இணை வசன வேதாகமம்

Click to Subscribe

1கொரிந்தியர் 8

                   
புத்தகங்களைக் காட்டு
1விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைக்குறித்த விஷயத்தில், நம்மெல்லாருக்கும் அறிவு உண்டென்று நமக்குத் தெரியுமே. அறிவு இறுமாப்பை உண்டாக்கும், அன்போ பக்திவிருத்தியை உண்டாக்கும்.1கொரி 8:10 1கொரி 10:19-22 1கொரி 10:28-22 எண் 25:2 அப் 15:10 அப் 15:19 அப் 15:20 அப் 15:29 அப் 21:25 வெளிப் 2:14 வெளிப் 2:20
2ஒருவன் தான் ஏதேனும் ஒன்றை அறிந்தவனென்று எண்ணிக்கொள்வானானால், ஒன்றையும் அறியவேண்டியபிரகாரமாக அவன் இன்னும் அறியவில்லை.நீதி 26:12 நீதி 30:2-4 ரோம 11:25 கலா 6:3 1தீமோ 1:5-7 1தீமோ 6:3 1தீமோ 6:4
3தேவனில் அன்புகூருகிறவனெவனோ, அவன் தேவனால் அறியப்பட்டிருக்கிறான்.1கொரி 2:9 ரோம 8:28 யாக் 1:12 யாக் 2:5 1பேது 1:8 1யோவா 4:19 1யோவா 5:2 1யோவா 5:3
4விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைப் புசிக்கிற விஷயத்தைப்பற்றி, உலகத்திலே விக்கிரகமானது ஒன்றுமில்லையென்றும் ஒருவரேயன்றி வேறொரு தேவன் இல்லையென்றும் அறிந்திருக்கிறோம்.1கொரி 10:19 1கொரி 10:20 சங் 115:4-8 ஏசா 41:24 ஏசா 44:8 ஏசா 44:9 எரே 10:14 எரே 51:17 எரே 51:18 ஆபகூ 2:19 ஆபகூ 2:20 அப் 19:26
5வானத்திலேயும் பூமியிலேயும் தேவர்கள் என்னப்படுகிறவர்கள் உண்டு; இப்படி அநேக தேவர்களும் அநேக கர்த்தாக்களும் உண்டாயிருந்தாலும்,உபா 10:17 எரே 2:11 எரே 2:28 எரே 11:13 தானி 5:4 யோவா 10:34 யோவா 10:35 கலா 4:8 2தெச 2:4
6பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர் மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.1கொரி 8:4 யோனா 1:9 மல்கி 2:10 யோவா 10:30 யோவா 14:9 யோவா 14:10 யோவா 17:3 யோவா 20:17 எபே 1:3 எபே 3:14 எபே 4:6 1பேது 1:2 1பேது 1:3
7ஆகிலும், இந்த அறிவு எல்லாரிடத்திலும் இல்லை. சிலர் இன்றையவரைக்கும் விக்கிரகத்தை ஒரு பொருளென்று எண்ணி, விக்கிரகத்துக்குப் படைக்கப்பட்டதைப் புசிக்கிறார்கள்; அவர்களுடைய மனச்சாட்சி பலவீனமாயிருப்பதால் அசுசிப்படுகிறது.1கொரி 1:10 1கொரி 1:11
8போஜனமானது நம்மை தேவனுக்கு உகந்தவர்களாக்கமாட்டாது; என்னத்தினாலெனில், புசிப்பதினால் நமக்கு ஒரு மேன்மையுமில்லை, புசியாதிருப்பதினால் நமக்கு ஒரு குறைவுமில்லை.1கொரி 6:13 ரோம 14:17 கொலோ 2:20-23 எபிரெ 13:9
9ஆகிலும் இதைக்குறித்து உங்களுக்கு உண்டாயிருக்கிற அதிகாரம் எவ்விதத்திலும் பலவீனருக்குத் தடுக்கலாகாதபடிக்குப் பாருங்கள்.1கொரி 8:10 1கொரி 10:24 1கொரி 10:29 மத் 18:6 மத் 18:7 மத் 18:10 லூக் 17:1 லூக் 17:2 ரோம 14:20 ரோம 14:21 கலா 5:13 1பேது 2:16 2பேது 2:19
10எப்படியெனில், அறிவுள்ளவனாகிய உன்னை விக்கிரகக்கோவிலிலே பந்தியிருக்க ஒருவன் கண்டால், பலவீனனாயிருக்கிற அவனுடைய மனச்சாட்சி விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைப் புசிப்பதற்குத் துணிவுகொள்ளுமல்லவா?1கொரி 8:1 1கொரி 8:2
11பலவீனமுள்ள சகோதரன் உன் அறிவினிமித்தம் கெட்டுப்போகலாமா? அவனுக்காகக் கிறிஸ்து மரித்தாரே.1கொரி 8:13 1கொரி 10:33 1கொரி 11:1 ரோம 14:15 ரோம 14:20 ரோம 14:21 ரோம 15:1-3
12இப்படிச் சகோதரருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்து, பலவீனமுள்ள அவர்களுடைய மனச்சாட்சியைப் புண்படுத்துகிறதினாலே, நீங்கள் கிறிஸ்துவுக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்கிறீர்கள்.ஆதி 20:9 ஆதி 42:22 யாத் 32:21 1சாமு 2:25 1சாமு 19:4 1சாமு 19:5 1சாமு 24:11 மத் 18:21
13ஆதலால் போஜனம் என் சகோதரனுக்கு இடறலுண்டாக்கினால், நான் என் சகோதரனுக்கு இடறலுண்டாக்காதபடிக்கு, என்றைக்கும் மாம்சம் புசியாதிருப்பேன்.1கொரி 6:12 1கொரி 9:12 1கொரி 9:19-23 1கொரி 10:33 1கொரி 11:1 1கொரி 13:5 ரோம 14:21 2கொரி 11:29 2தீமோ 3:8 2தீமோ 3:9
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.