| 1 | அன்றியும், மனுஷரில் தெரிந்துகொள்ளப்பட்ட எந்தப் பிரதான ஆசாரியனும் பாவங்களுக்காகக் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்தும்படி, மனுஷருக்காக தேவகாரியங்களைப்பற்றி நியமிக்கப்படுகிறான். | எபிரெ 10:11 யாத் 28:1-14 யாத் 29:1-37 லேவி 8:2 |
| 2 | தானும் பலவீனமுள்ளவனானபடியினாலே, அறியாதவர்களுக்கும் நெறிதப்பிப்போனவர்களுக்கும் இரங்கத்தக்கவனாயிருக்கிறான். | எபிரெ 2:18 எபிரெ 4:15 |
| 3 | அதினிமித்தம் அவன் ஜனங்களுடைய பாவங்களுக்காகப் பலியிடவேண்டியதுபோல, தன்னுடைய பாவங்களுக்காகவும் பலியிடவேண்டியதாயிருக்கிறது. | எபிரெ 7:27 எபிரெ 9:7 யாத் 29:12-19 லேவி 4:3-12 லேவி 8:14-21 லேவி 9:7 லேவி 16:6 லேவி 16:15 |
| 4 | மேலும், ஆரோனைப்போல தேவனால் அழைக்கப்பட்டாலொழிய, ஒருவனும் இந்தக் கனமான ஊழியத்துக்குத் தானாய் ஏற்படுகிறதில்லை. | யாத் 28:1 லேவி 8:2 எண் 3:3 எண் 16:5 எண் 16:7 எண் 16:10 எண் 16:35 எண் 16:40 எண் 16:46-48 எண் 17:3-11 எண் 18:1-5 1நாளா 23:13 2நாளா 26:18 யோவா 3:27 |
| 5 | அந்தப்படியே கிறிஸ்துவும் பிரதான ஆசாரியராகிறதற்குத் தம்மைத்தாமே உயர்த்தவில்லை; நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன் என்று அவரோடே சொன்னவரே அவரை உயர்த்தினார். | யோவா 7:18 யோவா 8:54 |
| 6 | அப்படியே வேறொரு இடத்திலும்: நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று சொல்லியிருக்கிறார். | எபிரெ 5:10 எபிரெ 6:20 எபிரெ 7:3 எபிரெ 7:15 எபிரெ 7:17 எபிரெ 7:21 சங் 110:4 |
| 7 | அவர் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லைமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டு, | எபிரெ 2:14 யோவா 1:14 ரோம 8:3 கலா 4:4 1தீமோ 3:16 1யோவா 4:3 2யோவா 1:7 |
| 8 | அவர் குமாரனாயிருந்தும் பட்டபாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு, | எபிரெ 1:5 எபிரெ 1:8 எபிரெ 3:6 |
| 9 | தாம் பூரணரானபின்பு, தமக்குக் கீழ்ப்படிகிற யாவரும் நித்திய இரட்சிப்பை அடைவதற்குக் காரணராகி, | எபிரெ 2:10 எபிரெ 11:40 தானி 9:24 லூக் 13:32 யோவா 19:30 |
| 10 | மெல்கிசேதேக்கின் முறைமையின்படியான பிரதான ஆசாரியர் என்று தேவனாலே நாமம் தரிக்கப்பட்டார். | எபிரெ 5:5 எபிரெ 5:6 எபிரெ 6:20 |
| 11 | இந்த மெல்கிசேதேக்கைப்பற்றி நாம் விஸ்தாரமாய்ப் பேசலாம்; நீங்கள் கேள்வியில் மந்தமுள்ளவர்களானபடியால், அதை விளங்கப்பண்ணுகிறது அரிதாயிருக்கும். | 1இரா 10:1 யோவா 6:6 யோவா 16:12 2பேது 3:16 |
| 12 | காலத்தைப் பார்த்தால், போதகராயிருக்கவேண்டிய உங்களுக்கு தேவனுடைய வாக்கியங்களின் மூல உபதேசங்களை மறுபடியும் உபதேசிக்கவேண்டியதாயிருக்கிறது; நீங்கள் பலமான ஆகாரத்தையல்ல, பாலை உண்ணத்தக்கவர்களானீர்கள். | மத் 17:17 மாற் 9:19 |
| 13 | பாலுண்கிறவன் குழந்தையாயிருக்கிறபடியினாலே நீதியின் வசனத்தில் பழக்கமில்லாதவனாயிருக்கிறான். | சங் 119:123 ரோம 1:17 ரோம 1:18 ரோம 10:5 ரோம 10:6 2கொரி 3:9 2தீமோ 3:16 |
| 14 | பலமான ஆகாரமானது நன்மை தீமையின்னதென்று பயிற்சியினால் பகுத்தறியத்தக்கதாக முயற்சி செய்யும் ஞானேந்திரயங்களையுடையவர்களாகிய பூரண வயதுள்ளவர்களுக்கே தகும். | மத் 5:48 1கொரி 2:6 எபே 4:13 பிலிப் 3:15 யாக் 3:2 |