| 1 | முதிர்வயதுள்ளவனைக் கடிந்துகொள்ளாமல், அவனைத் தகப்பனைப்போலவும், பாலிய புருஷரைச் சகோதரரைப்போலவும், | 1தீமோ 5:19 1தீமோ 5:20 லேவி 19:32 உபா 33:9 கலா 2:11-14 |
| 2 | முதிர்வயதுள்ள ஸ்திரீகளைத் தாய்களைப்போலவும், பாலிய ஸ்திரீகளை எல்லாக் கற்புடன் சகோதரிகளைப்போலவும் பாவித்து, புத்திசொல்லு. | 1தீமோ 5:3 மத் 12:50 யோவா 19:26 யோவா 19:27 |
| 3 | உத்தம விதவைகளாகிய விதவைகளைக் கனம்பண்ணு. | 1தீமோ 5:2 1தீமோ 5:17 யாத் 20:12 மத் 15:6 1தெச 2:6 1பேது 2:17 1பேது 3:7 |
| 4 | விதவையானவளுக்குப் பிள்ளைகளாவது, பேரன் பேத்திகளாவது இருந்தால், இவர்கள் முதலாவது தங்கள் சொந்தக் குடும்பத்தைத் தேவபக்தியாய் விசாரித்து, பெற்றார் செய்த நன்மைகளுக்குப் பதில் நன்மைகளைச் செய்யக் கற்றுக்கொள்ளக்கடவர்கள்; அது நன்மையும் தேவனுக்கு முன்பாகப் பிரியமுமாயிருக்கிறது. | நியா 12:14 யோபு 18:19 ஏசா 14:22 |
| 5 | உத்தம விதவையாயிருந்து தனிமையாயிருக்கிறவள் தேவனிடத்தில் நம்பிக்கையுள்ளவளாய், இரவும் பகலும் வேண்டுதல்களிலும் ஜெபங்களிலும் நிலைத்திருப்பாள். | 1தீமோ 5:3 ரோம 1:5 ரோம 1:12 ரோம 1:20 ரோம 1:21 1கொரி 7:32 |
| 6 | சுகபோகமாய் வாழ்கிறவள் உயிரோடே செத்தவள். | 1சாமு 25:6 யோபு 21:11-15 சங் 73:5-7 ஏசா 22:13 ஆமோ 6:5 ஆமோ 6:6 லூக் 12:19 லூக் 15:13 லூக் 16:19 யாக் 5:5 வெளிப் 18:7 |
| 7 | அவர்கள் குற்றஞ்சாட்டப்படாதவர்களாயிருக்கும்படி இவைகளைக் கட்டளையிடு. | 1தீமோ 1:3 1தீமோ 4:11 1தீமோ 6:17 2தீமோ 4:1 தீத் 1:13 தீத் 2:15 |
| 8 | ஒருவன் தன் சொந்த ஜனங்களையும், விசேஷமாகத் தன் வீட்டாரையும் விசாரியாமற்போனால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியிலும் கெட்டவனுமாயிருப்பான். | ஆதி 30:30 ஏசா 58:7 மத் 7:11 லூக் 11:11-13 2கொரி 12:14 கலா 6:10 |
| 9 | அறுபது வயதுக்குக் குறையாதவளும், ஒரே புருஷனுக்கு மனைவியாயிருந்தவளுமாகி, | 1தீமோ 5:3 1தீமோ 5:4 |
| 10 | பிள்ளைகளை வளர்த்து, அந்நியரை உபசரித்து, பரிசுத்தவான்களுடைய கால்களைக்கழுவி, உபத்திரவப்படுகிறவர்களுக்கு உதவிசெய்து, சகலவித நற்கிரியைகளையும் ஜாக்கிரதையாய் நடப்பித்து, இவ்விதமாய் நற்கிரியைகளைக்குறித்து நற்சாட்சி பெற்றவளுமாயிருந்தால், அப்படிப்பட்ட விதவையையே விதவைகள் கூட்டத்தில் சேர்த்துக்கொள்ளவேண்டும். | 1தீமோ 3:7 அப் 6:3 அப் 10:22 அப் 22:12 3யோவா 1:12 |
| 11 | இளவயதுள்ள விதவைகளை அதிலே சேர்த்துக்கொள்ளாதே; ஏனெனில், அவர்கள் கிறிஸ்துவுக்கு விரோதமாய்க் காமவிகாரங்கொள்ளும்போது விவாகம்பண்ண மனதாகி, | 1தீமோ 5:9 1தீமோ 5:14 |
| 12 | முதலில் கொண்டிருந்த விசுவாசத்தை விடுவதினாலே, ஆக்கினைக்குட்படுவார்கள். | 1கொரி 11:34 யாக் 3:1 1பேது 4:17 |
| 13 | அதுவுமல்லாமல், அவர்கள் சோம்பலுள்ளவர்களாய், வீடுவீடாய்த் திரியப்பழகுவார்கள்; சோம்பலுள்ளவர்களாய் மாத்திரமல்ல, அலப்புகிறவர்களாயும் வீணலுவற்காரிகளாயும் தகாத காரியங்களைப் பேசுகிறவர்களாயுமிருப்பார்கள். | நீதி 31:27 2தெச 3:6-11 |
| 14 | ஆகையால் இளவயதுள்ள விதவைகள் விவாகம்பண்ணவும், பிள்ளைகளைப் பெறவும், வீட்டை நடத்தவும், விரோதியானவன் நிந்திக்கிறதற்கு இடமுண்டாக்காமலிருக்கவும் வேண்டுமென்றிருக்கிறேன். | 1தீமோ 2:8 |
| 15 | ஏனெனில் இதற்குமுன்னே சிலர் சாத்தானைப் பின்பற்றி விலகிப்போனார்கள். | பிலிப் 3:18 பிலிப் 3:19 2தீமோ 1:15 2தீமோ 2:18 2தீமோ 4:10 2பேது 2:2 2பேது 2:20-22 2பேது 3:16 1யோவா 2:19 யூதா 1:4 யூதா 1:5 வெளிப் 12:9 |
| 16 | விசுவாசியாகிய ஒருவனிடத்திலாவது ஒருத்தியிடத்திலாவது விதவைகளிருந்தால், அவர்கள் இவர்களுக்கு உதவி செய்யக்கடவர்கள்; சபையானது உத்தம விதவைகளானவர்களுக்கு உதவிசெய்ய வேண்டியதாகையால் அந்தப் பாரத்தை அதின்மேல் வைக்கக்கூடாது. | 1தீமோ 5:4 1தீமோ 5:8 |
| 17 | நன்றாய் விசாரணைசெய்கிற மூப்பர்களை, விசேஷமாகத் திருவசனத்திலும் உபதேசத்திலும் பிரயாசப்படுகிறவர்களை, இரட்டிப்பான கனத்திற்குப் பாத்திரராக எண்ணவேண்டும். | 1தீமோ 3:5 மத் 24:25 லூக் 12:42 ரோம 12:8 1தெச 5:12 1தெச 5:13 எபிரெ 13:7 எபிரெ 13:17 எபிரெ 13:24 |
| 18 | போரடிக்கிற மாட்டை வாய்க்கட்டாயாக என்றும், வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான் என்றும், வேதவாக்கியம் சொல்லுகிறதே. | ரோம 4:3 ரோம 9:17 ரோம 10:11 ரோம 11:2 கலா 3:8 யாக் 4:5 |
| 19 | மூப்பனானவனுக்கு விரோதமாக ஒருவன் செய்யும் பிராதை இரண்டு மூன்று சாட்சிகள் இல்லாமல் நீ ஏற்றுக்கொள்ளக்கூடாது. | யோவா 18:29 அப் 24:2-13 அப் 25:16 தீத் 1:6 |
| 20 | மற்றவர்களுக்குப் பயமுண்டாகும்படி. பாவஞ்செய்தவர்களை எல்லாருக்கும் முன்பாகக் கடிந்துகொள். | லேவி 19:17 கலா 2:11-14 2தீமோ 4:2 தீத் 1:13 |
| 21 | நீ பட்சபாதத்தோடே ஒன்றும் செய்யாமலும், விசாரிக்குமுன் நிருணயம்பண்ணாமலும், இவைகளைக் காத்து நடக்கும்படி, தேவனுக்கும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கும், தெரிந்துகொள்ளப்பட்ட தூதருக்கும் முன்பாக, உறுதியாய்க் கட்டளையிடுகிறேன். | 1தீமோ 6:13 1தெச 5:27 2தீமோ 2:14 2தீமோ 4:1 |
| 22 | ஒருவன்மேலும் சீக்கிரமாய்க் கைகளை வையாதே; மற்றவர்கள் செய்யும் பாவங்களுக்கும் உடன்படாதே; உன்னைச் சுத்தவானாகக் காத்துக்கொள். | 1தீமோ 4:14 அப் 6:6 அப் 13:3 2தீமோ 1:6 எபிரெ 6:2 |
| 23 | நீ இனிமேல் தண்ணீர் மாத்திரம் குடியாமல், உன் வயிற்றிற்காகவும், உனக்கு அடிக்கடி நேரிடுகிற பலவீனங்களுக்காகவும், கொஞ்சம் திராட்சரசமும் கூட்டிக்கொள். | 1தீமோ 3:3 1தீமோ 4:4 லேவி 10:9-11 சங் 104:15 நீதி 31:4-7 எசே 44:21 எபே 5:18 தீத் 1:7 தீத் 2:3 |
| 24 | சிலருடைய பாவங்கள் வெளியரங்கமாயிருந்து, நியாயத்தீர்ப்புக்கு முந்திக்கொள்ளும்; சிலருடைய பாவங்கள் அவர்களைப் பின்தொடரும். | எரே 2:34 அப் 1:16-20 அப் 5:1-11 அப் 8:18 கலா 5:19-21 2தீமோ 4:10 2பேது 2:20 2பேது 2:21 |
| 25 | அப்படியே சிலருடைய நற்கிரியைகளும் வெளியரங்கமாயிருக்கும்; அப்படி இராதவைகளும் மறைந்திருக்கமாட்டாது. | 1தீமோ 3:7 மத் 5:16 அப் 9:36 அப் 10:22 அப் 16:1-3 அப் 22:12 கலா 5:22 கலா 5:23 பிலிப் 1:11 |