| 1 | மேற்சொல்லியவைகளின் முக்கியமான பொருளென்னவெனில்; பரலோகத்திலுள்ள மகத்துவ ஆசனத்தின் வலதுபாரிசத்திலே உட்கார்ந்திருக்கிறவருமாய், | எபிரெ 7:26-28 |
| 2 | பரிசுத்த ஸ்தலத்திலும், மனுஷரால் அல்ல, கர்த்தரால் ஸ்தாபிக்கப்பட்ட மெய்யான கூடாரத்திலும் ஆசாரிய ஊழியஞ்செய்கிறவருமாயிருக்கிற பிரதான ஆசாரியர் நமக்கு உண்டு. | எபிரெ 9:8-12 எபிரெ 10:21 யாத் 28:1 யாத் 28:35 லூக் 24:44 ரோம 15:8 |
| 3 | ஒவ்வொரு பிரதான ஆசாரியனும் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்தும்படி நியமிக்கப்படுகிறான்; ஆதலால் செலுத்தும்படிக்கு ஏதோ ஒன்று இவருக்கும் அவசியம் வேண்டியதாயிருக்கிறது. | எபிரெ 5:1 எபிரெ 7:27 |
| 4 | பூமியிலே அவர் இருப்பாரானால் ஆசாரியராயிருக்கமாட்டார்; ஏனெனில், நியாயப்பிரமாணத்தின்படி காணிக்கைகளைச் செலுத்துகிற ஆசாரியர்கள் இருக்கிறார்களே; | எபிரெ 7:11-15 எண் 16:40 எண் 17:12 எண் 17:13 எண் 18:5 2நாளா 26:18 2நாளா 26:19 |
| 5 | இவர்கள் செய்யும் ஆராதனை பரலோகத்திலுள்ளவைகளின் சாயலுக்கும் நிழலுக்கும் ஒத்திருக்கிறது; அப்படியே, மோசே கூடாரத்தை உண்டுபண்ணப்போகையில்: மலையிலே உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படியே நீ எல்லாவற்றையும் செய்ய எச்சரிக்கையாயிரு என்று தேவன் அவனுக்குக் கட்டளையிட்டார். | எபிரெ 9:9 எபிரெ 9:23 எபிரெ 9:24 எபிரெ 10:1 கொலோ 2:17 |
| 6 | இவரோ விசேஷித்த வாக்குத்தத்தங்களின்பேரில் ஸ்தாபிக்கப்பட்ட விசேஷித்த உடன்படிக்கைக்கு எப்படி மத்தியஸ்தராயிருக்கிறாரோ, அப்படியே முக்கியமான ஆசாரிய ஊழியத்தையும் பெற்றிருக்கிறார். | எபிரெ 8:7-13 2கொரி 3:6-11 |
| 7 | அந்த முதலாம் உடன்படிக்கை பிழையில்லாதிருந்ததானால், இரண்டாம் உடன்படிக்கைக்கு இடம் தேடவேண்டுவதில்லையே. | எபிரெ 8:6 எபிரெ 7:11 எபிரெ 7:18 கலா 3:21 |
| 8 | அவர்களைக் குற்றப்படுத்தி, அவர்களை நோக்கி: இதோ, கர்த்தர் சொல்லுகிறதென்னவெனில்: இஸ்ரவேல் குடும்பத்தோடும் யூதா குடும்பத்தோடும் நான் புது உடன்படிக்கையை ஏற்படுத்துங்காலம் வருகிறது. | எரே 31:31-34 |
| 9 | அவர்களுடைய பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து கொண்டுவரும்படிக்கு நான் அவர்களுடைய கையைப் பிடித்த நாளிலே அவர்களோடு பண்ணின உடன்படிக்கையைப்போல இது இருப்பதில்லை; அந்த உடன்படிக்கையிலே அவர்கள் நிலைநிற்கவில்லையே, நானும் அவர்களைப் புறக்கணித்தேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். | எபிரெ 9:18-20 யாத் 24:3-11 யாத் 34:10 யாத் 34:27 யாத் 34:28 உபா 5:2 உபா 5:3 உபா 29:1 உபா 29:12 கலா 3:15-19 கலா 4:24 |
| 10 | அந்த நாட்களுக்குப்பின்பு நான் இஸ்ரவேல் குடும்பத்தாரோடே பண்ணும் உடன்படிக்கையாவது: என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய மனதிலே வைத்து, அவர்களுடைய இருதயங்களில் அவைகளை எழுதுவேன்; நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள். | எபிரெ 10:16 எபிரெ 10:17 |
| 11 | அப்பொழுது சிறியவன் முதற்கொண்டு பெரியவன்வரைக்கும் எல்லாரும் என்னை அறிவார்கள்; ஆகையால், கர்த்தரை அறிந்துகொள் என்று ஒருவன் தன் அயலானுக்கும், ஒருவன் தன் சகோதரனுக்கும் போதிக்கவேண்டுவதில்லை. | ஏசா 2:3 ஏசா 54:13 எரே 31:34 யோவா 6:45 1யோவா 2:27 |
| 12 | ஏனெனில் நான் அவர்கள் அநியாயங்களைக் கிருபையாய் மன்னித்து, அவர்கள் பாவங்களையும் அக்கிரமங்களையும் இனி நினையாமலிருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். | எபிரெ 10:16 எபிரெ 10:17 சங் 25:7 சங் 65:3 ஏசா 43:25 ஏசா 44:22 எரே 33:8 எரே 50:20 மீகா 7:19 அப் 13:38 அப் 13:39 ரோம 11:27 எபே 1:7 கொலோ 1:14 1யோவா 1:7-9 1யோவா 2:1 1யோவா 2:2 வெளிப் 1:5 |
| 13 | புது உடன்படிக்கை என்று அவர் சொல்லுகிறதினாலே முந்தினதைப் பழமையாக்கினார்; பழமையானதும் நாள்பட்டதுமாயிருக்கிறது உருவழிந்துபோகக் காலம் சமீபித்திருக்கிறது. | எபிரெ 7:11 எபிரெ 7:12 எபிரெ 7:18 எபிரெ 7:19 எபிரெ 9:9 எபிரெ 9:10 |