இணை வசன வேதாகமம்

Click to Subscribe

பிலிப்பியர் 4

                   
புத்தகங்களைக் காட்டு
1ஆதலால், எனக்குப் பிரியமும் வாஞ்சையுமான சகோதரரே, எனக்குச் சந்தோஷமும் கிரீடமுமானவர்களே, பிரியமானவர்களே, இந்தப்படியே கர்த்தருக்குள் நிலைத்திருங்கள்.பிலிப் 3:20 பிலிப் 3:21 2பேது 3:11-14
2கர்த்தருக்குள் ஒரே சிந்தையாயிருக்க எயோதியாளுக்கும் சிந்திகேயாளுக்கும் புத்திசொல்லுகிறேன்.பிலிப் 2:2 பிலிப் 2:3 பிலிப் 3:16 ஆதி 45:24 சங் 133:1-3 மாற் 9:50 ரோம 12:16-18 1கொரி 1:10 எபே 4:1-8 1தெச 5:13 எபிரெ 12:14 யாக் 3:17 யாக் 3:18 1பேது 3:8-11
3அன்றியும், என் உத்தம கூட்டாளியே, அவர்களுக்கு உதவியாயிருக்கும்படி உன்னையும் வேண்டிக்கொள்ளுகிறேன்; அவர்கள் கிலேமெந்தோடும் மற்ற என் உடன்வேலையாட்களோடுங்கூடச் சுவிசேஷவிஷயத்தில் என்னோடேகூட மிகவும் பிரயாசப்பட்டார்கள், அவர்களுடைய நாமங்கள் ஜீவபுஸ்தகத்தில் இருக்கிறது.பிலிப் 4:2 ரோம 12:1 பிலேமோ 1:8 பிலேமோ 1:9
4கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்.பிலிப் 3:1 ரோம 12:12
5உங்கள் சாந்தகுணம் எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக. கர்த்தர் சமீபமாயிருக்கிறார்.மத் 5:39-42 மத் 6:25 மத் 6:34 லூக் 6:29-35 லூக் 12:22-30 லூக் 21:34 1கொரி 6:7 1கொரி 7:29-31 1கொரி 8:13 1கொரி 9:25 தீத் 3:2 எபிரெ 13:5 எபிரெ 13:6 1பேது 1:11
6நீங்கள் ஒன்றுக்குங்கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.தானி 3:16 மத் 6:25-33 மத் 10:19 மத் 13:22 லூக் 10:41 லூக் 12:29 1கொரி 7:21 1கொரி 7:32 1பேது 5:7
7அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.பிலிப் 1:2 எண் 6:26 யோபு 22:21 யோபு 34:29 சங் 29:11 சங் 85:8 ஏசா 26:3 ஏசா 26:12 ஏசா 45:7 ஏசா 48:18 ஏசா 48:22 ஏசா 55:11 ஏசா 55:12 ஏசா 57:19-21 எரே 33:6 லூக் 1:79 லூக் 2:14 யோவா 14:27 யோவா 16:33 ரோம 1:7 ரோம 5:1 ரோம 8:6 ரோம 14:17 ரோம 15:13 2கொரி 13:11 கலா 5:22 கொலோ 3:15 2தெச 3:16 எபிரெ 13:20 வெளிப் 1:4
8கடைசியாக, சகோதரரே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள்.பிலிப் 3:1
9நீங்கள் என்னிடத்தில் கற்றும் அடைந்தும் கேட்டும் கண்டும் இருக்கிறவைகளெவைகளோ, அவைகளையே செய்யுங்கள்; அப்பொழுது சமாதானத்தின் தேவன் உங்களோடிருப்பார்.பிலிப் 3:17 1கொரி 10:31-33 1கொரி 11:1 1தெச 1:6 1தெச 2:2-12 1தெச 2:14-12 1தெச 4:1-8 2தெச 3:6-10
10என்னை விசாரிப்பதற்கு நீங்கள் இப்பொழுது மறுபடியும் மனமலர்ந்தபடியினாலே கர்த்தருக்குள் மிகவும் சந்தோஷப்பட்டேன்; இப்படிச் செய்ய எண்ணங்கொண்டிருந்தீர்கள், சமயம்மாத்திரம் உங்களுக்கு நேரிடவில்லை.பிலிப் 1:1 பிலிப் 1:3 2கொரி 7:6 2கொரி 7:7
11என் குறைச்சலினால் நான் இப்படிச் சொல்லுகிறதில்லை; ஏனெனில் நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன்.1கொரி 4:11 1கொரி 4:12 2கொரி 6:10 2கொரி 8:9 2கொரி 11:27
12தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன்.1கொரி 4:9-13 2கொரி 6:4-10 2கொரி 10:1 2கொரி 10:10 2கொரி 11:7 2கொரி 11:27 2கொரி 12:7-10
13என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு.யோவா 15:4 யோவா 15:5 யோவா 15:7 2கொரி 3:4 2கொரி 3:5
14ஆகிலும் நீங்கள் என் உபத்திரவத்தில் என்னோடே உடன்பட்டது நலமாயிருக்கிறது.1இரா 8:18 2நாளா 6:8 மத் 25:21 3யோவா 1:5-8
15மேலும், பிலிப்பியரே, சுவிசேஷத்தின் ஆரம்பத்திலே நான் மக்கெதோனியாவிலிருந்து புறப்பட்டபோது, கொடுக்கல் வாங்கல் காரியத்தில் நீங்கள்மாத்திரம் எனக்கு உடன்பட்டதேயல்லாமல், வேறொரு சபையும் உடன்படவில்லை என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.2இரா 5:16 2இரா 5:20 2கொரி 11:8-12 2கொரி 12:11-15
16நான் தெசலோனிக்கேயிலிருந்தபோதும், என் குறைச்சலை நீக்கும்படி நீங்கள் இரண்டொருதரம் அனுப்பினீர்கள்.1தெச 2:9
17உபகாரத்தை நான் நாடாமல், உங்கள் கணக்குக்குப் பலன் பெருகும்படியே நாடுகிறேன்.பிலிப் 4:11 மல்கி 1:10 அப் 20:33 அப் 20:34 1கொரி 9:12-15 2கொரி 11:16 1தெச 2:5 1தீமோ 3:3 1தீமோ 6:10 தீத் 1:7 1பேது 5:2 2பேது 2:3 2பேது 2:15 யூதா 1:11
18எல்லாம் எனக்குக் கிடைத்தது, பரிபூரணமும் உண்டாயிருக்கிறது; உங்களால் அனுப்பப்பட்டவைகளைச் சுகந்த வாசனையும் தேவனுக்குப் பிரியமான உகந்தபலியுமாக எப்பாப்பிரோதீத்துவின் கையில் வரப்பற்றிக்கொண்டபடியால் நான் திருப்தியடைந்திருக்கிறேன்.பிலிப் 4:12 2தெச 1:3
19என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்.2சாமு 22:7 2நாளா 18:13 நெகே 5:19 தானி 6:22 மீகா 7:7 யோவா 20:17 யோவா 20:27 ரோம 1:8 2கொரி 12:21 பிலேமோ 1:4
20நம்முடைய பிதாவாகிய தேவனானவருக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென்.பிலிப் 1:11 சங் 72:19 சங் 115:1 மத் 6:9 மத் 6:13 ரோம 11:36 ரோம 16:27 கலா 1:5 எபே 3:21 1தீமோ 1:17 யூதா 1:25 வெளிப் 1:6 வெளிப் 4:9-11 வெளிப் 5:12 வெளிப் 7:12 வெளிப் 11:13 வெளிப் 14:7
21கிறிஸ்து இயேசுவுக்குள்ளான பரிசுத்தவான்கள் யாவருக்கும் வாழ்த்துதல் சொல்லுங்கள். என்னோடிருக்கிற சகோதரர்கள் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.ரோம 16:3-16
22பரிசுத்தவான்கள் அனைவரும், விசேஷமாக இராயனுடைய அரமனையிலுள்ளவர்களும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.ரோம 16:16 2கொரி 13:13 எபிரெ 13:24 1பேது 5:13 3யோவா 1:14
23நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.ரோம 16:20 ரோம 16:24 2கொரி 13:14
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.