| 1 | இப்படியாக, எந்த மனுஷனும் எங்களைக் கிறிஸ்துவின் ஊழியக்காரரென்றும், தேவனுடைய இரகசியங்களின் உக்கிராணக்காரரென்றும் எண்ணிக்கொள்ளக்கடவன். | 1கொரி 4:13 2கொரி 12:6 |
| 2 | மேலும், உக்கிராணக்காரன் உண்மையுள்ளவனென்று காணப்படுவது அவனுக்கு அவசியமாம். | 1கொரி 4:17 1கொரி 7:25 எண் 12:7 நீதி 13:17 மத் 25:21 மத் 25:23 லூக் 12:42 லூக் 16:10-12 2கொரி 2:17 2கொரி 4:2 கொலோ 1:7 கொலோ 4:7 கொலோ 4:17 |
| 3 | ஆயினும் நான் உங்களாலேயாவது மனுஷருடைய நியாயநாளின் விசாரணையினாலேயாவது தீர்ப்பைப் பெறுவது எனக்கு மிகவும் அற்ப காரியமாயிருக்கிறது; நானும் என்னைக்குறித்துத் தீர்ப்புச்சொல்லுகிறதில்லை. | 1கொரி 2:15 1சாமு 16:7 யோவா 7:24 |
| 4 | என்னிடத்தில் நான் யாதொரு குற்றத்தையும் அறியேன்; ஆகிலும் அதினாலே நான் நீதிமானாகிறதில்லை; என்னை நியாயம் விசாரிக்கிறவர் கர்த்தரே. | யோபு 27:6 சங் 7:3-5 யோவா 21:17 2கொரி 1:12 1யோவா 3:20 1யோவா 3:21 |
| 5 | ஆனதால், கர்த்தர் வருமளவும் நீங்கள் காலத்துக்குமுன்னே யாதொன்றைக்குறித்தும் தீர்ப்புச்சொல்லாதிருங்கள்; இருளில் மறைந்திருக்கிறவைகளை அவர் வெளியரங்கமாக்கி, இருதயங்களின் யோசனைகளையும் வெளிப்படுத்துவார்; அப்பொழுது அவனவனுக்குரிய புகழ்ச்சி தேவனால் உண்டாகும். | மத் 7:1 மத் 7:2 லூக் 6:37 ரோம 2:1 ரோம 2:16 ரோம 14:4 ரோம 14:10-13 யாக் 4:11 |
| 6 | சகோதரரே, எழுதப்பட்டதற்கு மிஞ்சி எண்ணவேண்டாமென்று நீங்கள் எங்களாலே கற்றுக்கொள்ளவும், ஒருவனும் ஒருவனினிமித்தம் மற்றொருவனுக்கு விரோதமாய் இறுமாப்படையாதிருக்கவும், நான் உங்கள்நிமித்தம் என்னையும் அப்பொல்லோவையும் திருஷ்டாந்தமாக வைத்து, இவைகளை எழுதினேன். | 1கொரி 1:12 1கொரி 3:4-7 2கொரி 10:7 2கொரி 10:12 2கொரி 10:15 2கொரி 11:4 2கொரி 11:12-15 |
| 7 | அன்றியும் உன்னை விசேஷித்தவனாகும்படி செய்கிறவர் யார்? உனக்கு உண்டாயிருக்கிறவைகளில் நீ பெற்றுக்கொள்ளாதது யாது? நீ பெற்றுக்கொண்டவனானால் பெற்றுக்கொள்ளாதவன்போல் ஏன் மேன்மைபாராட்டுகிறாய்? | 1கொரி 12:4-11 1கொரி 15:10 ரோம 9:16-18 எபே 3:3-5 2தெச 2:12-14 1தீமோ 1:12-15 தீத் 3:3-7 |
| 8 | இப்பொழுது திருப்தியடைந்திருக்கிறீர்களே, இப்பொழுது ஐசுவரியவான்களாயிருக்கிறீர்களே, எங்களையல்லாமல் ஆளுகிறீர்களே; நீங்கள் ஆளுகிறவர்களானால் நலமாயிருக்கும்; அப்பொழுது உங்களுடனேகூட நாங்களும் ஆளுவோமே. | 1கொரி 1:5 1கொரி 3:1 1கொரி 3:2 1கொரி 5:6 நீதி 13:7 நீதி 25:14 ஏசா 5:21 லூக் 1:51-53 லூக் 6:25 ரோம 12:3 ரோம 12:16 கலா 6:3 வெளிப் 3:17 |
| 9 | எங்களுக்குத் தோன்றுகிறபடி தேவன் அப்போஸ்தலர்களாகிய எங்களை மரணத்துக்குக் குறிக்கப்பட்டவர்கள்போலக் கடைசியானவர்களாய்க் காணப்படப்பண்ணினார்; நாங்கள் உலகத்துக்கும் தூதருக்கும் மனுஷருக்கும் வேடிக்கையானோம். | 1கொரி 15:30-32 2கொரி 1:8-10 2கொரி 4:8-12 2கொரி 6:9 பிலிப் 1:29 பிலிப் 1:30 1தெச 3:3 |
| 10 | நாங்கள் கிறிஸ்துவினிமித்தம் பைத்தியக்காரர், நீங்கள் கிறிஸ்துவில் புத்திசாலிகள்; நாங்கள் பலவீனர், நீங்கள் பலவான்கள்; நீங்கள் கனவான்கள், நாங்கள் கனவீனர். | 1கொரி 1:1-3 1கொரி 1:18-20 1கொரி 1:26-28 1கொரி 2:3 1கொரி 2:14 1கொரி 3:18 2இரா 9:11 ஓசி 9:7 அப் 17:18 அப் 17:32 அப் 26:24 |
| 11 | இந்நேரம்வரைக்கும் பசியுள்ளவர்களும், தாகமுள்ளவர்களும், நிர்வாணிகளும், குட்டுண்டவர்களும், தங்க இடமில்லாதவர்களுமாயிருக்கிறோம். | 1கொரி 9:4 2கொரி 4:8 2கொரி 6:4 2கொரி 6:5 2கொரி 11:26 2கொரி 11:27 பிலிப் 4:12 |
| 12 | எங்கள் கைகளினாலே வேலைசெய்து, பாடுபடுகிறோம்; வையப்பட்டு, ஆசீர்வதிக்கிறோம்; துன்பப்பட்டு, சகிக்கிறோம். | 1கொரி 9:6 அப் 18:3 அப் 20:34 1தெச 2:9 2தெச 3:8 1தீமோ 4:10 |
| 13 | தூஷிக்கப்பட்டு, வேண்டிக்கொள்ளுகிறோம்; இந்நாள்வரைக்கும் உலகத்தின் குப்பையைப்போலவும், எல்லாரும் துடைத்துப்போடுகிற அழுக்கைப்போலவுமானோம். | புலம் 3:45 அப் 22:22 |
| 14 | உங்களை வெட்கப்படுத்தும்படிக்கு நான் இவைகளை எழுதவில்லை, நீங்கள் எனக்குப் பிரியமான பிள்ளைகளென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன். | 1கொரி 9:15 2கொரி 7:3 2கொரி 12:19 |
| 15 | கிறிஸ்துவுக்குள் பதினாயிரம் உபாத்தியாயர்கள் உங்களுக்கு இருந்தாலும், தகப்பன்மார் அநேகர் உங்களுக்கு இல்லையே; கிறிஸ்து இயேசுவுக்குள் சுவிசேஷத்தினால் நான் உங்களைப் பெற்றேன். | 2தீமோ 4:3 |
| 16 | ஆகையால், என்னைப் பின்பற்றுகிறவர்களாகுங்களென்று உங்களுக்குப் புத்தி சொல்லுகிறேன். | 1கொரி 11:1 யோவா 10:4 யோவா 10:5 பிலிப் 3:17 1தெச 1:6 2தெச 3:9 எபிரெ 13:7 1பேது 5:3 |
| 17 | இதினிமித்தமாக, எனக்குப் பிரியமும், கர்த்தருக்குள் உண்மையுமுள்ள என் குமாரனாகிய தீமோத்தேயுவை உங்களிடத்தில் அனுப்பினேன்; நான் எங்கும் எந்தச் சபையிலும் போதித்துவருகிற பிரகாரம் கிறிஸ்துவுக்குள்ளான என் நடக்கைகளை அவன் உங்களுக்கு ஞாபகப்படுத்துவான். | 1கொரி 16:10 அப் 19:21 அப் 19:22 பிலிப் 2:19 1தெச 3:2 1தெச 3:3 |
| 18 | நான் உங்களிடத்திற்கு வருகிறதில்லை என்கிறதற்காகச் சிலர் இறுமாப்படைந்திருக்கிறார்கள். | 1கொரி 4:6-8 1கொரி 5:2 |
| 19 | ஆகிலும் கர்த்தருக்குச் சித்தமானால் நான் சீக்கிரமாய் உங்களிடத்திற்கு வந்து, இறுமாப்படைந்திருக்கிறவர்களுடைய பேச்சையல்ல, அவர்களுடைய பெலத்தையே அறிந்துகொள்வேன். | 1கொரி 14:5 அப் 19:21 2கொரி 1:15 2கொரி 1:17 2கொரி 1:23 2கொரி 2:1 2கொரி 2:2 |
| 20 | தேவனுடைய ராஜ்யம் பேச்சிலே அல்ல, பெலத்திலே உண்டாயிருக்கிறது. | 1கொரி 1:24 1கொரி 2:4 ரோம 1:16 ரோம 14:17 ரோம 15:19 2கொரி 10:4 2கொரி 10:5 1தெச 1:5 |
| 21 | உங்களுக்கு என்ன வேண்டும்? நான் பிரம்போடு உங்களிடத்தில் வரவேண்டுமோ? அல்லது அன்போடும் சாந்தமுள்ள ஆவியோடும் வரவேண்டுமோ? | 1கொரி 5:5 2கொரி 10:2 2கொரி 10:6 2கொரி 10:8 2கொரி 12:20 2கொரி 12:21 2கொரி 13:2 2கொரி 3:10 |