| 1 | இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரராகிய பவுலும் தீமோத்தேயும், பிலிப்பி பட்டணத்தில் கிறிஸ்து இயேசுவுக்குள்ளான பரிசுத்தவான்கள் அனைவருக்கும், கண்காணிகளுக்கும், உதவிக்காரருக்கும் எழுதுகிறதாவது: | ரோம 1:1 1கொரி 1:1 |
| 2 | நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. | ரோம 1:7 2கொரி 1:2 1பேது 1:2 |
| 3 | சுவிசேஷம் உங்களுக்கு அறிவிக்கப்பட்ட நாள்முதல் இதுவரைக்கும் நீங்கள் அதற்கு உடன்பட்டவர்களானபடியால், | ரோம 1:8 ரோம 1:9 ரோம 6:17 1கொரி 1:4 |
| 4 | நான் பண்ணுகிற ஒவ்வொரு விண்ணப்பத்திலும் உங்கள் அனைவருக்காகவும் எப்போதும் சந்தோஷத்தோடே விண்ணப்பம்பண்ணி, | பிலிப் 1:9-11 ரோம 1:9 எபே 1:14-23 1தெச 1:2 |
| 5 | உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள்பரியந்தம் முடிய நடத்திவருவாரென்று நம்பி, | பிலிப் 1:7 பிலிப் 4:14 அப் 16:15 ரோம 11:17 ரோம 12:13 ரோம 15:26 1கொரி 1:9 2கொரி 8:1 எபே 2:19-22 எபே 3:6 கொலோ 1:21-23 பிலேமோ 1:17 எபிரெ 3:14 2பேது 1:1 1யோவா 1:3 1யோவா 1:7 |
| 6 | நான் உங்களை நினைக்கிறபொழுதெல்லாம் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன். | 2கொரி 1:15 2கொரி 2:3 2கொரி 7:16 2கொரி 9:4 கலா 5:10 2தெச 3:4 பிலேமோ 1:21 எபிரெ 10:35 |
| 7 | என் கட்டுகளிலும், நான் சுவிசேஷத்திற்காக உத்தரவுசொல்லி அதைத் திடப்படுத்திவருகிறதிலும், நீங்கள் அனைவரும் எனக்கு அளிக்கப்பட்ட கிருபையில் பங்குள்ளவர்களானதால், உங்களை என் இருதயத்தில் தரித்துக்கொண்டிருக்கிறபடியினாலே, உங்களெல்லாரையுங்குறித்து நான் இப்படி நினைக்கிறது எனக்குத் தகுதியாயிருக்கிறது. | 1கொரி 13:7 1தெச 1:2-5 1தெச 5:5 எபிரெ 6:9 எபிரெ 6:10 |
| 8 | இயேசுகிறிஸ்துவின் உருக்கமான அன்பிலே உங்களெல்லார்மேலும் எவ்வளவோ வாஞ்சையாயிருக்கிறேன் என்பதற்கு தேவனே எனக்குச் சாட்சி. | ரோம 1:9 ரோம 9:1 கலா 1:20 1தெச 2:5 |
| 9 | மேலும், உத்தமமானவைகளை நீங்கள் ஒப்புக்கொள்ளத்தக்கதாக உங்கள் அன்பானது அறிவிலும் எல்லா உணர்விலும் இன்னும் அதிகமதிகமாய்ப் பெருகவும், | பிலிப் 3:15 பிலிப் 3:16 யோபு 17:9 நீதி 4:18 மத் 13:31-33 2கொரி 8:7 1தெச 3:12 1தெச 4:1 1தெச 4:9 1தெச 4:10 2தெச 1:3 பிலேமோ 1:6 1பேது 1:22 |
| 10 | தேவனுக்கு மகிமையும் துதியும் உண்டாகும்படி இயேசுகிறிஸ்துவினால் வருகிற நீதியின் கனிகளால் நிறைந்தவர்களாகி, | ஏசா 7:15 ஏசா 7:16 ஆமோ 5:14 ஆமோ 5:15 மீகா 3:2 யோவா 3:20 ரோம 2:18 ரோம 7:16 ரோம 7:22 ரோம 8:7 ரோம 12:2 ரோம 12:9 |
| 11 | நீங்கள் கிறிஸ்துவின் நாளுக்கென்று துப்புரவானவர்களும் இடறலற்றவர்களுமாயிருக்கவும் வேண்டுதல் செய்கிறேன். | பிலிப் 4:17 சங் 1:3 சங் 92:12-14 ஏசா 5:2 லூக் 13:6-9 யோவா 15:2 யோவா 15:8 யோவா 15:16 ரோம 6:22 ரோம 15:28 2கொரி 9:10 கலா 5:22 கலா 5:23 எபே 5:9 கொலோ 1:6 கொலோ 1:10 எபிரெ 12:11 யாக் 3:17 யாக் 3:18 |
| 12 | சகோதரரே, எனக்குச் சம்பவித்தவைகள் சுவிசேஷம் பிரபலமாகும்படிக்கு ஏதுவாயிற்றென்று நீங்கள் அறிய மனதாயிருக்கிறேன். | அப் 21:28-36 அப் 22:1-30 அப் 28:1-31 |
| 13 | அரமனையெங்குமுள்ளவர்களுக்கும் மற்ற யாவருக்கும் என் கட்டுகள் கிறிஸ்துவுக்குள்ளான கட்டுகளென்று வெளியரங்கமாகி, | அப் 20:23 அப் 20:24 அப் 21:11-13 அப் 26:29 அப் 26:31 அப் 28:17 அப் 28:20 எபே 3:1 எபே 4:1 எபே 6:20 கொலோ 4:3-18 |
| 14 | சகோதரரில் அநேகர் என் கட்டுகளாலே கர்த்தருக்குள் திடன்கொண்டு பயமில்லாமல் திருவசனத்தைச் சொல்லும்படி அதிகமாய்த் துணிந்திருக்கிறார்கள். | பிலிப் 4:1 கொலோ 4:7 |
| 15 | சிலர் பொறாமையினாலும் விரோதத்தினாலும், சிலர் நல்மனதினாலும் கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறார்கள். | பிலிப் 1:16 பிலிப் 1:18 அப் 5:42 அப் 8:5 அப் 8:35 அப் 9:20 அப் 10:36 அப் 11:20 1கொரி 1:23 2கொரி 1:19 2கொரி 4:5 1தீமோ 3:16 |
| 16 | சிலர் என் கட்டுகளோடே உபத்திரவத்தையுங்கூட்ட நினைத்து, சுத்தமனதோடே கிறிஸ்துவை அறிவியாமல், விரோதத்தினாலே அறிவிக்கிறார்கள். | பிலிப் 1:10 2கொரி 2:17 2கொரி 4:1 2கொரி 4:2 |
| 17 | சுவிசேஷத்திற்காக நான் உத்தரவு சொல்ல ஏற்படுத்தப்பட்டவனென்று அறிந்து, சிலர் அன்பினாலே அறிவிக்கிறார்கள். | பிலிப் 1:7 ரோம 1:13-17 1கொரி 9:16 1கொரி 9:17 கலா 2:7 கலா 2:8 1தீமோ 2:7 2தீமோ 1:11 2தீமோ 1:12 2தீமோ 4:6 2தீமோ 4:7 லூக் 21:14 அப் 22:1 அப் 26:1 அப் 26:24 2தீமோ 4:16 |
| 18 | இதனாலென்ன? வஞ்சகத்தினாலாவது, உண்மையினாலாவது, எப்படியாவது, கிறிஸ்து அறிவிக்கப்படுகிறார்; அதனால் சந்தோஷப்படுகிறேன், இன்னமும் சந்தோஷப்படுவேன். | ரோம 3:9 ரோம 6:15 1கொரி 10:19 1கொரி 14:15 |
| 19 | அது உங்கள் வேண்டுதலினாலும் இயேசுகிறிஸ்துவினுடைய ஆவியின் உதவியினாலும் எனக்கு இரட்சிப்பாக முடியுமென்று அறிவேன். | ரோம 8:28 1கொரி 4:17 1பேது 1:7-9 |
| 20 | நான் ஒன்றிலும் வெட்கப்பட்டுப்போகாமல், எப்பொழுதும்போல இப்பொழுதும், மிகுந்த தைரியத்தோடே ஜீவனாலாகிலும், சாவினாலாகிலும், கிறிஸ்து என் சரீரத்தினாலே மகிமைப்படுவாரென்று எனக்கு உண்டாயிருக்கிற வாஞ்சைக்கும் நம்பிக்கைக்கும் தக்கதாய், அப்படி முடியும். | சங் 62:5 நீதி 10:28 நீதி 23:18 ரோம 8:19 |
| 21 | கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம். | பிலிப் 1:20 பிலிப் 2:21 1கொரி 1:30 கலா 6:14 கொலோ 3:4 |
| 22 | ஆகிலும் சரீரத்தில் பிழைத்திருக்கிறதினாலே என் கிரியைக்குப் பலனுண்டாயிருப்பதால், நான் தெரிந்துகொள்ளவேண்டியது இன்னதென்று அறியேன். | பிலிப் 1:24 2கொரி 10:3 கலா 2:20 கொலோ 2:1 1பேது 4:2 |
| 23 | ஏனெனில் இவ்விரண்டினாலும் நான் நெருக்கப்படுகிறேன்; தேகத்தைவிட்டுப்பிரிந்து, கிறிஸ்துவுடனேகூட இருக்க எனக்கு ஆசையுண்டு, அது அதிக நன்மையாயிருக்கும்; | 2சாமு 24:14 1தெச 2:1 1தெச 2:13 லூக் 12:50 2கொரி 6:12 |
| 24 | அப்படியிருந்தும், நான் சரீரத்தில் தரித்திருப்பது உங்களுக்கு அதிக அவசியம். | பிலிப் 1:22 பிலிப் 1:25 பிலிப் 1:26 யோவா 16:7 அப் 20:29-31 |
| 25 | இந்த நிச்சயத்தைக்கொண்டிருந்து, நான் மறுபடியும் உங்களிடத்தில் வருகிறதினால் என்னைக்குறித்து உங்களுடைய மகிழ்ச்சி கிறிஸ்து இயேசுவுக்குள் பெருகும்படிக்கு, | பிலிப் 2:24 அப் 20:25 |
| 26 | உங்கள் விசுவாசத்தின் வர்த்தனைக்காகவும் சந்தோஷத்துக்காகவும் நான் பிழைத்து, உங்கள் அனைவரோடுங்கூட இருப்பேனென்று அறிந்திருக்கிறேன். | பிலிப் 2:16-18 பிலிப் 3:1 பிலிப் 3:3 பிலிப் 4:4 பிலிப் 4:10 உன்ன 5:1 யோவா 16:22 யோவா 16:24 2கொரி 1:14 2கொரி 5:12 2கொரி 7:6 |
| 27 | நான் வந்து உங்களைக் கண்டாலும், நான் வராமலிருந்தாலும், நீங்கள் ஒரே ஆவியிலே உறுதியாய் நின்று, ஒரே ஆத்துமாவினாலே சுவிசேஷத்தின் விசுவாசத்திற்காகக் கூடப்போராடி, எதிர்க்கிறவர்களால் ஒன்றிலும் மருளாதிருக்கிறீர்களென்று உங்களைக்குறித்து நான் கேள்விப்படும்படி, எவ்விதத்திலும் நீங்கள் கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குப் பாத்திரராகமாத்திரம் நடந்துகொள்ளுங்கள். | பிலிப் 3:18-21 எபே 4:1 கொலோ 1:10 1தெச 2:11 1தெச 2:12 1தெச 4:1 தீத் 2:10 2பேது 1:4-9 2பேது 3:11 2பேது 3:14 |
| 28 | நீங்கள் மருளாதிருக்கிறது அவர்கள் கெட்டுப்போகிறதற்கும், நீங்கள் இரட்சிக்கப்படுகிறதற்கும் அத்தாட்சியாயிருக்கிறது; இதுவும் தேவனுடைய செயலே. | ஏசா 51:7 ஏசா 51:12 மத் 10:28 லூக் 12:4-7 லூக் 21:12-19 அப் 4:19-31 அப் 5:40-42 1தெச 2:2 2தீமோ 1:7 2தீமோ 1:8 எபிரெ 13:6 வெளிப் 2:10 |
| 29 | ஏனெனில் கிறிஸ்துவினிடத்தில் விசுவாசிக்கிறதற்குமாத்திரமல்ல, அவர்நிமித்தமாகப் பாடுபடுகிறதற்கும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது. | அப் 5:41 ரோம 5:3 யாக் 1:2 1பேது 4:13 |
| 30 | நீங்கள் என்னிடத்திலே கண்டதும் எனக்கு உண்டென்று இப்பொழுது கேள்விப்படுகிறதுமான போராட்டமே உங்களுக்கும் உண்டு. | யோவா 16:33 ரோம 8:35-37 1கொரி 4:9-14 1கொரி 15:30-32 எபே 6:11-18 கொலோ 2:1 1தெச 2:14 1தெச 2:15 1தெச 3:2-4 2தீமோ 2:10-12 2தீமோ 4:7 எபிரெ 10:32 எபிரெ 10:33 எபிரெ 12:4 வெளிப் 2:10 வெளிப் 2:11 வெளிப் 12:11 |