| 1 | நீயோ ஆரோக்கியமான உபதேசத்துக்கேற்றவைகளைப் பேசு. | தீத் 2:11-14 தீத் 1:9 தீத் 3:8 1தீமோ 1:10 1தீமோ 6:3 2தீமோ 1:13 |
| 2 | முதிர்வயதுள்ள புருஷர்கள் ஜாக்கிரதையுள்ளவர்களும், நல்லொழுக்கமுள்ளவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், விசுவாசத்திலும் அன்பிலும் பொறுமையிலும் ஆரோக்கியமுள்ளவர்களுமாயிருக்கும்படி புத்திசொல்லு. | லேவி 19:32 யோபு 12:12 சங் 92:14 நீதி 16:31 ஏசா 65:20 |
| 3 | முதிர்வயதுள்ள ஸ்திரீகளும் அப்படியே பரிசுத்தத்துக்கேற்றவிதமாய் நடக்கிறவர்களும், அவதூறு பண்ணாதவர்களும், மதுபானத்துக்கு அடிமைப்படாதவர்களுமாயிருக்கவும், | ரோம 16:2 எபே 5:3 1தீமோ 2:9 1தீமோ 2:10 1தீமோ 3:11 1தீமோ 5:5-10 1பேது 3:3-5 |
| 4 | தேவவசனம் தூஷிக்கப்படாதபடிக்கு பாலிய ஸ்திரீகள் தங்கள் புருஷரிடத்திலும், தங்கள் பிள்ளைகளிடத்திலும் அன்புள்ளவர்களும், | 1தீமோ 5:2 1தீமோ 5:11 1தீமோ 5:14 |
| 5 | தெளிந்த புத்தியுள்ளவர்களும், கற்புள்ளவர்களும், வீட்டில் தரித்திருக்கிறவர்களும், நல்லவர்களும், தங்கள் புருஷருக்குக் கீழ்ப்படிகிறவர்களுமாயிருக்கும்படி, அவர்களுக்குப் படிப்பிக்கத்தக்க நற்காரியங்களைப் போதிக்கிறவர்களுமாயிருக்கவும் முதிர்வயதுள்ள ஸ்திரீகளுக்குப் புத்திசொல்லு. | ஆதி 16:8 ஆதி 16:9 ஆதி 18:9 நீதி 7:11 நீதி 31:10-31 1தீமோ 5:13 |
| 6 | அப்படியே, பாலிய புருஷரும் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருக்கவும் நீ புத்திசொல்லி, | யோபு 29:8 சங் 148:12 பிரச 11:9 பிரச 12:1 யோவே 2:28 1பேது 5:5 1யோவா 2:13 |
| 7 | நீயே எல்லாவற்றிலும் உன்னை நற்கிரியைகளுக்கு மாதிரியாகக் காண்பித்து, | அப் 20:33-35 2தெச 3:9 1தீமோ 4:12 1பேது 5:3 |
| 8 | எதிரியானவன் உங்களைக்குறித்துப் பொல்லாங்கு சொல்லுகிறதற்கு ஒன்றுமில்லாமல் வெட்கப்படத்தக்கதாக, உபதேசத்திலே விகற்பமில்லாதவனும், நல்லொழுக்கமுள்ளவனும் குற்றம்பிடிக்கப்படாத ஆரோக்கியமான வசனத்தைப் பேசுகிறவனுமாயிருப்பாயாக. | மாற் 12:17 மாற் 12:28 மாற் 12:32 மாற் 12:34 1தீமோ 6:3 |
| 9 | வேலைக்காரர் நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய உபதேசத்தை எல்லாவற்றிலும் அலங்கரிக்கத்தக்கதாக, | எபே 6:5-8 கொலோ 3:22-25 1தீமோ 6:1 1தீமோ 6:2 1பேது 2:18-25 |
| 10 | தங்கள் எஜமான்களுக்குக் கீழ்ப்படிந்திருந்து எதிர்த்துப்பேசாமல், எல்லாவற்றிலும் பிரியமுண்டாக நடந்துகொள்ளவும், திருடாமலிருந்து, சகலவிதத்திலும் நல்லுண்மையைக் காண்பிக்கவும் புத்திசொல்லு. | 2இரா 5:20-24 லூக் 16:6-8 யோவா 12:6 அப் 5:2 அப் 5:3 |
| 11 | ஏனெனில் எல்லா மனுஷருக்கும் இரட்சிப்பை அளிக்கத்தக்க தேவகிருபையானது பிரசன்னமாகி, | தீத் 3:4 தீத் 3:5 சங் 84:11 சகரி 4:7 சகரி 12:10 யோவா 1:14 யோவா 1:16 யோவா 1:17 அப் 11:23 அப் 13:43 அப் 20:24 ரோம 4:4 ரோம 4:5 ரோம 5:2 ரோம 5:15 ரோம 5:20 ரோம 5:21 ரோம 11:5 ரோம 11:6 2கொரி 6:1 கலா 2:21 எபே 1:6 எபே 1:7 எபே 2:5 எபே 2:8 2தெச 2:16 1தீமோ 1:14 எபிரெ 2:9 எபிரெ 12:15 1பேது 1:10-12 1பேது 5:5-12 |
| 12 | நாம் அவபக்தியையும் லெளகிக இச்சைகளையும் வெறுத்து, தெளிந்த புத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாய் இவ்வுலகத்திலே ஜீவனம்பண்ணி, | மத் 28:20 யோவா 6:25 1தெச 4:9 எபிரெ 8:11 1யோவா 2:27 |
| 13 | நாம் நம்பியிருக்கிற ஆனந்தபாக்கியத்துக்கும், மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய மகிமையின் பிரசன்னமாகுதலுக்கும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்படி நமக்குப் போதிக்கிறது. | 1கொரி 1:7 பிலிப் 3:20 பிலிப் 3:21 2தீமோ 4:8 2பேது 3:12-14 |
| 14 | அவர் நம்மைச் சகல அக்கிரமங்களினின்று மீட்டுக்கொண்டு, தமக்குரிய சொந்த ஜனங்களாகவும், நற்கிரியைகளைச்செய்ய பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி, நமக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார். | மத் 20:28 யோவா 6:51 யோவா 10:15 கலா 1:4 கலா 2:20 கலா 3:13 எபே 5:2 எபே 5:23-27 1தீமோ 1:15 1தீமோ 2:6 எபிரெ 9:14 1பேது 3:18 வெளிப் 1:5 வெளிப் 5:9 |
| 15 | இவைகளை நீ பேசி, போதித்து, சகல அதிகாரத்தோடும் கடிந்துகொள். ஒருவனும் உன்னை அசட்டைபண்ண இடங்கொடாதிருப்பாயாக. | தீத் 1:13 2தீமோ 4:2 |