| 1 | பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன், | ஆதி 3:15 ஆதி 6:3 ஆதி 6:13-22 ஆதி 8:15-19 ஆதி 9:1-17 ஆதி 12:1-3 ஆதி 26:2-5 ஆதி 28:12-15 ஆதி 32:24-30 ஆதி 46:2-4 யாத் 3:1-22 லூக் 24:27 லூக் 24:44 அப் 28:23 1பேது 1:10-12 2பேது 1:20 2பேது 1:21 |
| 2 | இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்; இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக்கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார். | ஆதி 49:1 எண் 24:14 உபா 4:30 உபா 18:15 உபா 31:29 ஏசா 2:2 எரே 30:24 எரே 48:47 எசே 38:16 தானி 2:28 தானி 10:14 ஓசி 3:5 மீகா 4:1 அப் 2:17 கலா 4:4 எபே 1:10 2பேது 3:3 யூதா 1:18 |
| 3 | இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமாயிருந்து, சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய், தம்மாலேதாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டுபண்ணி, உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலது பாரிசத்திலே உட்கார்ந்தார். | யோவா 1:14 யோவா 14:9 யோவா 14:10 2கொரி 4:6 |
| 4 | இவர் தேவதூதரைப்பார்க்கிலும் எவ்வளவு விசேஷித்த நாமத்தைச் சுதந்தரித்துக்கொண்டாரோ, அவ்வளவு அதிகமாய் அவர்களிலும் மேன்மையுள்ளவரானார். | எபிரெ 1:9 எபிரெ 2:9 எபே 1:21 கொலோ 1:18 கொலோ 2:10 2தெச 1:7 1பேது 3:22 வெளிப் 5:11 வெளிப் 5:12 |
| 5 | எப்படியெனில், நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன் என்றும்; நான் அவருக்குப் பிதாவாயிருப்பேன், அவர் எனக்குக் குமாரனாயிருப்பார் என்றும், அவர் தூதர்களில் யாருக்காவது எப்போதாகிலும் சொன்னதுண்டா? | எபிரெ 5:5 சங் 2:7 அப் 13:33 |
| 6 | மேலும், தமது முதற்பேறானவரை உலகத்தில் பிரவேசிக்கச்செய்தபோது: தேவதூதர் யாவரும் அவரைத் தொழுதுகொள்ளக்கடவர்கள் என்றார். | எபிரெ 1:5 நீதி 8:24 நீதி 8:25 யோவா 1:14 யோவா 1:18 யோவா 3:16 ரோம 8:29 கொலோ 1:15 கொலோ 1:18 1யோவா 4:9 வெளிப் 1:5 |
| 7 | தேவதூதரைக்குறித்தோ: தம்முடைய தூதர்களைக் காற்றுகளாகவும், தம்முடைய ஊழியக்காரரை அக்கினிஜூவாலைகளாகவும் செய்கிறார் என்று சொல்லியிருக்கிறது. | எபிரெ 1:14 2இரா 2:11 2இரா 6:17 சங் 104:4 ஏசா 6:2 எசே 1:13 எசே 1:14 தானி 7:10 சகரி 6:5 |
| 8 | குமாரனை நோக்கி: தேவனே, உம்முடைய சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது, உம்முடைய ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாயிருக்கிறது. | சங் 45:6 சங் 45:7 |
| 9 | நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுத்திருக்கிறீர்; ஆதலால், தேவனே, உம்முடைய தேவன் உமது தோழரைப் பார்க்கிலும் உம்மை ஆனந்தத் தைலத்தினால் அபிஷேகம்பண்ணினார் என்றும்; | எபிரெ 7:26 சங் 11:5 சங் 33:5 சங் 37:28 சங் 40:8 சங் 45:7 ஏசா 61:8 |
| 10 | கர்த்தாவே, நீர் ஆதியிலே பூமியை அஸ்திபாரப்படுத்தினீர்; வானங்கள் உம்முடைய கரத்தின் கிரியைகளாயிருக்கிறது; | சங் 102:25-27 |
| 11 | அவைகள் அழிந்துபோகும்; நீரோ நிலைத்திருப்பீர்; அவைகளெல்லாம் வஸ்திரம்போலப் பழைமையாய்ப்போகும்; | எபிரெ 12:27 ஏசா 34:4 ஏசா 65:17 மத் 24:35 மாற் 13:31 லூக் 21:33 2பேது 3:7-10 வெளிப் 20:11 வெளிப் 21:1 |
| 12 | ஒரு சால்வையைப்போல அவைகளைச் சுருட்டுவீர், அப்பொழுது மாறிப்போகும்; நீரோ மாறாதவராயிருக்கிறீர், உம்முடைய ஆண்டுகள் முடிந்துபோவதில்லை என்றும் சொல்லியிருக்கிறது. | எபிரெ 13:8 யாத் 3:14 யோவா 8:58 யாக் 1:17 |
| 13 | மேலும், நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று தூதர்களில் யாருக்காவது எப்போதாகிலும் அவர் சொன்னதுண்டா? | எபிரெ 1:3 எபிரெ 10:12 சங் 110:1 மத் 22:44 மாற் 12:36 லூக் 20:42 அப் 2:34-36 அப் 7:55 |
| 14 | இரட்சிப்பைச் சுதந்தரிக்கப்போகிறவர்களினிமித்தமாக ஊழியஞ்செய்யும்படிக்கு அவர்களெல்லாரும் அனுப்பப்படும் பணிவிடை ஆவிகளாயிருக்கிறார்களல்லவா? | எபிரெ 8:6 எபிரெ 10:11 சங் 103:20 சங் 103:21 தானி 3:28 தானி 7:10 மத் 18:10 லூக் 1:19 லூக் 1:23 லூக் 2:9 லூக் 2:13 அப் 13:2 ரோம 13:6 ரோம 15:16 ரோம 15:27 2கொரி 9:12 பிலிப் 2:17 பிலிப் 2:25 1இரா 22:19 யோபு 1:6 சங் 103:20 சங் 103:21 சங் 104:4 ஏசா 6:2 ஏசா 6:3 தானி 7:10 மத் 13:41 மத் 13:49 மத் 13:50 லூக் 1:19 2தெச 1:7 யூதா 1:14 |