| 1 | சகோதர சிநேகம் நிலைத்திருக்கக்கடவது. | எபிரெ 6:10 எபிரெ 6:11 எபிரெ 10:24 யோவா 13:34 யோவா 13:35 யோவா 15:17 அப் 2:1 அப் 2:44-46 அப் 4:32 ரோம 12:9 ரோம 12:10 கலா 5:6 கலா 5:13 கலா 5:22 எபே 4:3 எபே 5:2 பிலிப் 2:1-3 1தெச 4:9 1தெச 4:10 2தெச 1:3 1பேது 1:22 1பேது 2:17 1பேது 3:8 1பேது 4:8 2பேது 1:7 1யோவா 2:9 1யோவா 2:10 1யோவா 3:10-18 1யோவா 3:23-18 1யோவா 4:7-11 1யோவா 4:20-11 1யோவா 4:21-11 1யோவா 5:1 2யோவா 1:5 2யோவா 1:6 வெளிப் 2:4 |
| 2 | அந்நியரை உபசரிக்க மறவாதிருங்கள்; அதினாலே சிலர் அறியாமல் தேவதூதரையும் உபசரித்ததுண்டு. | லேவி 19:34 உபா 10:18 உபா 10:19 1இரா 17:10-16 2இரா 4:8 யோபு 31:19 யோபு 31:32 ஏசா 58:7 மத் 25:35 மத் 25:43 அப் 16:15 ரோம 12:13 ரோம 16:23 1தீமோ 3:2 1தீமோ 5:10 தீத் 1:8 1பேது 4:9 |
| 3 | கட்டப்பட்டிருக்கிறவர்களோடே நீங்களும் கட்டப்பட்டவர்கள்போல அவர்களை நினைத்துக்கொள்ளுங்கள்; நீங்களும் சரீரத்தோடிருக்கிறவர்களென்று அறிந்து, தீங்கனுபவிக்கிறவர்களை நினைத்துக்கொள்ளுங்கள். | எபிரெ 10:34 ஆதி 40:14 ஆதி 40:15 ஆதி 40:23 எரே 38:7-13 மத் 25:36 மத் 25:43 அப் 16:29-34 அப் 24:23 அப் 27:3 எபே 4:1 பிலிப் 4:14-19 கொலோ 4:18 2தீமோ 1:16-18 |
| 4 | விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாகமஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக; வேசிக்கள்ளரையும் விபசாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார். | ஆதி 1:27 ஆதி 1:28 ஆதி 2:21 ஆதி 2:24 லேவி 21:13-15 2இரா 22:14 நீதி 5:15-23 ஏசா 8:3 1கொரி 7:2-16 1கொரி 9:5 1தீமோ 3:2 1தீமோ 3:4 1தீமோ 3:12 1தீமோ 5:14 தீத் 1:6 |
| 5 | நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே. | யாத் 20:17 யோசு 7:21 சங் 10:3 சங் 119:36 எரே 6:13 எசே 33:31 மாற் 7:22 லூக் 8:14 லூக் 12:15-21 லூக் 16:13 லூக் 16:14 ரோம 1:29 1கொரி 5:11 1கொரி 6:10 எபே 5:3 எபே 5:5 கொலோ 3:5 1தீமோ 3:3 1தீமோ 6:9 1தீமோ 6:10 2பேது 2:3 2பேது 2:14 யூதா 1:11 |
| 6 | அதினாலே நாம் தைரியங்கொண்டு: கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்ன செய்வான் என்று சொல்லலாமே. | எபிரெ 4:16 எபிரெ 10:19 எபே 3:12 |
| 7 | தேவவசனத்தை உங்களுக்குப் போதித்து உங்களை நடத்தினவர்களை நீங்கள் நினைத்து, அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாய்ச் சிந்தித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள். | எபிரெ 13:17 எபிரெ 13:24 மத் 24:45 லூக் 12:42 அப் 14:23 1தெச 5:12 1தெச 5:13 1தீமோ 3:5 |
| 8 | இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். | எபிரெ 1:12 சங் 90:2 சங் 90:4 சங் 102:27 சங் 102:28 சங் 103:17 ஏசா 41:4 ஏசா 44:6 மல்கி 3:6 யோவா 8:56-58 யாக் 1:17 வெளிப் 1:4 வெளிப் 1:8 வெளிப் 1:11 வெளிப் 1:17 வெளிப் 1:18 |
| 9 | பலவிதமான அந்நிய போதனைகளால் அலைப்புண்டு திரியாதிருங்கள். போஜன பதார்த்தங்களினாலல்ல, கிருபையினாலே இருதயம் ஸ்திரப்படுகிறது நல்லது; போஜனபதார்த்தங்களில் முயற்சிசெய்கிறவர்கள் பலனடையவில்லையே. | மத் 24:4 மத் 24:24 அப் 20:30 ரோம 16:17 ரோம 16:18 2கொரி 11:11-15 கலா 1:6-9 எபே 4:14 எபே 5:6 கொலோ 2:4 கொலோ 2:8 2தெச 2:2 1தீமோ 4:1-3 1தீமோ 6:3-5 1தீமோ 6:20-5 1யோவா 4:1 யூதா 1:3 |
| 10 | நமக்கு ஒரு பலிபீடமுண்டு, அதற்குரியவைகளைப் புசிக்கிறதற்குக் கூடாரத்தில் ஆராதனை செய்கிறவர்களுக்கு அதிகாரமில்லை. | 1கொரி 5:7 1கொரி 5:8 1கொரி 9:13 1கொரி 10:17 1கொரி 10:20 |
| 11 | ஏனென்றால், எந்த மிருகங்களுடைய இரத்தம் பாவங்களினிமித்தமாகப் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரதான ஆசாரியனாலே கொண்டுவரப்படுகிறதோ, அந்த மிருகங்களின் உடல்கள் பாளயத்துக்குப் புறம்பே சுட்டெரிக்கப்படும். | யாத் 29:14 லேவி 4:5-7 லேவி 4:11-7 லேவி 4:12-7 லேவி 4:16-21 லேவி 6:30 லேவி 9:9 லேவி 9:11 லேவி 16:14-19 லேவி 16:27-19 எண் 19:3 |
| 12 | அந்தப்படியே, இயேசுவும் தம்முடைய சொந்த இரத்தத்தினாலே ஜனத்தைப் பரிசுத்தஞ்செய்யும்படியாக நகர வாசலுக்குப் புறம்பே பாடுபட்டார். | எபிரெ 2:11 எபிரெ 9:13 எபிரெ 9:14 எபிரெ 9:18 எபிரெ 9:19 எபிரெ 10:29 யோவா 17:19 யோவா 19:34 1கொரி 6:11 எபே 5:26 1யோவா 5:6-8 |
| 13 | ஆகையால், நாம் அவருடைய நிந்தையைச் சுமந்து, பாளயத்துக்குப் புறம்பே அவரிடத்திற்குப் புறப்பட்டுப் போகக்கடவோம். | எபிரெ 11:26 எபிரெ 12:3 மத் 5:11 மத் 10:24 மத் 10:25 மத் 16:24 மத் 27:32 மத் 27:39-44 லூக் 6:22 அப் 5:41 1கொரி 4:10-13 2கொரி 12:10 1பேது 4:4 1பேது 4:14-16 |
| 14 | நிலையான நகரம் நமக்கு இங்கே இல்லை; வரப்போகிறதையே நாடித்தேடுகிறோம். | எபிரெ 4:9 எபிரெ 11:9 எபிரெ 11:10 எபிரெ 11:12-16 எபிரெ 12:22 மீகா 2:10 1கொரி 7:29 2கொரி 4:17 2கொரி 4:18 2கொரி 5:1-8 பிலிப் 3:20 கொலோ 3:1-3 1பேது 4:7 2பேது 3:13 2பேது 3:14 |
| 15 | ஆகையால், அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர்மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம். | எபிரெ 7:25 யோவா 10:9 யோவா 14:6 எபே 2:18 கொலோ 3:17 1பேது 2:5 |
| 16 | அன்றியும் நன்மைசெய்யவும், தானதர்மம் பண்ணவும் மறவாதிருங்கள்; இப்படிப்பட்ட பலிகளின்மேல் தேவன் பிரியமாயிருக்கிறார். | எபிரெ 13:1 எபிரெ 13:2 சங் 37:3 மத் 25:35-40 லூக் 6:35 லூக் 6:36 அப் 9:36 அப் 10:38 கலா 6:10 1தெச 5:15 2தெச 3:13 3யோவா 1:11 |
| 17 | உங்களை நடத்துகிறவர்கள், உங்கள் ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம்பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கிறவர்களானபடியால், அவர்கள் துக்கத்தோடே அல்ல, சந்தோஷத்தோடே அதைச் செய்யும்படி, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்குங்கள்; அவர்கள் துக்கத்தோடே அப்படிச்செய்தால் அது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கமாட்டாதே. | எபிரெ 13:7 1சாமு 8:19 1சாமு 15:19 1சாமு 15:20 நீதி 5:13 பிலிப் 2:12 பிலிப் 2:29 1தெச 5:12 1தெச 5:13 2தெச 3:14 1தீமோ 5:17 |
| 18 | எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்; நாங்கள் நல்மனச்சாட்சியுள்ளவர்களாய் எல்லாவற்றிலும் யோக்கியமாய் நடக்க விரும்புகிறோமென்று நிச்சயித்திருக்கிறோம். | ரோம 15:30 எபே 6:19 எபே 6:20 கொலோ 4:3 1தெச 5:25 2தெச 3:1 |
| 19 | நான் அதிசீக்கிரமாய் உங்களிடத்தில் வரும்படிக்கு நீங்கள் இப்படி வேண்டிக்கொள்ளும்படி அதிகமாய்க் கேட்டுக்கொள்ளுகிறேன். | ரோம 1:10-12 ரோம 15:31 ரோம 15:32 பிலேமோ 1:22 |
| 20 | நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தினாலே ஆடுகளுடைய பெரிய மேய்ப்பரான நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து ஏறிவரப்பண்ணின சமாதானத்தின் தேவன், | ரோம 15:33 ரோம 16:20 1கொரி 14:33 2கொரி 13:11 பிலிப் 4:9 1தெச 5:23 2தெச 3:16 |
| 21 | இயேசுகிறிஸ்துவைக்கொண்டு தமக்குமுன்பாகப் பிரியமானதை உங்களில் நடப்பித்து, நீங்கள் தம்முடைய சித்தத்தின்படிசெய்ய உங்களைச் சகலவித நற்கிரியையிலும் சீர்பொருந்தினவர்களாக்குவாராக; அவருக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். | எபிரெ 12:23 உபா 32:4 சங் 138:8 யோவா 17:23 எபே 3:16-19 கொலோ 1:9-12 கொலோ 4:12 1தெச 3:13 1தெச 5:23 2தெச 2:17 1பேது 5:10 |
| 22 | சகோதரரே, நான் சுருக்கமாய் உங்களுக்கு எழுதின இந்தப் புத்திமதியான வார்த்தைகளை நீங்கள் பொறுமையாய் ஏற்றுக்கொள்ளும்படி வேண்டிக்கொள்ளுகிறேன். | எபிரெ 13:1-3 எபிரெ 13:12-16 எபிரெ 2:1 எபிரெ 3:1 எபிரெ 3:12 எபிரெ 3:13 எபிரெ 4:1 எபிரெ 4:11 எபிரெ 6:11 எபிரெ 6:12 எபிரெ 10:19-39 எபிரெ 12:1 எபிரெ 12:2 எபிரெ 12:12-16 எபிரெ 12:25-28 2கொரி 5:20 2கொரி 6:1 2கொரி 10:1 பிலேமோ 1:8 பிலேமோ 1:9 |
| 23 | சகோதரனாகிய தீமோத்தேயு விடுதலையாக்கப்பட்டானென்று அறிவீர்களாக; அவன் சீக்கிரமாய் வந்தால், அவனுடனேகூட நான் வந்து, உங்களைக் காண்பேன். | அப் 16:1-3 1தெச 3:2 பிலேமோ 1:1 |
| 24 | உங்களை நடத்துகிறவர்களையும், பரிசுத்தவான்கள் யாவரையும் வாழ்த்துங்கள். இத்தாலியா தேசத்தார் யாவரும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். | ரோம 16:1-16 |
| 25 | கிருபையானது உங்களனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென். | ரோம 1:7 ரோம 16:20 ரோம 16:24 எபே 6:24 2தீமோ 4:22 தீத் 3:15 வெளிப் 22:21 |