இணை வசன வேதாகமம்

Click to Subscribe

கலாத்தியர் 4

                   
புத்தகங்களைக் காட்டு
1பின்னும் நான் சொல்லுகிறதென்னவெனில், சுதந்தரவாளியானவன் எல்லாவற்றிற்கும் எஜமானாயிருந்தும், அவன் சிறுபிள்ளையாயிருக்குங்காலமளவும், அவனுக்கும் அடிமையானவனுக்கும் வித்தியாசமில்லை.கலா 4:23 கலா 4:29 ஆதி 24:2 ஆதி 24:3 2இரா 10:1 2இரா 10:2 2இரா 11:12 2இரா 12:2
2தகப்பன் குறித்த காலம்வரைக்கும் அவன் காரியக்காரருக்கும் வீட்டு விசாரணைக்காரருக்கும் கீழ்ப்பட்டிருக்கிறான்.
3அப்படியே நாமும் சிறுபிள்ளைகளாயிருந்த காலத்தில் இவ்வுலகத்தின் வழிபாடுகளுக்கு அடிமைப்பட்டவர்களாயிருந்தோம்.கலா 3:19 கலா 3:24 கலா 3:25
4நாம் புத்திரசுவிகாரத்தையடையும்படி நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களை மீட்டுக்கொள்ளத்தக்கதாக,ஆதி 49:10 தானி 9:24-26 மல்கி 3:1 மாற் 1:15 அப் 1:7 எபே 1:10 எபிரெ 9:10
5காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனை தேவன் அனுப்பினார்.கலா 4:21 கலா 3:13 மத் 20:28 லூக் 1:68 அப் 20:28 எபே 1:7 எபே 5:2 கொலோ 1:13-20 தீத் 2:14 எபிரெ 1:3 எபிரெ 9:12 எபிரெ 9:15 1பேது 1:18-20 1பேது 3:18 வெளிப் 5:9 வெளிப் 14:3
6மேலும் நீங்கள் புத்திரராயிருக்கிறபடியினால், அப்பா, பிதாவே! என்று கூப்பிடத்தக்கதாக தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார்.லூக் 11:13 யோவா 7:39 யோவா 14:16 ரோம 5:5 ரோம 8:15-17 2கொரி 1:22 எபே 1:13 எபே 4:30
7ஆகையால் இனி நீ அடிமையாயிராமல் புத்திரனாயிருக்கிறாய்; நீ புத்திரனேயானால், கிறிஸ்துமூலமாய் தேவனுடைய சுதந்தரனாயுமிருக்கிறாய்.கலா 4:1 கலா 4:2 கலா 4:5 கலா 4:6 கலா 4:31 கலா 5:1
8நீங்கள் தேவனை அறியாமலிருந்தபோது, சுபாவத்தின்படி தேவர்களல்லாதவர்களுக்கு அடிமைகளாயிருந்தீர்கள்.யாத் 5:2 எரே 10:25 யோவா 1:10 அப் 17:23 அப் 17:30 ரோம 1:28 1கொரி 1:21 எபே 2:11 எபே 2:12 எபே 4:18 1தெச 4:5 2தெச 1:8 1யோவா 3:1
9இப்பொழுதோ நீங்கள் தேவனை அறிந்திருக்க அல்லது தேவனாலே அறியப்பட்டிருக்க, பெலனற்றதும் வெறுமையானதுமான அவ்வழிபாடுகளுக்கு நீங்கள் மறுபடியும் திரும்பி, மறுபடியும் அவைகளுக்கு அடிமைப்படும்படி விரும்புகிறதெப்படி?1இரா 8:43 1நாளா 28:9 சங் 9:10 நீதி 2:5 எரே 31:34 ஆபகூ 2:14 மத் 11:27 யோவா 17:3 1கொரி 15:34 2கொரி 4:6 எபே 1:17 2பேது 2:20 1யோவா 2:3 1யோவா 2:4 1யோவா 5:20
10நாட்களையும், மாதங்களையும், காலங்களையும், வருஷங்களையும் பார்க்கிறீர்களே.லேவி 23:1-44 லேவி 25:1 லேவி 25:13 எண் 28:1-29 ரோம 14:5 கொலோ 2:16 கொலோ 2:17
11நான் உங்களுக்காகப் பிரயாசப்பட்டது வீணாய்ப்போயிற்றோ என்று உங்களைக்குறித்துப் பயந்திருக்கிறேன்.கலா 4:20 2கொரி 11:2 2கொரி 11:3 2கொரி 12:20 2கொரி 12:21
12சகோதரரே, என்னைப்போலாகுங்கள் என்று உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; நான் உங்களைப்போலுமானேனே. எனக்கு நீங்கள் அநியாயம் ஒன்றும் செய்யவில்லை.கலா 2:14 கலா 6:14 ஆதி 34:15 1இரா 22:4 அப் 21:21 1கொரி 9:20-23 பிலிப் 3:7 பிலிப் 3:8
13உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நான் சரீர பலவீனத்தோடு முதலாந்தரம் உங்களுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தேன்.1கொரி 2:3 2கொரி 10:10 2கொரி 11:6 2கொரி 11:30 2கொரி 12:7-10 2கொரி 13:4
14அப்படியிருந்தும், என் சரீரத்தில் உண்டாயிருக்கிற சோதனையை நீங்கள் அசட்டைபண்ணாமலும், அரோசியாமலும், தேவதூதனைப்போலவும், கிறிஸ்து இயேசுவைப்போலவும், என்னை ஏற்றுக்கொண்டீர்கள்.கலா 4:13 யோபு 12:5 சங் 119:141 பிரச 9:16 ஏசா 53:2 ஏசா 53:3 1கொரி 1:28 1கொரி 4:10 1தெச 4:8
15அப்பொழுது நீங்கள் கொண்டிருந்த ஆனந்தபாக்கியம் எங்கே? உங்கள் கண்களைப் பிடுங்கி எனக்குக் கொடுக்கக்கூடுமானால், அப்படியும் செய்திருப்பீர்கள் என்று உங்களுக்குச் சாட்சியாயிருக்கிறேன்.கலா 3:14 கலா 5:22 கலா 6:4 லூக் 8:13 ரோம 4:6-9 ரோம 5:2 ரோம 15:13
16நான் உங்களுக்குச் சத்தியத்தைச் சொன்னதினாலே உங்களுக்குச் சத்துருவானேனோ?கலா 3:1-4 1இரா 18:17 1இரா 18:18 1இரா 21:20 1இரா 22:8 1இரா 22:27 2நாளா 24:20-22 2நாளா 25:16 சங் 141:5 நீதி 9:8 யோவா 7:7 யோவா 8:45
17அவர்கள் உங்களை நாடி வைராக்கியம் பாராட்டுகிறார்கள்; ஆகிலும் நல்மனதோடே அப்படிச் செய்யாமல், நீங்கள் அவர்களை நாடி வைராக்கியம் பாராட்டும்பொருட்டு உங்களைப் புறம்பாக்க விரும்புகிறார்கள்.கலா 6:12 கலா 6:13 மத் 23:15 ரோம 10:2 ரோம 16:18 1கொரி 11:2 2கொரி 11:3 2கொரி 11:13-15 பிலிப் 2:21 2பேது 2:3 2பேது 2:18
18நல்விஷயத்தில் வைராக்கியம் பாராட்டுவது நல்லதுதான்; அதை நான் உங்களிடத்தில், இருக்கும்பொழுதுமாத்திரமல்ல, எப்பொழுதும் பாராட்டவேண்டும்.எண் 25:11-13 சங் 69:9 சங் 119:139 ஏசா 59:17 யோவா 2:17 1கொரி 15:58 தீத் 2:14 வெளிப் 3:19
19என் சிறுப்பிள்ளைகளே, கிறிஸ்து உங்ளிடத்தில் உருவாகுமளவும் உங்களுக்காக மறுபடியும் கர்ப்பவேதனைப்படுகிறேன்;1கொரி 4:14 1தீமோ 1:2 தீத் 1:4 பிலேமோ 1:10 பிலேமோ 1:19 யாக் 1:18 1யோவா 2:1 1யோவா 2:12 1யோவா 5:21
20உங்களைக்குறித்து நான் சந்தேகப்படுகிறபடியால், நான் இப்பொழுது உங்களிடத்தில் வந்திருந்து, வேறுவகையாகப் பேச விரும்புகிறேன்.1கொரி 4:19-21 1தெச 2:17 1தெச 2:18 1தெச 3:9
21நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிருக்க விரும்புகிற நீங்கள் நியாயப்பிரமாணம் சொல்லுகிறதைக் கேட்கவில்லையா? இதை எனக்குச் சொல்லுங்கள்.கலா 4:9 கலா 3:10 கலா 3:23 கலா 3:24 ரோம 6:14 ரோம 7:5 ரோம 7:6 ரோம 9:30-32 ரோம 10:3-10
22ஆபிரகாமுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள் என்று எழுதியிருக்கிறது; ஒருவன் அடிமையானவளிடத்தில் பிறந்தவன் ஒருவன் சுயாதீனமுள்ளவளிடத்தில் பிறந்தவன்.ஆதி 16:2-4 ஆதி 16:15-4 ஆதி 21:1 ஆதி 21:2 ஆதி 21:10
23அடிமையானவளிடத்தில் பிறந்தவன் மாம்சத்தின்படி பிறந்தான், சுயாதீனமுள்ளவளிடத்தில் பிறந்தவன் வாக்குத்தத்தத்தின்படி பிறந்தான்.ரோம 9:7 ரோம 9:8
24இவைகள் ஞான அர்த்தமுள்ளவைகள்; அந்த ஸ்திரீகள் இரண்டு ஏற்பாடுகளாம்; ஒன்று சீனாய்மலையிலுண்டான ஏற்பாடு, அது அடிமைத்தனத்திற்குள்ளாகப் பிள்ளைபெறுகிறது, அது ஆகார் என்பவள்தானே.எசே 20:49 ஓசி 11:10 மத் 13:35 1கொரி 10:11 எபிரெ 11:19
25ஆகார் என்பது அரபிதேசத்திலுள்ள சீனாய்மலை; அந்த ஆகார் இப்பொழுதிருக்கிற எருசலேமுக்குச் சரி; இவள் தன் பிள்ளைகளோடேகூட அடிமைப்பட்டிருக்கிறாளே.உபா 33:2 நியா 5:5 சங் 68:8 சங் 68:17 எபிரெ 12:18
26மேலான எருசலேமோ சுயாதீனமுள்ளவள், அவளே நம்மெல்லாருக்கும் தாயானவள்.சங் 87:3-6 ஏசா 2:2 ஏசா 2:3 ஏசா 52:9 ஏசா 62:1 ஏசா 62:2 ஏசா 65:18 ஏசா 66:10 யோவே 3:17 மீகா 4:1 மீகா 4:2 பிலிப் 3:20 எபிரெ 12:22 வெளிப் 3:12 வெளிப் 21:2 வெளிப் 21:10-27
27அந்தப்படி பிள்ளைபெறாத மலடியே, மகிழ்ந்திரு; கர்ப்பவேதனைப்படாதவளே, களிப்பாய் எழும்பி ஆர்ப்பரி; புருஷனுள்ளவளைப்பார்க்கிலும் அநாத ஸ்திரீக்கே அதிக பிள்ளைகளுண்டு என்று எழுதியிருக்கிறது.ஏசா 54:1-5
28சகோதரரே, நாம் ஈசாக்கைப்போல வாக்குத்தத்தத்துப் பிள்ளைகளாயிருக்கிறோம்.கலா 4:23 கலா 3:29 அப் 3:25 ரோம 4:13-18 ரோம 9:8 ரோம 9:9
29ஆகிலும் மாம்சத்தின்படி பிறந்தவன் ஆவியின்படி பிறந்தவனை அப்பொழுது துன்பப்படுத்தினதுபோல, இப்பொழுதும் நடந்துவருகிறது.ஆதி 21:9
30அதைக்குறித்து வேதம் என்ன சொல்லுகிறது: அடிமையானவளின் மகன் சுயாதீனமுள்ளவளுடைய குமாரனோடே சுதந்தரவாளியாயிருப்பதில்லை; ஆகையால் அடிமையானவளையும், அவளுடைய மகனையும் புறம்பே தள்ளு என்று சொல்லுகிறது.கலா 3:8 கலா 3:22 ரோம 4:3 ரோம 11:2 யாக் 4:5
31இப்படியிருக்க, சகோதரரே, நாம் அடிமையானவளுக்குப் பிள்ளைகளாயிராமல், சுயாதீனமுள்ளவளுக்கே பிள்ளைகளாயிருக்கிறோம்.கலா 5:1 கலா 5:13 யோவா 1:12 யோவா 1:13 யோவா 8:36 எபிரெ 2:14 எபிரெ 2:15 1யோவா 3:1 1யோவா 3:2
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.