| 1 | இப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் எவைகளை அறியவேண்டுமென்றிருக்கிறேனென்றால்; நம்முடைய பிதாக்களெல்லாரும் மேகத்துக்குக் கீழாயிருந்தார்கள், எல்லாரும், சமுத்திரத்தின் வழியாய் நடந்துவந்தார்கள். | 1கொரி 12:1 1கொரி 14:38 ரோம 11:21 |
| 2 | எல்லாரும் மோசேக்குள்ளாக மேகத்தினாலும் சமுத்திரத்தினாலும் ஞானஸ்நானம்பண்ணப்பட்டார்கள். | 1கொரி 1:13-16 யாத் 14:31 யோவா 9:28 யோவா 9:29 எபிரெ 3:2 எபிரெ 3:3 |
| 3 | எல்லாரும் ஒரே ஞானபோஜனத்தைப் புசித்தார்கள். | யாத் 16:4 யாத் 16:15 யாத் 16:35 உபா 8:3 நெகே 9:15 நெகே 9:20 சங் 78:23-25 சங் 105:40 யோவா 6:22-58 |
| 4 | எல்லாரும் ஒரே ஞானபானத்தைக் குடித்தார்கள். எப்படியெனில், அவர்களோடேகூடச் சென்ற ஞானக்கன்மலையின் தண்ணீரைக் குடித்தார்கள்; அந்தக் கன்மலை கிறிஸ்துவே. | யாத் 17:6 எண் 20:11 சங் 78:15 சங் 78:20 சங் 105:41 ஏசா 43:20 ஏசா 48:21 யோவா 4:10 யோவா 4:14 யோவா 7:37 வெளிப் 22:17 |
| 5 | அப்படியிருந்தும், அவர்களில் அதிகமானபேர்களிடத்தில் தேவன் பிரியமாயிருந்ததில்லை; ஆதலால் வனாந்தரத்திலே அவர்கள் அழிக்கப்பட்டார்கள். | எண் 14:11 எண் 14:12 எண் 14:28-35 எண் 26:64 எண் 26:65 உபா 1:34 உபா 1:35 உபா 2:15 உபா 2:16 சங் 78:32-34 சங் 90:1 சங் 90:7 சங் 90:8 சங் 95:11 சங் 106:26 எபிரெ 3:17 யூதா 1:5 |
| 6 | அவர்கள் இச்சித்ததுபோல நாமும் பொல்லாங்கானவைகளை இச்சியாதபடிக்கு, இவைகள் நமக்குத் திருஷ்டாந்தங்களாயிருக்கிறது. | 1கொரி 10:11 செப் 3:6 செப் 3:7 எபிரெ 4:11 2பேது 2:6 யூதா 1:7 |
| 7 | ஜனங்கள் புசிக்கவும் குடிக்கவும் உட்கார்ந்து விளையாட எழுந்திருந்தார்கள் என்று எழுதியிருக்கிறபடி, அவர்களில் சிலர் விக்கிரகாராதனைக்காரர் ஆனதுபோல நீங்களும் ஆகாதிருங்கள். | 1கொரி 14:20-22 1கொரி 5:11 1கொரி 6:9 1கொரி 8:7 உபா 9:12 உபா 9:16-21 சங் 106:19 சங் 106:20 1யோவா 5:21 |
| 8 | அவர்களில் சிலர் வேசித்தனம்பண்ணி, ஒரேநாளில் இருபத்துமூவாயிரம்பேர் விழுந்துபோனார்கள்; அதுபோல நாமும் வேசித்தனம்பண்ணாதிருப்போமாக. | 1கொரி 6:9 1கொரி 6:18 எண் 25:1-9 சங் 106:29 வெளிப் 2:14 |
| 9 | அவர்களில் சிலர் கிறிஸ்துவைப் பரீட்சைப்பார்த்து, பாம்புகளால் அழிக்கப்பட்டார்கள்; அதுபோல நாமும் கிறிஸ்துவைப் பரீட்சைபாராதிருப்போமாக. | யாத் 17:2 யாத் 17:7 யாத் 23:20 யாத் 23:21 எண் 21:5 உபா 6:16 சங் 78:18 சங் 78:56 சங் 95:9 சங் 106:14 எபிரெ 3:8-11 எபிரெ 10:28-30 |
| 10 | அவர்களில் சிலர் முறுமுறுத்து, சங்காரக்காரனாலே அழிக்கப்பட்டார்கள்; அதுபோல நீங்களும் முறுமுறுக்காதிருங்கள். | யாத் 15:24 யாத் 16:2-9 யாத் 17:2 யாத் 17:3 எண் 14:2 எண் 14:27-30 எண் 16:41 சங் 106:25 பிலிப் 2:14 யூதா 1:16 |
| 11 | இவைகளெல்லாம் திருஷ்டாந்தங்களாக அவர்களுக்குச் சம்பவித்தது; உலகத்தின் முடிவுகாலத்திலுள்ள நமக்கு எச்சரிப்புண்டாக்கும்படி எழுதப்பட்டும் இருக்கிறது. | 1கொரி 9:10 ரோம 15:4 |
| 12 | இப்படியிருக்க, தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன். | 1கொரி 4:6-8 1கொரி 8:2 நீதி 16:18 நீதி 28:14 மத் 26:33 மத் 26:34 மத் 26:40 மத் 26:41 ரோம 11:20 வெளிப் 3:17 வெளிப் 3:18 |
| 13 | மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார். | எரே 12:5 மத் 24:21-24 லூக் 11:4 லூக் 22:31 லூக் 22:46 2கொரி 11:23-28 எபே 6:12 எபே 6:13 எபிரெ 11:35-38 எபிரெ 12:4 யாக் 5:10 யாக் 5:11 1பேது 1:6 1பேது 1:7 1பேது 5:8 1பேது 5:9 வெளிப் 2:10 வெளிப் 3:10 |
| 14 | ஆகையால் எனக்குப் பிரியமானவர்களே, விக்கிரகாராதனைக்கு விலகி ஓடுங்கள். | ரோம 12:19 2கொரி 7:1 2கொரி 11:11 2கொரி 12:15 2கொரி 12:19 பிலிப் 4:1 பிலேமோ 1:1 1பேது 2:11 |
| 15 | உங்களைப் புத்திமான்களென்று எண்ணிப் பேசுகிறேன்; நான் சொல்லுகிறதை நீங்களே நிதானித்துப்பாருங்கள். | 1கொரி 4:10 1கொரி 6:5 1கொரி 8:1 1கொரி 11:13 1கொரி 14:20 யோபு 34:2 யோபு 34:3 1தெச 5:21 |
| 16 | நாம் ஆசீர்வதிக்கிற ஆசீர்வாதத்தின் பாத்திரம் கிறிஸ்துவினுடைய இரத்தத்தின் ஐக்கிமாயிருக்கிறதல்லவா? நாம் பிட்கிற அப்பம் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் ஐக்கியமாயிருக்கிறதல்லவா? | 1கொரி 10:21 1கொரி 11:23-29 மத் 26:26-28 மாற் 14:22-25 லூக் 22:19 லூக் 22:20 |
| 17 | அந்த ஒரே அப்பத்தில் நாமெல்லாரும் பங்குபெறுகிறபடியால், அநேகரான நாம் ஒரே அப்பமும் ஒரே சரீரமுமாயிருக்கிறோம். | 1கொரி 12:12 1கொரி 12:27 ரோம 12:5 கலா 3:26-28 எபே 1:22 எபே 1:23 எபே 2:15 எபே 2:16 எபே 3:6 எபே 4:12 எபே 4:13 எபே 4:25 கொலோ 2:19 கொலோ 3:11 கொலோ 3:15 |
| 18 | மாம்சத்தின்படியான இஸ்ரவேலரைப் பாருங்கள்; பலிகளைப் புசிக்கிறவர்கள் பலிபீடத்தோடே ஐக்கியமாயிருக்கிறார்களல்லவா? | ரோம 4:1 ரோம 4:12 ரோம 9:3-8 2கொரி 11:18-22 கலா 6:16 எபே 2:11 எபே 2:12 பிலிப் 3:3-5 |
| 19 | இப்படியிருக்க, விக்கிரகம் ஒரு பொருளென்றும், விக்கிரகத்துக்குப் படைக்கப்பட்டது ஒரு பொருளென்றும் நான் சொல்லுகிறேனோ? | 1கொரி 1:28 1கொரி 3:7 1கொரி 8:4 1கொரி 13:2 உபா 32:21 ஏசா 40:17 ஏசா 41:29 2கொரி 12:11 |
| 20 | அஞ்ஞானிகள் பலியிடுகிறவைகளை தேவனுக்கு அல்ல, பேய்களுக்கே பலியிடுகிறார்களென்று சொல்லுகிறேன்; நீங்கள் பேய்களோடே ஐக்கியமாயிருக்க எனக்கு மனதில்லை. | லேவி 17:7 உபா 32:16 உபா 32:17 2நாளா 11:15 சங் 106:37-39 2கொரி 4:4 வெளிப் 9:20 |
| 21 | நீங்கள் கர்த்தருடைய பாத்திரத்திலும் பேய்களுடைய பாத்திரத்திலும் பானம் பண்ணக்கூடாதே; நீங்கள் கர்த்தருடைய போஜனபந்திக்கும் பேய்களுடைய போஜனபந்திக்கும் பங்குள்ளவர்களாயிருக்கக்கூடாதே. | 1கொரி 10:16 1கொரி 8:10 உபா 32:37 உபா 32:38 1இரா 18:21 மத் 6:24 2கொரி 6:15-17 |
| 22 | நாம் கர்த்தருக்கு எரிச்சலை மூட்டலாமா? அவரிலும் நாம் பலவான்களா? | யாத் 20:5 யாத் 34:14 உபா 4:24 உபா 6:15 உபா 32:16 உபா 32:21 யோசு 24:19 சங் 78:58 செப் 1:18 |
| 23 | எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது; எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் பக்திவிருத்தியை உண்டாக்காது. | 1கொரி 6:12 1கொரி 8:9 ரோம 14:15 ரோம 14:20 |
| 24 | ஒவ்வொருவனும் தன் சுயபிரயோஜனத்தைத் தேடாமல், பிறனுடைய பிரயோஜனத்தைத் தேடக்கடவன். | 1கொரி 10:33 1கொரி 9:19-23 1கொரி 13:5 பிலிப் 2:4 பிலிப் 2:5 பிலிப் 2:21 |
| 25 | கடையிலே விற்கப்படுகிற எதையும் வாங்கிப் புசியுங்கள்; மனச்சாட்சியினிமித்தம் நீங்கள் ஒன்றையும் விசாரிக்கவேண்டியதில்லை. | ரோம 14:14 1தீமோ 4:4 தீத் 1:15 |
| 26 | பூமியும் அதின் நிறைவும் கர்த்தருடையது. | 1கொரி 10:28 யாத் 19:5 உபா 10:14 யோபு 41:11 சங் 24:1 சங் 50:12 1தீமோ 6:17 |
| 27 | அன்றியும் அவிசுவாசிகளில் ஒருவன் உங்களை விருந்துக்கு அழைக்கும்போது, போக உங்களுக்கு மனதிருந்தால், மனச்சாட்சியினிமித்தம் ஒன்றையும் விசாரியாமல், உங்கள் முன் வைக்கப்படுகிற எதையும் புசியுங்கள். | 1கொரி 5:9-11 லூக் 5:29 லூக் 5:30 லூக் 15:23 லூக் 19:7 |
| 28 | ஆயினும் இது விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டதென்று ஒருவன் உங்களுக்குச் சொன்னால், அப்படி அறிவித்தவனிமித்தமும் மனச்சாட்சியினிமித்தமும் புசியாதிருங்கள்; பூமியும் அதின் நிறைவும் கர்த்தருடையது. | 1கொரி 8:10-13 ரோம 14:15 |
| 29 | உன்னுடைய மனச்சாட்சியைக்குறித்து நான் இப்படிச் சொல்லாமல், மற்றொருவனுடைய மனச்சாட்சியைக்குறித்தே சொல்லுகிறேன். என் சுயாதீனம் மற்றொருவனுடைய மனச்சாட்சியினாலே குற்றமாய் எண்ணப்படவேண்டுவதென்ன? | 1கொரி 10:32 1கொரி 8:9-13 ரோம 14:15-21 |
| 30 | மேலும் நான் அதை ஸ்தோத்திரிப்புடனே அநுபவித்தால், ஸ்தோத்திரித்து அநுபவிக்கிற பொருளைக்குறித்து நான் தூஷிக்கப்படுவானேன்? | ரோம 14:6 1தீமோ 4:3 1தீமோ 4:4 |
| 31 | ஆகையால் நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள். | 1கொரி 7:34 உபா 12:7 உபா 12:12 உபா 12:18 நெகே 8:16-18 சகரி 7:5 சகரி 7:6 லூக் 11:41 கொலோ 3:17 கொலோ 3:23 1பேது 4:11 |
| 32 | நான் என் சுயபிரயோஜனத்தைத் தேடாமல், அநேகருடைய பிரயோஜனத்தைத் தேடி, அவர்கள் இரட்சிக்கப்படும்படிக்கு, எவ்விதத்திலும் எல்லாருக்கும் பிரியமாய் நடக்கிறதுபோல; | 1கொரி 10:33 1கொரி 8:13 ரோம 14:13 2கொரி 6:3 பிலிப் 1:10 |
| 33 | நீங்களும் யூதருக்கும், கிரேக்கருக்கும், தேவனுடைய சபைக்கும் இடறலற்றவர்களாயிருங்கள். | 1கொரி 10:24 1கொரி 9:19-23 ரோம 15:2 ரோம 15:3 2கொரி 11:28 2கொரி 11:29 2கொரி 12:19 |