| 1 | ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்; | எபிரெ 11:2-38 |
| 2 | அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார். | எபிரெ 12:3 எபிரெ 9:28 ஏசா 8:17 ஏசா 31:1 ஏசா 45:22 மீகா 7:7 சகரி 12:10 யோவா 1:29 யோவா 6:40 யோவா 8:56 பிலிப் 3:20 2தீமோ 4:8 தீத் 2:13 1யோவா 1:1-3 யூதா 1:21 |
| 3 | ஆகையால் நீங்கள் இளைப்புள்ளவர்களாய் உங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாதபடிக்கு, தமக்கு விரோதமாய்ப் பாவிகளால் செய்யப்பட்ட இவ்விதமான விபரீதங்களைச் சகித்த அவரையே நினைத்துக்கொள்ளுங்கள். | எபிரெ 12:2 எபிரெ 3:1 1சாமு 12:24 2தீமோ 2:7 2தீமோ 2:8 |
| 4 | பாவத்திற்கு விரோதமாய்ப் போராடுகிறதில் இரத்தஞ்சிந்தப்படத்தக்கதாக நீங்கள் இன்னும் எதிர்த்து நிற்கவில்லையே. | எபிரெ 12:2 எபிரெ 10:32-34 மத் 24:9 1கொரி 10:13 2தீமோ 4:6 2தீமோ 4:7 வெளிப் 2:13 வெளிப் 6:9-11 வெளிப் 12:11 வெளிப் 17:6 வெளிப் 18:24 |
| 5 | அன்றியும்: என் மகனே, கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவரால் கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே. | உபா 4:9 உபா 4:10 சங் 119:16 சங் 119:83 சங் 119:109 நீதி 3:1 நீதி 4:5 மத் 16:9 மத் 16:10 லூக் 24:6 லூக் 24:8 |
| 6 | கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார் என்று பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல உங்களுக்குச் சொல்லியிருக்கிற புத்திமதியை மறந்தீர்கள். | உபா 8:5 சங் 32:1-5 சங் 73:14 சங் 73:15 சங் 89:30-34 சங் 119:71 சங் 119:75 நீதி 3:12 நீதி 13:24 ஏசா 27:9 எரே 10:24 யாக் 1:12 யாக் 5:11 வெளிப் 3:19 |
| 7 | நீங்கள் சிட்சையைச் சகிக்கிறவர்களாயிருந்தால் தேவன் உங்களைப் புத்திரராக எண்ணி நடத்துகிறார்; தகப்பன் சிட்சியாத புத்திரனுண்டோ? | யோபு 34:31 யோபு 34:32 நீதி 19:18 நீதி 22:15 நீதி 23:13 நீதி 23:14 நீதி 29:15 நீதி 29:17 அப் 14:22 |
| 8 | எல்லாருக்கும் கிடைக்கும் சிட்சை உங்களுக்குக் கிடையாதிருந்தால் நீங்கள் புத்திரராயிராமல் வேசிப்பிள்ளைகளாயிருப்பீர்களே. | எபிரெ 12:6 சங் 73:1 சங் 73:14 சங் 73:15 1பேது 5:9 1பேது 5:10 |
| 9 | அன்றியும், நம்முடைய சரீரத்தின் தகப்பன்மார்கள் நம்மைச் சிட்சிக்கும்போது, அவர்களுக்கு நாம் அஞ்சி நடந்திருக்க, நாம் பிழைக்கத்தக்கதாக ஆவிகளின் பிதாவுக்கு வெகு அதிகமாய் அடங்கி நடக்கவேண்டுமல்லவா? | யோவா 3:6 அப் 2:30 ரோம 1:3 ரோம 9:3 ரோம 9:5 |
| 10 | அவர்கள் தங்களுக்கு நலமென்று தோன்றினபடி கொஞ்சக்காலம் சிட்சித்தார்கள்; இவரோ தம்முடைய பரிசுத்தத்துக்கு நாம் பங்குள்ளவர்களாகும் பொருட்டு நம்முடைய பிரயோஜனத்துக்காகவே நம்மைச் சிட்சிக்கிறார். | எபிரெ 12:5 எபிரெ 12:6 |
| 11 | எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும்; ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும். | சங் 89:32 சங் 118:18 நீதி 15:10 நீதி 19:18 |
| 12 | ஆகையினால், நெகிழ்ந்த கைகளையும் தளர்ந்த முழங்கால்களையும் நீங்கள் திரும்ப நிமிர்த்தி, | எபிரெ 12:3 எபிரெ 12:5 யோபு 4:3 யோபு 4:4 ஏசா 35:3 எசே 7:17 எசே 21:7 தானி 5:6 நாகூ 2:10 1தெச 5:14 |
| 13 | முடமாயிருக்கிறது பிசகிப்போகாமல் சொஸ்தமாகும்படிக்கு, உங்கள் பாதங்களுக்கு வழிகளைச் செவ்வைப்படுத்துங்கள். | நீதி 4:26 நீதி 4:27 ஏசா 35:3 ஏசா 35:8-10 ஏசா 40:3 ஏசா 40:4 ஏசா 42:16 ஏசா 58:12 எரே 18:15 லூக் 3:5 |
| 14 | யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே. | ஆதி 13:7-9 சங் 34:14 சங் 38:20 சங் 120:6 சங் 133:1 நீதி 15:1 நீதி 16:7 நீதி 17:14 ஏசா 11:6-9 மத் 5:9 மாற் 9:50 ரோம 12:18 ரோம 14:19 1கொரி 1:10 கலா 5:22 கலா 5:23 எபே 4:1-8 1தெச 5:15 1தீமோ 6:11 2தீமோ 2:22 யாக் 3:17 யாக் 3:18 1பேது 3:11 |
| 15 | ஒருவனும் தேவனுடைய கிருபையை இழந்துபோகாதபடிக்கும் யாதொரு கசப்பான வேர் முளைத்தெழும்பிக் கலக்கமுண்டாக்குகிறதினால் அநேகர் தீட்டுப்படாதபடிக்கும், | எபிரெ 2:1 எபிரெ 2:2 எபிரெ 3:12 எபிரெ 4:1 எபிரெ 4:11 எபிரெ 6:11 எபிரெ 10:23-35 உபா 4:9 நீதி 4:23 1கொரி 9:24-27 1கொரி 10:12 2கொரி 6:1 2கொரி 13:5 2பேது 1:10 2பேது 3:11 2பேது 3:14 2யோவா 1:8 யூதா 1:20 யூதா 1:21 |
| 16 | ஒருவனும் வேசிக்கள்ளனாகவும், ஒருவேளைப் போஜனத்துக்காகத் தன் சேஷ்டபுத்திரபாகத்தை விற்றுப்போட்ட ஏசாவைப்போலச் சீர்கெட்டவனாகவும் இராதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். | எபிரெ 13:4 மாற் 7:21 அப் 15:20 அப் 15:29 1கொரி 5:1-6 1கொரி 5:9-11 1கொரி 6:15-20 1கொரி 10:8 2கொரி 12:21 கலா 5:19-21 எபே 5:3 எபே 5:5 கொலோ 3:5 1தெச 4:3-7 வெளிப் 2:20-23 வெளிப் 21:8 வெளிப் 22:15 |
| 17 | ஏனென்றால், பிற்பாடு அவன் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ள விரும்பியும் ஆகாதவனென்று தள்ளப்பட்டதை அறிவீர்கள்; அவன் கண்ணீர்விட்டு, கவலையோடே தேடியும் மனம் மாறுதலைக் காணாமற்போனான். | ஆதி 27:31-41 |
| 18 | அன்றியும், தொடக்கூடியதும், அக்கினி பற்றியெரிகிறதுமான மலையினிடத்திற்கும், மந்தாரம் இருள் பெருங்காற்று ஆகிய இவைகளினிடத்திற்கும், | யாத் 19:12-19 யாத் 20:18 யாத் 24:17 உபா 4:11 உபா 5:22-26 ரோம 6:14 ரோம 8:15 2தீமோ 1:7 |
| 19 | எக்காளமுழக்கத்தினிடத்திற்கும், வார்த்தைகளுடைய சத்தத்தினிடத்திற்கும், நீங்கள் வந்து சேரவில்லை; அந்தச் சத்தத்தைக் கேட்டவர்கள் பின்னும் தங்களுக்கு வார்த்தை சொல்லப்படாதபடிக்கு வேண்டிக்கொண்டார்கள். | யாத் 19:16-19 1கொரி 15:52 1தெச 4:16 |
| 20 | ஏனெனில் ஒரு மிருகமாகிலும் மலையைத் தொட்டால், அது கல்லெறியுண்டு, அல்லது அம்பினால் எய்யுண்டு சாகவேண்டுமென்று சொல்லப்பட்ட கட்டளையைச் சகிக்கமாட்டாதிருந்தார்கள். | உபா 33:2 ரோம 3:19 ரோம 3:20 கலா 2:19 கலா 3:10 |
| 21 | மோசேயும்: நான் மிகவும் பயந்து நடுங்குகிறேன் என்று சொல்லத்தக்கதாக அந்தக் காட்சி அவ்வளவு பயங்கரமாயிருந்தது. | யாத் 19:16 யாத் 19:19 சங் 119:120 ஏசா 6:3-5 தானி 10:8 தானி 10:17 வெளிப் 1:17 |
| 22 | நீங்களோ சீயோன் மலையினிடத்திற்கும், ஜீவனுள்ள தேவனுடைய நகரமாகிய பரம எருசலேமினிடத்திற்கும், ஆயிரம்பதினாயிரமான தேவதூதர்களினிடத்திற்கும், | சங் 2:6 சங் 48:2 சங் 132:13 சங் 132:14 ஏசா 12:6 ஏசா 14:32 ஏசா 28:16 ஏசா 51:11 ஏசா 51:16 ஏசா 59:20 ஏசா 60:14 யோவே 2:32 ரோம 11:26 கலா 4:26 வெளிப் 14:1 |
| 23 | பரலோகத்தில் பேரெழுதியிருக்கிற முதற்பேறானவர்களின் சர்வசங்கமாகிய சபையினிடத்திற்கும், யாவருக்கும் நியாயாதிபதியாகிய தேவனிடத்திற்கும், பூரணராக்கப்பட்ட நீதிமான்களுடைய ஆவிகளினிடத்திற்கும், | சங் 89:7 சங் 111:1 அப் 20:28 எபே 1:22 எபே 5:24-27 கொலோ 1:24 1தீமோ 3:5 |
| 24 | புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவினிடத்திற்கும், ஆபேலினுடைய இரத்தம் பேசினதைப்பார்க்கிலும் நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தமாகிய தெளிக்கப்படும் இரத்தத்தினிடத்திற்கும் வந்துசேர்ந்தீர்கள். | எபிரெ 7:22 எபிரெ 8:6 எபிரெ 8:8 1தீமோ 2:5 |
| 25 | பேசுகிறவருக்கு நீங்கள் செவிகொடுக்கமாட்டோமென்று விலகாதபடி எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில், பூமியிலே பேசினவருக்குச் செவிகொடுக்கமாட்டோமென்று விலகினவர்கள் தப்பிப்போகாமலிருக்க, பரலோகத்திலிருந்து பேசுகிறவரை நாம் விட்டுவிலகினால் எப்படித் தப்பிப்போவோம்? | எபிரெ 8:5 யாத் 16:29 1இரா 12:16 ஏசா 48:6 ஏசா 64:9 மத் 8:4 1தெச 5:15 1பேது 1:22 வெளிப் 19:10 வெளிப் 22:9 |
| 26 | அவருடைய சத்தம் அப்பொழுது பூமியை அசையப்பண்ணிற்று; இன்னும் ஒருதரம் நான் பூமியை மாத்திரமல்ல, வானத்தையும் அசையப்பண்ணுவேன் என்று இப்பொழுது வாக்குத்தத்தஞ்செய்திருக்கிறார். | யாத் 19:18 சங் 114:6 சங் 114:7 ஆபகூ 3:10 |
| 27 | இன்னும் ஒருதரம் என்கிற சொல்லானது அசையாதவைகள் நிலைத்திருக்கத்தக்கதாக, அசைவுள்ளவைகள் உண்டாக்கப்பட்டவைகள்போல் மாறிப்போகும் என்பதைக் குறிக்கிறது. | சங் 102:26 சங் 102:27 எசே 21:27 மத் 24:35 2பேது 3:10 2பேது 3:11 வெளிப் 11:15 வெளிப் 21:1 |
| 28 | ஆதலால், அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம். | ஏசா 9:7 தானி 2:44 தானி 7:14 தானி 7:27 மத் 25:34 லூக் 1:33 லூக் 17:20 லூக் 17:21 1பேது 1:4 1பேது 1:5 வெளிப் 1:6 வெளிப் 5:10 |
| 29 | நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறாரே. | எபிரெ 10:27 யாத் 24:17 எண் 11:1 எண் 16:35 உபா 4:24 உபா 9:3 சங் 50:3 சங் 97:3 ஏசா 66:15 தானி 7:9 2தெச 1:8 |