| 1 | நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்; உலகம் அவரை அறியாதபடியினாலே நம்மையும் அறியவில்லை. | 1யோவா 4:9 1யோவா 4:10 2சாமு 7:19 சங் 31:19 சங் 36:7-9 சங் 89:1 சங் 89:2 யோவா 3:16 ரோம 5:8 ரோம 8:32 எபே 2:4 எபே 2:5 எபே 3:18 எபே 3:19 |
| 2 | பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம், இனி எவ்விதமாயிருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை; ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம். | 1யோவா 3:1 1யோவா 5:1 ஏசா 56:5 ரோம 8:14 ரோம 8:15 ரோம 8:18 கலா 3:26 கலா 4:6 |
| 3 | அவர்மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறவனெவனும், அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறதுபோல, தன்னையும் சுத்திகரித்துக்கொள்ளுகிறான். | ரோம 5:4 ரோம 5:5 கொலோ 1:5 2தெச 2:16 தீத் 3:7 எபிரெ 6:18 |
| 4 | பாவஞ்செய்கிற எவனும் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான்; நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம். | 1யோவா 3:8 1யோவா 3:9 1இரா 8:47 1நாளா 10:13 2கொரி 12:21 யாக் 5:15 |
| 5 | அவர் நம்முடைய பாவங்களைச் சுமந்து தீர்க்க வெளிப்பட்டாரென்று அறிவீர்கள்; அவரிடத்தில் பாவமில்லை. | 1யோவா 1:2 1யோவா 4:9-14 யோவா 1:31 1தீமோ 3:16 1பேது 1:20 |
| 6 | அவரில் நிலைத்திருக்கிற எவனும் பாவஞ்செய்கிறதில்லை; பாவஞ்செய்கிற எவனும் அவரைக் காணவுமில்லை, அவரை அறியவுமில்லை. | 1யோவா 2:28 யோவா 15:4-7 |
| 7 | பிள்ளைகளே, நீங்கள் ஒருவராலும் வஞ்சிக்கப்படாதிருங்கள்; நீதியைச் செய்கிறவன் அவர் நீதியுள்ளவராயிருக்கிறதுபோலத் தானும் நீதியுள்ளவனாயிருக்கிறான். | 1யோவா 2:26 1யோவா 2:29 ரோம 2:13 1கொரி 6:9 கலா 6:7 கலா 6:8 எபே 5:6 யாக் 1:22 யாக் 2:19 யாக் 5:1-3 |
| 8 | பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்; ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான், பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார். | 1யோவா 3:10 1யோவா 5:19 மத் 13:38 யோவா 8:44 எபே 2:2 |
| 9 | தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான். | 1யோவா 2:29 1யோவா 4:7 1யோவா 5:1 1யோவா 5:4 1யோவா 5:18 யோவா 1:13 |
| 10 | இதினாலே தேவனுடைய பிள்ளைகள் இன்னாரென்றும், பிசாசின் பிள்ளைகள் இன்னாரென்றும் வெளிப்படும்; நீதியைச் செய்யாமலும் தன் சகோதரனில் அன்புகூராமலும் இருக்கிற எவனும் தேவனால் உண்டானவனல்ல. | 1யோவா 5:2 லூக் 6:35 ரோம 8:16 ரோம 8:17 எபே 5:1 |
| 11 | நாம் ஒருவரிலொருவர் அன்புகூரவேண்டுமென்பதே நீங்கள் ஆதிமுதல் கேள்விப்பட்ட விசேஷமாயிருக்கிறது. | 1யோவா 1:5 1யோவா 2:7 1யோவா 2:8 |
| 12 | பொல்லாங்கனால் உண்டாயிருந்து தன் சகோதரனைக் கொலைசெய்த காயீனைப் போலிருக்கவேண்டாம்; அவன் எதினிமித்தம் அவனைக் கொலைசெய்தான்? தன் கிரியைகள் பொல்லாதவைகளும், தன் சகோதரனுடைய கிரியைகள் நீதியுள்ளவைகளுமாயிருந்ததினிமித்தந்தானே. | ஆதி 4:4-15 ஆதி 4:25-15 எபிரெ 11:4 யூதா 1:11 |
| 13 | என் சகோதரரே, உலகம் உங்களைப் பகைத்தால் ஆச்சரியப்படாதிருங்கள். | பிரச 5:8 யோவா 3:7 அப் 3:12 வெளிப் 17:7 |
| 14 | நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால், மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறோமென்று அறிந்திருக்கிறோம்; சகோதரனிடத்தில் அன்புகூராதவன் மரணத்திலே நிலைகொண்டிருக்கிறான். | 1யோவா 2:3 1யோவா 5:2 1யோவா 5:13 1யோவா 5:19 1யோவா 5:20 2கொரி 5:1 |
| 15 | தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான்; மனுஷ கொலைபாதகனெவனோ அவனுக்குள் நித்தியஜீவன் நிலைத்திராது என்று அறிவீர்கள். | ஆதி 27:41 லேவி 19:16-18 2சாமு 13:22-28 நீதி 26:24-26 மத் 5:21 மத் 5:22 மத் 5:28 மாற் 6:19 அப் 23:12 அப் 23:14 யாக் 1:15 யாக் 4:1 யாக் 4:2 |
| 16 | அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம். | 1யோவா 4:9 1யோவா 4:10 மத் 20:28 யோவா 3:16 யோவா 10:15 யோவா 15:13 அப் 20:28 ரோம 5:8 எபே 5:2 எபே 5:25 தீத் 2:13 1பேது 1:18 1பேது 2:24 1பேது 3:18 வெளிப் 1:5 வெளிப் 5:9 |
| 17 | ஒருவன் இவ்வுலக ஆஸ்தி உடையவனாயிருந்து, தன் சகோதரனுக்குக் குறைச்சலுண்டென்று கண்டு, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக்கொண்டால், அவனுக்குள் தேவ அன்பு நிலைகொள்ளுகிறதெப்படி? | உபா 15:7-11 நீதி 19:17 ஏசா 58:7-10 லூக் 3:11 2கொரி 8:9 2கொரி 8:14 2கொரி 8:15 2கொரி 9:5-9 1தீமோ 6:17 1தீமோ 6:18 எபிரெ 13:16 |
| 18 | என் பிள்ளைகளே, வசனத்தினாலும் நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம். | 1யோவா 2:1 |
| 19 | இதினாலே நாம் நம்மைச் சத்தியத்திற்குரியவர்களென்று அறிந்து, நம்முடைய இருதயத்தை அவருக்குமுன்பாக நிச்சயப்படுத்திக்கொள்ளலாம். | 1யோவா 3:14 1யோவா 1:8 யோவா 13:35 யோவா 18:37 |
| 20 | நம்முடைய இருதயமே நம்மைக் குற்றவாளிகளாகத் தீர்க்குமானால், தேவன் நம்முடைய இருதயத்திலும் பெரியவராயிருந்து சகலத்தையும் அறிந்திருக்கிறார். | யோபு 27:6 யோவா 8:9 அப் 5:33 ரோம 2:14 ரோம 2:15 1கொரி 4:4 1கொரி 14:24 1கொரி 14:25 தீத் 3:11 |
| 21 | பிரியமானவர்களே, நம்முடைய இருதயம் நம்மைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருந்தால், நாம் தேவனிடத்தில் தைரியங்கொண்டிருந்து, | 1யோவா 2:28 1யோவா 4:17 யோபு 22:26 யோபு 27:6 சங் 7:3-5 சங் 101:2 1கொரி 4:4 2கொரி 1:12 1தீமோ 2:8 எபிரெ 4:16 எபிரெ 10:22 |
| 22 | அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொண்டு அவருக்குமுன்பாகப் பிரியமானவைகளைச் செய்கிறபடியினால் நாம் வேண்டிக்கொள்ளுகிறதெதுவோ அதை அவராலே பெற்றுக்கொள்ளுகிறோம். | 1யோவா 5:14 சங் 10:17 சங் 34:4 சங் 34:15-17 சங் 50:15 சங் 66:18 சங் 66:19 சங் 145:18 சங் 145:19 நீதி 15:29 நீதி 28:9 ஏசா 1:15 ஏசா 55:6 ஏசா 55:7 எரே 29:12 எரே 29:13 எரே 33:3 மத் 7:7 மத் 7:8 மத் 21:22 மாற் 11:24 லூக் 11:9-13 யோவா 9:31 யோவா 14:13 யோவா 15:7 யோவா 16:23 யோவா 16:24 யாக் 1:5 யாக் 5:16 |
| 23 | நாம் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தின்மேல் விசுவாசமாயிருந்து, அவர் நமக்குக் கட்டளையிட்டபடி ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே அவருடைய கற்பனையாயிருக்கிறது. | உபா 18:15-19 சங் 2:12 மாற் 9:7 யோவா 6:29 யோவா 14:1 யோவா 17:3 அப் 16:31 1தீமோ 1:15 |
| 24 | அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறவன் அவரில் நிலைத்திருக்கிறான், அவரும் அவனில் நிலைத்திருக்கிறார்; அவர் நம்மில் நிலைத்திருக்கிறதை அவர் நமக்குத் தந்தருளின ஆவியினாலே அறிந்திருக்கிறோம். | 1யோவா 3:22 யோவா 14:21-23 யோவா 15:7-10 |