| 1 | ஆகிலும், ஆவியானவர் வெளிப்படையாய்ச் சொல்லுகிறபடி, பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தை விட்டு விலகிப்போவார்கள். | யோவா 16:13 அப் 13:2 அப் 28:25 1கொரி 12:11 1யோவா 2:18 வெளிப் 2:7 வெளிப் 2:11 வெளிப் 2:17 வெளிப் 2:29 வெளிப் 3:6 வெளிப் 3:13 வெளிப் 3:22 |
| 2 | விவாகம்பண்ணாதிருக்கவும், | 1இரா 13:18 1இரா 22:22 ஏசா 9:15 எரே 5:21 எரே 23:14 எரே 23:32 தானி 8:23-25 மத் 7:15 மத் 24:24 அப் 20:30 ரோம 16:18 எபே 4:14 2தீமோ 3:5 2பேது 2:1-3 வெளிப் 16:14 |
| 3 | விசுவாசிகளும் சத்தியத்தை அறிந்தவர்களும் ஸ்தோத்திரத்தோடே அநுபவிக்கும்படி தேவன் படைத்த போஜனபதார்த்தங்களை விலக்கவும் வேண்டுமென்று அந்தப் பொய்யர் கட்டளையிடுவார்கள். | தானி 11:37 1கொரி 7:28 1கொரி 7:36-39 எபிரெ 13:4 |
| 4 | தேவன் படைத்ததெல்லாம் நல்லதாயிருக்கிறது; ஸ்தோத்திரத்தோடே ஏற்றுக்கொள்ளப்படுமாகில் ஒன்றும் தள்ளப்படத்தக்கதல்ல. | ஆதி 1:31 உபா 32:4 |
| 5 | அது தேவவசனத்தினாலும் ஜெபத்தினாலும் பரிசுத்தமாக்கப்படும். | 1தீமோ 4:3 லூக் 11:41 1கொரி 7:14 தீத் 1:15 |
| 6 | இவைகளை நீ சகோதரருக்குப் போதித்துவந்தால், விசுவாசத்திற்குரிய வார்த்தைகளிலும் நீ அநுசரித்த நற்போதகத்திலும் தேறினவனாகி, இயேசுகிறிஸ்துவுக்கு நல்ல ஊழியக்காரனாயிருப்பாய். | அப் 20:31 அப் 20:35 ரோம 15:15 1கொரி 4:17 2தீமோ 1:6 2தீமோ 2:14 2பேது 1:12-15 2பேது 3:1 2பேது 3:2 யூதா 1:5 |
| 7 | சீர்கேடும் கிழவிகள் பேச்சுமாயிருக்கிற கட்டுக்கதைகளுக்கு விலகி, தேவபக்திக்கேதுவாக முயற்சிபண்ணு. | 1தீமோ 1:4 1தீமோ 6:20 2தீமோ 2:16 2தீமோ 2:23 2தீமோ 4:4 தீத் 1:14 தீத் 3:9 |
| 8 | சரீரமுயற்சி அற்பபிரயோஜனமுள்ளது; தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது. | 1சாமு 15:22 சங் 50:7-15 ஏசா 1:11-16 ஏசா 58:3-5 எரே 6:20 ஆமோ 5:21-24 1கொரி 8:8 கொலோ 2:21-23 எபிரெ 13:9 |
| 9 | இந்த வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமாயிருக்கிறது. | 1தீமோ 1:15 |
| 10 | இதினிமித்தம் பிரயாசப்படுகிறோம், நிந்தையும் அடைகிறோம்; ஏனெனில் எல்லா மனுஷருக்கும், விசேஷமாக விசுவாசிகளுக்கும் இரட்சகராகிய ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறோம். | 1கொரி 4:9-13 2கொரி 4:8-10 2கொரி 6:3-10 2கொரி 11:23-27 2தீமோ 2:9 2தீமோ 2:10 2தீமோ 3:10-12 எபிரெ 11:26 எபிரெ 13:13 1பேது 4:14 1பேது 4:15 |
| 11 | இவைகளை நீ கட்டளையிட்டுப் போதித்துக்கொண்டிரு. | 1தீமோ 6:2 2தீமோ 4:2 தீத் 2:15 தீத் 3:8 |
| 12 | உன் இளமையைக்குறித்து ஒருவனும் உன்னை அசட்டைபண்ணாதபடிக்கு, நீ வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு. | மத் 18:10 1கொரி 16:10 1கொரி 16:11 2தீமோ 2:7 2தீமோ 2:15 2தீமோ 2:22 |
| 13 | நான் வருமளவும் வாசிக்கிறதிலும் புத்திசொல்லுகிறதிலும் உபதேசிக்கிறதிலும் ஜாக்கிரதையாயிரு. | 1தீமோ 3:14 1தீமோ 3:15 |
| 14 | மூப்பராகிய சங்கத்தார் உன்மேல் கைகளை வைத்தபோது தீர்க்கதரிசனத்தினால் உனக்கு அளிக்கப்பட்ட வரத்தைப்பற்றி அசதியாயிராதே. | மத் 25:14-30 லூக் 19:12-26 ரோம 12:6-8 1தெச 5:19 2தீமோ 1:6 1பேது 4:9-11 |
| 15 | நீ தேறுகிறது யாவருக்கும் விளங்கும்படி இவைகளையே சிந்தித்துக்கொண்டு, இவைகளிலே நிலைத்திரு. | யோசு 1:8 சங் 1:2 சங் 19:14 சங் 49:3 சங் 63:6 சங் 77:12 சங் 104:34 சங் 105:5 சங் 119:15 சங் 119:23 சங் 119:48 சங் 119:97 சங் 119:99 சங் 119:148 சங் 143:5 |
| 16 | உன்னைக்குறித்தும் உபதேசத்தைக்குறித்தும் எச்சரிக்கையாயிரு, இவைகளில் நிலைகொண்டிரு, இப்படிச் செய்வாயானால், உன்னையும் உன் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்ளுவாய். | 1நாளா 28:10 2நாளா 19:6 மாற் 13:9 லூக் 21:34 அப் 20:28 1கொரி 3:10 1கொரி 3:11 கொலோ 4:17 2தீமோ 4:2 தீத் 2:7 தீத் 2:15 எபிரெ 12:15 2யோவா 1:8 |