யோவா 15:12 ரோம 12:9 ரோம 12:10 ரோம 13:9 ரோம 13:10 கலா 5:6 கலா 5:14 1தெச 4:9 1பேது 3:8 1பேது 4:8 |