| 1 | மேலும், என் சகோதரரே, கர்த்தருக்குள் சந்தோஷப்படுங்கள். எழுதினவைகளையே எழுதுவது எனக்கு வருத்தமல்ல, அது உங்களுக்கு நலமாயிருக்கும். | பிலிப் 4:8 2கொரி 13:11 எபே 6:10 1தெச 4:1 1பேது 3:8 |
| 2 | நாய்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள், பொல்லாத வேலையாட்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள். சுன்னத்துக்காரருக்கு எச்சரிக்கையாயிருங்கள். | நீதி 26:11 ஏசா 56:10 ஏசா 56:11 மத் 7:6 மத் 7:15 மத் 24:10 கலா 5:15 2தீமோ 4:14 2தீமோ 4:15 2பேது 2:22 வெளிப் 22:15 |
| 3 | ஏனெனில் மாம்சத்தின்மேல் நம்பிக்கையாயிராமல், ஆவியினாலே தேவனுக்கு ஆராதனைசெய்து, கிறிஸ்து இயேசுவுக்குள் மேன்மைபாராட்டுகிற நாமே விருத்தசேதனமுள்ளவர்கள். | ஆதி 17:5-11 உபா 10:16 உபா 30:6 எரே 4:4 எரே 9:26 ரோம 2:25-29 ரோம 4:11 ரோம 4:12 கொலோ 2:11 |
| 4 | மாம்சத்தின்மேல் நம்பிக்கை வைக்கவேண்டுமானால் நானும் வைக்கலாம்; வேறொருவன் மாம்சத்தின்மேல் நம்பிக்கையாயிருக்க நினைத்தால் நான் அதிகமாய் அப்படிச் செய்யலாம். | 2கொரி 11:18-22 |
| 5 | நான் எட்டாம் நாளில் விருத்தசேதனமடைந்தவன், இஸ்ரவேல் வம்சத்தான், பென்யமீன் கோத்திரத்தான், எபிரெயரில் பிறந்த எபிரெயன், நியாயப்பிரமாணத்தின்படி பரிசேயன்; | ஆதி 17:12 லூக் 2:21 யோவா 7:21-24 |
| 6 | பக்திவைராக்கியத்தின்படி சபையைத் துன்பப்படுத்தினவன், நியாயப்பிரமாணத்திற்குரிய நீதியின்படி குற்றஞ்சாட்டப்படாதவன். | 2சாமு 21:2 2இரா 10:16 அப் 21:20 ரோம 10:2 கலா 1:13 கலா 1:14 |
| 7 | ஆகிலும், எனக்கு லாபமாயிருந்தவைகளெவைகளோ அவைகளைக் கிறிஸ்துவுக்காக நஷ்டமென்று எண்ணினேன். | பிலிப் 3:4-6 பிலிப் 3:8-10 ஆதி 19:17 ஆதி 19:26 யோபு 2:4 நீதி 13:8 நீதி 23:23 மத் 13:44-46 மத் 16:26 லூக் 14:26 லூக் 14:33 லூக் 16:8 லூக் 17:31-33 அப் 27:18 அப் 27:19 அப் 27:38 கலா 2:15 கலா 2:16 கலா 5:2-5 |
| 8 | அதுமாத்திரமல்ல, என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின்மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன். | எண் 14:30 சங் 126:6 லூக் 11:20 1கொரி 9:10 1யோவா 2:19 |
| 9 | நான் கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு, நியாயப்பிரமாணத்தினால் வருகிற சுயநீதியை உடையவனாயிராமல், கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினால் வருகிறதும் விசுவாசமூலமாய் தேவனால் உண்டாயிருக்கிறதுமான நீதியை உடையவனாயிருந்து, கிறிஸ்துவுக்குள் இருக்கிறவனென்று காணப்படும்படிக்கும், | ஆதி 7:23 உபா 19:3 உபா 19:4 எபிரெ 6:18 1பேது 3:19 1பேது 3:20 |
| 10 | இப்படி நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்கும், அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி, எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருப்பதற்குத் தகுதியாகும்படிக்கும், | பிலிப் 3:8 1யோவா 2:3 1யோவா 2:5 |
| 11 | அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன். | சங் 49:7 அப் 27:12 ரோம 11:14 1கொரி 9:22 1கொரி 9:27 2கொரி 11:3 1தெச 3:5 2தெச 2:3 |
| 12 | நான் அடைந்தாயிற்று, அல்லது முற்றும் தேறினவனானேன் என்று எண்ணாமல், கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடருகிறேன். | பிலிப் 3:13 பிலிப் 3:16 சங் 119:5 சங் 119:173-176 ரோம 7:19-24 கலா 5:17 1தீமோ 6:12 யாக் 3:2 |
| 13 | சகோதரரே, அதைப் பிடித்துக்கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை; ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, | பிலிப் 3:8 பிலிப் 3:12 பிலிப் 1:18-21 பிலிப் 4:11-13 |
| 14 | கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன். | லூக் 16:16 2கொரி 4:17 2கொரி 4:18 2கொரி 5:1 2தீமோ 4:7 2தீமோ 4:8 வெளிப் 3:21 |
| 15 | ஆகையால், நம்மில் தேறினவர்கள் யாவரும் இந்தச் சிந்தையாயிருக்கக்கடவோம்; எந்தக் காரியத்திலாவது நீங்கள் வேறே சிந்தையாயிருந்தால், அதையும் தேவன் உங்களுக்கு வெளிப்படுத்துவார். | ரோம 15:1 1கொரி 2:6 1கொரி 14:20 கொலோ 1:28 கொலோ 4:12 2தீமோ 3:17 எபிரெ 5:14 யாக் 1:4 1யோவா 2:5 |
| 16 | ஆகிலும் நாம் எதுவரையில் தேறியிருக்கிறோமோ, அதுமுதல் ஒரே ஒழுங்காய் நடந்துகொண்டு, ஒரே சிந்தையாயிருப்போமாக. | கலா 5:7 எபிரெ 10:38 எபிரெ 10:39 2பேது 2:10-20 வெளிப் 2:4 வெளிப் 2:5 வெளிப் 3:3 |
| 17 | சகோதரரே, நீங்கள் என்னோடேகூடப் பின்பற்றுகிறவர்களாகி, நாங்கள் உங்களுக்கு வழிகாட்டுகிறபடி நடக்கிறவர்களை மாதிரியாக நோக்குங்கள். | பிலிப் 4:9 1கொரி 4:16 1கொரி 10:32 1கொரி 10:33 1கொரி 11:1 1தெச 1:6 1தெச 2:10-14 2தெச 3:7 2தெச 3:9 1தீமோ 4:12 எபிரெ 13:7 1பேது 5:3 |
| 18 | ஏனெனில், அநேகர் வேறுவிதமாய் நடக்கிறார்கள்; அவர்கள் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைஞரென்று உங்களுக்கு அநேகந்தரம் சொன்னேன், இப்பொழுது கண்ணீரோடும் சொல்லுகிறேன். | ஏசா 8:11 தானி 4:37 கலா 2:14 எபே 4:17 2தெச 3:11 2பேது 2:10 யூதா 1:13 |
| 19 | அவர்களுடைய முடிவு அழிவு, அவர்களுடைய தேவன் வயிறு, அவர்களுடைய மகிமை அவர்களுடைய இலச்சையே, அவர்கள் பூமிக்கடுத்தவைகளைச் சிந்திக்கிறார்கள். | மத் 25:41 லூக் 12:45 லூக் 12:46 2கொரி 11:15 2தெச 2:8 2தெச 2:12 எபிரெ 6:6-8 2பேது 2:1 2பேது 2:3 2பேது 2:17 யூதா 1:4 யூதா 1:13 வெளிப் 19:20 வெளிப் 20:9 வெளிப் 20:10 வெளிப் 21:8 வெளிப் 22:15 |
| 20 | நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். | பிலிப் 1:18-21 சங் 16:11 சங் 17:15 சங் 73:24-26 நீதி 15:24 மத் 6:19-21 மத் 19:21 லூக் 12:21 லூக் 12:32-34 லூக் 14:14 2கொரி 4:18 2கொரி 5:1 2கொரி 5:8 எபே 2:6 எபே 2:19 கொலோ 1:5 கொலோ 3:1-3 எபிரெ 10:34 எபிரெ 10:35 1பேது 1:3 1பேது 1:4 |
| 21 | அவர் எல்லாவற்றையும் தமக்குக் கீழ்ப்படுத்திக்கொள்ளத்தக்க தம்முடைய வல்லமையான செயலின்படியே, நம்முடைய அற்பமான சரீரத்தைத் தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார். | 1கொரி 15:42-44 1கொரி 15:48-54 |