| 1 | கள்ளத்தீர்க்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்; அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக் கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள். | உபா 13:1-3 1இரா 18:19-22 1இரா 22:6 நெகே 6:12-14 ஏசா 9:15 ஏசா 56:10 ஏசா 56:11 எரே 14:13-15 எரே 23:16 எரே 23:17 எரே 23:25-32 எரே 27:14 எரே 27:15 எரே 28:15-17 எரே 29:8 எரே 29:9 எரே 29:31 எரே 29:32 எரே 37:19 புலம் 2:14 எசே 13:3-18 ஓசி 9:8 மீகா 2:11 மீகா 3:5 மீகா 3:11 சகரி 13:3 சகரி 13:4 மத் 7:15 லூக் 6:26 ரோம 16:18 |
| 2 | அவர்களுடைய கெட்ட நடக்கைகளை அநேகர் பின்பற்றுவார்கள்; அவர்கள் நிமித்தம் சத்தியமார்க்கம் தூஷிக்கப்படும். | மத் 24:10-13 மத் 24:24-13 மாற் 13:22 1யோவா 2:18 1யோவா 2:19 வெளிப் 12:9 வெளிப் 13:8 வெளிப் 13:14 |
| 3 | பொருளாசாயுடையவர்களாய், தந்திரமான வார்த்தைகளால் உங்களைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக்கொள்ளுவார்கள்; பூர்வகாலமுதல் அவர்களுக்கு விதிக்கப்பட்ட ஆக்கினை அயர்ந்திராது, அவர்களுடைய அழிவு உறங்காது. | 2பேது 2:14 2பேது 2:15 ஏசா 56:11 எரே 6:13 எரே 8:10 எசே 13:19 மீகா 3:11 மல்கி 1:10 ரோம 16:18 2கொரி 12:17 2கொரி 12:18 1தீமோ 3:3 1தீமோ 3:8 1தீமோ 6:5 தீத் 1:7 தீத் 1:11 1பேது 5:2 யூதா 1:11 |
| 4 | பாவஞ்செய்த தூதர்களை தேவன் தப்பவிடாமல், அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டி நரகத்திலே தள்ளி நியாயத்தீர்ப்புக்கு வைக்கப்பட்டவர்களாக ஒப்புக்கொடுத்து; | 2பேது 2:5 உபா 29:20 சங் 78:50 எசே 5:11 எசே 7:4 எசே 7:9 ரோம 8:32 ரோம 11:21 |
| 5 | பூர்வ உலகத்தையும் தப்பவிடாமல், நீதியைப் பிரசங்கித்தவனாகிய நோவா முதலான எட்டுப்பேரைக் காப்பாற்றி, அவபக்தியுள்ளவர்கள் நிறைந்த உலகத்தின்மேல் ஜலப்பிரளயத்தை வரப்பண்ணி; | ஆதி 6:1-8 யோபு 22:15 யோபு 22:16 மத் 24:37-39 லூக் 17:26 லூக் 17:27 எபிரெ 11:7 |
| 6 | சோதோம் கொமோரா என்னும் பட்டணங்களையும் சாம்பலாக்கிக் கவிழ்த்துப்போட்டு, ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து, பிற்காலத்திலே அவபக்தியாய் நடப்பவர்களுக்கு அவைகளைத் திருஷ்டாந்தமாக வைத்து; | ஆதி 19:24 ஆதி 19:25 ஆதி 19:28 உபா 29:23 ஏசா 13:19 எரே 50:40 எசே 16:49-56 ஓசி 11:8 ஆமோ 4:11 செப் 2:9 லூக் 17:28-30 யூதா 1:7 |
| 7 | அக்கிரமக்காரருக்குள் வாசமாயிருக்கையில் அவர்களுடைய காமவிகார நடக்கையால் வருத்தப்பட்டு, | ஆதி 19:16 ஆதி 19:22 ஆதி 19:29 1கொரி 10:13 |
| 8 | நாள்தோறும் அவர்களுடைய அக்கிரமக்கிரியைகளைக் கண்டு கேட்டு நீதியுள்ள தன்னுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்ட நீதிமானாகிய லோத்தை அவர் இரட்சித்திருக்க; | நீதி 25:26 நீதி 28:12 1தீமோ 1:9 யாக் 5:16 |
| 9 | கர்த்தர் தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையினின்று இரட்சிக்கவும், அக்கிரமக்காரரை ஆக்கினைக்குள்ளானவர்களாக நியாயத்தீர்ப்பு நாளுக்கு வைக்கவும் அறிந்திருக்கிறார். | யோபு 5:19 சங் 34:15-19 1கொரி 10:13 |
| 10 | விசேஷமாக அசுத்த இச்சையோடே மாம்சத்திற்கேற்றபடி நடந்து, கர்த்தத்துவத்தை அசட்டைபண்ணுகிறவர்களை அப்படிச் செய்வார். இவர்கள் துணிகரக்காரர், அகங்காரிகள், மகத்துவங்களைத் தூஷிக்க அஞ்சாதவர்கள். | ரோம 8:1 ரோம 8:4 ரோம 8:5 ரோம 8:12 ரோம 8:13 2கொரி 10:3 எபிரெ 13:4 |
| 11 | அதிக பெலனையும் வல்லமையையுமுடைய தேவதூதர்கள் முதலாய்க் கர்த்தருக்கு முன்பாக அவர்களைத் தூஷணமாய்க் குற்றப்படுத்தமாட்டார்களே. | சங் 103:20 சங் 104:4 தானி 6:22 2தெச 1:7 யூதா 1:9 |
| 12 | இவர்களோ பிடிபட்டழிக்கப்படுவதற்கு உண்டான புத்தியற்ற மிருகஜீவன்களைப்போலத் தங்களுக்குத் தெரியாதவைகளைத் தூஷித்து, தங்கள் கேட்டிலே கெட்டழிந்து, அநீதத்தின் பலனை அடைவார்கள். | சங் 49:10 சங் 92:6 சங் 94:8 எரே 4:22 எரே 5:4 எரே 10:8 எரே 10:21 எரே 12:3 எசே 21:31 யூதா 1:10 |
| 13 | இவர்கள் ஒருநாள் வாழ்வை இன்பமென்றெண்ணி, கறைகளும் இலச்சைகளுமாயிருந்து; உங்களோடே விருந்துண்கையில் தங்கள் வஞ்சனைகளில் உல்லாசமாய் வாழ்கிறவர்கள்; | ஏசா 3:11 ரோம 2:8 ரோம 2:9 பிலிப் 3:19 2தீமோ 4:14 எபிரெ 2:2 எபிரெ 2:3 யூதா 1:12-16 வெளிப் 18:6 |
| 14 | விபசாரமயக்கத்தால் நிறைந்தவைகளும், பாவத்தைவிட்டோயாதவைகளுமாயிருக்கிற கண்களையுடையவர்கள்; உறுதியில்லாத ஆத்துமாக்களைத் தந்திரமாய்ப் பிடித்து, பொருளாசைகளில் பழகின இருதயத்தையுடைய சாபத்தின் பிள்ளைகள். | 2சாமு 11:2-4 யோபு 31:7 யோபு 31:9 நீதி 6:25 மத் 5:28 1யோவா 2:16 |
| 15 | செம்மையான வழியைவிட்டுத் தப்பி நடந்து, பேயோரின் குமாரனாகிய பிலேயாமின் வழியைப் பின்பற்றிப்போனவர்கள்; அவன் அநீதத்தின் கூலியை விரும்பி, | 1சாமு 12:23 1இரா 18:18 1இரா 19:10 எசே 9:10 நீதி 28:4 ஓசி 14:8 அப் 13:10 |
| 16 | தன்னுடைய அக்கிரமத்தினிமித்தம். கடிந்து கொள்ளப்பட்டான்; பேசாத மிருகம் மனுஷர் பேச்சைப் பேசித் தீர்க்கதரிசியினுடைய மதிகேட்டைத் தடுத்தது. | எண் 22:22-33 |
| 17 | இவர்கள் தண்ணீரில்லாத கிணறுகளும், சுழல்காற்றினால் அடியுண்டோடுகிற மேகங்களுமாயிருக்கிறார்கள்; என்றென்றைக்குமுள்ள காரிருளே இவர்களுக்கு வைக்கப்பட்டிருக்கிறது. | யோபு 6:14-17 எரே 14:3 ஓசி 6:4 யூதா 1:12 யூதா 1:13 |
| 18 | வஞ்சகமாய் நடக்கிறவர்களிடத்திலிருந்து அரிதாய்த் தப்பினவர்களிடத்தில் இவர்கள் அகந்தையான வீண்வார்த்தைகளைப் பேசி, மாம்ச இச்சைகளினாலும் காமவிகாரங்களினாலும் அவர்களைத் தந்திரமாய்ப் பிடிக்கிறார்கள். | சங் 52:1-3 சங் 73:8 சங் 73:9 தானி 4:30 தானி 11:36 அப் 8:9 2தெச 2:4 யூதா 1:13 யூதா 1:15 யூதா 1:16 வெளிப் 13:5 வெளிப் 13:6 வெளிப் 13:11 |
| 19 | தாங்களே கேட்டுக்கு அடிமைகளாயிருந்தும், அவர்களுக்குச் சுயாதீனத்தை வாக்குத்தத்தம் பண்ணுகிறார்கள்; எதினால் ஒருவன் ஜெயிக்கப்பட்டிருக்கிறானோ அதற்கு அவன் அடிமைப்பட்டிருக்கிறானே. | கலா 5:1 கலா 5:13 1பேது 2:16 |
| 20 | கர்த்தரும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவினாலே உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள் மறுபடியும் அவைகளில் சிக்கிக்கொண்டு ஜெயிக்கப்பட்டால், அவர்களுடைய பின்னிலைமை முன்னிலைமையிலும் கேடுள்ளதாயிருக்கும். | மத் 12:43-45 லூக் 11:24-26 எபிரெ 6:4-8 எபிரெ 10:26 எபிரெ 10:27 |
| 21 | அவர்கள் நீதியின் மார்க்கத்தை அறிந்தபின்பு தங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட பரிசுத்த கற்பனையை விட்டு விலகுவதைப்பார்க்கிலும் அதை அறியாதிருந்தார்களானால் அவர்களுக்கு நலமாயிருக்கும். | மத் 11:23 மத் 11:24 லூக் 12:47 யோவா 9:41 யோவா 15:22 |
| 22 | நாய் தான் கக்கினதைத் தின்னவும், கழுவப்பட்ட பன்றி சேற்றிலே புரளவும் திரும்பினது என்று சொல்லப்பட்ட மெய்யான பழமொழியின்படியே அவர்களுக்குச் சம்பவித்தது. | நீதி 26:11 |