இணை வசன வேதாகமம்

Click to Subscribe

எபேசியர் 3

                   
புத்தகங்களைக் காட்டு
1இதினிமித்தம், பவுலாகிய நான் புறஜாதியாராயிருக்கிற உங்கள் பொருட்டுக் கிறிஸ்து இயேசுவினிமித்தம் கட்டுண்டவனாயிருக்கிறேன்.2கொரி 10:1 கலா 5:2
2உங்களுக்காக எனக்கு அளிக்கப்பட்டிருக்கிற தெய்வகிருபைக்குரிய நியமமும் இன்னதென்று கேட்டிருப்பீர்களே;எபே 4:21 கலா 1:13 கொலோ 1:4 கொலோ 1:6 2தீமோ 1:11
3அதென்னவெனில் புறஜாதிகள் சுவிசேஷத்தினாலே உடன்சுதந்தரருமாய், ஒரே சரீரத்திற்குள்ளானவர்களுமாய், கிறிஸ்துவுக்குள் அவர் பண்ணின வாக்குத்தத்தத்துக்கு உடன்பங்காளிகளுமாயிருக்கிறார்களென்கிற இந்த இரகசியத்தை அவர் எனக்கு வெளிப்படுத்தி அறிவித்தார்.எபே 1:17 அப் 22:17 அப் 22:21 அப் 23:9 அப் 26:15-19 1கொரி 2:9 1கொரி 2:10 கலா 1:12 கலா 1:16-19
4இதைக்குறித்து நான் முன்னமே சுருக்கமாய் எழுதியிருக்கிறேன்.மத் 13:11 1கொரி 2:6 1கொரி 2:7 1கொரி 13:2 2கொரி 11:6
5அதை நீங்கள் வாசிக்கையில் கிறிஸ்துவின் இரகசியத்தைக்குறித்து எனக்கு உண்டாயிருக்கிற அறிவை அறிந்துகொள்ளலாம்;எபே 3:9 மத் 13:17 லூக் 10:24 அப் 10:28 ரோம 16:25 2தீமோ 1:10 2தீமோ 1:11 தீத் 1:1-3 எபிரெ 11:39 எபிரெ 11:40 1பேது 1:10-12
6இந்த இரகசியம் இப்பொழுது அவருடைய பரிசுத்த அப்போஸ்தலருக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் ஆவியானவராலே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறதுபோல, முற்காலங்களில் மனுபுத்திரருக்கு அறிவிக்கப்படவில்லை.எபே 2:13-22 ரோம 8:15-17 கலா 3:26-29 கலா 4:5-7
7தேவனுடைய பலத்த சத்துவத்தால் எனக்கு அளிக்கப்பட்ட வரமாகிய அவருடைய கிருபையினாலே இந்தச் சுவிசேஷத்துக்கு ஊழியக்காரனானேன்.எபே 3:2 ரோம 15:16 2கொரி 3:6 2கொரி 4:1 கொலோ 1:23-25
8பரிசுத்தவான்களெல்லாரிலும் சிறியவனாகிய நான் கிறிஸ்துவினுடைய அளவற்ற ஐசுவரியத்தைப் புறஜாதிகளிடத்தில் சுவிசேஷமாய் அறிவிக்கிறதற்காக இந்தக் கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.நீதி 30:2 நீதி 30:3 ரோம 12:10 1கொரி 15:9 பிலிப் 2:3 1தீமோ 1:13 1தீமோ 1:15 1பேது 5:5 1பேது 5:6
9தேவன் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவுக்குள் கொண்டிருந்த அநாதி தீர்மானத்தின்படியே,மத் 10:27 மத் 28:19 மாற் 16:15 மாற் 16:16 லூக் 24:47 ரோம 16:26 கொலோ 1:23 2தீமோ 4:17 வெளிப் 14:6
10உன்னதங்களிலுள்ள துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும் அவருடைய அநந்த ஞானமானது சபையின் மூலமாய் இப்பொழுது தெரியவரும் பொருட்டாக,யாத் 25:17-22 சங் 103:20 சங் 148:1 சங் 148:2 ஏசா 6:2-4 எசே 3:12 1பேது 1:12 வெளிப் 5:9-14
11இயேசுகிறிஸ்துவைக்கொண்டு எல்லாவற்றையும் சிருஷ்டித்த தேவனுக்குள்ளே ஆதிகாலங்கள் முதல் மறைந்திருந்த இரகசியத்தினுடைய ஐக்கியம் இன்னதென்று, எல்லாருக்கும் வெளிப்படையாகக் காண்பிக்கிறதற்கு, இந்தக் கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.எபே 1:4 எபே 1:9 எபே 1:11 ஏசா 14:24-27 ஏசா 46:10 ஏசா 46:11 எரே 51:29 ரோம 8:28-30 ரோம 9:11 2தீமோ 1:9
12அவரைப் பற்றும் விசுவாசத்தால் அவருக்குள் நமக்குத் தைரியமும் திடநம்பிக்கையோடே தேவனிடத்தில் சேரும் சிலாக்கியமும் உண்டாயிருக்கிறது.எபே 2:18 யோவா 14:6 ரோம 5:2 எபிரெ 4:14-16 எபிரெ 10:19-22
13ஆகையால் உங்கள்நிமித்தம் நான் அநுபவிக்கிற உபத்திரவங்களினால் நீங்கள் சோர்ந்துபோகாதிருக்க வேண்டிக்கொள்ளுகிறேன்; அவைகள் உங்களுக்கு மகிமையாயிருக்கிறதே.உபா 20:3 ஏசா 40:30 ஏசா 40:31 செப் 3:16 அப் 14:22 கலா 6:9 2தெச 3:13 எபிரெ 12:3-5
14இதினிமித்தம் நான் பரலோகத்திலும் பூலோகத்திலுமுள்ள முழுக்குடும்பத்துக்கும் நாமகாரணராகிய,எபே 1:16-19 1இரா 8:54 1இரா 19:18 2நாளா 6:13 எஸ்றா 9:5 சங் 95:6 ஏசா 45:23 தானி 6:10 லூக் 22:41 அப் 7:60 அப் 9:40 அப் 20:36 அப் 21:5
15நம்முடைய கர்த்தாயிருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய பிதாவை நோக்கி முழங்கால்படியிட்டு,எபே 1:10 எபே 1:21 பிலிப் 2:9-11 கொலோ 1:20 வெளிப் 5:8-14 வெளிப் 7:4-12
16நீங்கள் அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பலப்படவும்,எபே 3:8 எபே 1:7 எபே 1:18 எபே 2:7 ரோம 9:23 பிலிப் 4:19 கொலோ 1:27
17விசுவாசத்தினாலே கிறிஸ்து உங்கள் இருதயங்களில் வாசமாயிருக்கவும், நீங்கள் அன்பிலே வேரூன்றி, நிலைபெற்றவர்களாகி,எபே 2:21 ஏசா 57:15 யோவா 6:56 யோவா 14:17 யோவா 14:23 யோவா 17:23 ரோம 8:9-11 2கொரி 6:16 கலா 2:20 கொலோ 1:27 1யோவா 4:4 1யோவா 4:16 வெளிப் 3:20
18சகல பரிசுத்தவான்களோடுங்கூடக் கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர்ந்து;எபே 3:19 எபே 1:18-23 யோபு 11:7-9 சங் 103:11 சங் 103:12 சங் 103:17 சங் 139:6 ஏசா 55:9 யோவா 15:13 கலா 2:20 கலா 3:13 பிலிப் 2:5-8 பிலிப் 3:8-10 1தீமோ 1:14-16 1தீமோ 3:16 தீத் 2:13 தீத் 2:14 வெளிப் 3:21
19அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாகவும், தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிறையப்படவும், அவர் தமது மகிமையினுடைய ஐசுவரியத்தின்படியே, உங்களுக்கு அநுக்கிரகம்பண்ணவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன்.எபே 3:18 எபே 5:2 எபே 5:25 யோவா 17:3 2கொரி 5:14 கலா 2:20 பிலிப் 2:5-12 கொலோ 1:10 2பேது 3:18 1யோவா 4:9-14
20நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,ஆதி 17:1 ஆதி 18:4 2நாளா 25:9 எரே 32:17 எரே 32:27 தானி 3:17 தானி 6:20 மத் 3:9 யோவா 10:29 யோவா 10:30 ரோம 4:21 ரோம 16:25 எபிரெ 7:25 எபிரெ 11:19 எபிரெ 13:20 எபிரெ 13:21 யாக் 4:12 யூதா 1:24
21சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.எபே 1:6 1நாளா 29:11 சங் 29:1 சங் 29:2 சங் 72:19 சங் 115:1 ஏசா 6:3 ஏசா 42:12 மத் 6:13 லூக் 2:14 ரோம 11:36 ரோம 16:27 கலா 1:5 பிலிப் 2:11 பிலிப் 4:20 2தீமோ 4:18 எபிரெ 13:21 1பேது 5:11 வெளிப் 4:9-11 வெளிப் 5:9-14 வெளிப் 7:12-17
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.