| 1 | இப்படியிருக்க, நியாயப்பிரமாணமானது வரப்போகிற நன்மைகளின் பொருளாயிராமல், அவைகளின் நிழலாய்மாத்திரம் இருக்கிறபடியால், வருஷந்தோறும் இடைவிடாமல் செலுத்தப்பட்டுவருகிற ஒரேவிதமான பலிகளினாலே அவைகளைச் செலுத்தவருகிறவர்களை ஒருக்காலும் பூரணப்படுத்தமாட்டாது. | எபிரெ 8:5 எபிரெ 9:9 எபிரெ 9:11 எபிரெ 9:23 கொலோ 2:17 |
| 2 | பூரணப்படுத்துமானால், ஆராதனைசெய்கிறவர்கள் ஒருதரம் சுத்தமாக்கப்பட்டபின்பு, இன்னும் பாவங்களுண்டென்று உணர்த்தும் மனச்சாட்சி அவர்களுக்கு இல்லாதிருப்பதினால், அந்தப் பலிகளைச் செலுத்துகிறது நிறுத்தப்படுமல்லவா? | எபிரெ 10:17 எபிரெ 9:13 எபிரெ 9:14 சங் 103:12 ஏசா 43:25 ஏசா 44:22 மீகா 7:19 |
| 3 | அப்படி நிறுத்தப்படாதபடியால், பாவங்கள் உண்டென்று அவைகளினாலே வருஷந்தோறும் நினைவுகூருதல் உண்டாயிருக்கிறது. | எபிரெ 9:7 யாத் 30:10 லேவி 16:6-11 லேவி 16:21-11 லேவி 16:22-11 லேவி 16:29-11 லேவி 16:30-11 லேவி 16:34-11 லேவி 23:27 லேவி 23:28 எண் 29:7-11 1இரா 17:18 மத் 26:28 |
| 4 | அல்லாமலும், காளை வெள்ளாட்டுக்கடா இவைகளுடைய இரத்தம் பாவங்களை நிவிர்த்திசெய்யமாட்டாதே. | எபிரெ 10:8 எபிரெ 9:9 எபிரெ 9:13 சங் 50:8-12 சங் 51:16 ஏசா 1:11-15 ஏசா 66:3 எரே 6:20 எரே 7:21 எரே 7:22 ஓசி 6:6 ஆமோ 5:21 ஆமோ 5:22 மீகா 6:6-8 மாற் 12:33 |
| 5 | ஆகையால் அவர் உலகத்தில் பிரவேசிக்கும்போது: பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை, ஒரு சரீரத்தை எனக்கு ஆயத்தம்பண்ணினீர்; | எபிரெ 10:7 எபிரெ 1:6 மத் 11:3 லூக் 7:19 |
| 6 | சர்வாங்க தகனபலிகளும், பாவநிவாரணபலிகளும் உமக்குப் பிரியமானதல்ல என்றீர். | எபிரெ 10:4 லேவி 1:1-6 |
| 7 | அப்பொழுது நான்: தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன், புஸ்தகச்சுருளில் என்னைக்குறித்து எழுதியிருக்கிறது என்று சொன்னேன் என்றார். | எபிரெ 10:9 எபிரெ 10:10 நீதி 8:31 யோவா 4:34 யோவா 5:30 யோவா 6:38 |
| 8 | நியாயப்பிரமாணத்தின்படி செலுத்தப்பட்டுவருகிற பலிகளைக்குறித்து மேற்சொல்லியபடி: பலியையும், காணிக்கையையும், சர்வாங்கதகனபலிகளையும், பாவநிவாரணபலிகளையும் நீர் விரும்பவில்லை, அவைகள் உமக்குப் பிரியமானதல்ல என்று சொன்னபின்பு: |
| 9 | தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன் என்று சொன்னார். இரண்டாவதை நிலைநிறுத்துவதற்கு முதலாவதை நீக்கிப்போடுகிறார். | எபிரெ 9:11-14 |
| 10 | இயேசுகிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேதரம் பலியிடப்பட்டதினாலே, அந்தச் சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம். | எபிரெ 2:11 எபிரெ 13:12 சகரி 13:1 யோவா 17:19 யோவா 19:34 1கொரி 1:30 1கொரி 6:11 1யோவா 5:6 |
| 11 | அன்றியும், எந்த ஆசாரியனும் நாடோறும் ஆராதனைசெய்கிறவனாயும், பாவங்களை ஒருக்காலும் நிவிர்த்திசெய்யக்கூடாத ஒரேவித பலிகளை அநேகந்தரம் செலுத்திவருகிறவனாயும் நிற்பான். | எபிரெ 7:27 யாத் 29:38 யாத் 29:39 எண் 28:3 எண் 28:24 எண் 29:6 எசே 45:4 தானி 8:11 தானி 9:21 தானி 9:27 தானி 11:31 தானி 12:11 லூக் 1:9 லூக் 1:10 |
| 12 | இவரோ, பாவங்களுக்காக ஒரே பலியைச் செலுத்தி என்றென்றைக்கும் தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்து, | எபிரெ 1:3 எபிரெ 8:1 எபிரெ 9:12 அப் 2:33 அப் 2:34 ரோம 8:34 கொலோ 3:1 |
| 13 | இனித் தம்முடைய சத்துருக்களைத் தமது பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் காத்துக்கொண்டிருக்கிறார். | எபிரெ 1:13 சங் 110:1 தானி 2:44 மத் 22:44 மாற் 12:36 லூக் 20:43 அப் 2:35 1கொரி 15:25 |
| 14 | ஏனெனில் பரிசுத்தமாக்கப்படுகிறவர்களை ஒரே பலியினாலே இவர் என்றென்றைக்கும் பூரணப்படுத்தியிருக்கிறார். | எபிரெ 10:1 எபிரெ 7:19 எபிரெ 7:25 எபிரெ 9:10 எபிரெ 9:14 |
| 15 | இதைக்குறித்துப் பரிசுத்த ஆவியானவரும் நமக்குச் சாட்சிசொல்லுகிறார்; எப்படியெனில்: | எபிரெ 2:3 எபிரெ 2:4 எபிரெ 3:7 எபிரெ 9:8 2சாமு 23:2 நெகே 9:30 யோவா 15:26 அப் 28:25 1பேது 1:11 1பேது 1:12 2பேது 1:21 வெளிப் 2:7 வெளிப் 2:11 வெளிப் 2:17 வெளிப் 2:29 வெளிப் 3:6 வெளிப் 3:13 வெளிப் 3:22 வெளிப் 19:10 |
| 16 | அந்த நாட்களுக்குப்பின்பு நான் அவர்களோடே பண்ணும் உடன்படிக்கையாவது: நான் என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய இருதயங்களில் வைத்து, அவைகளை அவர்களுடைய மனதில் எழுதுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறாரென்பதை உரைத்தபின்பு, | எபிரெ 8:8-12 எரே 31:33 எரே 31:34 ரோம 11:27 |
| 17 | அவர்களுடைய பாவங்களையும் அவர்களுடைய அக்கிரமங்களையும் நான் இனி நினைப்பதில்லை என்பதைச் சொல்லுகிறார். |
| 18 | இவைகள் மன்னிக்கப்பட்டதுண்டானால், இனிப் பாவத்தினிமித்தம் பலிசெலுத்தப்படுவதில்லையே. | எபிரெ 10:2 எபிரெ 10:14 |
| 19 | ஆகையால், சகோதரரே, நாம் பரிசுத்தஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும் ஜீவனுமானமார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால், | எபிரெ 4:16 எபிரெ 12:28 ரோம 8:15 கலா 4:6 கலா 4:7 எபே 3:12 2தீமோ 1:7 1யோவா 3:19-21 1யோவா 4:17 |
| 20 | அந்த மார்க்கத்தின்வழியாய்ப் பிரவேசிப்பதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறபடியினாலும், | யோவா 10:7 யோவா 10:9 யோவா 14:6 |
| 21 | தேவனுடைய வீட்டின்மேல் அதிகாரியான மகா ஆசாரியர் நமக்கு ஒருவர் இருக்கிறபடியினாலும், | எபிரெ 2:17 எபிரெ 3:1 எபிரெ 4:14-16 எபிரெ 6:20 எபிரெ 7:26 எபிரெ 8:1 |
| 22 | துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம். | எபிரெ 4:16 எபிரெ 7:19 சங் 73:28 ஏசா 29:13 எரே 30:21 யாக் 4:8 |
| 23 | அல்லாமலும், நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம்; வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே. | எபிரெ 3:6 எபிரெ 3:14 எபிரெ 4:14 வெளிப் 3:11 |
| 24 | மேலும், அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து; | எபிரெ 13:3 சங் 41:1 நீதி 29:7 அப் 11:29 ரோம 12:15 ரோம 15:1 ரோம 15:2 1கொரி 8:12 1கொரி 8:13 1கொரி 9:22 1கொரி 10:33 கலா 6:1 கொலோ 3:16 1தெச 5:11 2தெச 3:9 |
| 25 | சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும். | மத் 18:20 யோவா 20:19-29 அப் 1:13 அப் 1:14 அப் 2:1 அப் 2:42 அப் 16:16 அப் 20:7 1கொரி 5:4 1கொரி 11:17 1கொரி 11:18 1கொரி 11:20 1கொரி 14:23 யூதா 1:19 |
| 26 | சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு, நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமல், | எபிரெ 6:4-6 லேவி 4:2 லேவி 4:13 எண் 15:28-31 உபா 17:12 சங் 19:12 சங் 19:13 தானி 5:22 தானி 5:23 மத் 12:31 மத் 12:32 மத் 12:43-45 யோவா 9:41 1தீமோ 1:13 2பேது 2:20-22 1யோவா 5:16 |
| 27 | நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்ப்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும். | எபிரெ 2:3 எபிரெ 12:25 1சாமு 28:19 1சாமு 28:20 ஏசா 33:14 தானி 5:6 ஓசி 10:8 மத் 8:29 லூக் 21:26 லூக் 23:30 வெளிப் 6:15-17 |
| 28 | மோசேயினுடைய பிரமாணத்தைத் தள்ளுகிறவன் இரக்கம்பெறாமல் இரண்டு மூன்று சாட்சிகளின் வாக்கினாலே சாகிறானே; | எபிரெ 2:2 எண் 15:30 எண் 15:31 எண் 15:36 உபா 13:6-10 உபா 17:2-13 2சாமு 12:9 2சாமு 12:13 |
| 29 | தேவனுடைய குமாரனைக் காலின் கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பான் என்பதை யோசித்துப்பாருங்கள். | எபிரெ 2:3 எபிரெ 12:25 |
| 30 | பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றும், கர்த்தர் தம்முடைய ஜனங்களை நியாயந்தீர்ப்பார் என்றும் சொன்னவர் இன்னாரென்று அறிவோம். | உபா 32:35 சங் 94:1 ஏசா 59:17 ஏசா 61:2 ஏசா 63:4 நாகூ 1:2 ரோம 12:19 ரோம 13:4 |
| 31 | ஜீவனுள்ள தேவனுடைய கைகளில் விழுகிறது பயங்கரமாயிருக்குமே. | எபிரெ 10:27 ஏசா 33:14 லூக் 21:11 |
| 32 | முந்தின நாட்களை நினைத்துக்கொள்ளுங்கள்; நீங்கள் பிரகாசமாக்கப்பட்டிருந்த அந்த நாட்களில் உபத்திரவங்களாகிய மிகுந்த போராட்டத்தைச் சகித்தீர்களே. | கலா 3:3 கலா 3:4 பிலிப் 3:16 2யோவா 1:8 வெளிப் 2:5 வெளிப் 3:3 |
| 33 | நிந்தைகளாலும் உபத்திரவங்களாலும் நீங்கள் வேடிக்கையாக்கப்பட்டதுமல்லாமல், அப்படி நடத்தப்பட்டவர்களுக்குப் பங்காளிகளுமானீர்கள். | எபிரெ 11:36 சங் 71:7 நாகூ 3:6 சகரி 3:8 1கொரி 4:9 |
| 34 | நான் கட்டப்பட்டிருக்கையில் நீங்கள் என்னைக்குறித்துப் பரிதபித்ததுமன்றி, பரலோகத்தில் அதிக மேன்மையும் நிலையுள்ளதுமான சுதந்தரம் உங்களுக்கு உண்டென்று அறிந்து, உங்கள் ஆஸ்திகளையும் சந்தோஷமாய்க் கொள்ளையிடக் கொடுத்தீர்கள். | அப் 21:33 அப் 28:20 எபே 3:1 எபே 4:1 எபே 6:20 பிலிப் 1:7 2தீமோ 1:16 2தீமோ 2:9 |
| 35 | ஆகையால், மிகுந்த பலனுக்கேதுவான உங்கள் தைரியத்தை விட்டுவிடாதிருங்கள். | எபிரெ 3:6 எபிரெ 3:14 எபிரெ 4:14 |
| 36 | நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படிசெய்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது. | எபிரெ 6:15 எபிரெ 12:1 சங் 37:7 சங் 40:1 மத் 10:22 மத் 24:13 லூக் 8:15 லூக் 21:19 ரோம 2:7 ரோம 5:3 ரோம 5:4 ரோம 8:25 ரோம 15:4 ரோம 15:5 1கொரி 13:7 கலா 6:9 கொலோ 1:11 1தெச 1:3 யாக் 1:3 யாக் 1:4 யாக் 5:7-11 வெளிப் 13:10 வெளிப் 14:12 |
| 37 | வருகிறவர் இன்னுங்கொஞ்சக்காலத்தில் வருவார், தாமதம்பண்ணார். | ஏசா 26:20 ஏசா 60:22 ஆபகூ 2:3 ஆபகூ 2:4 லூக் 18:8 யாக் 5:7-9 2பேது 3:8 வெளிப் 22:20 |
| 38 | விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான், பின்வாங்கிப்போவானானால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது என்கிறார். | ஆபகூ 2:4 ரோம 1:17 கலா 3:11 |
| 39 | நாமோ கெட்டுப்போகப் பின்வாங்குகிறவர்களாயிராமல், ஆத்துமா ஈடேற விசுவாசிக்கிறவர்களாயிருக்கிறோம். | எபிரெ 6:6-9 1சாமு 15:11 சங் 44:18 நீதி 1:32 நீதி 14:14 லூக் 11:26 1யோவா 5:16 யூதா 1:12 யூதா 1:13 |