| 1 | மேலும், கடைசி நாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக. | 2தீமோ 4:3 ஆதி 49:1 ஏசா 2:2 எரே 48:47 எரே 49:39 எசே 38:16 தானி 10:14 ஓசி 3:5 மீகா 4:1 1தீமோ 4:1 2பேது 3:3 1யோவா 2:18 யூதா 1:17 |
| 2 | எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், | 2தீமோ 3:4 ரோம 15:1-3 2கொரி 5:15 பிலிப் 2:21 யாக் 2:8 |
| 3 | சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், | மத் 10:21 ரோம 1:31 |
| 4 | துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், | 2பேது 2:10-22 யூதா 1:8 யூதா 1:9 |
| 5 | தேவபக்தியின் வேஷத்தைத்தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு. | ஏசா 29:13 ஏசா 48:1 ஏசா 48:2 ஏசா 58:1-3 எசே 33:30-32 மத் 7:15 மத் 23:27 மத் 23:28 ரோம 2:20-24 1தீமோ 5:8 தீத் 1:16 |
| 6 | பாவங்களால் நிறைந்து, பற்பல இச்சைகளால் இழுப்புண்டு, | மத் 23:14 தீத் 1:11 யூதா 1:4 |
| 7 | எப்போதும் கற்றாலும் ஒருபோதும் சத்தியத்தை அறிந்து உணராதவர்களாயிருக்கிற பெண்பிள்ளைகளுடைய வீடுகளில் இப்படிப்பட்டவர்கள் நுழைந்து, அவர்களை வசப்படுத்திக்கொள்ளுகிறார்கள். | 2தீமோ 4:3 2தீமோ 4:4 உபா 29:4 நீதி 14:6 ஏசா 30:10 ஏசா 30:11 எசே 14:4-10 மத் 13:11 யோவா 3:20 யோவா 3:21 யோவா 5:44 யோவா 12:42 யோவா 12:43 1கொரி 3:1-4 எபே 4:14 எபிரெ 5:11 |
| 8 | யந்நேயும் யம்பிரேயும் மோசேக்கு எதிர்த்து நின்றதுபோல இவர்களும் சத்தியத்துக்கு எதிர்த்து நிற்கிறார்கள்; இவர்கள் துர்ப்புத்தியுள்ள மனுஷர்கள், விசுவாசவிஷயத்தில் பரீட்சைக்கு நில்லாதவர்கள். | யாத் 7:11 யாத் 7:22 யாத் 8:7 யாத் 8:18 |
| 9 | ஆனாலும், இவர்கள் அதிகமாய்ப் பலப்படுவதில்லை; அவ்விருவருடைய மதிகேடு எல்லாருக்கும் வெளிப்பட்டதுபோல, இவர்களுடைய மதிகேடும் வெளிப்படும். | 2தீமோ 3:8 யாத் 7:12 யாத் 8:18 யாத் 8:19 யாத் 9:11 1இரா 22:25 சங் 76:10 எரே 28:15-17 எரே 29:21-23 எரே 29:31-23 எரே 29:32-23 எரே 37:19 அப் 13:11 அப் 19:15-17 |
| 10 | நீயோ என் போதகத்தையும் நடக்கையையும் நோக்கத்தையும் விசுவாசத்தையும் நீடிய சாந்தத்தையும் அன்பையும் பொறுமையையும், | லூக் 1:3 பிலிப் 2:22 1தீமோ 4:6 |
| 11 | அந்தியோகியா, இக்கோனியா, லீஸ்திரா என்னும் பட்டணங்களில் எனக்கு உண்டான துன்பங்களையும் பாடுகளையும் நன்றாய் அறிந்திருக்கிறாய்; எவ்வளவோ துன்பங்களைச் சகித்தேன்; இவையெல்லாவற்றினின்றும் கர்த்தர் என்னை நீங்கலாக்கிவிட்டார். | அப் 9:16 அப் 20:19 அப் 20:23 அப் 20:24 ரோம 8:35-37 1கொரி 4:9-11 2கொரி 1:8-10 2கொரி 4:8-11 2கொரி 11:23-28 எபிரெ 10:33-34 |
| 12 | அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள். | 2கொரி 1:12 1தீமோ 2:2 1தீமோ 3:16 1தீமோ 6:3 தீத் 1:1 தீத் 2:12 2பேது 3:11 |
| 13 | பொல்லாதவர்களும் எத்தர்களுமானவர்கள் மோசம்போக்குகிறவர்களாகவும், மோசம் போகிறவர்களாகவுமிருந்து மேன்மேலும் கேடுள்ளவர்களாவார்கள். | 2தீமோ 3:8 2தீமோ 2:16 2தீமோ 2:17 2தெச 2:6-10 1தீமோ 4:1 2பேது 2:20 2பேது 3:3 வெளிப் 12:9 வெளிப் 13:14 வெளிப் 18:23 |
| 14 | நீ கற்று நிச்சயித்துக்கொண்டவைகளில் நிலைத்திரு; அவைகளை இன்னாரிடத்தில் கற்றாய் என்று நீ அறிந்திருக்கிறதுமல்லாமல், | 2தீமோ 1:13 2தீமோ 2:2 1தீமோ 4:16 |
| 15 | கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே உன்னை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயதுமுதல் அறிந்தவனென்றும் உனக்குத் தெரியும். | 2தீமோ 1:5 1சாமு 2:18 2நாளா 34:3 சங் 71:17 நீதி 8:17 நீதி 22:6 பிரச 12:1 லூக் 1:15 லூக் 2:40 |
| 16 | வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ்செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, | 2சாமு 23:2 மத் 21:42 மத் 22:31 மத் 22:32 மத் 22:43 மத் 26:54 மத் 26:56 மாற் 12:24 மாற் 12:36 யோவா 10:35 அப் 1:16 அப் 28:25 ரோம 3:2 ரோம 15:4 கலா 3:8 எபிரெ 3:7 எபிரெ 4:12 2பேது 1:19-21 |
| 17 | அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது. | சங் 119:98-100 1தீமோ 6:11 |