| 1 | அன்றியும், முதலாம் உடன்படிக்கையானது ஆராதனைக்கேற்ற முறைமைகளும் பூமிக்குரிய பரிசுத்த ஸ்தலமும் உடையதாயிருந்தது. | எபிரெ 8:7 எபிரெ 8:13 |
| 2 | எப்படியெனில், ஒரு கூடாரம் உண்டாக்கப்பட்டிருந்தது; அதின் முந்தின பாகத்தில் குத்துவிளக்கும், மேஜையும், தேவசமுகத்தப்பங்களும் இருந்தன; அது பரிசுத்த ஸ்தலமென்னப்படும். | யாத் 26:1-30 யாத் 29:1 யாத் 29:35 யாத் 36:8-38 யாத் 39:32-34 யாத் 40:2 யாத் 40:18-20 |
| 3 | இரண்டாந்திரைக்குள்ளே மகா பரிசுத்த ஸ்தலமென்னப்பட்ட கூடாரம் இருந்தது. | எபிரெ 6:19 எபிரெ 10:20 யாத் 26:31-33 யாத் 36:35-38 யாத் 40:3 யாத் 40:21 2நாளா 3:14 ஏசா 25:7 மத் 27:51 |
| 4 | அதிலே பொன்னாற்செய்த தூபகலசமும், முழுவதும் பொற்றகடு பொதிந்திருக்கப்பட்ட உடன்படிக்கைப் பெட்டியும் இருந்தன; அந்தப் பெட்டியிலே மன்னா வைக்கப்பட்ட பொற்பாத்திரமும், ஆரோனுடைய தளிர்த்த கோலும், உடன்படிக்கையின் கற்பலகைகளும் இருந்தன. | லேவி 16:12 1இரா 7:50 வெளிப் 8:3 |
| 5 | அதற்கு மேலே மகிமையுள்ள கேருபீன்கள் வைக்கப்பட்டுக் கிருபாசனத்தை நிழலிட்டிருந்தன; இவைகளைக்குறித்து விவரமாய்ப்பேச இப்பொழுது சமயமில்லை. | யாத் 25:17-22 யாத் 37:6-9 லேவி 16:2 எண் 7:89 1சாமு 4:4 1இரா 8:6 1இரா 8:7 2இரா 19:15 சங் 80:1 சங் 99:1 எபே 3:10 1பேது 1:12 |
| 6 | இவைகள் இவ்விதமாய் ஆயத்தமாக்கப்பட்டிருக்க, ஆசாரியர்கள் ஆராதனை முறைமைகளை நிறைவேற்றும்படிக்கு முதலாங்கூடாரத்திலே நித்தமும் பிரவேசிப்பார்கள். | யாத் 27:21 யாத் 30:7 யாத் 30:8 எண் 28:3 2நாளா 26:16-19 தானி 8:11 லூக் 1:8-11 |
| 7 | இரண்டாங்கூடாரத்திலே பிரதான ஆசாரியன்மாத்திரம் வருஷத்திற்கு ஒரு தரம் இரத்தத்தோடே பிரவேசித்து, அந்த இரத்தத்தைத் தனக்காகவும் ஜனங்களுடைய தப்பிதங்களுக்காகவும் செலுத்துவான். | எபிரெ 9:24 எபிரெ 9:25 யாத் 30:10 லேவி 16:2-20 லேவி 16:34-20 |
| 8 | அதினாலே, முதலாங்கூடாரம் நிற்குமளவும் பரிசுத்த ஸ்தலத்திற்குப்போகிற மார்க்கம் இன்னும் வெளிப்படவில்லையென்று பரிசுத்த ஆவியானவர் தெரியப்படுத்தியிருக்கிறார். | எபிரெ 3:7 எபிரெ 10:15 ஏசா 63:11 அப் 7:51 அப் 7:52 அப் 28:25 கலா 3:8 2பேது 1:21 |
| 9 | அந்தக் கூடாரம் இக்காலத்திற்கு உதவுகிற ஒப்பனையாயிருக்கிறது; அதற்கேற்றபடியே செலுத்தப்பட்டுவருகிற காணிக்கைகளும் பலிகளும் ஆராதனை செய்கிறவனுடைய மனச்சாட்சியைப் பூரணப்படுத்தக்கூடாதவைகளாம். | எபிரெ 9:24 எபிரெ 11:19 ரோம 5:14 1பேது 3:21 |
| 10 | இவைகள் சீர்திருத்தல் உண்டாகும் காலம்வரைக்கும் நடந்தேறும்படி கட்டளையிடப்பட்ட போஜனபானங்களும், பலவித ஸ்நானங்களும், சரீரத்திற்கேற்ற சடங்குகளுமேயல்லாமல் வேறல்ல. | எபிரெ 13:9 லேவி 11:2-47 உபா 14:3-21 எசே 4:14 அப் 10:13-15 கொலோ 2:16 |
| 11 | கிறிஸ்துவானவர் வரப்போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியராய் வெளிப்பட்டு, கையினால் செய்யப்பட்டதாகிய இந்தச் சிருஷ்டிசம்பந்தமான கூடாரத்தின் வழியாக அல்ல, பெரிதும் உத்தமுமான கூடாரத்தின் வழியாகவும், | ஆதி 49:10 சங் 40:7 ஏசா 59:20 மல்கி 3:1 மத் 2:6 மத் 11:3 யோவா 4:25 1யோவா 4:2 1யோவா 4:3 1யோவா 5:20 2யோவா 1:7 |
| 12 | வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார். | எபிரெ 9:13 எபிரெ 10:4 லேவி 8:2 லேவி 9:15 லேவி 16:5-10 |
| 13 | அதெப்படியெனில், காளை வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தமும், தீட்டுப்பட்டவர்கள்மேல் தெளிக்கப்பட்ட கடாரியின் சாம்பலும், சரீரசுத்தியுண்டாகும்படி பரிசுத்தப்படுத்துமானால், | லேவி 16:14 லேவி 16:16 |
| 14 | நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்! | உபா 31:27 2சாமு 4:11 யோபு 15:16 மத் 7:11 லூக் 12:24 லூக் 12:28 ரோம 11:12 ரோம 11:24 |
| 15 | ஆகையால் முதலாம் உடன்படிக்கையின் காலத்திலே நடந்த அக்கிரமங்களை நிவிர்த்திசெய்யும்பொருட்டு அவர் மரணமடைந்து, அழைக்கப்பட்டவர்கள் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட நித்திய சுதந்தரத்தை அடைந்துகொள்வதற்காக, புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராயிருக்கிறார். | எபிரெ 7:22 எபிரெ 8:6 எபிரெ 12:24 1தீமோ 2:5 |
| 16 | ஏனென்றால், எங்கே மரணசாதனமுண்டோ, அங்கே அந்த சாதனத்தை எழுதினவனுடைய மரணமும் உண்டாகவேண்டும். |
| 17 | எப்படியெனில், மரணமுண்டான பின்பே மரணசாதனம் உறுதிப்படும்; அதை எழுதினவன் உயிரோடிருக்கையில் அதற்குப் பெலனில்லையே. | ஆதி 48:21 யோவா 14:27 கலா 3:15 |
| 18 | அந்தப்படி, முதலாம் உடன்படிக்கையும் இரத்தமில்லாமல் பிரதிஷ்டைபண்ணப்படவில்லை. | எபிரெ 8:7-9 யாத் 12:22 யாத் 24:3-8 |
| 19 | எப்படியெனில், மோசே, நியாயப்பிரமாணத்தின்படி, சகல ஜனங்களுக்கும் எல்லாக் கட்டளைகளையும் சொன்னபின்பு, இளங்காளை வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தத்தைத் தண்ணீரோடும், சிவப்பான ஆட்டுமயிரோடும், ஈசோப்போடுங்கூட எடுத்து, புஸ்தகத்தின்மேலும் ஜனங்களெல்லார்மேலும் தெளித்து: | எபிரெ 9:12 எபிரெ 10:4 யாத் 24:5 யாத் 24:6 யாத் 24:8-11 லேவி 1:2 லேவி 1:3 லேவி 1:10 லேவி 3:6 லேவி 16:14-18 |
| 20 | தேவன் உங்களுக்குக் கட்டளையிட்ட உடன்படிக்கையின் இரத்தம் இதுவே என்று சொன்னான். | எபிரெ 13:20 சகரி 9:11 மத் 26:28 |
| 21 | இவ்விதமாக, கூடாரத்தின்மேலும் ஆராதனைக்குரிய சகல பணிமுட்டுகளின்மேலும் இரத்தத்தைத் தெளித்தான். | யாத் 29:12 யாத் 29:20 யாத் 29:36 லேவி 8:15 லேவி 8:19 லேவி 9:8 லேவி 9:9 லேவி 9:18 லேவி 16:14-19 2நாளா 29:19-22 எசே 43:18-26 |
| 22 | நியாயப்பிரமாணத்தின்படி கொஞ்சங்குறைய எல்லாம் இரத்தத்தினாலே சுத்திகரிக்கப்படும்; இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது. | லேவி 14:6 லேவி 14:14 லேவி 14:25 லேவி 14:51 லேவி 14:52 |
| 23 | ஆதலால், பரலோகத்திலுள்ளவைகளுக்குச் சாயலானவைகள் இப்படிப்பட்ட பலிகளினாலே சுத்திகரிக்கப்படவேண்டியதாயிருந்தது; பரலோகத்திலுள்ளவைகளோ இவைகளிலும் விசேஷித்த பலிகளாலே சுத்திகரிக்கப்படவேண்டியதாமே. | எபிரெ 9:9 எபிரெ 9:10 எபிரெ 9:24 எபிரெ 8:5 எபிரெ 10:1 கொலோ 2:17 |
| 24 | அந்தப்படி. மெய்யான பரிசுத்த ஸ்தலத்துக்கு அடையாளமான கையினால் செய்யப்பட்டதாயிருக்கிற பரிசுத்த ஸ்தலத்திலே கிறிஸ்துவானவர் பிரவேசியாமல், பரலோகத்திலேதானே இப்பொழுது நமக்காக தேவனுடைய சமுகத்தில் பிரத்தியட்சமாகும்படி பிரவேசித்திருக்கிறார். | எபிரெ 9:11 மாற் 14:58 யோவா 2:19-21 |
| 25 | பிரதான ஆசாரியன் அந்நிய இரத்தத்தோடே வருஷந்தோறும் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிக்கிறதுபோல, அவர் அநேகந்தரம் தம்மைப் பலியிடும்படிக்குப் பிரவேசிக்கவில்லை. | எபிரெ 9:7 எபிரெ 9:14 எபிரெ 9:26 எபிரெ 10:10 |
| 26 | அப்படியிருந்ததானால், உலகமுண்டானது முதற்கொண்டு அவர் அநேகந்தரம் பாடுபடவேண்டியதாயிருக்குமே; அப்படியல்ல, அவர் தம்மைத்தாமே பலியிடுகிறதினாலே பாவங்களை நீக்கும் பொருட்டாக இந்தக் கடைசிகாலத்தில் ஒரேதரம் வெளிப்பட்டார். | மத் 25:34 யோவா 17:24 1பேது 1:20 வெளிப் 13:8 வெளிப் 17:8 |
| 27 | அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே, | ஆதி 3:19 2சாமு 14:14 யோபு 14:5 யோபு 30:23 சங் 89:48 பிரச 3:20 பிரச 9:5 பிரச 9:10 பிரச 12:7 ரோம 5:12 |
| 28 | கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கும்படிக்கு ஒரேதரம் பலியிடப்பட்டு, தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார். | எபிரெ 9:25 ரோம 6:10 1பேது 3:18 1யோவா 3:5 |