| 1 | தேவனுடைய சித்தத்தினாலே இயேசுகிறிஸ்துவினுடைய அப்போஸ்தலனாகிய பவுல், எபேசுவிலே கிறிஸ்து இயேசுவுக்குள் விசுவாசிகளாயிருக்கிற பரிசுத்தவான்களுக்கு எழுதுகிறதாவது: | ரோம 1:1 1கொரி 1:1 கலா 1:1 |
| 2 | நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், உங்களுக்குக் கிருபையும், சமாதானமும் உண்டாவதாக. | ரோம 1:7 2கொரி 1:2 கலா 1:3 தீத் 1:4 |
| 3 | நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார். | ஆதி 14:20 1நாளா 29:20 நெகே 9:5 சங் 72:19 தானி 4:34 லூக் 2:28 2கொரி 1:3 1பேது 1:3 வெளிப் 4:9-11 வெளிப் 5:9-14 |
| 4 | தமக்கு முன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு, அவர் உலகத்தோற்றத்துக்குமுன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே, | உபா 7:6 உபா 7:7 சங் 135:4 ஏசா 41:8 ஏசா 41:9 ஏசா 42:1 ஏசா 65:8-10 மத் 11:25 மத் 11:26 மத் 24:22 மத் 24:24 மத் 24:31 யோவா 10:16 அப் 13:48 அப் 18:10 ரோம 8:28 ரோம 8:30 ரோம 8:33 ரோம 9:23 ரோம 9:24 ரோம 11:5 ரோம 11:6 2தெச 2:13 2தெச 2:14 2தீமோ 2:10 தீத் 1:1 தீத் 1:2 யாக் 2:5 1பேது 1:2 1பேது 2:9 |
| 5 | பிரியமானவருக்குள் தாம் நமக்குத் தந்தருளின தம்முடைய கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக, | எபே 1:11 ரோம 8:29 ரோம 8:30 |
| 6 | தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசுகிறிஸ்து மூலமாய்த் தமக்குச் சுவிகாரபுத்திரராகும்படி முன்குறித்திருக்கிறார். | எபே 1:7 எபே 1:8 எபே 1:12 எபே 1:14 எபே 1:18 எபே 2:7 எபே 3:10 எபே 3:11 நீதி 16:4 ஏசா 43:21 ஏசா 61:3 ஏசா 61:11 எரே 33:9 லூக் 2:14 ரோம 9:23 ரோம 9:24 2கொரி 4:15 பிலிப் 1:11 பிலிப் 4:19 2தெச 1:8-10 1தீமோ 1:14-16 1பேது 2:9 1பேது 4:11 |
| 7 | அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது. | யோபு 33:24 சங் 130:7 தானி 9:24-26 சகரி 9:11 சகரி 13:1 சகரி 13:7 மத் 20:28 மத் 26:28 மாற் 14:24 அப் 20:28 ரோம 3:24 1கொரி 1:30 கொலோ 1:14 1தீமோ 2:6 தீத் 2:14 எபிரெ 9:12-15 எபிரெ 9:22-15 எபிரெ 10:4-12 1பேது 1:18 1பேது 1:19 1பேது 2:24 1பேது 3:18 1யோவா 2:2 1யோவா 4:10 வெளிப் 5:9 வெளிப் 14:4 |
| 8 | அந்தக் கிருபையை அவர் சகல ஞானத்தோடும் புத்தியோடும் எங்களிடத்தில் பெருகப்பண்ணினார். | ரோம 5:15 ரோம 5:20 ரோம 5:21 |
| 9 | காலங்கள் நிறைவேறும்போது விளங்கும் நியமத்தின்படி பரலோகத்திலிருக்கிறவைகளும் பூலோகத்திலிருக்கிறவைகளுமாகிய சகலமும் கிறிஸ்துவுக்குள்ளே கூட்டப்படவேண்டுமென்று, | எபே 1:17 எபே 1:18 எபே 3:3-9 மத் 13:11 ரோம 16:25-27 1கொரி 2:10-12 கலா 1:12 கலா 1:16 கொலோ 1:26-28 1தீமோ 3:16 |
| 10 | தமக்குள்ளே தீர்மானித்திருந்த தம்முடைய தயவுள்ள சித்தத்தின் இரகசியத்தை எங்களுக்கு அறிவித்தார். | ஏசா 2:2-4 தானி 2:44 தானி 9:24-27 ஆமோ 9:11 மீகா 4:1 மீகா 4:2 மல்கி 3:1 1கொரி 10:11 கலா 4:4 எபிரெ 1:2 எபிரெ 9:10 எபிரெ 11:40 1பேது 1:20 |
| 11 | மேலும் கிறிஸ்துவின்மேல் முன்னே நம்பிக்கையாயிருந்த நாங்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாயிருக்கும்படிக்கு, | எபே 1:14 சங் 37:18 அப் 20:32 அப் 26:18 ரோம 8:17 கலா 3:18 கொலோ 1:12 கொலோ 3:24 தீத் 3:7 யாக் 2:5 1பேது 1:4 1பேது 3:9 |
| 12 | தமது சித்தத்தின் ஆலோசனைக்குத்தக்கதாக எல்லாவற்றையும் நடப்பிக்கிற அவருடைய தீர்மானத்தின்படியே நாங்கள் முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்துவுக்குள் அவருடைய சுதந்தரமாகும்படி தெரிந்து கொள்ளப்பட்டோம். | எபே 1:6 எபே 1:14 எபே 2:7 எபே 3:21 2தெச 2:13 |
| 13 | நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள். | எபே 2:11 எபே 2:12 கொலோ 1:21-23 1பேது 2:10 |
| 14 | அவருக்குச் சொந்தமானவர்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாக மீட்கப்படுவார்கள் என்பதற்கு ஆவியானவர் நம்முடைய சுதந்தரத்தின் அச்சாரமாயிருக்கிறார். | ரோம 8:15-17 ரோம 8:23-17 2கொரி 1:22 2கொரி 5:5 கலா 4:6 |
| 15 | ஆனபடியினாலே, கர்த்தராகிய இயேசுவின்மேலுள்ள உங்கள் விசுவாசத்தையும், பரிசுத்தவான்களெல்லார்மேலுமுள்ள உங்கள் அன்பையுங்குறித்து நான் கேள்விப்பட்டு, | கொலோ 1:3 கொலோ 1:4 பிலேமோ 1:5 |
| 16 | இடைவிடாமல் உங்களுக்காக ஸ்தோத்திரம்பண்ணி, என் ஜெபங்களில் உங்களை நினைத்து, | ரோம 1:8 ரோம 1:9 1சாமு 7:8 1சாமு 12:23 பிலிப் 1:3 பிலிப் 1:4 கொலோ 1:3 1தெச 5:17 2தெச 1:3 |
| 17 | நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர் தம்மை நீங்கள் அறிந்துகொள்வதற்கான ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்குத் தந்தருளவேண்டுமென்றும், | எபே 1:3 யோவா 20:17 |
| 18 | தாம் நம்மை அழைத்ததினாலே நமக்கு உண்டாயிருக்கிற நம்பிக்கை இன்னதென்றும், பரிசுத்தவான்களிடத்தில் தமக்கு உண்டாயிருக்கிற சுதந்தரத்தினுடைய மகிமையின் ஐசுவரியம் இன்னதென்றும்; | எபே 5:8 சங் 119:18 ஏசா 6:10 ஏசா 29:10 ஏசா 29:18 ஏசா 32:3 ஏசா 42:7 மத் 13:15 லூக் 24:45 அப் 16:14 அப் 26:18 2கொரி 4:4 2கொரி 4:6 எபிரெ 10:32 |
| 19 | தாம் கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவரிடத்தில் நடப்பித்த தமது பலத்த சத்துவத்தின் வல்லமைப்படியே விசுவாசிக்கிறவர்களாகிய நம்மிடத்திலே காண்பிக்கும் தம்முடைய வல்லமையின் மகா மேன்மையான மகத்துவம் இன்னதென்றும், நீங்கள் அறியும்படிக்கு, அவர் உங்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்கவேண்டுமென்றும் வேண்டிக்கொள்ளுகிறேன். | எபே 2:10 எபே 3:7 எபே 3:20 சங் 110:2 சங் 110:3 ஏசா 53:1 யோவா 3:6 அப் 26:18 ரோம 1:16 2கொரி 4:7 2கொரி 5:17 பிலிப் 2:13 கொலோ 1:29 கொலோ 2:12 1தெச 1:5 2தெச 1:11 யாக் 1:18 |
| 20 | எல்லாத் துரைத்தனத்துக்கும், அதிகாரத்துக்கும், வல்லமைக்கும், கர்த்தத்துவத்துக்கும், இம்மையில் மாத்திரமல்ல மறுமையிலும் பேர்பெற்றிருக்கும் எல்லா நாமத்துக்கும் மேலாய் அவர் உயர்ந்திருக்கத்தக்கதாக, | எபே 2:5 எபே 2:6 ரோம 6:5-11 பிலிப் 3:10 1பேது 1:3 |
| 21 | அவரை உன்னதங்களில் தம்முடைய வலதுபாரிசத்தில் உட்காரும்படி செய்து, | பிலிப் 2:9 பிலிப் 2:10 கொலோ 2:10 எபிரெ 1:4 |
| 22 | எல்லாவற்றையும் அவருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தி, | ஆதி 3:15 சங் 8:6-8 சங் 91:13 1கொரி 15:25-27 எபிரெ 2:8 |
| 23 | எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவாகிய சரீரமான சபைக்கு அவரை எல்லாவற்றிற்கும் மேலான தலையாகத் தந்தருளினார். | எபே 2:16 எபே 4:4 எபே 4:12 எபே 5:23-32 ரோம 13:5 1கொரி 12:12-27 கொலோ 1:18 கொலோ 1:24 கொலோ 3:15 |