| 1 | மனுஷராலுமல்ல, மனுஷன் மூலமாயுமல்ல, இயேசுகிறிஸ்துவினாலும், அவரை மரித்தோரிலிருந்தெழுப்பின பிதாவாகிய தேவனாலும், அப்போஸ்தலனாயிருக்கிற பவுலாகிய நானும், | ரோம 1:1 1கொரி 1:1 |
| 2 | என்னுடனேகூட இருக்கிற சகோதரரெல்லாரும், கலாத்தியா நாட்டிலுள்ள சபைகளுக்கு எழுதுகிறதாவது: | பிலிப் 2:22 பிலிப் 4:21 |
| 3 | பிதாவாகிய தேவனாலும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக; | ரோம 1:7-15 1கொரி 1:3 2கொரி 1:2 2கொரி 13:14 எபே 1:2 பிலிப் 1:2 கொலோ 1:2 1தெச 1:1 2தெச 1:2 2யோவா 1:3 |
| 4 | அவர் நம்மை இப்பொழுதிருக்கிற பொல்லாத பிரபஞ்சத்தினின்று விடுவிக்கும்படி நம்முடைய பிதாவாகிய தேவனுடைய சித்தத்தின்படியே நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்; | கலா 2:20 மத் 20:28 மத் 26:28 மாற் 10:45 லூக் 22:19 யோவா 10:11 யோவா 10:17 யோவா 10:18 ரோம 4:25 எபே 5:2 1தீமோ 2:6 தீத் 2:14 எபிரெ 9:14 எபிரெ 10:9 எபிரெ 10:10 1பேது 2:24 1பேது 3:18 1யோவா 2:2 1யோவா 3:16 வெளிப் 1:5 |
| 5 | அவருக்கு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். | 1நாளா 29:13 சங் 41:13 சங் 72:19 ஏசா 24:15 ஏசா 42:12 மத் 6:13 லூக் 2:14 ரோம 11:36 ரோம 16:27 எபே 1:12 பிலிப் 4:20 1தீமோ 1:17 2தீமோ 4:18 எபிரெ 13:21 1பேது 5:11 2பேது 3:18 யூதா 1:25 வெளிப் 4:9-11 வெளிப் 5:12 வெளிப் 7:12 வெளிப் 14:7 |
| 6 | உங்களைக் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாய் விட்டு, வேறொரு சுவிசேஷத்திற்குத் திரும்புகிறதைப்பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன்; | மாற் 6:6 யோவா 9:30 |
| 7 | வேறொரு சுவிசேஷம் இல்லையே; சிலர் உங்களைக் கலகப்படுத்தி, கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல. | கலா 2:4 கலா 4:17 கலா 5:10 கலா 5:12 கலா 6:12 கலா 6:13 கலா 6:17 அப் 15:1-5 அப் 15:24-5 அப் 20:30 ரோம 16:17 ரோம 16:18 2கொரி 11:13 |
| 8 | நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன். | கலா 1:9 1கொரி 16:22 2கொரி 11:13 2கொரி 11:14 1தீமோ 1:19 1தீமோ 1:20 தீத் 3:10 வெளிப் 22:18 வெளிப் 22:19 |
| 9 | முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன்; நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன். | 2கொரி 1:17 2கொரி 13:1 2கொரி 13:2 பிலிப் 3:1 பிலிப் 4:4 |
| 10 | இப்பொழுது நான் மனுஷரையா, தேவனையா, யாரை நாடிப் போதிக்கிறேன்? மனுஷரையா பிரியப்படுத்தப்பார்க்கிறேன்? நான் இன்னும் மனுஷரைப் பிரியப்படுத்துகிறவனாயிருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்லவே. | அப் 4:19 அப் 4:20 அப் 5:29 2கொரி 5:9-11 1தெச 2:4 |
| 11 | மேலும், சகோதரரே, என்னால் பிரசங்கிக்கப்பட்ட சுவிசேஷம் மனுஷருடைய யோசனையின்படியானதல்லவென்று உங்களுக்குத் தெரிவிக்கிறேன். | கலா 1:1 1கொரி 2:9 1கொரி 2:10 1கொரி 11:23 1கொரி 15:1-3 எபே 3:3-8 |
| 12 | நான் அதை ஒரு மனுஷனால் பெற்றதுமில்லை, மனுஷனால் கற்றதுமில்லை, இயேசுகிறிஸ்துவே அதை எனக்கு வெளிப்படுத்தினார். |
| 13 | நான் யூதமார்க்கத்திலிருந்தபோது என்னுடைய நடக்கையைக்குறித்துக் கேள்விப்பட்டிருப்பீர்கள்; தேவனுடைய சபையை நான் மிகவும் துன்பப்படுத்தி, அதைப் பாழாக்கி; | அப் 22:3-5 அப் 26:4 அப் 26:5 |
| 14 | என் ஜனத்தாரில் என் வயதுள்ள அநேகரைப்பார்க்கிலும் யூதமார்க்கத்திலே தேறினவனாய், என் பிதாக்களுடைய பாரம்பரிய நியாயங்களுக்காக மிகவும் பக்திவைராக்கியமுள்ளவனாயிருந்தேன். | ஏசா 29:13 ஏசா 57:12 |
| 15 | அப்படியிருந்தும், நான் என் தாயின் வயிற்றிலிருந்ததுமுதல், என்னைப் பிரித்தெடுத்து, தம்முடைய கிருபையினால் அழைத்த தேவன், | உபா 7:7 உபா 7:8 1சாமு 12:22 1நாளா 28:4 1நாளா 28:5 மத் 11:26 லூக் 10:21 1கொரி 1:1 எபே 1:5 எபே 1:9 எபே 3:11 |
| 16 | தம்முடைய குமாரனை நான் புறஜாதிகளிடத்தில் சுவிசேஷமாய் அறிவிக்கும் பொருட்டாக, அவரை எனக்குள் வெளிப்படுத்தப் பிரியமாயிருந்தபோது, உடனே நான் மாம்சத்தோடும் இரத்தத்தோடும் யோசனைபண்ணாமலும்; | மத் 16:17 1கொரி 2:9-13 2கொரி 4:6 எபே 1:17 எபே 1:18 எபே 3:5-10 |
| 17 | எனக்கு முன்னே அப்போஸ்தலரானவர்களிடத்திலே எருசலேமுக்குப் போகாமலும்; அரபிதேசத்திற்குப் புறப்பட்டுப்போய், மறுபடியும் தமஸ்கு ஊருக்குத் திரும்பிவந்தேன். | கலா 1:18 அப் 9:20-25 |
| 18 | மூன்று வருஷம் சென்றபின்பு, பேதுருவைக் கண்டுகொள்ளும்படி நான் எருசலேமுக்குப் போய், அவனிடத்தில் பதினைந்துநாள் தங்கியிருந்தேன். | அப் 9:26-29 அப் 22:17 அப் 22:18 |
| 19 | கர்த்தருடைய சகோதரனாகிய யாக்கோபைத் தவிர, அப்போஸ்தலரில் வேறொருவரையும் நான் காணவில்லை. | மத் 10:3 மாற் 3:18 லூக் 6:15 அப் 1:13 |
| 20 | நான் உங்களுக்கு எழுதுகிற இவைகள் பொய்யல்லவென்று தேவனுக்குமுன்பாக நிச்சயமாய்ச் சொல்லுகிறேன். | ரோம 9:1 2கொரி 11:10 2கொரி 11:11 2கொரி 11:31 |
| 21 | பின்பு, சீரியா சிலிசியா நாடுகளின் புறங்களில் வந்தேன். | அப் 9:30 அப் 11:25 அப் 11:26 அப் 13:1 அப் 15:23 அப் 15:41 அப் 18:18 அப் 21:3 |
| 22 | மேலும் யூதேயா தேசத்திலே கிறிஸ்துவுக்குள்ளான சபைகளுக்கு முகமறியாதவனாயிருந்தேன். | அப் 9:31 1தெச 2:14 |
| 23 | முன்னே நம்மைத் துன்பப்படுத்தினவனே, தான் அழிக்கத்தேடின விசுவாசத்தை இப்பொழுது பிரசங்கிக்கிறான் என்பதை மாத்திரம் அவர்கள் கேள்விப்பட்டிருந்து, | அப் 9:13 அப் 9:20 அப் 9:26 1கொரி 15:8-10 1தீமோ 1:13-16 |
| 24 | என்னைப்பற்றி தேவனை மகிமைப்படுத்தினார்கள். | எண் 23:23 லூக் 2:14 லூக் 7:16 லூக் 15:10 லூக் 15:32 அப் 11:18 அப் 21:19 அப் 21:20 2கொரி 9:13 கொலோ 1:3 கொலோ 1:4 2தெச 1:10 2தெச 1:12 |