| 1 | எங்களை நாங்களே மறுபடியும் மெச்சிக்கொள்ளத் தொடங்குகிறோமோ? அல்லது சிலருக்கு வேண்டியதாயிருக்கிறதுபோல, உங்களுக்கு உபசார நிருபங்களை அனுப்பவும், உங்களிடத்தில் உபசார நிருபங்களைப் பெற்றுக்கொள்ளவும் எங்களுக்கு வேண்டியதோ? | 2கொரி 2:17 2கொரி 5:12 2கொரி 10:8 2கொரி 10:12 2கொரி 12:11 2கொரி 12:19 1கொரி 3:10 1கொரி 4:15 1கொரி 10:33 |
| 2 | எங்கள் இருதயங்களில் எழுதப்பட்டும், சகல மனுஷராலும் அறிந்து வாசிக்கப்பட்டும் இருக்கிற எங்கள் நிருபம் நீங்கள்தானே. | 1கொரி 3:10 1கொரி 9:1 1கொரி 9:2 |
| 3 | ஏனெனில் நீங்கள் எங்கள் ஊழியத்தினால் உண்டாகிய கிறிஸ்துவின் நிருபமாயிருக்கிறீர்களென்று வெளியரங்கமாயிருக்கிறது; அது மையினாலல்ல, ஜீவனுள்ள தேவனுடைய ஆவியினாலும்; கற்பலகைகளிலல்ல, இருதயங்களாகிய சதையான பலகைகளிலேயும் எழுதப்பட்டிருக்கிறது. | யாத் 31:18 வெளிப் 2:1 வெளிப் 2:8 வெளிப் 2:12 வெளிப் 2:18 வெளிப் 3:1 வெளிப் 3:7 வெளிப் 3:14 வெளிப் 3:22 |
| 4 | நாங்கள் தேவனுக்கு முன்பாகக் கிறிஸ்துவின் மூலமாய் இப்படிப்பட்ட நம்பிக்கையைக் கொண்டிருக்கிறோம். | 2கொரி 2:14 பிலிப் 1:6 |
| 5 | எங்களால் ஏதாகிலும் ஆகும் என்பதுபோல ஒன்றை யோசிக்கிறதற்கு நாங்கள் எங்களாலே தகுதியானவர்கள் அல்ல; எங்களுடைய தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது. | 2கொரி 2:16 2கொரி 4:7 யாத் 4:10 யோவா 15:5 |
| 6 | புது உடன்படிக்கையின் ஊழியக்காரராயிருக்கும்படி, அவரே எங்களைத் தகுதியுள்ளவர்களாக்கினார்; அந்த உடன்படிக்கை எழுத்திற்குரியதாயிராமல், ஆவிக்குரியதாயிருக்கிறது; எழுத்து கொல்லுகிறது, ஆவியோ உயிர்ப்பிக்கிறது. | 2கொரி 5:18-20 மத் 13:52 ரோம 1:5 1கொரி 3:5 1கொரி 3:10 1கொரி 12:28 எபே 3:7 எபே 4:11 எபே 4:12 கொலோ 1:25-29 1தீமோ 1:11 1தீமோ 1:12 1தீமோ 4:6 2தீமோ 1:11 |
| 7 | எழுத்துக்களினால் எழுதப்பட்டுக் கற்களில் பதிந்திருந்த மரணத்துக்கேதுவான ஊழியத்தைச் செய்த மோசேயினுடைய முகத்திலே மகிமைப்பிரகாசம் உண்டானபடியால், இஸ்ரவேல் புத்திரர் அவன் முகத்தை நோக்கிப் பார்க்கக்கூடாதிருந்தார்களே. | 2கொரி 3:6 2கொரி 3:9 ரோம 7:10 |
| 8 | ஒழிந்துபோகிற மகிமையையுடைய அந்த ஊழியம் அப்படிப்பட்ட மகிமையுள்ளதாயிருந்தால், ஆவிக்குரிய ஊழியம் எவ்வளவு அதிக மகிமையுள்ளதாயிருக்கும்? | 2கொரி 3:6 2கொரி 3:17 2கொரி 11:4 ஏசா 11:2 ஏசா 44:3 ஏசா 59:21 யோவே 2:28 யோவே 2:29 யோவா 1:17 யோவா 7:39 அப் 2:17 அப் 2:18 அப் 2:32 அப் 2:33 ரோம 8:9-16 1கொரி 3:16 1கொரி 12:4-11 கலா 3:2-5 கலா 3:14-5 கலா 5:5 கலா 5:22 கலா 5:23 எபே 2:18 2தெச 2:13 1பேது 1:2 யூதா 1:19 யூதா 1:20 |
| 9 | ஆக்கினைத்தீர்ப்புக் கொடுக்கும் ஊழியம் மகிமையுள்ளதாயிருந்தால், நீதியைக் கொடுக்கும் ஊழியம் அதிக மகிமையுள்ளதாயிருக்குமே. | 2கொரி 3:6 2கொரி 3:7 யாத் 19:12-19 யாத் 20:18 யாத் 20:19 ரோம 1:18 ரோம 8:3 ரோம 8:4 கலா 3:10 எபிரெ 12:18-21 |
| 10 | இப்படியாக, மகிமைப்பட்டிருந்த அந்த ஊழியம் இந்த ஊழியத்திற்கு உண்டாயிருக்கிற சிறந்த மகிமைக்குமுன்பாக மகிமைப்பட்டதல்ல. | யோபு 25:5 ஏசா 24:23 ஆகா 2:3 ஆகா 2:7-9 அப் 26:13 பிலிப் 3:7-8 2பேது 1:17 வெளிப் 21:23 வெளிப் 21:24 வெளிப் 22:5 |
| 11 | அன்றியும் ஒழிந்துபோவதே மகிமையுள்ளதாயிருந்ததானால், நிலைத்திருப்பது அதிக மகிமையுள்ளதாயிருக்குமே. | 2கொரி 3:7 ரோம 5:20 ரோம 5:21 எபிரெ 7:21-25 எபிரெ 8:13 எபிரெ 12:25-29 |
| 12 | நாங்கள் இப்படிப்பட்ட நம்பிக்கையை உடையவர்களாதலால், மிகவும் தாராளமாய்ப் பேசுகிறோம். | 2கொரி 4:2 2கொரி 4:3 2கொரி 4:13 யோவா 10:24 யோவா 16:25 யோவா 16:29 1கொரி 14:19 கொலோ 4:4 |
| 13 | மேலும் ஒழிந்துபோவதின் முடிவை இஸ்ரவேல் புத்திரர் நோக்கிப்பாராதபடிக்கு, மோசே தன் முகத்தின்மேல் முக்காடு போட்டுக்கொண்டதுபோல நாங்கள் போடுகிறதில்லை. | யாத் 34:33-35 |
| 14 | அவர்களுடைய மனது கடினப்பட்டது; இந்நாள்வரைக்கும் பழைய ஏற்பாடு வாசிக்கப்படுகையில், அந்த முக்காடு நீங்காமலிருக்கிறது; அது கிறிஸ்துவினாலே நீக்கப்படுகிறது. | 2கொரி 4:3 2கொரி 4:4 சங் 69:23 ஏசா 6:10 ஏசா 26:10-12 ஏசா 42:18-20 ஏசா 44:18 ஏசா 56:10 ஏசா 59:10 எரே 5:21 எசே 12:2 மத் 6:23 மத் 13:11 மத் 13:13-15 யோவா 9:39-41 யோவா 12:40 அப் 28:26 அப் 28:27 ரோம 11:7-10 ரோம 11:25-10 |
| 15 | மோசேயின் ஆகமங்கள் வாசிக்கப்படும்போது, இந்நாள்வரைக்கும் முக்காடு அவர்கள் இருதயத்தின்மேல் இருக்கிறதே. | அப் 13:27-29 |
| 16 | அவர்கள் கர்த்தரிடத்தில் மனந்திரும்பும்போது, அந்த முக்காடு எடுபட்டுப்போகும். | யாத் 34:34 உபா 4:30 உபா 30:10 புலம் 3:40 ஓசி 3:4 ஓசி 3:5 ரோம 11:25-27 |
| 17 | கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு. | 2கொரி 3:6 யோவா 6:63 1கொரி 15:45 |
| 18 | நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம். | 1கொரி 13:12 யாக் 1:23 |