| 1 | மேலும், சகோதரரே, நான் உங்களை ஆவிக்குரியவர்களென்று எண்ணி உங்களுடனே பேசக்கூடாமல், மாம்சத்துக்குரியவர்களென்றும், கிறிஸ்துவுக்குள் குழந்தைகளென்றும் எண்ணிப் பேசவேண்டியதாயிற்று. | 1கொரி 2:6 1கொரி 2:15 கலா 6:1 |
| 2 | நீங்கள் பெலனில்லாதவர்களானதால், உங்களுக்குப் போஜனங்கொடாமல், பாலைக் குடிக்கக்கொடுத்தேன்; இன்னமும் நீங்கள் மாம்சத்துக்குரியவர்களாயிருக்கிறபடியால், இப்பொழுதும் உங்களுக்குப் பெலனில்லை. | எபிரெ 5:12-14 1பேது 2:2 |
| 3 | பொறாமையும் வாக்குவாதமும் பேதகங்களும் உங்களுக்குள் இருக்கிறபடியால், நீங்கள் மாம்சத்திற்குரியவர்களாயிருந்து மனுஷமார்க்கமாய் நடக்கிறீர்களல்லவா? | 1கொரி 1:11 1கொரி 6:1-8 1கொரி 11:18 2கொரி 12:20 கலா 5:15 கலா 5:19-21 யாக் 3:16 யாக் 4:1 யாக் 4:2 |
| 4 | ஒருவன் நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், வேறொருவன் நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால் நீங்கள் மாம்சத்திற்குரியவர்களல்லவா? | 1கொரி 1:12 1கொரி 4:6 |
| 5 | பவுல் யார்? அப்பொல்லோ யார்? கர்த்தர் அவனவனுக்கு அருள் அளித்தபடியே நீங்கள் விசுவாசிக்கிறதற்கு ஏதுவாயிருந்த ஊழியக்காரர்தானே. | 1கொரி 3:7 1கொரி 4:1 1கொரி 4:2 லூக் 1:2 ரோம 10:14 ரோம 10:15 2கொரி 3:6 2கொரி 4:5 2கொரி 4:7 2கொரி 6:1 2கொரி 6:4 2கொரி 11:23 |
| 6 | நான் நட்டேன், அப்பொல்லோ நீர்ப்பாய்ச்சினான், தேவனே விளையச்செய்தார். | 1கொரி 3:9 1கொரி 3:10 1கொரி 4:14 1கொரி 4:15 1கொரி 9:1 1கொரி 9:7-11 1கொரி 15:1-11 அப் 18:4-11 2கொரி 10:14 2கொரி 10:15 |
| 7 | அப்படியிருக்க, நடுகிறவனாலும் ஒன்றுமில்லை, நீர்ப்பாய்ச்சுகிறவனாலும் ஒன்றுமில்லை, விளையச்செய்கிற தேவனாலே எல்லாமாகும். | 1கொரி 13:2 சங் 115:1 ஏசா 40:17 ஏசா 41:29 தானி 4:35 யோவா 15:5 2கொரி 12:9 கலா 6:3 |
| 8 | மேலும் நடுகிறவனும் நீர்ப்பாய்ச்சுகிறவனும் ஒன்றாயிருக்கிறார்கள்; அவனவன் தன்தன் வேலைக்குத் தக்கதாய்க் கூலியைப் பெறுவான். | 1கொரி 3:9 1கொரி 4:6 யோவா 4:36-38 |
| 9 | நாங்கள் தேவனுக்கு உடன்வேலையாட்களாயிருக்கிறோம்; நீங்கள் தேவனுடைய பண்ணையும், தேவனுடைய மாளிகையுமாயிருக்கிறீர்கள். | 1கொரி 3:6 மத் 9:37 மாற் 16:20 2கொரி 6:1 3யோவா 1:8 |
| 10 | எனக்கு அளிக்கப்பட்ட தேவகிருபையின்படியே புத்தியுள்ள சிற்பாசாரியைப்போல அஸ்திபாரம் போட்டேன். வேறொருவன் அதின்மேல் கட்டுகிறான். அவனவன் தான் அதின்மேல் இன்னவிதமாய்க் கட்டுகிறானென்று பார்க்கக்கடவன். | 1கொரி 3:5 1கொரி 15:10 ரோம 1:5 ரோம 12:3 ரோம 15:15 எபே 3:2-8 கொலோ 1:29 1தீமோ 1:11-14 1பேது 4:11 |
| 11 | போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசுகிறிஸ்துவை அல்லாமல் வேறே அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது. | ஏசா 28:16 மத் 16:18 அப் 4:11 அப் 4:12 2கொரி 11:2-4 கலா 1:7-9 எபே 2:20 2தீமோ 2:19 1பேது 2:6-8 |
| 12 | ஒருவன் அந்த அஸ்திபாரத்தின்மேல் பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கல், மரம், புல், வைக்கோல் ஆகிய இவைகளைக் கட்டினால், | சங் 19:10 சங் 119:72 நீதி 8:10 நீதி 16:16 ஏசா 60:17 1தீமோ 4:6 2தீமோ 2:20 1பேது 1:7 வெளிப் 3:18 |
| 13 | அவனவனுடைய வேலைப்பாடு வெளியாகும்; நாளானது அதை விளங்கப்பண்ணும். ஏனெனில் அது அக்கினியினாலே வெளிப்படுத்தப்படும்; அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளதென்று அக்கினியானது பரிசோதிக்கும். | 1கொரி 3:14 1கொரி 3:15 1கொரி 4:5 2தீமோ 3:9 |
| 14 | அதின்மேல் ஒருவன் கட்டினது நிலைத்தால், அவன் கூலியைப் பெறுவான். | 1கொரி 3:8 1கொரி 4:5 தானி 12:3 மத் 24:45-47 மத் 25:21-23 1தெச 2:19 2தீமோ 4:7 1பேது 5:1 1பேது 5:4 வெளிப் 2:8-11 |
| 15 | ஒருவன் கட்டினது வெந்துபோனால், அவன் நஷ்டமடைவான்; அவனோ இரட்சிக்கப்படுவான்; அதுவும் அக்கினியிலகப்பட்டுத் தப்பினது போலிருக்கும். | 1கொரி 3:12 1கொரி 3:13 வெளிப் 3:18 |
| 16 | நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா? | 1கொரி 5:6 1கொரி 6:2 1கொரி 6:3 1கொரி 6:9 1கொரி 6:16 1கொரி 6:19 1கொரி 9:13 1கொரி 9:24 ரோம 6:3 யாக் 4:4 |
| 17 | ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால், அவனைத் தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம். | 1கொரி 6:18-20 லேவி 15:31 லேவி 20:3 எண் 19:20 சங் 74:3 சங் 79:1 எசே 5:11 எசே 7:22 எசே 23:38 எசே 23:39 செப் 3:4 |
| 18 | ஒருவனும் தன்னைத்தானே வஞ்சியாதிருப்பானாக; இவ்வுலகத்திலே உங்களில் ஒருவன் தன்னை ஞானியென்று எண்ணினால் அவன் ஞானியாகும்படிக்குப் பைத்தியக்காரனாகக்கடவன். | 1கொரி 6:9 1கொரி 15:33 நீதி 5:7 ஏசா 44:20 எரே 37:9 லூக் 21:8 கலா 6:3 கலா 6:7 எபே 5:6 2தீமோ 3:13 தீத் 3:3 யாக் 1:22 யாக் 1:26 1யோவா 1:8 |
| 19 | இவ்வுலகத்தின் ஞானம் தேவனுக்கு முன்பாகப் பைத்தியமாயிருக்கிறது. அப்படியே, ஞானிகளை அவர்களுடைய தந்திரத்திலே பிடிக்கிறாரென்றும், | 1கொரி 1:19 1கொரி 1:20 1கொரி 2:6 ஏசா 19:11-14 ஏசா 29:14-16 ஏசா 44:25 ரோம 1:21 ரோம 1:22 |
| 20 | ஞானிகளுடைய சிந்தனைகள் வீணாயிருக்கிறதென்று கர்த்தர் அறிந்திருக்கிறாரென்றும் எழுதியிருக்கிறது. | சங் 94:11 |
| 21 | இப்படியிருக்க, ஒருவனும் மனுஷரைக்குறித்து மேன்மைபாராட்டாதிருப்பானாக; எல்லாம் உங்களுடையதே; | 1கொரி 3:4-7 1கொரி 1:12-17 1கொரி 4:6 எரே 9:23 எரே 9:24 |
| 22 | பவுலாகிலும், அப்பொல்லோவாகிலும், கேபாவாகிலும், உலகமாகிலும், ஜீவனாகிலும் மரணமாகிலும், நிகழ்காரியங்களாகிலும், வருங்காரியங்களாகிலும், எல்லாம் உங்களுடையது; | 1கொரி 3:5-8 1கொரி 9:19-22 2கொரி 4:5 எபே 4:11 எபே 4:12 |
| 23 | நீங்கள் கிறிஸ்துவினுடையவர்கள்; கிறிஸ்து தேவனுடையவர். | 1கொரி 6:19 1கொரி 6:20 1கொரி 7:22 1கொரி 15:23 யோவா 17:9 யோவா 17:10 ரோம 14:8 2கொரி 10:7 கலா 3:29 கலா 5:24 |