| 1 | ஆகையால், நாம் கேட்டவைகளை விட்டு விலகாதபடிக்கு, அவைகளை மிகுந்த ஜாக்கிரதையாய்க் கவனிக்கவேண்டும். | எபிரெ 2:2-4 எபிரெ 1:1 எபிரெ 1:2 எபிரெ 12:25 எபிரெ 12:26 |
| 2 | ஏனெனில், தேவதூதர் மூலமாய்ச் சொல்லப்பட்ட வசனத்திற்கு விரோதமான எந்தச் செய்கைக்கும் கீழ்ப்படியாமைக்கும் நீதியான தண்டனை வரத்தக்கதாக அவர்களுடைய வசனம் உறுதிப்படுத்தப்பட்டிருக்க, | உபா 32:2 சங் 68:17 அப் 7:53 கலா 3:19 |
| 3 | முதலாவது கர்த்தர் மூலமாய் அறிவிக்கப்பட்டு, பின்பு அவரிடத்தில் கேட்டவர்களாலே நமக்கு உறுதியாக்கப்பட்டதும், | எபிரெ 4:1 எபிரெ 4:11 எபிரெ 10:28 எபிரெ 10:29 எபிரெ 12:25 ஏசா 20:6 எசே 17:15 எசே 17:18 மத் 23:33 ரோம 2:3 1தெச 5:3 1பேது 4:17 1பேது 4:18 வெளிப் 6:16 வெளிப் 6:17 |
| 4 | அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் பலவிதமான பலத்த செய்கைகளினாலும், தம்முடைய சித்தத்தின்படி பகிர்ந்துகொடுத்த பரிசுத்த ஆவியின் வரங்களினாலும், தேவன் தாமே சாட்சி கொடுத்ததுமாயிருக்கிற இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம். | மாற் 16:20 யோவா 15:26 அப் 2:32 அப் 2:33 அப் 3:15 அப் 3:16 அப் 4:10 அப் 14:3 அப் 19:11 அப் 19:12 ரோம 15:18 ரோம 15:19 |
| 5 | இனிவரும் உலகத்தைக்குறித்துப் பேசுகிறோமே, அதை அவர் தூதர்களுக்குக் கீழ்ப்படுத்தவில்லை. | எபிரெ 6:5 2பேது 3:13 வெளிப் 11:15 |
| 6 | ஒரு இடத்திலே ஒருவன் சாட்சியாக: மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷனுடைய குமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம்? | எபிரெ 4:4 எபிரெ 5:6 1பேது 1:11 |
| 7 | அவனை தேவதூதரிலும் சற்றுச் சிறியவனாக்கினீர்; மகிமையினாலும் கனத்தினாலும் அவனுக்கு முடிசூட்டி, உம்முடைய கரத்தின் கிரியைகளின்மேல் அவனை அதிகாரியாக வைத்து, சகலத்தையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர் என்று சொன்னான். |
| 8 | சகலத்தையும் அவனுக்குக் கீழ்ப்படுத்தினார் என்கிற விஷயத்தில், அவர் அவனுக்குக் கீழ்ப்படுத்தாத பொருள் ஒன்றுமில்லை; அப்படியிருந்தும், இன்னும் அவனுக்குச் சகலமும் கீழ்ப்பட்டிருக்கக் காணோம். | எபிரெ 2:5 எபிரெ 1:13 சங் 2:6 தானி 7:14 மத் 28:18 யோவா 3:35 யோவா 13:3 1கொரி 15:27 எபே 1:21 எபே 1:22 பிலிப் 2:9-11 1பேது 3:22 வெளிப் 1:5 வெளிப் 1:18 வெளிப் 5:11-13 |
| 9 | என்றாலும், தேவனுடைய கிருபையினால் ஒவ்வொருவருக்காகவும், மரணத்தை ருசிபார்க்கும்படிக்கு தேவதூதரிலும் சற்றுச் சிறியவராக்கப்பட்டிருந்த இயேசு மரணத்தை உத்தரித்ததினிமித்தம் மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டதைக் காண்கிறோம். | எபிரெ 8:3 எபிரெ 10:5 ஆதி 3:15 ஏசா 7:14 ஏசா 11:1 ஏசா 53:2-10 ரோம 8:3 கலா 4:4 பிலிப் 2:7-9 |
| 10 | ஏனென்றால் தமக்காகவும் தம்மாலேயும் சகலத்தையும் உண்டாக்கினவர், அநேகம் பிள்ளைகளை மகிமையில் கொண்டுவந்து சேர்க்கையில் அவர்களுடைய இரட்சிப்பின் அதிபதியை உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துகிறது அவருக்கேற்றதாயிருந்தது. | எபிரெ 7:26 ஆதி 18:25 லூக் 2:14 லூக் 24:26 லூக் 24:46 ரோம 3:25 ரோம 3:26 எபே 1:6-8 எபே 2:7 எபே 3:10 1பேது 1:12 |
| 11 | எப்படியெனில், பரிசுத்தஞ்செய்கிறவரும் பரிசுத்தஞ்செய்யப்படுகிறவர்களுமாகிய யாவரும் ஒருவராலே உண்டாயிருக்கிறார்கள்; இதினிமித்தம் அவர்களைச் சகோதரரென்று சொல்ல அவர் வெட்கப்படாமல்: | எபிரெ 10:10 எபிரெ 10:14 எபிரெ 13:12 யோவா 17:19 |
| 12 | உம்முடைய நாமத்தை என் சகோதரருக்கு அறிவித்து, சபை நடுவில் உம்மைத் துதித்துப்பாடுவேன் என்றும்; | சங் 22:22 சங் 22:25 |
| 13 | நான் அவரிடத்தில் நம்பிக்கையாயிருப்பேன் என்றும்; இதோ, நானும், தேவன் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் என்றும் சொல்லியிருக்கிறார். | 2சாமு 22:3 சங் 16:1 சங் 18:2 சங் 36:7 சங் 36:8 சங் 91:2 ஏசா 12:2 ஏசா 50:7-9 மத் 27:43 |
| 14 | ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும், | 1கொரி 15:50 |
| 15 | ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார். | யோபு 33:21-28 சங் 33:19 சங் 56:13 சங் 89:48 லூக் 1:74 லூக் 1:75 2கொரி 1:10 |
| 16 | ஆதலால், அவர் தேவதூதருக்கு உதவியாகக் கைகொடாமல், ஆபிரகாமின் சந்ததிக்கு உதவியாகக் கைகொடுத்தார். | எபிரெ 6:16 எபிரெ 12:10 ரோம 2:25 1பேது 1:20 |
| 17 | அன்றியும், அவர் ஜனத்தின் பாவங்களை நிவிர்த்தி செய்வதற்கேதுவாக, தேவகாரியங்களைக்குறித்து இரக்கமும் உண்மையுமுள்ள பிரதான ஆசாரியராயிருக்கும்படிக்கு எவ்விதத்திலும் தம்முடைய சகோதரருக்கு ஒப்பாகவேண்டியதாயிருந்தது. | எபிரெ 2:11 எபிரெ 2:14 பிலிப் 2:7 பிலிப் 2:8 |
| 18 | ஆதலால், அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார். | எபிரெ 4:15 எபிரெ 4:16 எபிரெ 5:2 எபிரெ 5:7-9 மத் 4:1-10 மத் 26:37-39 லூக் 22:53 |