| 1 | ஆனபடியினாலே, நீங்கள் மறுபடியும் அடிமைத்தனத்தின் நுகத்துக்குட்படாமல், கிறிஸ்து நமக்கு உண்டாக்கின சுயாதீன நிலைமையிலே நிலைகொண்டிருங்கள். | நீதி 23:23 1கொரி 15:58 1கொரி 16:13 எபே 6:14 பிலிப் 1:27 1தெச 3:8 2தெச 2:15 எபிரெ 3:6 எபிரெ 3:14 எபிரெ 4:14 எபிரெ 10:23 எபிரெ 10:35-39 யூதா 1:3 யூதா 1:20 யூதா 1:21 வெளிப் 2:25 வெளிப் 3:3 |
| 2 | இதோ, நீங்கள் விருத்தசேதனம்பண்ணிக்கொண்டால் கிறிஸ்துவினால் உங்களுக்கு ஒரு பிரயோஜனமுமிராது என்று பவுலாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். | 1கொரி 16:21 2கொரி 10:1 1தெச 2:18 பிலேமோ 1:9 |
| 3 | மேலும், விருத்தசேதனம்பண்ணிக்கொள்ளுகிற எந்த மனுஷனும் நியாயப்பிரமாணம் முழுவதையும் நிறைவேற்றக் கடனாளியாயிருக்கிறான் என்று மறுபடியும் அப்படிப்பட்டவனுக்குச் சாட்சியாகச் சொல்லுகிறேன். | உபா 8:19 உபா 31:21 நெகே 9:29 நெகே 9:30 நெகே 9:34 லூக் 16:28 அப் 2:40 அப் 20:21 எபே 4:17 1தெச 4:6 1யோவா 4:14 |
| 4 | நியாயப்பிரமாணத்தினால் நீதிமான்களாக விரும்புகிற நீங்கள் யாவரும் கிறிஸ்துவைவிட்டுப் பிரிந்து கிருபையினின்று விழுந்தீர்கள். | கலா 5:2 கலா 2:21 ரோம 9:31 ரோம 9:32 ரோம 10:3-5 |
| 5 | நாங்களோ நீதிகிடைக்குமென்று ஆவியைக்கொண்டு விசுவாசத்தினால் நம்பிக்கையோடே காத்திருக்கிறோம். | யோவா 16:8-15 எபே 2:18 |
| 6 | கிறிஸ்து இயேசுவினிடத்தில் விருத்தசேதனமும் விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுக்கும் உதவாது, அன்பினால் கிரியை செய்கிற விசுவாசமே உதவும். | கலா 5:2 கலா 5:3 கலா 3:28 கலா 6:15 ரோம 2:25-29 ரோம 3:29-31 1கொரி 7:19 கொலோ 3:11 |
| 7 | நீங்கள் நன்றாய் ஓடினீர்களே; சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமற்போக உங்களுக்குத் தடைசெய்தவன் யார்? | மத் 13:21 1கொரி 9:24 எபிரெ 12:1 |
| 8 | இந்தப் போதனை உங்களை அழைத்தவரால் உண்டானதல்ல. | கலா 1:6 |
| 9 | புளிப்புள்ள கொஞ்சமாவானது பிசைந்த மாவனைத்தையும் உப்பப்பண்ணும். | மத் 23:33 மத் 16:6-12 மாற் 8:15 லூக் 12:1 லூக் 13:21 1கொரி 5:6 1கொரி 5:7 1கொரி 15:33 2தீமோ 2:17 |
| 10 | நீங்கள் வேறுவிதமாய்ச் சிந்திக்கமாட்டீர்களென்று நான் கர்த்தருக்குள் உங்களைக்குறித்து நம்பிக்கையாயிருக்கிறேன்; உங்களைக் கலக்குகிறவன் எப்படிப்பட்டவனாயிருந்தாலும் தனக்கேற்ற ஆக்கினையை அடைவான். | கலா 4:11 கலா 4:20 2கொரி 1:15 2கொரி 2:3 2கொரி 7:16 2கொரி 8:22 2தெச 3:4 பிலேமோ 1:21 |
| 11 | சகோதரரே, இதுவரைக்கும் நான் விருத்தசேதனத்தைப் பிரசங்கிக்கிறவனாயிருந்தால், இதுவரைக்கும் என்னத்திற்குத் துன்பப்படுகிறேன்? அப்படியானால் சிலுவையைப்பற்றி வரும் இடறல் ஒழிந்திருக்குமே. | கலா 2:3 அப் 16:3 |
| 12 | உங்களைக் கலக்குகிறவர்கள் தறிப்புண்டுபோனால் நலமாயிருக்கும். | கலா 5:10 கலா 1:8 கலா 1:9 ஆதி 17:14 யாத் 12:15 யாத் 30:33 லேவி 22:3 யோசு 7:12 யோசு 7:25 யோவா 9:34 அப் 5:5 அப் 5:9 1கொரி 5:13 தீத் 3:10 |
| 13 | சகோதரரே, நீங்கள் சுயாதீனத்திற்கு அழைக்கப்பட்டீர்கள், இந்தச் சுயாதீனத்தை நீங்கள் மாம்சத்திற்கேதுவாக அநுசரியாமல், அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியஞ்செய்யுங்கள். | கலா 5:1 கலா 4:5-7 கலா 4:22-31 ஏசா 61:1 லூக் 4:18 யோவா 8:32-36 ரோம 6:18-22 |
| 14 | உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக, என்கிற இந்த ஒரே வார்த்தையிலே நியாயப்பிரமாணம் முழுவதும் நிறைவேறும். | மத் 7:12 மத் 19:18 மத் 19:19 மத் 22:39 மத் 22:40 ரோம 13:8-10 யாக் 2:8-11 |
| 15 | நீங்கள் ஒருவரையொருவர் கடித்துப்பட்சித்தீர்களானால் அழிவீர்கள், அப்படி ஒருவராலொருவர் அழிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். | கலா 5:26 2சாமு 2:26 2சாமு 2:27 ஏசா 9:20 ஏசா 9:21 ஏசா 11:5-9 ஏசா 11:13-9 1கொரி 3:3 1கொரி 6:6-8 2கொரி 11:20 2கொரி 12:20 யாக் 3:14-18 யாக் 4:1-3 |
| 16 | பின்னும் நான் சொல்லுகிறதென்னவென்றால், ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள். | கலா 3:17 1கொரி 7:29 |
| 17 | மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது; நீங்கள் செய்யவேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது. | சங் 19:12 சங் 19:13 சங் 51:1-5 சங் 51:10-12 சங் 65:3 சங் 119:5 சங் 119:20 சங் 119:24 சங் 119:25 சங் 119:32 சங் 119:35 சங் 119:40 சங் 119:133 சங் 119:159 சங் 119:176 பிரச 7:20 ஏசா 6:5 மத் 16:17 மத் 16:23 மத் 26:41 யோவா 3:6 ரோம 7:18 ரோம 7:21-25 ரோம 8:5 ரோம 8:6 ரோம 8:13 யாக் 4:5 யாக் 4:6 |
| 18 | ஆவியினால் நடத்தப்படுவீர்களானால், நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களல்ல. | கலா 5:16 கலா 5:25 கலா 4:6 சங் 25:4 சங் 25:5 சங் 25:8 சங் 25:9 சங் 143:8-10 நீதி 8:20 ஏசா 48:16-18 எசே 36:27 யோவா 16:13 ரோம 8:12 ரோம 8:14 2தீமோ 1:7 1யோவா 2:20-27 |
| 19 | மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன; அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், | கலா 5:13 கலா 5:17 கலா 6:8 சங் 17:4 யோவா 3:6 ரோம 7:5 ரோம 7:18 ரோம 7:25 ரோம 8:3 ரோம 8:5 ரோம 8:9 ரோம 8:13 1கொரி 3:3 1பேது 4:2 |
| 20 | விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், | எசே 22:18 உபா 18:10 1சாமு 15:23 1நாளா 10:13 1நாளா 10:14 2நாளா 33:6 அப் 8:9-11 அப் 16:16-19 |
| 21 | பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன். | உபா 21:20 லூக் 21:34 ரோம 13:13 1கொரி 5:11 1கொரி 6:10 எபே 5:18 1தெச 5:7 |
| 22 | ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், | கலா 5:16-18 சங் 1:3 சங் 92:14 ஓசி 14:8 மத் 12:33 லூக் 8:14 லூக் 8:15 லூக் 13:9 யோவா 15:2 யோவா 15:5 யோவா 15:16 ரோம 6:22 ரோம 7:4 எபே 5:9 பிலிப் 1:11 கொலோ 1:10 |
| 23 | சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை. | அப் 24:25 1கொரி 9:25 தீத் 1:8 தீத் 2:2 |
| 24 | கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள். | கலா 3:29 ரோம 8:9 1கொரி 3:23 1கொரி 15:23 2கொரி 10:7 |
| 25 | நாம் ஆவியினாலே பிழைத்திருந்தால், ஆவிக்கேற்றபடி நடக்கவும்கடவோம். | யோவா 6:63 ரோம 8:2 ரோம 8:10 1கொரி 15:45 2கொரி 3:6 1பேது 4:6 வெளிப் 11:11 |
| 26 | வீண்புகழ்ச்சியை விரும்பாமலும், ஒருவரையொருவர் கோபமூட்டாமலும், ஒருவர்மேல் ஒருவர் பொறாமைகொள்ளாமலும் இருக்கக்கடவோம். | லூக் 14:10 1கொரி 3:7 பிலிப் 2:1-3 யாக் 4:16 |