| 1 | தேவனுக்கும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கும் ஊழியக்காரனாகிய யாக்கோபு, சிதறியிருக்கிற பன்னிரண்டு கோத்திரங்களுக்கும் வாழ்த்துதல் சொல்லி எழுதுகிறதாவது: | மத் 10:3 மத் 13:55 மாற் 3:18 லூக் 6:15 அப் 1:13 அப் 12:17 அப் 15:13 அப் 21:18 கலா 1:19 கலா 2:9 கலா 2:12 யூதா 1:1 |
| 2 | என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, | யாக் 1:12 மத் 5:10-12 லூக் 6:22 லூக் 6:23 அப் 5:41 ரோம 8:17 ரோம 8:18 ரோம 8:35-37 2கொரி 12:9 2கொரி 12:10 பிலிப் 1:29 பிலிப் 2:17 கொலோ 1:24 எபிரெ 10:34 1பேது 4:13-16 |
| 3 | உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள். | ரோம 5:3 ரோம 5:4 ரோம 8:28 2கொரி 4:17 |
| 4 | நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி, பொறுமையானது பூரணகிரியை செய்யக்கடவது. | யாக் 5:7-11 யோபு 17:9 சங் 37:7 சங் 40:1 ஆபகூ 2:3 மத் 10:22 லூக் 8:15 லூக் 21:19 கலா 6:9 |
| 5 | உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும். | யாத் 31:3 யாத் 31:6 யாத் 36:1-4 1இரா 3:7-9 1இரா 3:11-9 1இரா 3:12-9 யோபு 28:12-28 நீதி 3:5-7 நீதி 9:4-6 எரே 1:6 எரே 1:7 2கொரி 2:16 |
| 6 | ஆனாலும் அவன் எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடே கேட்கக்கடவன்; சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான். | மத் 21:22 மாற் 11:22-24 1தீமோ 2:8 எபிரெ 11:6 |
| 7 | அப்படிப்பட்ட மனுஷன் தான் கர்த்தரிடத்தில் எதையாகிலும் பெறலாமென்று நினையாதிருப்பானாக. | யாக் 4:3 நீதி 15:8 நீதி 21:27 ஏசா 1:15 ஏசா 58:3 ஏசா 58:4 |
| 8 | இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாயிருக்கிறான். | யாக் 4:8 1இரா 18:21 2இரா 17:33 2இரா 17:41 ஏசா 29:13 ஓசி 7:8-11 ஓசி 10:2 மத் 6:22 மத் 6:24 2பேது 2:14 2பேது 3:16 |
| 9 | தாழ்ந்த சகோதரன் தான் உயர்த்தப்பட்டதைக்குறித்து மேன்மைபாராட்டக்கடவன். | யாக் 2:5 யாக் 2:6 உபா 15:7 உபா 15:9 உபா 15:11 சங் 62:9 நீதி 17:5 நீதி 19:1 லூக் 1:52 |
| 10 | ஐசுவரியவான் தான் தாழ்த்தப்பட்டதைக்குறித்து மேன்மைபாராட்டக்கடவன்; ஏனெனில் அவன் புல்லின் பூவைப்போல் ஒழிந்துபோவான். | ஏசா 57:15 ஏசா 66:2 மத் 5:3 பிலிப் 3:8 1தீமோ 6:17 |
| 11 | சூரியன் கடும் வெய்யிலுடன் உதித்து, புல்லை உலர்த்தும்போது, அதின் பூ உதிர்ந்து, அதின் அழகான வடிவு அழிந்துபோகும்; ஐசுவரியவானும் அப்படியே தன் வழிகளில் வாடிப்போவான். | ஏசா 49:10 யோனா 4:7 யோனா 4:8 மத் 13:6 மாற் 4:6 |
| 12 | சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான். | யாக் 1:2-4 யாக் 5:11 யோபு 5:17 சங் 94:12 சங் 119:67 சங் 119:71 சங் 119:75 நீதி 3:11 நீதி 3:12 எபிரெ 6:15 எபிரெ 10:32 எபிரெ 12:5 வெளிப் 3:19 |
| 13 | சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக; தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல. | யாக் 1:2 யாக் 1:12 ஆதி 3:12 ஏசா 63:17 ஆபகூ 2:12 ஆபகூ 2:13 ரோம 9:19 ரோம 9:20 |
| 14 | அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். | யாக் 4:1 யாக் 4:2 ஆதி 6:5 ஆதி 8:21 யோசு 7:21-24 2சாமு 11:2 2சாமு 11:3 1இரா 21:2-4 யோபு 31:9 யோபு 31:27 நீதி 4:23 ஏசா 44:20 ஓசி 13:9 மத் 5:28 மத் 15:18 மத் 15:20 மாற் 7:21 மாற் 7:22 ரோம 7:11 ரோம 7:13 எபே 4:22 எபிரெ 3:13 |
| 15 | பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும். | ஆதி 3:6 ஆதி 4:5-8 யோபு 15:35 சங் 7:14 ஏசா 59:4 மீகா 2:1-3 மத் 26:14 மத் 26:48-59 அப் 5:1-3 |
| 16 | என் பிரியமான சகோதரரே, மோசம்போகாதிருங்கள். | மத் 22:29 மாற் 12:24 மாற் 12:27 கலா 6:7 கொலோ 2:4 கொலோ 2:8 2தீமோ 2:18 |
| 17 | நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை. | யாக் 1:5 யாக் 3:15 யாக் 3:17 ஆதி 41:16 ஆதி 41:38 ஆதி 41:39 யாத் 4:11 யாத் 4:12 யாத் 31:3-6 யாத் 36:1 யாத் 36:2 எண் 11:17 எண் 11:25 1நாளா 22:12 1நாளா 29:19 2நாளா 1:11 2நாளா 1:12 நீதி 2:6 ஏசா 28:26 தானி 2:21 தானி 2:22 தானி 2:27-30 மத் 7:11 மத் 11:25 மத் 11:26 மத் 13:11 மத் 13:12 லூக் 11:13 யோவா 3:27 அப் 5:31 அப் 11:18 ரோம 6:23 ரோம 11:30 ரோம 12:6-8 1கொரி 4:7 1கொரி 12:4-12 எபே 2:3-5 எபே 2:8-5 எபே 4:8-11 பிலிப் 1:29 தீத் 3:3-5 1யோவா 4:10 1யோவா 5:11 1யோவா 5:12 |
| 18 | அவர் சித்தங்கொண்டு தம்முடைய சிருஷ்டிகளில் நாம் முதற்பலன்களாவதற்கு நம்மைச் சத்திய வசனத்தினாலே ஜெநிப்பித்தார். | யோவா 1:13 யோவா 3:3-5 ரோம 4:17 ரோம 8:29-31 ரோம 9:15-18 எபே 2:4 எபே 2:5 கொலோ 1:20 கொலோ 1:21 2தெச 2:13 2தெச 2:14 1பேது 1:3 1பேது 1:23 |
| 19 | ஆகையால், என் பிரியமான சகோதரரே, யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருக்கக்கடவர்கள்; | நெகே 8:2 நெகே 8:3 நெகே 8:12-14 நெகே 8:18-14 நெகே 9:3 நீதி 8:32-35 பிரச 5:1 மாற் 2:2 மாற் 12:37 லூக் 15:1 லூக் 19:48 அப் 2:42 அப் 10:33 அப் 13:42-44 அப் 13:48-44 அப் 17:11 1தெச 2:13 |
| 20 | மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே. | யாக் 3:17 யாக் 3:18 எண் 20:11 எண் 20:12 2தீமோ 2:24 2தீமோ 2:25 |
| 21 | ஆகையால், நீங்கள் எல்லாவித அழுக்கையும் கொடிய துர்க்குணத்தையும் ஒழித்துவிட்டு, உங்கள் உள்ளத்தில் நாட்டப்பட்டதாயும் உங்கள் ஆத்துமாக்களை இரட்சிக்க வல்லமையுள்ளதாயுமிருக்கிற வசனத்தைச் சாந்தமாய் ஏற்றுக்கொள்ளுங்கள். | ஏசா 2:20 ஏசா 30:22 எசே 18:31 ரோம 13:12 ரோம 13:13 எபே 4:22 கொலோ 3:5-8 எபிரெ 12:1 1பேது 2:1 1பேது 2:11 |
| 22 | அல்லாமலும், நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள். | யாக் 4:17 மத் 7:21-25 மத் 12:50 மத் 28:20 லூக் 6:46-48 லூக் 11:28 லூக் 12:47 லூக் 12:48 யோவா 13:17 ரோம 2:13 பிலிப் 4:8 கொலோ 3:17 1யோவா 2:3 1யோவா 3:7 3யோவா 1:11 வெளிப் 22:7 |
| 23 | என்னத்தினாலெனில், ஒருவன் திருவசனத்தைக்கேட்டும் அதின்படி செய்யாதவனானால், கண்ணாடியிலே தன் சுபாவமுகத்தைப் பார்க்கிற மனுஷனுக்கு ஒப்பா.யிருப்பான்; | யாக் 2:14-26 எரே 44:16 எசே 33:31 எசே 33:32 மத் 7:26 மத் 7:27 லூக் 6:47-7 |
| 24 | அவன் தன்னைத்தானே பார்த்து, அவ்விடம்விட்டுப் போனவுடனே, தன் சாயல் இன்னதென்பதை மறந்துவிடுவான். | நியா 8:18 மத் 8:27 லூக் 1:66 லூக் 7:39 1தெச 1:5 2பேது 3:11 |
| 25 | சுயாதீனப்பிரமாணமாகிய பூரணப்பிரமாணத்தை உற்றுப்பார்த்து, அதிலே நிலைத்திருக்கிறவனே கேட்கிறதை மறக்கிறவனாயிராமல், அதற்கேற்ற கிரியை செய்கிறவனாயிருந்து, தன் செய்கையில் பாக்கியவானாயிருப்பான். | நீதி 14:15 ஏசா 8:20 2கொரி 13:5 எபிரெ 12:15 |
| 26 | உங்களில் ஒருவன் தன் நாவை அடக்காமல், தன் இருதயத்தை வஞ்சித்து, தன்னை தேவபக்தியுள்ளவனென்று எண்ணினால் அவனுடைய தேவபக்தி வீணாயிருக்கும். | நீதி 14:12 நீதி 16:25 லூக் 8:18 1கொரி 3:18 கலா 2:6 கலா 2:9 கலா 6:3 |
| 27 | திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது. | யாக் 3:17 சங் 119:1 மத் 5:8 லூக் 1:6 1தீமோ 1:5 1தீமோ 5:4 |