| 1 | தேவனுடைய ஊழியக்காரனும், இயேசுகிறிஸ்துவினுடைய அப்போஸ்தலனுமாகிய பவுல், பொதுவான விசுவாசத்தின்படி உத்தம குமாரனாகிய தீத்துவுக்கு எழுதுகிறதாவது: | 1நாளா 6:49 ரோம 1:1 பிலிப் 1:1 |
| 2 | பிதாவாகிய தேவனாலும், நம்முடைய இரட்சகராயிருக்கிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், கிருபையும் இரக்கமும் சமாதானமும் உண்டாவதாக. | தீத் 2:7 தீத் 2:13 தீத் 3:7 யோவா 5:39 யோவா 6:68 ரோம 2:7 ரோம 5:2 ரோம 5:4 கொலோ 1:27 1தெச 5:8 2தீமோ 1:1 2தீமோ 2:10 1பேது 1:3 1பேது 1:4 1யோவா 2:25 1யோவா 3:2 1யோவா 3:3 யூதா 1:21 |
| 3 | பொய்யுரையாத தேவன் ஆதிகாலமுதல் நித்திய ஜீவனைக்குறித்து வாக்குத்தத்தம்பண்ணி, அதைக்குறித்த நம்பிக்கையைப்பற்றி தேவபக்திக்கேதுவான சத்தியத்தை அறிகிற அறிவும் விசுவாசமும் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு உண்டாகும்படி, | தானி 8:23 தானி 9:24-27 தானி 10:1 தானி 11:27 ஆபகூ 2:3 அப் 17:26 ரோம 5:6 கலா 4:4 எபே 1:10 1தீமோ 2:6 2தீமோ 1:10 |
| 4 | ஏற்றகாலங்களிலே நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய கட்டளையின்படி எனக்கு ஒப்புவிக்கப்பட்ட பிரசங்கத்தினாலே தமது வார்த்தையை வெளிப்படுத்தினார். | 2கொரி 2:13 2கொரி 7:6 2கொரி 7:13 2கொரி 7:14 2கொரி 8:6 2கொரி 8:16 2கொரி 8:23 2கொரி 12:18 கலா 2:3 |
| 5 | நீ குறைவாயிருக்கிறவைகளை ஒழுங்குபடுத்தும்படிக்கும், நான் உனக்குக் கட்டளையிட்டபடியே, பட்டணங்கள்தோறும் மூப்பரை ஏற்படுத்தும்படிக்கும், உன்னைக் கிரேத்தாதீவிலே விட்டுவந்தேன். | 1தீமோ 1:3 |
| 6 | குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியையுடைய புருஷனும், துன்மார்க்கரென்றும் அடங்காதவர்களென்றும் பேரெடுக்காத விசுவாசமுள்ள பிள்ளைகளை உடையவனுமாகிய ஒருவனிருந்தால் அவனையே ஏற்படுத்தலாம். | 1தீமோ 3:2-7 |
| 7 | ஏனெனில், கண்காணியானவன் தேவனுடைய உக்கிராணக்காரனுக்கேற்றவிதமாய், குற்றஞ்சாட்டப்படாதவனும், தன் இஷ்டப்படி செய்யாதவனும், முற்கோபமில்லாதவனும், மதுபானப்பிரியமில்லாதவனும், அடியாதவனும், இழிவான ஆதாயத்தை இச்சியாதவனும், | தீத் 1:5 பிலிப் 1:1 1தீமோ 3:1 1தீமோ 3:2-13 |
| 8 | அந்நியரை உபசரிக்கிறவனும், நல்லோர்மேல் பிரியமுள்ளவனும், தெளிந்த புத்தியுள்ளவனும், நீதிமானும், பரிசுத்தவானும், இச்சையடக்கமுள்ளவனும், | 1தீமோ 3:2 |
| 9 | ஆரோக்கியமான உபதேசத்தினாலே புத்திசொல்லவும், எதிர்பேசுகிறவர்களைக் கண்டனம்பண்ணவும் வல்லவனுமாயிருக்கும்படி, தான் போதிக்கப்பட்டதற்கேற்ற உண்மையான வசனத்தை நன்றாய்ப் பற்றிக்கொள்ளுகிறவனுமாயிருக்கவேண்டும். | யோபு 2:3 யோபு 27:6 நீதி 23:23 1தெச 5:21 2தெச 2:15 2தீமோ 1:13 யூதா 1:3 வெளிப் 2:25 வெளிப் 3:3 வெளிப் 3:11 |
| 10 | அநேகர், விசேஷமாய் விருத்தசேதனமுள்ளவர்கள், அடங்காதவர்களும், வீண்பேச்சுக்காரரும், மனதை மயக்குகிறவர்களுமாயிருக்கிறார்கள். | அப் 20:29 ரோம 16:17-18 2கொரி 11:12-15 எபே 4:14 2தெச 2:10-12 1தீமோ 1:4 1தீமோ 1:6 1தீமோ 6:3-5 2தீமோ 3:13 2தீமோ 4:4 யாக் 1:26 2பேது 2:1 2பேது 2:2 1யோவா 2:18 1யோவா 4:1 வெளிப் 2:6 வெளிப் 2:14 |
| 11 | அவர்களுடைய வாயை அடக்கவேண்டும்; அவர்கள் இழிவான ஆதாயத்துக்காகத் தகாதவைகளை உபதேசித்து, முழுக்குடும்பங்களையும் கவிழ்த்துப்போடுகிறார்கள். | தீத் 1:9 தீத் 3:10 சங் 63:11 சங் 107:42 எசே 16:63 லூக் 20:40 ரோம 3:19 2கொரி 11:10 |
| 12 | கிரேத்தாதீவார் ஓயாப்பொய்யர், துஷ்டமிருகங்கள், பெருவயிற்றுச் சோம்பேறிகள் என்று அவர்களிலொருவனாகிய அவர்கள் தீர்க்கதரிசியானவனே சொல்லியிருக்கிறான். | அப் 17:28 |
| 13 | இந்தச் சாட்சி உண்மையாயிருக்கிறது; இது முகாந்தரமாக, அவர்கள் யூதருடைய கட்டுக்கதைகளுக்கும், சத்தியத்தை விட்டு விலகுகிற மனுஷருடைய கற்பனைகளுக்கும் செவிகொடாமல், | தீத் 2:15 நீதி 27:5 2கொரி 13:10 1தீமோ 5:20 2தீமோ 4:2 |
| 14 | விசுவாசத்திலே ஆரோக்கியமுள்ளவர்களாயிருக்கும்படி, நீ அவர்களைக் கண்டிப்பாய்க் கடிந்துகொள். | 1தீமோ 1:4-7 2தீமோ 4:4 |
| 15 | சுத்தமுள்ளவர்களுக்குச் சகலமும் சுத்தமாயிருக்கும்; அசுத்தமுள்ளவர்களுக்கும் அவிசுவாசமுள்ளவர்களுக்கும் ஒன்றும் சுத்தமாயிராது; அவர்களுடைய புத்தியும் மனச்சாட்சியும் அசுத்தமாயிருக்கும். | லூக் 11:39-41 அப் 10:15 ரோம 14:14 ரோம 14:20 1கொரி 6:12 1கொரி 6:13 1கொரி 10:23 1கொரி 10:25 1கொரி 10:31 1தீமோ 4:3 1தீமோ 4:4 |
| 16 | அவர்கள் தேவனை அறிந்திருக்கிறோமென்று அறிக்கைபண்ணுகிறார்கள், கிரியைகளினாலோ அவரை மறுதலிக்கிறார்கள்; அவர்கள் அருவருக்கப்படத்தக்கவர்களும், கீழ்ப்படியாதவர்களும், எந்த நற்கிரியையுஞ்செய்ய ஆகாதவர்களுமாயிருக்கிறார்கள். | எண் 24:16 ஏசா 29:13 ஏசா 48:1 ஏசா 58:2 எசே 33:31 ஓசி 8:2 ஓசி 8:3 ரோம 2:18-24 2தீமோ 3:5-8 யூதா 1:4 |