| 1 | ஆதிமுதல் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப்பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டதுமாயிருக்கிற ஜீவவார்த்தையைக்குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம். | 1யோவா 2:13 நீதி 8:22-31 ஏசா 41:4 மீகா 5:2 யோவா 1:1 யோவா 1:2-18 யோவா 8:58 வெளிப் 1:8 வெளிப் 1:11 வெளிப் 1:17 வெளிப் 1:18 வெளிப் 2:8 |
| 2 | அந்த ஜீவன் வெளிப்பட்டது; பிதாவினிடத்திலிருந்ததும், எங்களுக்கு வெளிப்பட்டதுமான நித்தியமாயிருக்கிற அந்த ஜீவனை நாங்கள் கண்டு, அதைக்குறித்துச் சாட்சிகொடுத்து, அதை உங்களுக்கு அறிவிக்கிறோம். | 1யோவா 5:11 1யோவா 5:20 யோவா 1:4 யோவா 11:25 யோவா 11:26 யோவா 14:6 |
| 3 | நீங்களும் எங்களோடே ஐக்கியமுள்ளவர்களாகும்படி, நாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்; எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது. | 1யோவா 1:1 அப் 4:20 |
| 4 | உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி இவைகளை உங்களுக்கு எழுதுகிறோம். | ஏசா 61:10 ஆபகூ 3:17 ஆபகூ 3:18 யோவா 15:11 யோவா 16:24 2கொரி 1:24 எபே 3:19 பிலிப் 1:25 பிலிப் 1:26 2யோவா 1:12 |
| 5 | தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை; இது நாங்கள் அவரிடத்தில் கேட்டு உங்களுக்கு அறிவிக்கிற விசேஷமாயிருக்கிறது. | 1யோவா 3:11 1கொரி 11:23 |
| 6 | நாம் அவரோடே ஐக்கியப்பட்டவர்களென்று சொல்லியும், இருளிலே நடக்கிறவர்களாயிருந்தால், சத்தியத்தின்படி நடவாமல் பொய்சொல்லுகிறவர்களாயிருப்போம். | 1யோவா 1:8 1யோவா 1:10 1யோவா 2:4 1யோவா 4:20 மத் 7:22 யாக் 2:14 யாக் 2:16 யாக் 2:18 வெளிப் 3:17 வெளிப் 3:18 |
| 7 | அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். | 1யோவா 2:9 1யோவா 2:10 சங் 56:13 சங் 89:15 சங் 97:11 ஏசா 2:5 யோவா 12:35 ரோம 13:12 எபே 5:8 2யோவா 1:4 3யோவா 1:4 |
| 8 | நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது. | 1யோவா 1:6 1யோவா 1:10 1யோவா 3:5 1யோவா 3:6 1இரா 8:46 2நாளா 6:36 யோபு 9:2 யோபு 14:4 யோபு 15:14 யோபு 25:4 சங் 143:2 நீதி 20:9 பிரச 7:20 ஏசா 53:6 ஏசா 64:6 எரே 2:22 எரே 2:23 ரோம 3:23 யாக் 3:2 |
| 9 | நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். | லேவி 26:40-42 1இரா 8:47 2நாளா 6:37 2நாளா 6:38 நெகே 1:6 நெகே 9:2-37 யோபு 33:27 யோபு 33:28 சங் 32:5 சங் 51:2-5 நீதி 28:13 தானி 9:4-20 மத் 3:6 மாற் 1:5 அப் 19:18 |
| 10 | நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இராது. | 1யோவா 1:8 சங் 130:3 |