| 1 | துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும் கீழ்ப்படிந்து அடங்கியிருக்கவும், சகலவிதமான நற்கிரியைகளையும் செய்ய ஆயத்தமாயிருக்கவும், | ஏசா 43:26 1தீமோ 4:6 2தீமோ 1:6 2பேது 1:12 2பேது 3:1 2பேது 3:2 யூதா 1:5 |
| 2 | ஒருவனையும் தூஷியாமலும், சண்டைபண்ணாமலும், பொருமையுள்ளவர்களாய் எல்லா மனுஷருக்கும் சாந்தகுணத்தைக் காண்பிக்கவும் அவர்களுக்கு நினைப்பூட்டு. | சங் 140:11 நீதி 6:19 அப் 23:5 1கொரி 6:10 2கொரி 12:20 எபே 4:31 1தீமோ 3:11 யாக் 4:11 1பேது 2:1 1பேது 3:10 1பேது 4:4 2பேது 2:10 யூதா 1:8 யூதா 1:10 |
| 3 | ஏனெனில், முற்காலத்திலே நாமும் புத்தியீனரும், கீழ்ப்படியாதவர்களும், வழிதப்பி நடக்கிறவர்களும், பலவித இச்சைகளுக்கும் இன்பங்களுக்கும் அடிமைப்பட்டவர்களும், துர்க்குணத்தோடும் பொறாமையோடும் ஜீவனம்பண்ணுகிறவர்களும், பகைக்கப்படத்தக்கவர்களும், ஒருவரையொருவர் பகைக்கிறவர்களுமாயிருந்தோம். | ரோம 3:9-20 1கொரி 6:9-11 எபே 2:1-3 கொலோ 1:21 கொலோ 3:7 1பேது 4:1-3 |
| 4 | நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய தயையும் மனுஷர்மேலுள்ள அன்பும் பிரசன்னமானபோது, | தீத் 2:11 ரோம 5:20 ரோம 5:21 எபே 2:4-10 |
| 5 | நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்மமுழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார். | யோபு 9:20 யோபு 15:14 யோபு 25:4 சங் 143:2 ஏசா 57:12 லூக் 10:27-29 ரோம 3:20 ரோம 3:28 ரோம 4:5 ரோம 9:11 ரோம 9:16 ரோம 9:30 ரோம 11:6 கலா 2:16 கலா 3:16-21 எபே 2:4 எபே 2:8 எபே 2:9 2தீமோ 1:9 |
| 6 | தமது கிருபையினாலே நாம் நீதிமான்களாக்கப்பட்டு, நித்திய ஜீவனுண்டாகும் என்கிற நம்பிக்கையின்படி சுதந்தரராகத்தக்கதாக, | நீதி 1:23 ஏசா 32:15 ஏசா 44:3 எசே 36:25 யோவே 2:28 யோவா 1:16 யோவா 7:37 அப் 2:33 அப் 10:45 ரோம 5:5 |
| 7 | அவர் நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்து மூலமாய், அந்தப் பரிசுத்த ஆவியை நம்மேல் சம்பூரணமாய்ப் பொழிந்தருளினார். | தீத் 2:11 ரோம 3:24 ரோம 3:28 ரோம 4:4 ரோம 4:16 ரோம 5:1 ரோம 5:2 ரோம 5:15-21 ரோம 11:6 1கொரி 6:11 கலா 2:16 |
| 8 | இந்த வார்த்தை உண்மையுள்ளது; தேவனிடத்தில் விசுவாசமானவர்கள் நற்கிரியைகளைச் செய்ய ஜாக்கிரதையாயிருக்கும்படி நீ இவைகளைக்குறித்துத் திட்டமாய்ப் போதிக்கவேண்டுமென்று விரும்புகிறேன்; இவைகளே நன்மையும் மனுஷருக்குப் பிரயோஜனமுமானவைகள். | தீத் 1:9 1தீமோ 1:15 |
| 9 | புத்தியீனமான தர்க்கங்களையும், வம்சவரலாறுகளையும், சண்டைகளையும், நியாயப்பிரமாணத்தைக்குறித்து உண்டாகிற வாக்குவாதங்களையும் விட்டு விலகு; அவைகள் அப்பிரயோஜனமும் வீணுமாயிருக்கும். | தீத் 1:14 1தீமோ 1:3-7 1தீமோ 4:7 2தீமோ 2:23 |
| 10 | வேதப்புரட்டனாயிருக்கிற ஒருவனுக்கு நீ இரண்டொருதரம் புத்திசொன்னபின்பு அவனை விட்டு விலகு. | 1கொரி 11:19 கலா 5:20 2பேது 2:1 |
| 11 | அப்படிப்பட்டவன் நிலைதவறி, தன்னிலேதானே ஆக்கினைத்தீர்ப்புடையவனாய்ப் பாவஞ்செய்கிறவனென்று அறிந்திருக்கிறாயே. | தீத் 1:11 அப் 15:24 1தீமோ 1:19 1தீமோ 1:20 2தீமோ 2:14 எபிரெ 10:26 |
| 12 | நான் அர்த்தெமாவையாவது தீகிக்குவையாவது உன்னிடத்தில் அனுப்பும்போது நீ நிக்கொப்போலிக்கு என்னிடத்தில் வர ஜாக்கிரதைப்படு; மாரிகாலத்திலே அங்கே தங்கும்படி தீர்மானித்திருக்கிறேன். | அப் 20:4 2தீமோ 4:12 |
| 13 | நியாயசாஸ்திரியாகிய சேனாவுக்கும் அப்பொல்லோவுக்கும் ஒரு குறைவுமில்லாதபடிக்கு அவர்களை ஜாக்கிரதையாய் விசாரித்து வழிவிட்டனுப்பு. | மத் 22:35 லூக் 7:30 லூக் 10:25 லூக் 11:45 லூக் 11:52 லூக் 14:3 |
| 14 | நம்முடையவர்களும் கனியற்றவர்களாயிராதபடி குறைவுகளை நீக்குகிறதற்கேதுவாக நற்கிரியைகளைச் செய்யப்பழகட்டும். | அப் 18:3 அப் 20:35 எபே 4:28 1தெச 2:9 2தெச 3:8 |
| 15 | என்னோடிருக்கிற யாவரும் உனக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். விசுவாசத்திலே நம்மைச் சிநேகிக்கிறவர்களுக்கு வாழ்த்துதல் சொல்லு. கிருபையானது உங்களனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென். | ரோம 16:21-24 |