| 1 | சகோதரரே, நான் உங்களிடத்தில் வந்தபோது, தேவனைப்பற்றிய சாட்சியைச் சிறந்த வசனிப்போடாவது ஞானத்தோடாவது அறிவிக்கிறவனாக வரவில்லை. | அப் 18:1-4 |
| 2 | இயேசுகிறிஸ்துவை, சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி, வேறொன்றையும் உங்களுக்குள்ளே அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன். | 1கொரி 1:22-25 யோவா 17:3 கலா 3:1 கலா 6:14 பிலிப் 3:8-10 |
| 3 | அல்லாமலும் நான் பலவீனத்தோடும் பயத்தோடும் மிகுந்த நடுக்கத்தோடும் உங்களிடத்தில் இருந்தேன். | 1கொரி 4:10-13 அப் 17:1 அப் 17:6-12 அப் 20:18 அப் 20:19 2கொரி 4:1 2கொரி 4:7-12 2கொரி 4:16-12 2கொரி 6:4 2கொரி 7:5 2கொரி 10:1 2கொரி 10:10 2கொரி 11:29 2கொரி 11:30 2கொரி 12:5-10 2கொரி 13:4 கலா 4:13 கலா 4:14 |
| 4 | உங்கள் விசுவாசம் மனுஷருடைய ஞானத்திலல்ல, தேவனுடைய பெலத்தில் நிற்கும்படிக்கு, | அப் 20:27 |
| 5 | என் பேச்சும் என் பிரசங்கமும் மனுஷஞானத்திற்குரிய நயவசனமுள்ளதாயிராமல், ஆவியினாலும் பெலத்தினாலும் உறுதிப்படுத்தப்பட்டதாயிருந்தது. | 1கொரி 1:17 1கொரி 3:6 அப் 16:14 2கொரி 4:7 2கொரி 6:7 |
| 6 | அப்படியிருந்தும், தேறினவர்களுக்குள்ளே ஞானத்தைப் பேசுகிறோம்; இப்பிரபஞ்சத்தின் ஞானத்தையல்ல, அழிந்துபோகிறவர்களாகிய இப்பிரபஞ்சத்தின் பிரபுக்களுடைய ஞானத்தையுமல்ல, | 1கொரி 14:20 யோபு 1:1 சங் 37:37 மத் 5:48 மத் 19:21 2கொரி 13:11 எபே 4:11-13 பிலிப் 3:12-15 கொலோ 4:12 எபிரெ 5:14 யாக் 3:2 1பேது 5:10 |
| 7 | உலகத்தோற்றத்திற்குமுன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம். | சங் 78:2 ஏசா 48:6 ஏசா 48:7 மத் 11:25 மத் 13:35 ரோம 16:25 ரோம 16:26 எபே 1:4 எபே 3:4-9 கொலோ 1:26 கொலோ 1:27 2தீமோ 1:9 1பேது 1:11 வெளிப் 13:8 |
| 8 | அதை இப்பிரபஞ்சத்துப் பிரபுக்களில் ஒருவனும் அறியவில்லை; அறிந்தார்களானால், மகிமையின் கர்த்தரை அவர்கள் சிலுவையில் அறையமாட்டார்களே. | 1கொரி 2:6 1கொரி 1:26-28 மத் 11:25 யோவா 7:48 |
| 9 | எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை; | ஏசா 64:4 யோவா 3:16 1பேது 1:12 |
| 10 | நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும் ஆராய்ந்திருக்கிறார். | 1கொரி 14:30 ஆமோ 3:7 மத் 11:25-27 மத் 13:11 மத் 16:17 லூக் 2:26 லூக் 10:21 எபே 3:3 எபே 3:5 1பேது 1:12 வெளிப் 1:1 |
| 11 | மனுஷனிலுள்ள ஆவியேயன்றி மனுஷரில் எவன் மனுஷனுக்குரியவைகளை அறிவான்? அப்படிப்போல, தேவனுடைய ஆவியேயன்றி, ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான். | நீதி 14:10 நீதி 20:5 நீதி 20:27 எரே 17:9 |
| 12 | நாங்களோ உலகத்தின் ஆவியைப் பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம். | 1கொரி 2:6 ரோம 8:1 ரோம 8:5 ரோம 8:6 2கொரி 4:4 எபே 2:2 யாக் 4:5 1யோவா 4:4 1யோவா 4:5 1யோவா 5:19 வெளிப் 12:9 |
| 13 | அவைகளை நாங்கள் மனுஷஞானம் போதிக்கிற வார்த்தைகளாலே பேசாமல், பரிசுத்த ஆவி போதிக்கிற வார்த்தைகளாலே பேசி, ஆவிக்குரியவைகளை ஆவிக்குரியவைகளோடே சம்பந்தப்படுத்திக்காண்பிக்கிறோம். | 1கொரி 2:4 1கொரி 1:17 2பேது 1:16 |
| 14 | ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான். | 1கொரி 15:44 1கொரி 15:46 யாக் 3:15 யூதா 1:19 |
| 15 | ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்; ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான். | 1கொரி 3:1 1கொரி 14:37 கலா 6:1 கொலோ 1:9 |
| 16 | கர்த்தருக்குப் போதிக்கத்தக்கதாக அவருடைய சிந்தையை அறிந்தவன் யார்? எங்களுக்கோ கிறிஸ்துவின் சிந்தை உண்டாயிருக்கிறது. | யோபு 15:8 யோபு 22:2 யோபு 40:2 ஏசா 40:13 ஏசா 40:14 எரே 23:18 ரோம 11:34 |