| 1 | நம்முடைய தேவனும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய நீதியால் எங்களைப்போல அருமையான விசுவாசத்தைப் பெற்றவர்களுக்கு, இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரனும் அப்போஸ்தலனுமாகிய சீமோன் பேதுரு எழுதுகிறதாவது: | அப் 15:14 |
| 2 | தேவனையும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவையும் அறிகிற அறிவினால் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் பெருகக்கடவது. | எண் 6:24-26 தானி 4:1 தானி 6:25 ரோம 1:7 1பேது 1:2 யூதா 1:2 வெளிப் 1:4 |
| 3 | தம்முடைய மகிமையினாலும் காருணியத்தினாலும் நம்மை அழைத்தவரை அறிகிற அறிவினாலே ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய யாவற்றையும், அவருடைய திவ்விய வல்லமையானது நமக்குத் தந்தருளினதுமன்றி, | சங் 110:3 மத் 28:18 யோவா 17:2 2கொரி 12:9 எபே 1:19-21 கொலோ 1:16 எபிரெ 1:3 |
| 4 | இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும்பொருட்டு, மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. | 2பேது 1:1 எசே 36:25-27 ரோம 9:4 2கொரி 1:20 2கொரி 6:17 2கொரி 6:18 2கொரி 7:1 கலா 3:16 எபிரெ 8:6-12 எபிரெ 9:15 1யோவா 2:25 |
| 5 | இப்படியிருக்க, நீங்கள் அதிக ஜாக்கிரதையுள்ளவர்களாய் உங்கள் விசுவாசத்தோடே தைரியத்தையும், தைரியத்தோடே ஞானத்தையும், | லூக் 16:26 லூக் 24:21 |
| 6 | ஞானத்தோடே இச்சையடக்கத்தையும், இச்சையடக்கத்தோடே பொறுமையையும், பொறுமையோடே தேவபக்தியையும், | அப் 24:25 1கொரி 9:25 கலா 5:23 தீத் 1:8 தீத் 2:2 |
| 7 | தேவபக்தியோடே சகோதரசிநேகத்தையும், சகோதரசிநேகத்தோடே அன்பையும் கூட்டி வழங்குங்கள். | யோவா 13:34 யோவா 13:35 ரோம 12:10 1தெச 3:12 1தெச 4:9 1தெச 4:10 எபிரெ 13:1 1பேது 1:22 1பேது 2:17 1யோவா 3:14 1யோவா 3:16 |
| 8 | இவைகள் உங்களுக்கு உண்டாயிருந்து பெருகினால், உங்களை நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவிலே வீணரும் கனியற்றவர்களுமாயிருக்கவொட்டாது. | யோவா 5:42 2கொரி 9:14 2கொரி 13:5 பிலிப் 2:5 கொலோ 3:16 பிலேமோ 1:6 |
| 9 | இவைகள் இல்லாதவன் எவனோ, அவன் முன்செய்த பாவங்களறத் தான் சுத்திகரிக்கப்பட்டதை மறந்து கண்சொருகிப்போன குருடனாயிருக்கிறான். | 2பேது 1:5-7 மாற் 10:21 லூக் 18:22 கலா 5:6 கலா 5:13 யாக் 2:14-26 |
| 10 | ஆகையால், சகோதரரே, உங்கள் அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருங்கள்; இவைகளைச் செய்தால் நீங்கள் ஒருக்காலும் இடறிவிழுவதில்லை. | 2பேது 1:5 2பேது 3:17 |
| 11 | இவ்விதமாய், நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய நித்திய ராஜ்யத்துக்குட்படும் பிரவேசம் உங்களுக்குப் பரிபூரணமாய் அளிக்கப்படும். | மத் 25:34 2கொரி 5:1 2தீமோ 4:8 வெளிப் 3:21 |
| 12 | இதினிமித்தம், இவைகளை நீங்கள் அறிந்தும், நீங்கள் இப்பொழுது அறிந்திருக்கிற சத்தியத்தில் உறுதிப்பட்டிருந்தும், உங்களுக்கு இவைகளை எப்பொழுதும் நினைப்பூட்ட நான் அசதியாயிரேன். | 2பேது 1:13 2பேது 1:15 2பேது 3:1 ரோம 15:14 ரோம 15:15 பிலிப் 3:1 1தீமோ 4:6 2தீமோ 1:6 எபிரெ 10:32 யூதா 1:3 யூதா 1:17 |
| 13 | நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து எனக்கு அறிவித்தபடி நான் என் கூடாரத்தைவிட்டுப்போவது சீக்கிரத்தில் நேரிடுமென்று அறிந்து, | 2பேது 1:14 2கொரி 5:1-4 2கொரி 5:8-4 எபிரெ 13:3 |
| 14 | இந்தக் கூடாரத்தில் நான் இருக்குமளவும் உங்களை நினைப்பூட்டி எழுப்பிவிடுவது நியாயமென்று எண்ணுகிறேன். | உபா 4:21 உபா 4:22 உபா 31:14 யோசு 23:14 1இரா 2:2 1இரா 2:3 அப் 20:25 2தீமோ 4:6 |
| 15 | மேலும், நான் சென்றுபோனபின்பு இவைகளை நீங்கள் எப்பொழுதும் நினைத்துக்கொள்ள ஏதுவுண்டாயிருக்கும்படி பிரயத்தனம்பண்ணுவேன். | உபா 31:19-29 யோசு 24:24-29 1நாளா 29:1-20 சங் 71:18 2தீமோ 2:2 எபிரெ 11:4 |
| 16 | நாங்கள் தந்திரமான கட்டுக்கதைகளைப் பின்பற்றினவர்களாக அல்ல, அவருடைய மகத்துவத்தைக் கண்ணாரக் கண்டவர்களாகவே நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் உங்களுக்கு அறிவித்தோம். | 2பேது 3:3 2பேது 3:4 1கொரி 1:17 1கொரி 1:23 1கொரி 2:1 1கொரி 2:4 2கொரி 2:17 2கொரி 4:2 2கொரி 12:16 2கொரி 12:17 எபே 4:14 2தெச 2:9 1தீமோ 1:4 1தீமோ 4:7 தீத் 1:14 |
| 17 | இவர் என்னுடைய நேசகுமாரன், இவரிடத்தில் பிரியமாயிருக்கிறேன் என்று சொல்லுகிற சத்தம் உன்னதமான மகிமையிலிருந்து அவருக்கு உண்டாகி, பிதாவாகிய தேவனால் அவர் கனத்தையும் மகிமையையும் பெற்றபோது, | மத் 11:25-27 மத் 28:19 லூக் 10:22 யோவா 3:35 யோவா 5:21-23 யோவா 5:26-23 யோவா 5:36-23 யோவா 5:37-23 யோவா 6:27 யோவா 6:37 யோவா 6:39 யோவா 10:15 யோவா 10:36 யோவா 13:1-3 யோவா 14:6 யோவா 14:8 யோவா 14:9 யோவா 14:11 யோவா 17:21 யோவா 20:17 ரோம 15:6 2கொரி 1:3 2கொரி 11:31 2யோவா 1:3 யூதா 1:1 |
| 18 | அவரோடேகூட நாங்கள் பரிசுத்த பருவதத்திலிருக்கையில், வானத்திலிருந்து பிறந்த அந்தச் சத்தத்தைக் கேட்டோம். | மத் 17:6 |
| 19 | அதிக உறுதியான தீர்க்கதரிசன வசனமும் நமக்கு உண்டு; பொழுது விடிந்து விடிவெள்ளி உங்கள் இருதயங்களில் உதிக்குமளவும் இருளுள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கிற விளக்கைப்போன்ற அவ்வசனத்தைக் கவனித்திருப்பது நலமாயிருக்கும். | சங் 19:7-9 ஏசா 8:20 ஏசா 41:21-23 ஏசா 41:26-23 லூக் 16:29-31 யோவா 5:39 அப் 17:11 |
| 20 | வேதத்திலுள்ள எந்தத் தீர்க்கதரிசனமும் சுயதோற்றமான பொருளையுடையதாயிராதென்று நீங்கள் முந்தி அறியவேண்டியது. | 2பேது 3:3 ரோம 6:6 ரோம 13:11 1தீமோ 1:9 யாக் 1:3 |
| 21 | தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள். | லூக் 1:70 2தீமோ 3:16 1பேது 1:11 |