| 1 | பதினாலு வருஷம் சென்றபின்பு, நான் தீத்துவைக் கூட்டிக்கொண்டு, பர்னபாவுடனேகூட மறுபடியும் எருசலேமுக்குப் போனேன். | கலா 1:18 |
| 2 | நான் தேவ அறிவிப்பினாலே போய், புறஜாதிகளிடத்தில் நான் பிரசங்கிக்கிற சுவிசேஷத்தை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தேன்; ஆயினும் நான் ஓடுகிறதும், ஓடினதும் வீணாகாதபடிக்கு எண்ணிக்கையுள்ளவர்களுக்கே தனிமையாய் விவரித்துக் காண்பித்தேன். | அப் 16:9 அப் 16:10 அப் 18:9 அப் 23:11 |
| 3 | ஆனாலும் என்னுடனேகூட இருந்த தீத்து கிரேக்கனாயிருந்தும் விருத்தசேதனம் பண்ணிக்கொள்ளும்படிக்குக் கட்டாயம்பண்ணப்படவில்லை. | கலா 5:2-6 அப் 15:24 அப் 16:3 1கொரி 9:20 1கொரி 9:21 |
| 4 | கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு உண்டான சுயாதீனத்தை உளவுபார்த்து நம்மை நியாயப்பிரமாணத்திற்கு அடிமைகளாக்கும்பொருட்டாகப் பக்கவழியாய் நுழைந்த கள்ளச் சகோதரர் நிமித்தம் அப்படியாயிற்று. | கலா 5:10 கலா 5:12 அப் 15:1 அப் 15:24 அப் 20:30 2கொரி 11:13 2கொரி 11:17 2கொரி 11:26 1யோவா 4:1 |
| 5 | சுவிசேஷத்தின் சத்தியம் உங்களிடத்திலே நிலைத்திருக்கும்படி, நாங்கள் ஒரு நாழிகையாகிலும் அவர்களுக்குக் கீழ்ப்படிந்து இணங்கவில்லை. | கலா 3:1 கலா 3:2 அப் 15:2 கொலோ 2:4-8 யூதா 1:3 |
| 6 | அல்லாமலும் எண்ணிக்கையுள்ளவர்களாயிருந்தவர்கள் எனக்கு ஒன்றும் போதிக்கவில்லை; அவர்கள் எப்படிப்பட்டவர்களாயிருந்தாலும் எனக்குக் கவலையில்லை. தேவன் மனுஷரிடத்தில் பட்சபாதமுள்ளவரல்லவே. | கலா 2:2 கலா 2:9 கலா 6:3 2கொரி 11:5 2கொரி 11:21-23 2கொரி 12:11 எபிரெ 13:7 எபிரெ 13:17 |
| 7 | அதுவுமல்லாமல், விருத்தசேதனமுள்ளவர்களுக்கு அப்போஸ்தலனாயிருக்கும்படி பேதுருவைப் பலப்படுத்தினவர் புறஜாதிகளுக்கு அப்போஸ்தலனாயிருக்கும்படி என்னையும் பலப்படுத்தினபடியால், | கலா 2:9 அப் 15:12 அப் 15:25 அப் 15:26 2பேது 3:15 |
| 8 | விருத்தசேதனமுள்ளவர்களுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி பேதுருவுக்குக் கையளிக்கப்பட்டதுபோல, விருத்தசேதனம் இல்லாதவர்களுக்குப் பிரசங்கிக்கும்படி அது எனக்கும் கையளிக்கப்பட்டதென்று அவர்கள் கண்டு; | அப் 1:8 அப் 2:14-41 அப் 3:12-26 அப் 4:4 அப் 5:12-16 அப் 8:17 |
| 9 | எனக்கு அளிக்கப்பட்ட கிருபையை அறிந்தபோது, தூண்களாக எண்ணப்பட்ட யாக்கோபும், கேபாவும், யோவானும், தாங்கள் விருத்தசேதனமுள்ளவர்களுக்கும், நாங்கள் புறஜாதிகளுக்கும் பிரசங்கிக்கும்படி, அந்நியோந்நிய ஐக்கியத்திற்கு அடையாளமாக எனக்கும் பர்னபாவுக்கும் வலதுகை கொடுத்து, | அப் 15:7 அப் 15:13 அப் 15:22-29 |
| 10 | தரித்திரரை நினைத்துக்கொள்ளும்படிக்குமாத்திரம் சொன்னார்கள்; அப்படிச் செய்யும்படி அதற்கு முன்னமே நானும் கருத்துள்ளவனாயிருந்தேன். | அப் 11:29 அப் 11:30 அப் 24:17 ரோம 15:25-27 1கொரி 16:1 1கொரி 16:2 2கொரி 8:1-9 எபிரெ 13:16 யாக் 2:15 யாக் 2:16 1யோவா 3:17 |
| 11 | மேலும், பேதுரு அந்தியோகியாவுக்கு வந்தபோது, அவன்மேல் குற்றஞ்சுமந்ததினால், நான் முகமுகமாய் அவனோடே எதிர்த்தேன். | அப் 15:30-35 |
| 12 | எப்படியெனில், யாக்கோபினிடத்திலிருந்து சிலர் வருகிறதற்குமுன்னே அவன் புறஜாதியாருடனே சாப்பிட்டான்; அவர்கள் வந்தபோதோ, விருத்தசேதனமுள்ளவர்களுக்குப் பயந்து, விலகிப் பிரிந்தான். | கலா 2:9 அப் 21:18-25 |
| 13 | மற்ற யூதரும் அவனுடனேகூட மாயம்பண்ணினார்கள்; அவர்களுடைய மாயத்தினாலே பர்னபாவும் இழுப்புண்டான். | ஆதி 12:11-13 ஆதி 26:6 ஆதி 26:7 ஆதி 27:24 பிரச 7:20 பிரச 10:1 1கொரி 5:6 1கொரி 8:9 1கொரி 15:33 |
| 14 | இப்படி அவர்கள் சுவிசேஷத்தின் சத்தியத்திற்கேற்றபடி சரியாய் நடவாததை நான் கண்டபோது, எல்லாருக்கும் முன்பாக நான் பேதுருவை நோக்கிச் சொன்னது என்னவென்றால்: யூதனாயிருக்கிற நீர் யூதர் முறைமையாக நடவாமல், புறஜாதியார் முறைமையாக நடந்து கொண்டிருக்க, புறஜாதியாரை யூதர் முறைமையாக நடக்கும்படி நீர் எப்படிக் கட்டாயம்பண்ணலாம்? | சங் 15:2 சங் 58:1 சங் 84:11 நீதி 2:7 நீதி 10:9 |
| 15 | புறஜாதியாரில் பிறந்த பாவிகளாயிராமல், சுபாவத்தின்படி யூதராயிருக்கிற நாமும் இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலேயன்றி, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே மனுஷன் நீதிமானாக்கப்படுவதில்லையென்று அறிந்து, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலல்ல, கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படும்படிக்குக் கிறிஸ்து இயேசுவின்மேல் விசுவாசிகளானோம். | மத் 3:7-9 யோவா 8:39-41 ரோம 4:16 எபே 2:3 |
| 16 | நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே எந்த மனுஷனும் நீதிமானாக்கப்படுவதில்லையே. | கலா 2:19 கலா 3:10-12 கலா 5:4 யோபு 9:2 யோபு 9:3 யோபு 9:29 யோபு 25:4 சங் 130:3 சங் 130:4 லூக் 10:25-29 அப் 13:38 அப் 13:39 ரோம 3:19 ரோம 3:20 ரோம 3:27 ரோம 3:28 ரோம 4:2 ரோம 4:13-15 பிலிப் 3:9 |
| 17 | கிறிஸ்துவுக்குள் நீதிமான்களாக்கப்படும்படி நாடுகிற நாமும் பாவிகளாகக் காணப்படுவோமானால், கிறிஸ்து பாவத்திற்குக் காரணரோ? அல்லவே. | ரோம 9:30-33 ரோம 11:7 |
| 18 | நான் இடித்துப்போட்டவைகளையே நான் மறுபடியும் கட்டினால், பிரமாணத்தை மீறுகிறவனென்று காணப்படுவேன். | கலா 2:4 கலா 2:5 கலா 2:12-16 கலா 2:21-16 கலா 4:9-12 கலா 5:11 ரோம 14:15 1கொரி 8:11 1கொரி 8:12 |
| 19 | தேவனுக்கென்று பிழைக்கும்படி நான் நியாயப்பிரமாணத்தினாலே நியாயப்பிரமாணத்திற்கு மரித்தேனே. | கலா 3:10 கலா 3:24 ரோம 3:19 ரோம 3:20 ரோம 4:15 ரோம 5:20 ரோம 7:7-11 ரோம 7:14-11 ரோம 7:22-11 ரோம 7:23-11 ரோம 8:2 ரோம 10:4 ரோம 10:5 |
| 20 | கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன். | கலா 5:24 கலா 6:14 ரோம 6:4-6 ரோம 8:3 ரோம 8:4 கொலோ 2:11-14 |
| 21 | நான் தேவனுடைய கிருபையை விருதாவாக்குகிறதில்லை; நீதியானது நியாயப்பிரமாணத்தினாலே வருமானால் கிறிஸ்து மரித்தது வீணாயிருக்குமே. | கலா 2:18 சங் 33:10 மாற் 7:9 ரோம 8:31 |