| 1 | கிறிஸ்து இயேசுவினிமித்தம் கட்டப்பட்டவனாயிருக்கிற பவுலும், சகோதரனாகிய தீமோத்தேயும், எங்களுக்குப் பிரியமுள்ளவனும் உடன்வேலையாளுமாயிருக்கிற பிலேமோனுக்கும், | பிலேமோ 1:9 எபே 3:1 எபே 4:1 எபே 6:20 2தீமோ 1:8 |
| 2 | பிரியமுள்ள அப்பியாளுக்கும், எங்கள் உடன் போர்ச்சேவகனாகிய அர்க்கிப்புவுக்கும், உம்முடைய வீட்டிலே கூடிவருகிற சபைக்கும் எழுதுகிறதாவது: | கொலோ 4:17 |
| 3 | நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. | ரோம 1:7 2கொரி 13:14 எபே 1:2 |
| 4 | கர்த்தராகிய இயேசுவினிடத்திலும், எல்லாப் பரிசுத்தவான்களிடத்திலுமுள்ள உம்முடைய அன்பையும் உம்முடைய விசுவாசத்தையும் நான் கேள்விப்பட்டு, | ரோம 1:8 எபே 1:16 பிலிப் 1:3 கொலோ 1:3 1தெச 1:2 2தெச 1:3 2தீமோ 1:3 |
| 5 | என் ஜெபங்களில் உம்மை நினைத்து, எப்பொழுதும் என் தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செய்து, | கலா 5:6 எபே 1:15 கொலோ 1:4 |
| 6 | உங்களிலுள்ள சகல நன்மைகளும் தெரியப்படுகிறதினாலே உம்முடைய விசுவாசத்தின் அந்நியோந்நியம் கிறிஸ்து இயேசுவுக்காகப் பயன்படவேண்டுமென்று வேண்டுதல்செய்கிறேன். | 2கொரி 9:12-14 பிலிப் 1:9-11 தீத் 3:14 எபிரெ 6:10 யாக் 2:14 யாக் 2:17 |
| 7 | சகோதரனே, பரிசுத்தவான்களுடைய உள்ளங்கள் உம்மாலே இளைப்பாறினபடியால், உம்முடைய அன்பினாலே மிகுந்த சந்தோஷமும் ஆறுதலும் அடைந்திருக்கிறோம். | 1தெச 1:3 1தெச 2:13 1தெச 2:19 1தெச 3:9 2யோவா 1:4 3யோவா 1:3-6 |
| 8 | ஆகையால், பவுலாகிய நான் முதிர்வயதுள்ளவனாகவும், இயேசுகிறிஸ்துவினிமித்தம் இப்பொழுது கட்டப்பட்டவனாகவும் இருக்கிறபடியால், | 2கொரி 3:12 2கொரி 10:1 2கொரி 10:2 2கொரி 11:21 1தெச 2:2 1தெச 2:6 |
| 9 | நீர் செய்யத்தக்கதை உமக்குக் கட்டளையிடும்படிக்குக் கிறிஸ்துவுக்குள் நான் துணியத்தக்கவனாயிருந்தாலும், அப்படிச் செய்யாமல், அன்பினிமித்தம் மன்றாடுகிறேன். | ரோம 12:1 2கொரி 5:20 2கொரி 6:1 எபே 4:1 எபிரெ 13:19 1பேது 2:11 |
| 10 | என்னவென்றால், கட்டப்பட்டிருக்கையில் நான் பெற்ற என் மகனாகிய ஒநேசிமுக்காக உம்மை மன்றாடுகிறேன். | 2சாமு 9:1-7 2சாமு 18:5 2சாமு 19:37 2சாமு 19:38 மாற் 9:17 1தீமோ 1:2 தீத் 1:4 |
| 11 | முன்னே அவன் உமக்குப் பிரயோஜனமில்லாதவன், இப்பொழுதோ உமக்கும் எனக்கும் பிரயோஜனமுள்ளவன். | யோபு 30:1 யோபு 30:2 மத் 25:30 லூக் 17:10 ரோம 3:12 1பேது 2:10 |
| 12 | அவனை நான் உம்மிடத்திற்கு அனுப்புகிறேன்; என் உள்ளம்போலிருக்கிற அவனை நீர் ஏற்றுக்கொள்ளும். | மத் 6:14 மத் 6:15 மத் 18:21-35 மாற் 11:25 எபே 4:32 |
| 13 | சுவிசேஷத்தினிமித்தம் கட்டப்பட்டிருக்கிற எனக்கு ஊழியஞ்செய்யும்படி உமக்குப் பதிலாக அவனை என்னிடத்தில் வைத்துக்கொள்ளவேண்டுமென்றிருந்தேன். | 1கொரி 16:17 பிலிப் 2:30 |
| 14 | ஆனாலும் நீர் செய்யும் நன்மையைக் கட்டாயத்தினாலல்ல, மனப்பூர்வமாய்ச் செய்யத்தக்கதாக, நான் உம்முடைய சம்மதியில்லாமல் ஒன்றும் செய்ய எனக்கு மனதில்லை. | பிலேமோ 1:8 பிலேமோ 1:9 2கொரி 1:24 1பேது 5:3 |
| 15 | அவன் என்றென்றைக்கும் உம்முடையவனாயிருக்கும்படிக்கும், இனிமேல் அவன் அடிமையானவனாகவல்ல, அடிமையானவனுக்கு மேலானவனாகவும் பிரியமுள்ள சகோதரனாகவுமிருக்கும்படிக்கும் கொஞ்சக்காலம் உம்மைவிட்டுப் பிரிந்துபோனானாக்கும். | ஆதி 45:5-8 ஆதி 50:20 சங் 76:10 ஏசா 20:6 அப் 4:28 |
| 16 | எனக்கு அவன் பிரியமான சகோதரனானால், உமக்கு சரீரத்தின்படியேயும் கர்த்தருக்குள்ளும் எவ்வளவு பிரியமுள்ளவனாயிருக்கவேண்டும்! | மத் 23:8 அப் 9:17 கலா 4:28 கலா 4:29 1தீமோ 6:2 எபிரெ 3:1 1பேது 1:22 1பேது 1:23 1யோவா 5:1 |
| 17 | ஆதலால், நீர் என்னை உம்மோடே ஐக்கியமானவனென்று எண்ணினால், என்னை ஏற்றுக்கொள்வதுபோல அவனையும் ஏற்றுக்கொள்ளும். | அப் 16:15 2கொரி 8:23 எபே 3:6 பிலிப் 1:7 1தீமோ 6:2 எபிரெ 3:1 எபிரெ 3:14 யாக் 2:5 1பேது 5:1 1யோவா 1:3 |
| 18 | அவன் உமக்கு யாதொரு அநியாயஞ்செய்ததும், உம்மிடத்தில் கடன்பட்டதும் உண்டானால், அதை என் கணக்கிலே வைத்துக்கொள்ளும். | ஏசா 53:4-7 |
| 19 | பவுலாகிய நான் இதை என் சொந்தக்கையாலே எழுதினேன், நான் அதைச் செலுத்தித் தீர்ப்பேன். நீர் உம்மைத்தாமே எனக்குக் கடனாகச் செலுத்தவேண்டுமென்று நான் உமக்குச் சொல்லவேண்டியதில்லையே. | 1கொரி 16:21 1கொரி 16:22 கலா 5:2 கலா 6:11 |
| 20 | ஆம், சகோதரனே, கர்த்தருக்குள் உம்மாலே எனக்குப் பிரயோஜனமுண்டாகட்டும்; கர்த்தருக்குள் என் உள்ளத்தை இளைப்பாறப்பண்ணும். | 2கொரி 2:2 2கொரி 7:4-7 2கொரி 7:13-7 பிலிப் 2:2 பிலிப் 4:1 1தெச 2:19 1தெச 2:20 1தெச 3:7-9 எபிரெ 13:17 3யோவா 1:4 |
| 21 | நான் சொல்லுகிறதிலும் அதிகமாய்ச் செய்வீரென்று அறிந்து, இதற்கு நீர் இணங்குவீரென்று நிச்சயித்து, உமக்கு எழுதியிருக்கிறேன். | 2கொரி 2:3 2கொரி 7:16 2கொரி 8:22 கலா 5:10 2தெச 3:4 |
| 22 | மேலும், உங்கள் விண்ணப்பங்களினாலே நான் உங்களுக்கு அநுக்கிரகிக்கப்படுவேனென்று நம்பியிருக்கிறபடியால், நான் இருக்கும்படிக்கு ஓரிடத்தை எனக்காக ஆயத்தம்பண்ணும். | அப் 28:23 |
| 23 | கிறிஸ்து இயேசுவினிமித்தம் என்னோடேகூடக் காவலில் வைக்கப்பட்டிருக்கிற எப்பாப்பிராவும், | கொலோ 1:7 கொலோ 4:12 |
| 24 | என் உடன்வேலையாட்களாகிய மாற்குவும், அரிஸ்தர்க்கும், தேமாவும், லூக்காவும் உமக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். | அப் 12:12 அப் 12:25 அப் 13:13 அப் 15:37-39 கொலோ 4:10 2தீமோ 4:11 |
| 25 | நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் ஆவியுடனேகூட இருப்பதாக. ஆமென். | ரோம 16:20 ரோம 16:24 |