| 1 | உங்களுக்குள்ளே விபசாரம் உண்டென்று பிரசித்தமாய்ச் சொல்லப்படுகிறதே; ஒருவன் தன் தகப்பனுடைய மனைவியை வைத்துக்கொண்டிருக்கிறானே; அது அஞ்ஞானிகளுக்குள்ளும் சொல்லப்படாத விபசாரமாயிருக்கிறதே. | 1கொரி 1:11 ஆதி 37:2 1சாமு 2:24 |
| 2 | இப்படிப்பட்ட காரியஞ்செய்தவனை நீங்கள் உங்களைவிட்டு நீக்காமலும் துக்கப்படாமலும், இறுமாப்படைந்திருக்கிறீர்கள். | 1கொரி 5:6 1கொரி 4:6-8 1கொரி 4:18-8 |
| 3 | நான் சரீரத்தினாலே உங்களுக்குத் தூரமாயிருந்தும், ஆவியினாலே உங்களோடேகூட இருக்கிறவனாய், இப்படிச் செய்தவனைக்குறித்து நான் கூட இருக்கிறதுபோல, | 2கொரி 10:1 2கொரி 10:11 2கொரி 13:2 கொலோ 2:5 1தெச 2:17 |
| 4 | நீங்களும், என்னுடைய ஆவியும், நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் அதிகாரத்தோடே கூடிவந்திருக்கையில், | அப் 3:6 அப் 4:7-12 அப் 4:30-12 அப் 16:18 எபே 5:20 கொலோ 3:17 |
| 5 | அப்படிப்பட்டவனுடைய ஆவி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாளிலே இரட்சிக்கப்படும்படி, மாம்சத்தின் அழிவுக்காக, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே அவனைச் சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று தீர்ப்புச்செய்கிறேன். | 1கொரி 5:13 யோபு 2:6 சங் 109:6 2கொரி 2:6 2கொரி 10:6 2கொரி 13:10 அப் 26:18 1தீமோ 1:20 |
| 6 | நீங்கள் மேன்மைபாராட்டுகிறது நல்லதல்ல; கொஞ்சம் புளித்தமா பிசைந்தமா முழுவதையும் புளிப்பாக்குமென்று அறியீர்களா? | 1கொரி 5:2 1கொரி 3:21 1கொரி 4:18 1கொரி 4:19 யாக் 4:16 |
| 7 | ஆகையால், நீங்கள் புளிப்பில்லாதவர்களாயிருக்கிறபடியே, புதிதாய்ப் பிசைந்தமாவாயிருக்கும்படிக்கு, பழைய புளித்தமாவைப் புறம்பே கழித்துப்போடுங்கள். ஏனெனில் நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காக பலியிடப்பட்டிருக்கிறாரே. | 1கொரி 5:13 யாத் 12:15 யாத் 13:6 யாத் 13:7 எபே 4:22 கொலோ 3:5-9 |
| 8 | ஆதலால் பழைய புளித்தமாவோடே அல்ல, துர்க்குணம் பொல்லாப்பு என்னும் புளித்தமாவோடும் அல்ல, துப்புரவு உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடே பண்டிகையை ஆசரிக்கக்கடவோம். | யாத் 12:15 யாத் 13:6 லேவி 23:6 எண் 28:16 எண் 28:17 உபா 16:16 ஏசா 25:6 |
| 9 | விபசாரக்காரரோடே கலந்திருக்கக்கூடாதென்று நிருபத்தில் உங்களுக்கு எழுதினேன். | 1கொரி 5:2 1கொரி 5:7 சங் 1:1 சங் 1:2 நீதி 9:6 2கொரி 6:14 2கொரி 6:17 எபே 5:11 2தெச 3:14 |
| 10 | ஆனாலும், இவ்வுலகத்திலுள்ள விபசாரக்காரர், பொருளாசைக்காரர், கொள்ளைக்காரர், விக்கிரகாராதனைக்காரர் இவர்களோடு எவ்வளவும் கலந்திருக்கக்கூடாதென்று நான் எழுதவில்லை; அப்படியானால் நீங்கள் உலகத்தைவிட்டு நீங்கிப்போகவேண்டியதாயிருக்குமே. | 1கொரி 10:27 |
| 11 | நான் உங்களுக்கு எழுதினதென்னவென்றால், சகோதரனென்னப்பட்ட ஒருவன் விபசாரக்காரனாயாவது, பொருளாசைக்காரனாயாவது, விக்கிரகாராதனைக்காரனாயாவது, உதாசினனாயாவது, வெறியனாயாவது, கொள்ளைக்காரனாயாவது இருந்தால், அவனோடே கலந்திருக்கக்கூடாது; அப்படிப்பட்டவனுடனேகூடப் புசிக்கவுங்கூடாது. | 1கொரி 6:6 1கொரி 7:12 1கொரி 7:15 1கொரி 8:11 மத் 18:17 அப் 9:17 ரோம 16:17 2தெச 3:6 2தெச 3:14 2யோவா 1:10 |
| 12 | புறம்பே இருக்கிறவர்களைக்குறித்துத் தீர்ப்புச்செய்கிறது என் காரியமா? உள்ளே இருக்கிறவர்களைக்குறித்தல்லவோ நீங்கள் தீர்ப்புச்செய்கிறீர்கள்? | லூக் 12:14 யோவா 18:36 |
| 13 | புறம்பே இருக்கிறவர்களைக்குறித்து தேவனே தீர்ப்புச் செய்வார். ஆகையால் அந்தப் பொல்லாதவனை உங்களைவிட்டுத் தள்ளிப்போடுங்கள். | சங் 50:6 அப் 17:31 ரோம 2:16 எபிரெ 13:4 2பேது 2:9 |