| 1 | சகோதரரே, ஒருவன் யாதொரு குற்றத்தில் அகப்பட்டால், ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் சாந்தமுள்ள ஆவியோடே அப்படிப்பட்டவனைச் சீர்பொருந்தப்பண்ணுங்கள்; நீயும் சோதிக்கப்படாதபடிக்கு உன்னைக்குறித்து எச்சரிக்கையாயிரு. | கலா 2:11-13 ஆதி 9:20-24 ஆதி 12:11-13 எண் 20:10-13 2சாமு 11:2-27 மத் 26:69 மத் 26:75 ரோம 14:1 ரோம 15:1 எபிரெ 12:13 யாக் 5:19 |
| 2 | ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, இப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள். | கலா 6:5 கலா 5:13 கலா 5:14 யாத் 23:5 எண் 11:11 எண் 11:12 உபா 1:12 ஏசா 58:6 மத் 8:17 மத் 11:29 மத் 11:30 லூக் 11:46 ரோம 15:1 1தெச 5:14 1பேது 2:24 |
| 3 | ஒருவன், தான் ஒன்றுமில்லாதிருந்தும், தன்னை ஒரு பொருட்டென்று எண்ணினால், தன்னைத்தானே வஞ்சிக்கிறவனாவான். | கலா 2:6 நீதி 25:14 நீதி 26:12 லூக் 18:11 ரோம 12:3 ரோம 12:16 1கொரி 3:18 1கொரி 8:2 |
| 4 | அவனவன் தன்தன் சுயகிரியையைச் சோதித்துப்பார்க்கக்கடவன்; அப்பொழுது மற்றவனைப் பார்க்கும்போதல்ல, தன்னையே பார்க்கும்போது மேன்மைபாராட்ட அவனுக்கு இடமுண்டாகும். | யோபு 13:15 சங் 26:2 1கொரி 11:28 2கொரி 13:5 |
| 5 | அவனவன் தன்தன் பாரத்தைச் சுமப்பானே. | ஏசா 3:10 ஏசா 3:11 எரே 17:10 எரே 32:19 எசே 18:4 மத் 16:27 ரோம 2:6-9 ரோம 14:10-12 1கொரி 3:8 1கொரி 4:5 2கொரி 5:10 2கொரி 5:11 வெளிப் 2:23 வெளிப் 20:12-15 வெளிப் 22:12 |
| 6 | மேலும், திருவசனத்தில் உபதேசிக்கப்படுகிறவன் உபதேசிக்கிறவனுக்குச் சகல நன்மைகளிலும் பகிர்ந்துகொடுக்கக்கடவன். | உபா 12:19 மத் 10:10 ரோம 15:27 1கொரி 9:9-14 1தீமோ 5:17 1தீமோ 5:18 |
| 7 | மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். | கலா 6:3 யோபு 15:31 எரே 37:9 ஒபதி 1:3 லூக் 21:8 1கொரி 3:18 1கொரி 6:9 1கொரி 15:33 எபே 5:6 2தெச 2:3 யாக் 1:22 யாக் 1:26 1யோவா 1:8 1யோவா 3:7 |
| 8 | தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான். | ரோம 6:13 ரோம 8:13 ரோம 13:14 யாக் 3:18 |
| 9 | நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம். | மல்கி 1:13 1கொரி 15:58 2தெச 3:13 எபிரெ 12:3 |
| 10 | ஆகையால் நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மைசெய்யக்கடவோம். | பிரச 9:10 யோவா 9:4 யோவா 12:35 எபே 5:16 பிலிப் 4:10 கொலோ 4:5 தீத் 2:14 |
| 11 | என் கையெழுத்தாய் எவ்வளவு எழுதினேனென்று பாருங்கள். | ரோம 16:22 1கொரி 16:21-23 |
| 12 | மாம்சத்தின்படி நல்வேஷமாய்க் காணப்பட விரும்புகிறவர்கள் எவர்களோ, அவர்கள் தாங்கள் கிறிஸ்துவினுடைய சிலுவையினிமித்தம் துன்பப்படாதபடிக்கே உங்களை விருத்தசேதனம் பண்ணிக்கொள்ளக் கட்டாயம்பண்ணுகிறார்கள். | கலா 6:13 மத் 6:2 மத் 6:5 மத் 6:16 மத் 23:5 மத் 23:28 லூக் 16:15 லூக் 20:47 யோவா 7:18 2கொரி 10:12 2கொரி 11:13 பிலிப் 1:15 பிலிப் 2:4 கொலோ 2:23 |
| 13 | விருத்தசேதனம் அடைந்திருக்கிற அவர்களும் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளாமலிருக்கிறார்கள்; அப்படியிருந்தும், அவர்கள் உங்கள் மாம்சத்தைக்குறித்து மேன்மைபாராட்டும்படிக்கு நீங்கள் விருத்தசேதனம்பண்ணிக்கொள்ளவேண்டுமென்று விரும்புகிறார்கள். | மத் 23:3 மத் 23:15 மத் 23:23 ரோம 2:17-24 ரோம 3:9-19 2பேது 2:19 |
| 14 | நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக்குறித்தேயல்லாமல் வேறொன்றையுங்குறித்து மேன்மைபாராட்டாதிருப்பேனாக; அவரால் உலகம் எனக்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறது, நானும் உலகத்திற்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறேன். | ரோம 3:4-6 பிலிப் 3:3 பிலிப் 3:7 பிலிப் 3:8 |
| 15 | கிறிஸ்து இயேசுவுக்குள் விருத்தசேதனமும் ஒன்றுமில்லை, விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுமில்லை; புது சிருஷ்டியே காரியம். | கலா 5:6 ரோம 8:1 2கொரி 5:17 |
| 16 | இந்தப் பிரமாணத்தின்படி நடந்துவருகிறவர்கள் எவர்களோ, அவர்களுக்கும், தேவனுடைய இஸ்ரவேலருக்கும், சமாதானமும் இரக்கமும் உண்டாயிருப்பதாக. | கலா 5:16 கலா 5:25 சங் 125:4 சங் 125:5 பிலிப் 3:16 |
| 17 | இனிமேல் ஒருவனும் எனக்கு வருத்தம் உண்டாக்காதிருப்பானாக; கர்த்தராகிய இயேசுவினுடைய அச்சடையாளங்களை நான் என்சரீரத்திலே தரித்துக்கொண்டிருக்கிறேன். | கலா 1:7 கலா 5:12 யோசு 7:25 அப் 15:24 எபிரெ 12:15 |
| 18 | சகோதரரே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் ஆவியுடனேகூட இருப்பதாக. ஆமென். | ரோம 16:20 ரோம 16:24 2கொரி 13:14 2தீமோ 4:22 பிலேமோ 1:25 வெளிப் 22:21 |