இணை வசன வேதாகமம்

Click to Subscribe

பிலிப்பியர் 2

                   
புத்தகங்களைக் காட்டு
1ஆதலால் கிறிஸ்துவுக்குள் யாதொரு ஆறுதலும், அன்பினாலே யாதொரு தேறுதலும், ஆவியின் யாதொரு ஐக்கியமும், யாதொரு உருக்கமான பட்சமும் இரக்கங்களும் உண்டானால்,பிலிப் 3:3 லூக் 2:10 லூக் 2:11 லூக் 2:25 யோவா 14:18 யோவா 14:27 யோவா 15:11 யோவா 16:22-24 யோவா 17:13 ரோம 5:1 ரோம 5:2 ரோம 15:12 ரோம 15:13 1கொரி 15:31 2கொரி 1:5 2கொரி 1:6 2கொரி 2:14 2தெச 2:16 2தெச 2:17 எபிரெ 6:18 1பேது 1:6-8
2நீங்கள் ஏக சிந்தையும் ஏக அன்புமுள்ளவர்களாயிருந்து, இசைந்த ஆத்துமாக்களாய் ஒன்றையே சிந்தித்து, என் சந்தோஷத்தை நிறைவாக்குங்கள்.பிலிப் 2:16 பிலிப் 1:4 பிலிப் 1:26 பிலிப் 1:27 யோவா 3:29 2கொரி 2:3 2கொரி 7:7 கொலோ 2:5 1தெச 2:19 1தெச 2:20 1தெச 3:6-10 2தெச 2:13 2தீமோ 1:4 பிலேமோ 1:20 1யோவா 1:3 1யோவா 1:4 2யோவா 1:4 3யோவா 1:4
3ஒன்றையும் வாதினாலாவது வீண்பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்.பிலிப் 2:14 பிலிப் 1:15 பிலிப் 1:16 நீதி 13:10 ரோம 13:13 1கொரி 3:3 2கொரி 12:20 கலா 5:15 கலா 5:20 கலா 5:21 கலா 5:26 கொலோ 3:8 1தீமோ 6:4 யாக் 3:14-16 யாக் 4:5 யாக் 4:6 1பேது 2:1 1பேது 2:2
4அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக.மத் 18:6 ரோம 12:15 ரோம 14:19-22 ரோம 15:1 1கொரி 8:9-13 1கொரி 10:24 1கொரி 10:32 1கொரி 10:33 1கொரி 12:22-26 1கொரி 13:4 1கொரி 13:5 2கொரி 6:3 2கொரி 11:29 யாக் 2:8
5கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது;மத் 11:29 மத் 20:26-28 லூக் 22:27 யோவா 13:14 யோவா 13:15 அப் 10:38 அப் 20:35 ரோம 14:15 ரோம 15:3 ரோம 15:5 1கொரி 10:33 1கொரி 11:1 எபே 5:2 1பேது 2:21 1பேது 4:1 1யோவா 2:6
6அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்,ஏசா 7:14 ஏசா 8:8 ஏசா 9:6 எரே 23:6 மீகா 5:2 மத் 1:23 யோவா 1:1 யோவா 1:2 யோவா 1:18 யோவா 17:5 ரோம 9:5 2கொரி 4:4 கொலோ 1:15 கொலோ 1:16 1தீமோ 1:17 1தீமோ 3:16 தீத் 2:13 எபிரெ 1:3 எபிரெ 1:6 எபிரெ 1:8 எபிரெ 13:8
7தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்.சங் 22:6 ஏசா 49:7 ஏசா 50:5 ஏசா 50:6 ஏசா 52:14 ஏசா 53:2 ஏசா 53:3 தானி 9:26 சகரி 9:9 மாற் 9:12 ரோம 15:3 2கொரி 8:9 எபிரெ 2:9-18 எபிரெ 12:2 எபிரெ 13:3
8அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.மத் 17:2 மாற் 9:2 மாற் 9:3 லூக் 9:29
9ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி,ஆதி 3:15 சங் 2:6-12 சங் 8:5-8 சங் 45:6 சங் 45:7 சங் 69:29 சங் 69:30 சங் 72:17-19 சங் 91:14 சங் 110:1 சங் 110:5 ஏசா 9:7 ஏசா 49:6-8 ஏசா 52:13 ஏசா 53:12 தானி 2:44 தானி 2:45 தானி 7:14 மத் 11:27 மத் 28:18 லூக் 10:22 யோவா 3:35 யோவா 3:36 யோவா 5:22-27 யோவா 13:3 யோவா 17:1-3 யோவா 17:5-3 அப் 2:32-36 அப் 5:31 ரோம 14:9-11 1கொரி 15:24-27 எபிரெ 2:9 எபிரெ 12:2 2பேது 1:17 வெளிப் 1:5 வெளிப் 3:21 வெளிப் 5:12 வெளிப் 11:15 வெளிப் 19:16
10இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும்,ஆதி 41:43 ஏசா 45:23-25 மத் 27:29 மத் 28:18 ரோம 11:4 ரோம 14:10 ரோம 14:11 எபே 3:14 எபிரெ 1:6 வெளிப் 4:10 வெளிப் 5:13 வெளிப் 5:14
11பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.சங் 18:49 மத் 10:32 யோவா 9:22 யோவா 12:42 ரோம 10:9 ரோம 15:9 1யோவா 4:2 1யோவா 4:15 2யோவா 1:7 வெளிப் 3:5
12ஆதலால், எனக்குப் பிரியமானவர்களே, நீங்கள் எப்பொழுதும் கீழ்ப்படிகிறபடியே, நான் உங்களுக்குச் சமீபமாயிருக்கும்பொழுது மாத்திரமல்ல, நான் தூரமாயிருக்கிற இப்பொழுதும், அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்.பிலிப் 4:1 1கொரி 4:14 1பேது 2:11
13ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்.2நாளா 30:12 ஏசா 26:12 எரே 31:33 எரே 32:38 யோவா 3:27 அப் 11:21 2கொரி 3:5 எபிரெ 13:21 யாக் 1:16-18
14நான் வீணாக ஓடினதும் வீணாகப் பிரயாசப்பட்டதுமில்லையென்கிற மகிழ்ச்சி கிறிஸ்துவின் நாளில் எனக்கு உண்டாயிருப்பதற்கு, ஜீவவசனத்தைப் பிடித்துக்கொண்டு, உலகத்திலே சுடர்களைப்போலப் பிரகாசிக்கிற நீங்கள்,பிலிப் 2:3 யாத் 16:7 யாத் 16:8 எண் 14:27 சங் 106:25 மத் 20:11 மாற் 14:5 அப் 6:1 1கொரி 10:10 யாக் 5:9 1பேது 4:9 யூதா 1:16
15கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்ற பிள்ளைகளுமாயிருக்கும்படிக்கு,லூக் 1:6 1கொரி 1:8 எபே 5:27 1தெச 5:23 1தீமோ 3:2 1தீமோ 3:10 1தீமோ 5:7 தீத் 1:6 2பேது 3:14
16எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமலும் தர்க்கிப்பில்லாமலும் செய்யுங்கள்.பிலிப் 1:27 சங் 40:9 சங் 71:17 மத் 10:27 லூக் 12:8 ரோம 10:8-16 வெளிப் 22:17
17மேலும், உங்கள் விசுவாசமாகிய பலியின்மேலும் ஊழியத்தின்மேலும் நான் வார்க்கப்பட்டுப்போனாலும், நான் மகிழ்ந்து, உங்களனைவரோடுங்கூடச் சந்தோஷப்படுவேன்.பிலிப் 2:30 பிலிப் 1:20 அப் 20:24 அப் 21:13 2கொரி 12:15 1தெச 2:8 2தீமோ 4:6 1யோவா 3:16
18இதினிமித்தம் நீங்களும் மகிழ்ந்து, என்னோடேகூடச் சந்தோஷப்படுங்கள்.பிலிப் 3:1 பிலிப் 4:4 எபே 3:13 யாக் 1:2-4
19அன்றியும், நானும் உங்கள் செய்திகளை அறிந்து மனத்தேறுதல் அடையும்படிக்குச் சீக்கிரமாய்த் தீமோத்தேயுவை உங்களிடத்தில் அனுப்பலாமென்று கர்த்தராகிய இயேசுவுக்குள் நம்பியிருக்கிறேன்.பிலிப் 2:24 எரே 17:5 மத் 12:21 ரோம 15:12 எபே 1:13 2தீமோ 1:12 யாக் 4:15 1பேது 1:21
20அதேனென்றால், உங்கள் காரியங்களை உண்மையாய் விசாரிக்கிறதற்கு என்னைப்போல மனதுள்ளவன் அவனையன்றி வேறொருவனும் என்னிடத்திலில்லை.பிலிப் 2:2 பிலிப் 2:22 சங் 55:13 நீதி 31:29 யோவா 10:13 யோவா 12:6 1கொரி 1:10 1கொரி 1:11 கொலோ 4:11 1தீமோ 1:2 2தீமோ 1:5
21மற்றவர்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குரியவைகளைத் தேடாமல், தங்களுக்குரியவைகளையே தேடுகிறார்கள்.பிலிப் 2:4 ஏசா 56:11 மல்கி 1:10 மத் 16:24 லூக் 9:57-62 லூக் 14:26 அப் 13:13 அப் 15:38 1கொரி 10:24 1கொரி 10:33 1கொரி 13:5 2தீமோ 1:15 2தீமோ 3:2 2தீமோ 4:10 2தீமோ 4:16
22தகப்பனுக்குப் பிள்ளை ஊழியஞ்செய்வதுபோல, அவன் என்னுடனேகூட சுவிசேஷத்தினிமித்தம் ஊழியஞ்செய்தானென்று அவனுடைய உத்தமகுணத்தை அறிந்திருக்கிறீர்கள்.அப் 16:3-12 2கொரி 2:9 2கொரி 8:8 2கொரி 8:22 2கொரி 8:24
23ஆகையால் என் காரியங்கள் இன்னபடி நடக்கும் என்று நான் அறிந்தவுடனே அவனை அனுப்பலாமென்று நினைத்திருக்கிறேன்.1சாமு 22:3
24அன்றியும் நானே சீக்கிரத்தில் வருவேனென்று கர்த்தருக்குள் நம்பிக்கையாயிருக்கிறேன்.பிலிப் 2:19 பிலிப் 1:25 பிலிப் 1:26 ரோம 15:28 ரோம 15:29 பிலேமோ 1:22 2யோவா 1:12 3யோவா 1:14
25மேலும், என் சகோதரனும், உடன் வேளையாளும், உடன்சேவகனும், உங்கள் ஸ்தானாபதியும், என் குறைச்சலுக்கு உதவிசெய்தவனுமான எப்பாப்பிரோதீத்துவை உங்களிடத்தில் அனுப்பவேண்டுமென்று எண்ணினேன்.பிலிப் 4:18
26அவன் உங்கள் எல்லார்மேலும் வாஞ்சையுள்ளவனும், தான் வியாதிப்பட்டதை நீங்கள் கேள்விப்பட்டதினாலே மிகவும் வியாகுலப்படுகிறவனுமாயிருந்தான்.பிலிப் 1:3 பிலிப் 1:8 பிலிப் 4:1 2சாமு 13:39 ரோம 1:11 2கொரி 9:14
27அவன் வியாதிப்பட்டு மரணத்திற்குச் சமீபமாயிருந்தது மெய்தான். ஆகிலும், தேவன் அவனுக்கு இரங்கினார்; அவனுக்கு இரங்கினதுமல்லாமல், துக்கத்தின்மேல் துக்கம் எனக்கு உண்டாகாதபடிக்கு, எனக்கும் இரங்கினார்.பிலிப் 2:30 2இரா 20:1 சங் 107:18 பிரச 9:1 பிரச 9:2 யோவா 11:3 யோவா 11:4 அப் 9:37
28ஆகையால் நீங்கள் அவனை மறுபடியும் கண்டு சந்தோஷப்படவும், என் துக்கங்குறையவும், அவனை அதிசீக்கிரமாய் அனுப்பினேன்.பிலிப் 2:26 ஆதி 45:27 ஆதி 45:28 ஆதி 46:29 ஆதி 46:30 ஆதி 48:11 யோவா 16:22 அப் 20:38 2தீமோ 1:4
29ஆனபடியினாலே நீங்கள் கர்த்தருக்குள் மிகுந்த சந்தோஷத்தோடே அவனை ஏற்றுக்கொண்டு, இப்படிப்பட்டவர்களைக் கனமாய் எண்ணுங்கள்.மத் 10:40 மத் 10:41 லூக் 9:5 யோவா 13:20 ரோம 16:2 1கொரி 16:10 2கொரி 7:2 கொலோ 4:10 3யோவா 1:10
30ஏனெனில் நீங்கள் எனக்குச் செய்யவேண்டிய ஊழியத்திலே உங்கள் குறைவை நிறைவாக்கும்படிக்கு, அவன் தன் பிராணனையும் எண்ணாமல், கிறிஸ்துவின் ஊழியத்தினிமித்தம் மரணத்திற்குச் சமீபமாயிருந்தான்.1கொரி 15:53 1கொரி 16:10
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.