| 1 | அவனைக் கொலைசெய்கிறதற்குச் சவுலும் சம்மதித்திருந்தான். அக்காலத்திலே எருசலேமிலுள்ள சபைக்கு மிகுந்த துன்பம் உண்டாயிற்று. அப்போஸ்தலர்தவிர, மற்ற யாவரும் யூதேயா சமாரியா தேசங்களில் சிதறப்பட்டுப்போனார்கள். | அப் 7:58 அப் 22:20 |
| 2 | தேவபக்தியுள்ள மனுஷர் ஸ்தேவானை எடுத்து அடக்கம்பண்ணி, அவனுக்காக மிகவும் துக்கங்கொண்டாடினார்கள். | அப் 2:5 அப் 10:2 லூக் 2:25 |
| 3 | சவுல் வீடுகள்தோறும் நுழைந்து, புருஷரையும் ஸ்திரீகளையும் இழுத்துக்கொண்டுபோய், காவலில் போடுவித்து, சபையைப் பாழாக்கிக்கொண்டிருந்தான். | அப் 7:58 அப் 9:1-13 அப் 9:21-13 அப் 22:3 அப் 22:4 அப் 26:9-11 1கொரி 15:9 கலா 1:13 பிலிப் 3:6 1தீமோ 1:13 |
| 4 | சிதறிப்போனவர்கள் எங்குந்திரிந்து, சுவிசேஷவசனத்தைப் பிரசங்கித்தார்கள். | அப் 11:19 அப் 14:2-7 மத் 10:23 1தெச 2:2 |
| 5 | அப்பொழுது பிலிப்பென்பவன் சமாரியாவிலுள்ள ஒரு பட்டணத்திற்குப் போய், அங்குள்ளவர்களுக்குக் கிறிஸ்துவைக்குறித்துப் பிரசங்கித்தான். | அப் 8:1 அப் 8:14 அப் 8:15 அப் 8:40 அப் 6:5 அப் 21:8 |
| 6 | பிலிப்பு செய்த அதிசயங்களை ஜனங்கள் கேள்விப்பட்டு கண்டு, அவனால் சொல்லப்பட்டவைகளை ஒருமனப்பட்டுக் கவனித்தார்கள். | அப் 13:44 2நாளா 30:12 மத் 20:15 மத் 20:16 யோவா 4:41 யோவா 4:42 |
| 7 | அநேகரிலிருந்த அசுத்தஆவிகள் மிகுந்த சத்தத்தோடே கூப்பிட்டு அவர்களை விட்டுப் புறப்பட்டது. அநேகந்திமிர்வாதக்காரரும் சப்பாணிகளும் குணமாக்கப்பட்டார்கள். | அப் 5:16 மத் 10:1 மாற் 9:26 மாற் 16:17 மாற் 16:18 லூக் 10:17 யோவா 14:12 எபிரெ 2:4 |
| 8 | அந்தப் பட்டணத்திலே மிகுந்த சந்தோஷம் உண்டாயிற்று. | அப் 13:48 அப் 13:52 சங் 96:10-12 சங் 98:2-6 ஏசா 35:1 ஏசா 35:2 ஏசா 42:10-12 லூக் 2:10 லூக் 2:11 ரோம 15:9-12 |
| 9 | சீமோன் என்று பேர்கொண்ட ஒரு மனுஷன் அந்தப் பட்டணத்திலே மாயவித்தைக்காரனாயிருந்து, தன்னை ஒரு பெரியவனென்று சொல்லி, சமாரியா நாட்டு ஜனங்களைப் பிரமிக்கப்பண்ணிக்கொண்டிருந்தான். | அப் 13:6 அப் 16:16-18 அப் 19:18-20 யாத் 7:11 யாத் 7:22 யாத் 8:18 யாத் 8:19 யாத் 9:11 லேவி 20:6 உபா 18:10-12 2தீமோ 3:8 2தீமோ 3:9 வெளிப் 13:13 வெளிப் 13:14 வெளிப் 22:15 |
| 10 | தேவனுடைய பெரிதான சக்தி இவன்தான் என்று எண்ணி, சிறியோர் பெரியோர் யாவரும் அவனுக்குச் செவிகொடுத்துவந்தார்கள். | 2கொரி 11:19 எபே 4:14 2பேது 2:2 வெளிப் 13:3 |
| 11 | அவன் அநேக காலமாய்த் தன்னுடைய மாயவித்தைகளினாலே அவர்களைப் பிரமிக்கப்பண்ணினதினால் அவனை மதித்துவந்தார்கள். | ஏசா 8:19 ஏசா 44:25 ஏசா 47:9-13 கலா 3:1 |
| 12 | தேவனுடைய ராஜ்யத்துக்கும் இயேசுகிறிஸ்துவினுடைய நாமத்துக்கும் ஏற்றவைகளைக்குறித்து, பிலிப்பு பிரசங்கித்ததை அவர்கள் விசுவாசித்தபோது, புருஷரும் ஸ்திரீகளும் ஞானஸ்நானம்பெற்றார்கள். | அப் 8:35-38 அப் 2:38 அப் 2:41 அப் 16:14 அப் 16:15 அப் 16:31-34 மத் 28:19 மாற் 16:15 ரோம 10:10 1பேது 3:21 |
| 13 | அப்பொழுது சீமோனும் விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்று, பிலிப்பைப்பற்றிக்கொண்டு, அவனால் நடந்த அடையாளங்களையும் பெரிய அற்புதங்களையும் கண்டு பிரமித்தான். | அப் 8:21 சங் 78:35-37 சங் 106:12 சங் 106:13 லூக் 8:13 யோவா 2:23-25 யோவா 8:30 யோவா 8:31 யாக் 2:19-26 |
| 14 | சமாரியர் தேவவசனத்தை ஏற்றுக்கொண்டதை எருசலேமிலுள்ள அப்போஸ்தலர்கள் கேள்விப்பட்டு, பேதுருவையும் யோவானையும் அவர்களிடத்திற்கு அனுப்பினார்கள். | அப் 8:1 அப் 11:1 அப் 11:19-22 அப் 15:4 1தெச 3:2 |
| 15 | இவர்கள் வந்தபொழுது அவர்களில் ஒருவனும் பரிசுத்தஆவியைப் பெறாமல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானத்தைமாத்திரம் பெற்றிருந்தவர்களாகக் கண்டு, | அப் 2:38 மத் 18:19 யோவா 14:13 யோவா 14:14 யோவா 16:23 யோவா 16:24 பிலிப் 1:19 |
| 16 | அவர்கள் பரிசுத்தஆவியைப் பெற்றுக்கொள்ளும்படி அவர்களுக்காக ஜெபம்பண்ணி, | அப் 10:44-46 அப் 11:15-17 அப் 19:2 |
| 17 | அவர்கள்மேல் கைகளை வைத்தார்கள், அப்பொழுது அவர்கள் பரிசுத்தஆவியைப் பெற்றார்கள். | அப் 8:18 அப் 6:6 அப் 9:17 அப் 13:3 அப் 19:6 எண் 8:10 எண் 27:18 1தீமோ 4:14 1தீமோ 5:22 2தீமோ 1:6 எபிரெ 6:2 |
| 18 | அப்போஸ்தலர் தங்கள் கைகளை அவர்கள்மேல் வைத்ததினால் பரிசுத்தஆவி தந்தருளப்படுகிறதைச் சீமோன் கண்டபோது, அவர்களிடத்தில் பணத்தைக் கொண்டுவந்து: | 2இரா 5:15 2இரா 5:16 2இரா 8:9 எசே 13:19 மத் 10:8 1தீமோ 6:5 |
| 19 | நான் எவன்மேல் என் கைகளை வைக்கிறேனோ, அவன் பரிசுத்த ஆவியைப் பெறத்தக்கதாக எனக்கும் இந்த அதிகாரத்தைக் கொடுக்கவேண்டும் என்றான். | அப் 8:9-11 அப் 8:17-11 மத் 18:1-3 லூக் 14:7-11 யோவா 5:44 1கொரி 15:8 1கொரி 15:9 3யோவா 1:9 |
| 20 | பேதுரு அவனை நோக்கி: தேவனுடைய வரத்தைப் பணத்தினாலே சம்பாதித்துக்கொள்ளலாமென்று நீ நினைத்தபடியால் உன் பணம் உன்னோடேகூட நாசமாய்ப் போகக்கடவது. | அப் 1:18 உபா 7:26 யோசு 7:24 யோசு 7:25 2இரா 5:26 2இரா 5:27 தானி 5:17 ஆபகூ 2:9 ஆபகூ 2:10 சகரி 5:4 மத் 27:3-5 1தீமோ 6:9 யாக் 5:3 2பேது 2:14-17 வெளிப் 18:15 |
| 21 | உன் இருதயம் தேவனுக்குமுன்பாகச் செம்மையாயிராதபடியால், இந்த விஷயத்திலே உனக்குப் பங்குமில்லை பாகமுமில்லை. | யோசு 22:25 எசே 14:3 வெளிப் 20:6 வெளிப் 22:19 |
| 22 | ஆகையால் நீ உன் துர்க்குணத்தைவிட்டு மனந்திரும்பி, தேவனை நோக்கி வேண்டிக்கொள்; ஒருவேளை உன் இருதயத்தின் எண்ணம் உனக்கு மன்னிக்கப்படலாம். | அப் 2:38 அப் 3:19 அப் 17:30 ரோம 2:4 2தீமோ 2:25 2தீமோ 2:26 வெளிப் 2:21 |
| 23 | நீ கசப்பான பிச்சிலும் பாவக்கட்டிலும் அகப்பட்டிருக்கிறதாகக் காண்கிறேன் என்றான். | உபா 29:18-20 உபா 32:32 உபா 32:33 யோபு 20:14 எரே 4:18 எரே 9:15 புலம் 3:5 புலம் 3:19 எபிரெ 12:15 |
| 24 | அதற்குச் சீமோன்: நீங்கள் சொன்ன காரியங்களில் ஒன்றும் எனக்கு நேரிடாதபடிக்கு, எனக்காகக் கர்த்தரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றான். | ஆதி 20:7 ஆதி 20:17 யாத் 8:8 யாத் 10:17 யாத் 12:32 எண் 21:7 1சாமு 12:19 1சாமு 12:23 1இரா 13:6 எஸ்றா 6:10 எஸ்றா 8:23 யோபு 42:8 யாக் 5:16 |
| 25 | இவ்விதமாய் அவர்கள் கர்த்தருடைய வசனத்தைச் சாட்சியாய் அறிவித்துச் சொன்னபின்பு, சமாரியருடைய அநேக கிராமங்களில் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, எருசலேமுக்குத் திரும்பி வந்தார்கள். | அப் 1:8 அப் 18:5 அப் 20:21 அப் 26:22 அப் 26:23 அப் 28:23 அப் 28:28 அப் 28:31 யோவா 15:27 1பேது 5:12 |
| 26 | பின்பு கர்த்தருடைய தூதன் பிலிப்பை நோக்கி: நீ எழுந்து, தெற்கு முகமாய் எருசலேமிலிருந்து காசா பட்டணத்துக்குப் போகிற வனாந்தரமார்க்கமாய்ப் போ என்றான். | அப் 5:19 அப் 10:7 அப் 10:22 அப் 12:8-11 அப் 12:23-11 அப் 27:23 2இரா 1:3 எபிரெ 1:14 |
| 27 | அந்தப்படி அவன் எழுந்துபோனான். அப்பொழுது எத்தியோப்பியருடைய ராஜஸ்திரீயாகிய கந்தாகே என்பவளுக்கு மந்திரியும் அவளுடைய பொக்கிஷமெல்லாவற்றிற்கும் தலைவனுமாயிருந்த எத்தியோப்பியனாகிய ஒருவன் பணிந்துகொள்ளும்படி எருசலேமுக்கு வந்திருந்து; | மத் 21:2-6 மாற் 14:13-16 யோவா 2:5-8 எபிரெ 11:8 |
| 28 | ஊருக்குத் திரும்பிப்போகும்போது, தன் இரதத்திலே உட்கார்ந்து, ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமத்தை வாசித்துக் கொண்டிருந்தான். | அப் 17:11 அப் 17:12 உபா 6:6 உபா 6:7 உபா 11:18-20 உபா 17:18 உபா 17:19 யோசு 1:8 சங் 1:2 சங் 1:3 சங் 119:99 சங் 119:111 நீதி 2:1-6 நீதி 8:33 நீதி 8:34 யோவா 5:39 யோவா 5:40 கொலோ 3:16 2தீமோ 3:15-17 |
| 29 | ஆவியானவர்: நீ போய், அந்த இரதத்துடனே சேர்ந்துகொள் என்று பிலிப்புடனே சொன்னார். | அப் 10:19 அப் 11:12 அப் 13:2-4 அப் 16:6 அப் 16:7 அப் 20:22 அப் 20:23 ஏசா 65:24 ஓசி 6:3 1கொரி 12:11 1தீமோ 4:1 |
| 30 | அப்பொழுது பிலிப்பு ஓடிப்போய்ச்சேர்ந்து, அவன் ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமத்தை வாசிக்கிறதைக் கேட்டு: நீர் வாசிக்கிறவைகளின் கருத்து உமக்குத் தெரியுமா என்றான். | அப் 8:27 சங் 119:32 பிரச 9:10 யோவா 4:34 |
| 31 | அதற்கு அவன்: ஒருவன் எனக்குத் தெரிவிக்காவிட்டால் அது எனக்கு எப்படித் தெரியும் என்று சொல்லி; பிலிப்பு ஏறி, தன்னோடே உட்காரும்படி அவனை வேண்டிக்கொண்டான். | சங் 25:8 சங் 25:9 சங் 73:16 சங் 73:17 சங் 73:22 நீதி 30:2 நீதி 30:3 ஏசா 29:18 ஏசா 29:19 ஏசா 35:8 மத் 18:3 மத் 18:4 மாற் 10:15 ரோம 10:14 1கொரி 3:18 1கொரி 8:2 1கொரி 14:36 1கொரி 14:37 யாக் 1:10 யாக் 1:21 1பேது 2:1 1பேது 2:2 |
| 32 | அவன் வாசித்த வேதவாக்கியம் என்னவென்றால்: அவர் ஒரு ஆட்டைப்போல அடிக்கப்படுவதற்குக் கொண்டுபோகப்பட்டார்; மயிர் கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டுக்குட்டியைப்போல அவர் தமது வாயைத் திறவாதிருந்தார். | ஏசா 53:7 ஏசா 53:8 |
| 33 | அவர் தம்மைத் தாழ்த்தினபோது அவருடைய நியாயம் எடுத்துப்போடப்பட்டது; அவருடைய ஜீவன் பூமியிலிருந்து எடுபட்டுப்போயிற்று; அவருடைய வம்சத்தை யாராலே சொல்லிமுடியும் என்பதே. | பிலிப் 2:8 பிலிப் 2:9 |
| 34 | மந்திரி பிலிப்பை நோக்கி: தீர்க்கதரிசி யாரைக்குறித்து இதைச் சொல்லுகிறார்? தம்மைக்குறித்தோ, வேறொருவரைக்குறித்தோ? எனக்குச் சொல்லவேண்டும் என்று கேட்டுக்கொண்டான். | மத் 2:2-4 மத் 13:36 மத் 15:15 |
| 35 | அப்பொழுது பிலிப்பு பேசத்தொடங்கி, இந்த வேதவாக்கியத்தை முன்னிட்டு இயேசுவைக்குறித்து அவனுக்குப் பிரசங்கித்தான். | அப் 10:34 மத் 5:2 2கொரி 6:11 |
| 36 | இவ்விதமாய் அவர்கள் வழிநடந்துபோகையில், தண்ணீருள்ள ஓரிடத்திற்கு வந்தார்கள். அப்பொழுது மந்திரி: இதோ, தண்ணீர் இருக்கிறதே, நான் ஞானஸ்நானம் பெறுகிறதற்குத் தடையென்ன என்றான். | அப் 10:47 எசே 36:25 யோவா 3:5 யோவா 3:23 தீத் 3:5 தீத் 3:6 1யோவா 5:6 |
| 37 | அதற்குப் பிலிப்பு: நீர் முழு இருதயத்தோடும் விசுவாசித்தால் தடையில்லையென்றான். அப்பொழுது அவன்: இயேசு கிறிஸ்துவைத் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறேன் என்று சொல்லி; | அப் 8:12 அப் 8:13 அப் 8:21 அப் 2:38 அப் 2:39 மத் 28:19 மாற் 16:16 ரோம 10:10 |
| 38 | இரதத்தை நிறுத்தச்சொன்னான். அப்பொழுது பிலிப்பும் மந்திரியும் ஆகிய இருவரும் தண்ணீரில் இறங்கினார்கள், பிலிப்பு அவனுக்கு ஞானஸ்நானங்கொடுத்தான். | யோவா 3:22 யோவா 3:23 யோவா 4:1 |
| 39 | அவர்கள் தண்ணீரிலிருந்து கரையேறினபொழுது, கர்த்தருடைய ஆவியானவர் பிலிப்பைக் கொண்டுபோய்விட்டார். மந்திரி அப்புறம் அவனைக் காணாமல், சந்தோஷத்தோடே தன் வழியே போனான். | மத் 3:16 மாற் 1:10 |
| 40 | பிலிப்பு ஆசோத்திலே காணப்பட்டு, அவ்விடத்திலிருந்து பிரயாணம்பண்ணி, செசரியாவுக்கு வருகிறவரையில் சகல பட்டணங்களிலும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்துக்கொண்டுவந்தான். | யோசு 15:46 யோசு 15:47 1சாமு 5:1 சகரி 9:6 |