| 1 | பிரியமானவர்களே, இந்த இரண்டாம் நிருபத்தை இப்பொழுது உங்களுக்கு எழுதுகிறேன். | 2கொரி 13:2 1பேது 1:1 1பேது 1:2 |
| 2 | பரிசுத்த தீர்க்கதரிசிகளால் முன் சொல்லப்பட்ட வார்த்தைகளையும், இரட்சகராயிருக்கிற கர்த்தருடைய அப்போஸ்தலராகிய எங்களுடைய கட்டளைகளையும் நீங்கள் நினைவுகூரும்படி இந்த நிருபங்களினால் உங்கள் உண்மையான மனதை நினைப்பூட்டி எழுப்புகிறேன். | 2பேது 1:19-21 லூக் 1:70 லூக் 24:27 லூக் 24:44 அப் 3:18 அப் 3:24-26 அப் 10:43 அப் 28:23 1பேது 1:10-12 வெளிப் 19:10 |
| 3 | முதலாவது நீங்கள் அறியவேண்டியது என்னவெனில்: கடைசி நாட்களில் பரியாசக்காரர் வந்து, தங்கள் சுய இச்சைகளின்படியே நடந்து, | 1தீமோ 4:1 1தீமோ 4:2 2தீமோ 3:1 1யோவா 2:18 யூதா 1:18 |
| 4 | அவர் வருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே? பிதாக்கள் நித்திரையடைந்தபின்பு சகலமும் சிருஷ்டிப்பின்தோற்றமுதல் இருந்தவிதமாயிருக்கிறதே என்று சொல்லுவார்கள். | ஆதி 19:14 பிரச 1:9 பிரச 8:11 ஏசா 5:18 ஏசா 5:19 எரே 5:12 எரே 5:13 எரே 17:15 எசே 12:22-27 மல்கி 2:17 மத் 24:28 லூக் 12:45 |
| 5 | பூர்வகாலத்தில் தேவனுடைய வார்த்தையினாலே வானங்களும், ஜலத்தினின்று தோன்றி ஜலத்தினாலே நிலைகொண்டிருக்கிற பூமியும் உண்டாயினவென்பதையும், | நீதி 17:16 யோவா 3:19 யோவா 3:20 ரோம 1:28 2தெச 2:10-12 |
| 6 | அப்பொழுது இருந்த உலகம் ஜலப்பிரளயத்தினாலே அழிந்ததென்பதையும் மனதார அறியாமலிருக்கிறார்கள். | 2பேது 2:5 ஆதி 7:10-23 ஆதி 9:15 யோபு 12:15 மத் 24:38 மத் 24:39 லூக் 17:27 |
| 7 | இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அந்த வார்த்தைகளினாலேயே அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டு, தேவபக்தியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள்வரைக்கும் காக்கப்பட்டிருக்கிறது. | 2பேது 3:10 சங் 50:3 சங் 102:26 ஏசா 51:6 செப் 3:8 மத் 24:35 மத் 25:41 2தெச 1:8 வெளிப் 20:11 வெளிப் 21:1 |
| 8 | பிரியமானவர்களே, கர்த்தருக்கு ஒருநாள் ஆயிரம் வருஷம்போலவும், ஆயிரம் வருஷம் ஒருநாள்போலவும் இருக்கிறதென்கிற இந்த ஒரு காரியத்தை நீங்கள் அறியாதிருக்கவேண்டாம். | ரோம 11:25 1கொரி 10:1 1கொரி 12:1 |
| 9 | தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார். | ஏசா 46:13 ஆபகூ 2:3 லூக் 18:7 லூக் 18:8 எபிரெ 10:37 |
| 10 | கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்; அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோகும், பூதங்கள் வெந்து உருகிப்போகும், பூமியும் அதிலுள்ள கிரியைகளும் எரிந்து அழிந்துபோகும். | ஏசா 2:12 யோவே 1:15 யோவே 2:1 யோவே 2:31 யோவே 3:14 மல்கி 4:5 1கொரி 5:5 2கொரி 1:14 யூதா 1:6 |
| 11 | இப்படி இவைகளெல்லாம் அழிந்து போகிறதாயிருக்கிறபடியால் நீங்கள் எப்படிப்பட்ட பரிசுத்த நடக்கையும் தேவபக்தியும் உள்ளவர்களாயிருக்கவேண்டும்! | 2பேது 3:12 சங் 75:3 ஏசா 14:31 ஏசா 24:19 ஏசா 34:4 |
| 12 | தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருங்கள்; அந்த நாளில் வானங்கள் வெந்து அழிந்து, பூதங்கள் எரிந்து உருகிப்போகும். | 1கொரி 1:7 தீத் 2:13 யூதா 1:21 |
| 13 | அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம். | ஏசா 65:17 ஏசா 66:22 வெளிப் 21:1 வெளிப் 21:27 |
| 14 | ஆகையால், பிரியமானவர்களே இவைகள் வரக் காத்திருக்கிற நீங்கள் கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாய்ச் சமாதானத்தோடே அவர் சந்நிதியில் காணப்படும்படி ஜாக்கிரதையாயிருங்கள். | பிலிப் 3:20 எபிரெ 9:28 |
| 15 | மேலும் நம்முடைய கர்த்தரின் நீடிய பொறுமையை இரட்சிப்பென்று எண்ணுங்கள்; நமக்குப் பிரியமான சகோதரனாகிய பவுலும் தனக்கு அருளப்பட்ட ஞானத்தினாலே இப்படியே உங்களுக்கு எழுதியிருக்கிறான்; | 2பேது 3:9 ரோம 2:4 1தீமோ 1:16 1பேது 3:20 |
| 16 | எல்லா நிருபங்களிலும் இவைகளைக் குறித்துப் பேசியிருக்கிறான்; அவன் சொன்னவைகளில் சில காரியங்கள் அறிகிறதற்கு அரிதாயிருக்கிறது; கல்லாதவர்களும் உறுதியில்லாதவர்களும் மற்ற வேதவாக்கியங்களைப் புரட்டுகிறதுபோலத் தங்களுக்குக் கேடுவரத்தக்கதாக இவைகளையும் புரட்டுகிறார்கள். | 1பேது 1:1 |
| 17 | ஆதலால் பிரியமானவர்களே, இவைகளை முன்னமே நீங்கள் அறிந்திருக்கிறபடியால், அக்கிரமக்காரருடைய வஞ்சகத்திலே நீங்கள் இழுப்புண்டு உங்கள் உறுதியிலிருந்து விலகி விழுந்துபோகாதபடிக்கு எச்சரிக்கையாயிருந்து, | 2பேது 1:12 நீதி 1:17 மத் 24:24 மத் 24:25 மாற் 13:23 யோவா 16:4 |
| 18 | நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள். அவருக்கு இப்பொழுதும் என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக. ஆமென். | சங் 92:12 ஓசி 14:5 மல்கி 4:2 எபே 4:15 கொலோ 1:10 2தெச 1:3 1பேது 2:2 |