| 1 | ஆகையால், கிறிஸ்துவைப்பற்றிச் சொல்லிய மூல உபதேசவசனங்களை நாம்விட்டு, செத்த கிரியைகளுக்கு நீங்கலாகும் மனந்திரும்புதல், தேவன்பேரில் வைக்கும் விசுவாசம், | எபிரெ 5:12-14 |
| 2 | ஸ்நானங்களுக்கடுத்த உபதேசம், கைகளை வைக்குதல், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நித்திய நியாயத்தீர்ப்பு என்பவைகளாகிய அஸ்திபாரத்தை மறுபடியும் போடாமல், பூரணராகும்படி கடந்து போவோமாக. | எபிரெ 9:10 மாற் 7:4 மாற் 7:8 லூக் 11:38 மத் 3:14 மத் 20:22 மத் 20:23 மத் 28:19 மாற் 16:16 லூக் 3:16 லூக் 12:50 யோவா 1:33 யோவா 3:25 யோவா 3:26 யோவா 4:1 யோவா 4:2 அப் 2:38 அப் 2:41 அப் 8:12 அப் 8:13 அப் 8:16 அப் 8:36-38 அப் 10:47 அப் 16:15 அப் 16:33 அப் 19:2-5 ரோம 6:3 ரோம 6:4 1கொரி 1:12-17 1கொரி 10:2 1கொரி 12:13 கொலோ 2:12 1பேது 3:20 1பேது 3:21 |
| 3 | தேவனுக்குச் சித்தமானால் இப்படியே செய்வோம். | அப் 18:21 ரோம 15:32 1கொரி 4:19 1கொரி 16:7 யாக் 4:15 |
| 4 | ஏனெனில், ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரம ஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும், | எபிரெ 10:26-29 எபிரெ 12:15-17 மத் 5:13 மத் 12:31 மத் 12:32 மத் 12:45 லூக் 11:24-26 யோவா 15:6 2தீமோ 2:25 2தீமோ 4:14 2பேது 2:20-22 1யோவா 5:16 |
| 5 | தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும், | மத் 13:20 மத் 13:21 மாற் 4:16 மாற் 4:17 மாற் 6:20 லூக் 8:13 1பேது 2:3 2பேது 2:20 |
| 6 | மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம். | எபிரெ 6:4 சங் 51:10 ஏசா 1:28 2தீமோ 2:25 |
| 7 | எப்படியெனில், தன்மேல் அடிக்கடி பெய்கிற மழையைக் குடித்து, தன்னிடத்தில் பயிரிடுகிறவர்களுக்கேற்ற பயிரைமுளைப்பிக்கும் நிலமானது தேவனால் ஆசீர்வாதம் பெறும். | உபா 28:11 உபா 28:12 சங் 65:9-13 சங் 104:11-13 ஏசா 55:10-13 யோவே 2:21-26 யாக் 5:7 |
| 8 | முள்செடிகளையும் முள்பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோ தகாததாயும் சபிக்கப்படுகிறதற்கேற்றதாயுமிருக்கிறது; சுட்டெரிக்கப்படுவதே அதின் முடிவு. | எபிரெ 12:17 ஆதி 3:17 ஆதி 3:18 ஆதி 4:11 ஆதி 5:29 உபா 29:28 யோபு 31:40 சங் 107:34 ஏசா 5:1-7 எரே 17:6 எரே 44:22 மாற் 11:14 மாற் 11:21 லூக் 13:7-9 |
| 9 | பிரியமானவர்களே, நாங்கள் இப்படிச் சொன்னாலும், நன்மையானவைகளும் இரட்சிப்புக்குரியவைகளுமான காரியங்கள் உங்களிடத்தில் உண்டாயிருக்கிறதென்று நம்பியிருக்கிறோம். | எபிரெ 6:4-6 எபிரெ 6:10-6 எபிரெ 10:34 எபிரெ 10:39 பிலிப் 1:6 பிலிப் 1:7 1தெச 1:3 1தெச 1:4 |
| 10 | ஏனென்றால், உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே. | நீதி 14:31 மத் 10:42 மத் 25:40 யோவா 13:20 |
| 11 | நீங்கள் அசதியாயிராமல், வாக்குத்தத்தமான ஆசீர்வாதங்களை விசுவாசத்தினாலும் நீடிய பொறுமையினாலும் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களைப் பின்பற்றுகிறவர்களாயிருந்து, | ரோம 12:8 ரோம 12:11 1கொரி 15:58 கலா 6:9 பிலிப் 1:9-11 பிலிப் 3:15 1தெச 4:10 2தெச 3:13 2பேது 1:5-8 2பேது 3:14 |
| 12 | உங்களுக்கு நம்பிக்கையின் பூரணநிச்சயமுண்டாகும்படி நீங்கள்யாவரும் முடிவுபரியந்தம் அப்படியே ஜாக்கிரதையைக் காண்பிக்கவேண்டுமென்று ஆசையாயிருக்கிறோம். | எபிரெ 5:11 நீதி 12:24 நீதி 13:4 நீதி 15:19 நீதி 18:9 நீதி 24:30-34 மத் 25:26 ரோம 12:11 2பேது 1:10 |
| 13 | ஆபிரகாமுக்கு தேவன் வாக்குத்தத்தம்பண்ணினபோது, ஆணையிடும்படி தம்மிலும் பெரியவர் ஒருவருமில்லாதபடியினாலே தமதுபேரிலே தானே ஆணையிட்டு: | எபிரெ 6:16-18 ஆதி 22:15-18 எசே 32:13 சங் 105:9 சங் 105:10 ஏசா 45:23 எரே 22:5 எரே 49:13 மீகா 7:20 லூக் 1:73 |
| 14 | நிச்சயமாக நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன்னைப்பெருகவே பெருகப்பண்ணுவேன் என்றார். | ஆதி 17:2 ஆதி 48:4 யாத் 32:13 உபா 1:10 நெகே 9:23 |
| 15 | அந்தப்படியே, அவன் பொறுமையாய்க் காத்திருந்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெற்றான். | எபிரெ 6:12 ஆதி 12:2 ஆதி 12:3 ஆதி 15:2-6 ஆதி 17:16 ஆதி 17:17 ஆதி 21:2-7 யாத் 1:7 ஆபகூ 2:2 ஆபகூ 2:3 ரோம 4:17-25 |
| 16 | மனுஷர் தங்களிலும் பெரியவர்பேரில் ஆணையிடுவார்கள்; உறுதிபண்ணும்படிக்கு ஆணையிடுதலே சகல விவாதத்திற்கும் முடிவு. | எபிரெ 6:13 ஆதி 14:22 ஆதி 21:23 மத் 23:20-22 |
| 17 | அந்தப்படி, தேவனும் வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளைச் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களுக்குத் தமது ஆலோசனையின் மாறாத நிச்சயத்தைப் பரிபூரணமாய்க் காண்பிக்கும்படி சித்தமுள்ளவராய், ஓர் ஆணையினாலே அதை ஸ்திரப்படுத்தினார். | சங் 36:8 உன்ன 5:1 ஏசா 55:7 யோவா 10:10 1பேது 1:3 |
| 18 | நமக்கு முன் வைக்கப்பட்ட நம்பிக்கையைப்பற்றிக்கொள்ளும்படி அடைக்கலமாய் ஓடிவந்த நமக்கு இரண்டு மாறாத விசேஷங்களினால் நிறைந்த ஆறுதலுண்டாகும்படிக்கு எவ்வளவேனும் பொய்யுரையாத தேவன் அப்படிச் செய்தார். | எபிரெ 3:11 எபிரெ 7:21 சங் 110:4 மத் 24:35 |
| 19 | அந்த நம்பிக்கை நமக்கு நிலையும் உறுதியும் திரைக்குள்ளாகப்போகிறதுமான ஆத்தும நங்கூரமாயிருக்கிறது. | அப் 27:29 அப் 27:40 |
| 20 | நமக்கு முன்னோடினவராகிய இயேசு மெல்கிசேதேக்கின் முறைமையின்படி நித்திய பிரதான ஆசாரியராய் நமக்காக அந்தத் திரைக்குள் பிரவேசித்திருக்கிறார். | எபிரெ 2:10 யோவா 14:2 யோவா 14:3 |