| 1 | நான் அப்போஸ்தலனல்லவா? நான் சுயாதீனனல்லவா? நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை நான் தரிசிக்கவில்லையா? கர்த்தருக்குள் நீங்கள் என் கிரியையாயிருக்கிறீர்களல்லவா? | 1கொரி 9:2 1கொரி 9:3 1கொரி 1:1 1கொரி 15:8 1கொரி 15:9 அப் 9:15 அப் 13:2 அப் 14:4 அப் 22:14 அப் 22:15 அப் 16:17 அப் 16:18 ரோம 1:1 ரோம 1:5 ரோம 11:13 2கொரி 11:5 2கொரி 12:11 2கொரி 12:12 கலா 1:1 கலா 1:15-17 கலா 2:7 கலா 2:8 1தீமோ 2:7 2தீமோ 1:11 தீத் 1:1-3 |
| 2 | நான் மற்றவர்களுக்கு அப்போஸ்தலனாயிராவிட்டாலும், உங்களுக்கல்லவோ அப்போஸ்தலனாயிருக்கிறேன்; கர்த்தருக்குள் நீங்கள் என் அப்போஸ்தல ஊழியத்திற்கு முத்திரையாயிருக்கிறீர்களே. | யோவா 6:27 2கொரி 3:1-3 2கொரி 12:12 |
| 3 | என்னை நியாயம் விசாரிக்கிறவர்களுக்கு நான் சொல்லுகிற மாறுத்தரமாவது: | அப் 22:1 அப் 25:16 பிலிப் 1:7 பிலிப் 1:17 2தீமோ 4:16 |
| 4 | புசிக்கவும் குடிக்கவும் எங்களுக்கு அதிகாரமில்லையா? | 1கொரி 9:7-14 மத் 10:10 லூக் 10:7 கலா 6:6 1தெச 2:6 2தெச 3:8 2தெச 3:9 1தீமோ 5:17 1தீமோ 5:18 |
| 5 | மற்ற அப்போஸ்தலரும், கர்த்தருடைய சகோதரரும், கேபாவும் செய்கிறதுபோல, மனைவியாகிய ஒரு சகோதரியைக் கூட்டிக்கொண்டு திரிய எங்களுக்கும் அதிகாரமில்லையா? | 1தீமோ 3:2 1தீமோ 4:3 தீத் 1:6 எபிரெ 13:4 |
| 6 | அல்லது, கைத்தொழில் செய்யாதிருக்கிறதற்கு எனக்கும் பர்னபாவுக்கும்மாத்திரந்தானா அதிகாரமில்லை? | அப் 4:36 அப் 11:22 அப் 13:1 அப் 13:2 அப் 13:50 அப் 14:12 அப் 15:36 அப் 15:37 |
| 7 | எவன் தன் சொந்தப்பணத்தைச் செலவழித்து, தண்டிலே சேவகம்பண்ணுவான்? எவன் திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி, அதின் கனியில் புசியாதிருப்பான்? எவன் மந்தையை மேய்த்து, அதின் பாலைச் சாப்பிடாதிருப்பான்? | 2கொரி 10:4 2கொரி 10:5 1தீமோ 1:18 1தீமோ 6:12 2தீமோ 2:3 2தீமோ 2:4 2தீமோ 4:7 |
| 8 | இவைகளை மனுஷர் வழக்கத்தின்படி சொல்லுகிறேனோ? நியாயப்பிரமாணமும் இவைகளைச் சொல்லுகிறதில்லையா? | 1கொரி 7:40 ரோம 6:19 1தெச 2:13 1தெச 4:8 |
| 9 | போரடிக்கிற மாட்டை வாய்க்கட்டாயாக என்று மோசேயின் பிரமாணத்திலே எழுதியிருக்கிறதே. தேவன் மாடுகளுக்காகவே கவலையாயிருக்கிறாரோ? | உபா 25:4 1தீமோ 5:18 |
| 10 | நமக்காகத்தான் இதைச் சொல்லுகிறாரோ? உழுகிறவன் நம்பிக்கையோடே உழவும், போரடிக்கிறவன் தான் நம்புகிறதில் பங்கடைவேன் என்கிற நம்பிக்கையோடே போரடிக்கவும் வேண்டியதே, ஆகையால், அது நமக்காகவே எழுதியிருக்கிறது. | மத் 24:22 ரோம 15:4 2கொரி 4:15 |
| 11 | நாங்கள் உங்களுக்கு ஞானநன்மைகளை விதைத்திருக்க, உங்கள் சரீரநன்மைகளை அறுத்தால் அது பெரிய காரியமா? | மல்கி 3:8 மல்கி 3:9 மத் 10:10 ரோம 15:27 கலா 6:6 |
| 12 | மற்றவர்கள் உங்களிடத்திலே இந்த அதிகாரத்தைச் செலுத்தினால், அவர்களிலும் நாங்கள் அதிகமாய்ச் செலுத்தலாமல்லவா? அப்படியிருந்தும், கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கு யாதொரு தடையும் உண்டாகாதபடிக்கு, நாங்கள் இந்த அதிகாரத்தைச் செலுத்தாமல் எல்லாப்பாடும்படுகிறோம். | 2கொரி 11:20 |
| 13 | ஆசாரிய ஊழியஞ்செய்கிறவர்கள் தேவாலயத்திற்குரியவைகளில் புசிக்கிறார்களென்றும், பலிபீடத்தை அடுத்துப் பணிவிடை செய்கிறவர்களுக்குப் பலிபீடத்திலுள்ளவைகளில் பங்கு உண்டென்றும் அறியீர்களா? | 1கொரி 10:18 லேவி 6:16-18 லேவி 6:26-18 லேவி 7:6-8 எண் 5:9 எண் 5:10 எண் 18:8-20 உபா 10:9 உபா 18:1-5 1சாமு 2:28 |
| 14 | அந்தப்படியே சுவிசேஷத்தை அறிவிக்கிறவர்களுக்குச் சுவிசேஷத்தினாலே பிழைப்பு உண்டாகவேண்டுமென்று கர்த்தரும் கட்டளையிட்டிருக்கிறார். | 1கொரி 9:4 மத் 10:10 லூக் 10:7 கலா 6:6 1தீமோ 5:17 |
| 15 | அப்படியிருந்தும், நான் இவைகளில் ஒன்றையும் அநுபவிக்கவில்லை; இப்படி எனக்கு நடக்கவேண்டுமென்று இவைகளை நான் எழுதுகிறதுமில்லை. என் மேன்மைபாராட்டலை ஒருவன் அவத்தமாக்குகிறதைப்பார்க்கிலும் சாகிறது எனக்கு நலமாயிருக்கும். | 1கொரி 9:12 1கொரி 4:12 அப் 8:3 அப் 20:34 1தெச 2:9 2தெச 3:8 |
| 16 | சுவிசேஷத்தை நான் பிரசங்கித்து வந்தும், மேன்மைப்பாராட்ட எனக்கு இடமில்லை; அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது; சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ. | ரோம 4:2 ரோம 15:17 |
| 17 | நான் உற்சாகமாய் அப்படிச் செய்தால் எனக்குப் பலன் உண்டு; உற்சாகமில்லாதவனாய்ச் செய்தாலும், உக்கிராண உத்தியோகம் எனக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிறதே. | 1நாளா 28:9 1நாளா 29:5 1நாளா 29:9 1நாளா 29:14 நெகே 11:2 ஏசா 6:8 2கொரி 8:12 பிலேமோ 1:14 1பேது 5:2-4 |
| 18 | ஆதலால் எனக்குப் பலன் என்ன? நான் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கையில் அதைப்பற்றி எனக்கு உண்டாயிருக்கிற அதிகாரத்தை முற்றிலும் செலுத்தாமல், கிறிஸ்துவின் சுவிசேஷத்தைச் செலவில்லாமல் ஸ்தாபிப்பதே எனக்குப் பலன். | 1கொரி 9:6 1கொரி 9:7 1கொரி 10:33 2கொரி 4:5 2கொரி 11:7-9 2கொரி 12:13-18 1தெச 2:6 2தெச 3:8 2தெச 3:9 |
| 19 | நான் ஒருவருக்கும் அடிமைப்படாதவனாயிருந்தும், நான் அதிக ஜனங்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு, என்னைத்தானே எல்லாருக்கும் அடிமையாக்கினேன். | 1கொரி 9:1 கலா 5:1 |
| 20 | யூதரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு யூதருக்கு யூதனைப்போலவும், நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவனைப் போலவுமானேன். | அப் 16:3 அப் 17:2 அப் 17:3 அப் 18:18 அப் 21:20-26 |
| 21 | நியாயப்பிரமாணமில்லாதவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு அவர்களுக்கு நியாயப்பிரமாணம் இல்லாதவனைப்போலவுமானேன். அப்படியிருந்தும், நான் தேவனுக்குமுன்பாக நியாயப்பிரமாணமில்லாதவனாயிராமல், கிறிஸ்துவின் பிரமாணத்துக்குள்ளானவனாயிருக்கிறேன். | அப் 15:28 அப் 16:4 அப் 21:25 ரோம 2:12 ரோம 2:14 கலா 2:3 கலா 2:4 கலா 2:12-14 கலா 3:2 |
| 22 | பலவீனரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்குப் பலவீனருக்குப் பலவீனனைப்போலானேன்; எப்படியாகிலும் சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லாருக்கும் எல்லாமானேன். | 1கொரி 8:13 ரோம 15:1 2கொரி 11:29 கலா 6:1 |
| 23 | சுவிசேஷத்தில் நான் உடன்பங்காளியாகும்படிக்கு, அதினிமித்தமே இப்படிச் செய்கிறேன். | 1கொரி 9:12 மாற் 8:35 2கொரி 2:4 கலா 2:5 2தீமோ 2:10 |
| 24 | பந்தயச் சாலையில் ஓடுகிறவர்களெல்லாரும் ஓடுவார்கள்; ஆகிலும், ஒருவனே பந்தயத்தைப் பெறுவானென்று அறியீர்களா? நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள். | ஓசி 12:10 |
| 25 | பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள். அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள், நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம். | எபே 6:12-18 1தீமோ 6:12 2தீமோ 2:5 2தீமோ 4:7 எபிரெ 12:4 |
| 26 | ஆதலால் நான் நிச்சயமில்லாதவனாக ஓடேன்; ஆகாயத்தை அடிக்கிறவனாகச் சிலம்பம்பண்ணேன். | 2கொரி 5:1 2கொரி 5:8 பிலிப் 1:21 2தீமோ 1:12 2தீமோ 2:5 எபிரெ 4:1 1பேது 5:1 2பேது 1:10 |
| 27 | மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன். | 1கொரி 9:25 1கொரி 4:11 1கொரி 4:12 1கொரி 6:12 1கொரி 6:13 1கொரி 8:13 ரோம 8:13 2கொரி 6:4 2கொரி 6:5 2கொரி 11:27 கொலோ 3:5 2தீமோ 2:22 1பேது 2:11 |