| 1 | ஆதலால், என் குமாரனே, நீ கிறிஸ்து இயேசுவிலுள்ள கிருபையில் பலப்படு. | 2தீமோ 1:2 1தீமோ 1:2 1தீமோ 1:18 |
| 2 | அநேக சாட்சிகளுக்கு முன்பாக நீ என்னிடத்தில் கேட்டவைகளை மற்றவர்களுக்குப் போதிக்கத்தக்க உண்மையுள்ள மனுஷர்களிடத்தில் ஒப்புவி. | 2தீமோ 1:13 2தீமோ 3:10 2தீமோ 3:14 |
| 3 | நீயும் இயேசுகிறிஸ்துவுக்கு நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கனுபவி. | 2தீமோ 2:10 2தீமோ 1:8 2தீமோ 3:11 2தீமோ 4:5 1கொரி 13:7 2கொரி 1:6 எபிரெ 6:15 எபிரெ 10:32 எபிரெ 11:27 எபிரெ 12:2 எபிரெ 12:3 யாக் 1:12 |
| 4 | தண்டில் சேவகம்பண்ணுகிற எவனும், தன்னைச் சேவகமெழுதிக்கொண்டவனுக்கு ஏற்றவனாயிருக்கும்படி, பிழைப்புக்கடுத்த அலுவல்களில் சிக்கிக்கொள்ளமாட்டான். | உபா 20:5-7 லூக் 9:59-62 |
| 5 | மேலும் ஒருவன் மல்யுத்தம்பண்ணினாலும், சட்டத்தின்படி பண்ணாவிட்டால் முடிசூட்டப்படான். | லூக் 13:24 1கொரி 9:24-27 பிலிப் 1:15 கொலோ 1:29 எபிரெ 12:4 |
| 6 | பிரயாசப்பட்டுப் பயிரிடுகிறவன் பலனில் முந்திப் பங்கடையவேண்டும். | ஏசா 28:24-26 மத் 9:37 மத் 9:38 மத் 20:1 மத் 21:33-41 லூக் 10:2 யோவா 4:35-38 1கொரி 3:6-9 1கொரி 9:7-11 |
| 7 | நான் சொல்லுகிறவைகளைச் சிந்தித்துக்கொள்; கர்த்தர் எல்லாக் காரியங்களிலும் உனக்குப் புத்தியைத் தந்தருளுவார். | உபா 4:39 உபா 32:29 சங் 64:9 நீதி 24:32 ஏசா 1:3 ஏசா 5:12 லூக் 9:44 பிலிப் 4:8 1தீமோ 4:15 எபிரெ 3:1 எபிரெ 7:4 எபிரெ 12:3 எபிரெ 13:7 |
| 8 | தாவீதின் சந்ததியில் பிறந்த இயேசுகிறிஸ்து, என் சுவிசேஷத்தின்படியே, மரித்தோரிலிருந்தெழுப்பப்பட்டவரென்று நினைத்துக்கொள். | எபிரெ 12:2 எபிரெ 12:3 |
| 9 | இந்தச் சுவிசேஷத்தினிமித்தம் நான் பாதகன்போலக் கட்டப்பட்டு, துன்பத்தை அனுபவிக்கிறேன்; தேவவசனமோ கட்டப்பட்டிருக்கவில்லை. | 2தீமோ 1:8 2தீமோ 1:12 2தீமோ 1:16 அப் 9:16 |
| 10 | ஆகையால், தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் கிறிஸ்து இயேசுவினால் உண்டான இரட்சிப்பை நித்திய மகிமையோடே பெற்றுக்கொள்ளும்படி, சகலத்தையும் அவர்கள் நிமித்தமாகச் சகிக்கிறேன். | 2தீமோ 2:3 எபே 3:13 கொலோ 1:24 |
| 11 | இந்த வார்த்தை உண்மையுள்ளது; என்னவெனில், நாம் அவரோடேகூட மரித்தோமானால், அவரோடேகூடப் பிழைத்துமிருப்போம்; | 1தீமோ 1:15 1தீமோ 3:1 தீத் 3:8 |
| 12 | அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடேகூட ஆளுகையும் செய்வோம்; நாம் அவரை மறுதலித்தால், அவரும் நம்மை மறுதலிப்பார்; | மத் 19:28 மத் 19:29 அப் 14:22 ரோம 8:17 பிலிப் 1:28 2தெச 1:4-8 1பேது 4:13-16 வெளிப் 1:6 வெளிப் 1:9 வெளிப் 5:10 வெளிப் 20:4 வெளிப் 20:6 |
| 13 | நாம் உண்மையில்லாதவர்களாயிருந்தாலும், அவர் உண்மையுள்ளவராயிருக்கிறார்; அவர் தம்மைத்தாம் மறுதலிக்கமாட்டார். | ஏசா 25:1 மத் 24:35 ரோம 3:3 ரோம 9:6 1தெச 5:24 2தெச 3:3 |
| 14 | இவைகளைஅவர்களுக்கு நினைப்பூட்டி, ஒன்றுக்கும் பிரயோஜனமில்லாமல், கேட்கிறவர்களைக் கவிழ்த்துப்போடுகிறதற்கேதுவான வாக்குவாதம் செய்யாதபடிக்கு, கர்த்தருக்கு முன்பாக அவர்களுக்கு எச்சரித்துப் புத்திசொல்லு. | 2தீமோ 1:6 2பேது 1:13 |
| 15 | நீ வெட்கப்படாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவனாயும் உன்னை தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு. | எபிரெ 4:11 2பேது 1:10 2பேது 1:15 2பேது 3:14 |
| 16 | சீர்கேடான வீண்பேச்சுகளுக்கு விலகியிரு; அவைகளால் (கள்ளப்போதகர்களான) அவர்கள் அதிக அவபக்தியுள்ளவர்களாவார்கள்; | 2தீமோ 2:14 1தீமோ 4:7 1தீமோ 6:20 தீத் 1:14 தீத் 3:9 |
| 17 | அவர்களுடைய வார்த்தை அரிபிளவையைப்போலப் படரும்; இமெநேயும் பிலேத்தும் அப்படிப்பட்டவர்கள்; | நாகூ 3:15 யாக் 5:3 |
| 18 | அவர்கள் சத்தியத்தை விட்டு விலகி, உயிர்த்தெழுதல் நடந்தாயிற்றென்று சொல்லி, சிலருடைய விசுவாசத்தைக் கவிழ்த்துப்போடுகிறார்கள். | மத் 22:29 1தீமோ 1:19 1தீமோ 6:10 1தீமோ 6:21 எபிரெ 3:10 யாக் 5:19 |
| 19 | ஆகிலும் தேவனுடைய உறுதியான அஸ்திபாரம் நிலைத்திருக்கிறது; கர்த்தர் தம்முடையவர்களை அறிவாரென்பதும், கிறிஸ்துவின் நாமத்தைச் சொல்லுகிற எவனும் அநியாயத்தைவிட்டு விலகக்கடவனென்பதும், அதற்கு முத்திரையாயிருக்கிறது. | நீதி 10:25 ஏசா 14:32 ஏசா 28:16 மத் 7:25 லூக் 6:48 1கொரி 3:10 1கொரி 3:11 எபே 2:20 1தீமோ 6:19 எபிரெ 11:10 வெளிப் 21:14 |
| 20 | ஒரு பெரிய வீட்டிலே பொன்னும் வெள்ளியுமான பாத்திரங்களுமல்லாமல், மரமும் மண்ணுமான பாத்திரங்களுமுண்டு; அவைகளில் சில கனத்திற்கும் சில கனவீனத்திற்குமானவைகள். | 1கொரி 3:9 1கொரி 3:16 1கொரி 3:17 எபே 2:22 1தீமோ 3:15 எபிரெ 3:2-6 1பேது 2:5 |
| 21 | ஆகையால் ஒருவன் இவைகளைவிட்டு, தன்னைச் சுத்திகரித்துக்கொண்டால், அவன் பரிசுத்தமாக்கப்பட்டதும், எஜமானுக்கு உபயோகமானதும், எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாக்கப்பட்டதுமான கனத்துக்குரிய பாத்திரமாயிருப்பான். | சங் 119:9 ஏசா 1:25 ஏசா 52:11 எரே 15:19 மல்கி 3:3 1கொரி 5:7 2கொரி 7:1 1பேது 1:22 1யோவா 3:3 |
| 22 | அன்றியும், பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடி, சுத்த இருதயத்தோடே கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறவர்களுடனே, நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அடையும்படி நாடு. | நீதி 6:5 1கொரி 6:18 1கொரி 10:14 1தீமோ 6:11 |
| 23 | புத்தியீனமும் அயுக்தமுமான தர்க்கங்கள் சண்டைகளைப் பிறப்பிக்குமென்று அறிந்து, அவைகளுக்கு விலகியிரு. | 2தீமோ 2:14 2தீமோ 2:16 1தீமோ 1:4 1தீமோ 4:7 1தீமோ 6:4 1தீமோ 6:5 தீத் 3:9 |
| 24 | கர்த்தருடைய ஊழியக்காரன் சண்டைபண்ணுகிறவனாயிராமல், எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனும், போதகசமர்த்தனும், தீமையைச் சகிக்கிறவனுமாயிருக்கவேண்டும். | உபா 34:5 யோசு 1:1 2நாளா 24:6 தானி 6:20 1தீமோ 6:11 தீத் 1:1 தீத் 3:2 யாக் 1:1 |
| 25 | எதிர்பேசுகிறவர்கள் சத்தியத்தை அறியும்படி தேவன் அவர்களுக்கு மனந்திரும்புதலை அருளத்தக்கதாகவும், | மத் 11:29 கலா 6:1 1தீமோ 6:11 1பேது 3:15 |
| 26 | பிசாசானவனுடைய இச்சையின்படி செய்ய அவனால் பிடிபட்டிருக்கிற அவர்கள் மறுபடியும் மயக்கந்தெளிந்து அவன் கண்ணிக்கு நீங்கத்தக்கதாகவும், சாந்தமாய் அவர்களுக்கு உபதேசிக்கவேண்டும். | லூக் 15:17 1கொரி 15:34 எபே 5:14 |