| 1 | பிரதான ஆசாரியன் அவனை நோக்கி: காரியம் இப்படியாயிருக்கிறது என்று கேட்டான். | அப் 6:13 அப் 6:14 மத் 26:61 மத் 26:62 மாற் 14:58-60 யோவா 18:19-21 யோவா 18:33-35 |
| 2 | அதற்கு அவன்: சகோதரரே, பிதாக்களே, கேளுங்கள். நம்முடைய பிதாவாகிய ஆபிரகாம் காரானூரிலே குடியிருக்கிறதற்கு முன்னமே மெசொப்பொத்தாமியா நாட்டிலே இருக்கும்போது மகிமையின் தேவன் அவனுக்குத் தரிசனமாகி: | அப் 22:1 அப் 23:7 |
| 3 | நீ உன் தேசத்தையும் உன் இனத்தையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்கு வா என்றார். | ஆதி 12:1 மத் 10:37 லூக் 14:33 2கொரி 6:17 எபிரெ 11:8 |
| 4 | அப்பொழுது அவன் கல்தேயர் தேசத்தைவிட்டுப் புறப்பட்டு, காரானூரிலே வாசம்பண்ணினான். அவனுடைய தகப்பன் மரித்தபின்பு, அவ்விடத்தை விட்டு நீங்கள் இப்பொழுது குடியிருக்கிற இத்தேசத்திற்கு அவனை அழைத்துக்கொண்டுவந்து குடியிருக்கும்படி செய்தார். | ஆதி 11:31 ஆதி 11:32 ஆதி 12:4 ஆதி 12:5 ஏசா 41:2 ஏசா 41:9 |
| 5 | இதிலே ஒரு அடி நிலத்தையாகிலும் அவனுடைய கையாட்சிக்குக் கொடாமலிருக்கையில், அவனுக்குப் பிள்ளையில்லாதிருக்கும்போது: உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் இதைச் சுதந்தரமாகத் தருவேன் என்று அவனுக்கு வாக்குத்தத்தம்பண்ணினார். | ஆதி 23:4 சங் 105:11 சங் 105:12 எபிரெ 11:9 எபிரெ 11:10 எபிரெ 11:13-16 |
| 6 | அந்தப்படி தேவன் அவனை நோக்கி: உன் சந்ததியார் அந்நிய தேசத்தில் சஞ்சரிப்பார்கள்; அத்தேசத்தார் அவர்களை அடிமைகளாக்கி, நானூறு வருஷம் துன்பப்படுத்துவார்கள். | ஆதி 15:13 ஆதி 15:16 |
| 7 | அவர்களை அடிமைப்படுத்தும் ஜனத்தையோ நான் ஆக்கினைக்குட்படுத்துவேன். அதற்குப்பின்பு அவர்கள் புறப்பட்டுவந்து இவ்விடத்திலே எனக்கு ஆராதனை செய்வார்கள் என்றார். | ஆதி 15:14-16 யாத் 7:1-14 நெகே 9:9-11 சங் 74:12-14 சங் 78:43-51 சங் 105:27-36 சங் 135:8 சங் 135:9 சங் 136:10-15 ஏசா 51:9 ஏசா 51:10 |
| 8 | மேலும் விருத்தசேதன உடன்படிக்கையையும் அவனுக்கு ஏற்படுத்தினார். அந்தப்படியே அவன் ஈசாக்கைப் பெற்றபோது, எட்டாம் நாளிலே அவனை விருத்தசேதனம்பண்ணினான். ஈசாக்கு யாக்கோபையும், யாக்கோபு பன்னிரண்டு கோத்திரப்பிதாக்களையும் பெற்றார்கள். | ஆதி 17:9-14 யோவா 7:22 ரோம 4:10 கலா 3:15 கலா 3:17 |
| 9 | அந்தக் கோத்திரப்பிதாக்கள் பொறாமைகொண்டு யோசேப்பை எகிப்துக்குக் கொண்டுபோகும்படியாக விற்றுப்போட்டார்கள். | ஆதி 37:4-11 ஆதி 49:23 மத் 27:18 |
| 10 | தேவனோ அவனுடனேகூட இருந்து, எல்லா உபத்திரவங்களினின்றும் அவனை விடுவித்து, எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் சமுகத்திலே அவனுக்குக் கிருபையையும் ஞானத்தையும் அருளினார்; அந்த ராஜா அவனை எகிப்துதேசத்திற்கும் தன் வீடனைத்திற்கும் அதிகாரியாக ஏற்படுத்தினான். | ஆதி 48:16 சங் 22:24 சங் 34:17-19 சங் 37:40 சங் 40:1-3 2தீமோ 4:18 யாக் 5:11 வெளிப் 7:14 |
| 11 | பின்பு எகிப்து கானான் என்னும் தேசங்களிலெங்கும் பஞ்சமும் மிகுந்த வருத்தமும் உண்டாகி, நம்முடைய பிதாக்களுக்கு ஆகாரம் கிடையாமற்போயிற்று. | ஆதி 41:54-57 ஆதி 43:1 ஆதி 45:5 ஆதி 45:6 ஆதி 45:11 ஆதி 47:13-15 சங் 105:16 |
| 12 | அப்பொழுது எகிப்திலே தானியம் உண்டென்று யாக்கோபு கேள்விப்பட்டு, நம்முடைய பிதாக்களை முதலாந்தரம் அனுப்பினான். | ஆதி 42:1-24 ஆதி 43:2 |
| 13 | இரண்டாந்தரம் யோசேப்பு தன்னுடைய சகோதரருக்குத் தன்னைத் தெரியப்படுத்தினான். யோசேப்புடைய வம்சமும் பார்வோனுக்குத் தெரியவந்தது. | ஆதி 45:1-18 ஆதி 46:31-34 ஆதி 47:1-10 |
| 14 | பின்பு யோசேப்பு, தன்னுடைய தகப்பன் யாக்கோபும் தன்னுடைய இனத்தார் யாவருமாகிய, எழுபத்தைந்துபேரை அழைக்க அனுப்பினான். | ஆதி 45:9-11 சங் 105:23 |
| 15 | அந்தப்படி யாக்கோபு எகிப்துக்குப் போனான். அவனும் நம்முடைய பிதாக்களும் மரித்து, | ஆதி 46:3-7 எண் 20:15 உபா 10:22 உபா 26:5 யோசு 24:4 |
| 16 | அங்கேயிருந்து சீகேமுக்குக் கொண்டுவரப்பட்டு, ஆபிரகாம் சீகேமின் தகப்பனாகிய ஏமோருடைய சந்ததியாரிடத்தில் ரொக்கக்கிரயத்துக்கு வாங்கியிருந்த கல்லறையில் வைக்கப்பட்டார்கள். | யாத் 13:19 யோசு 24:32 |
| 17 | ஆபிரகாமுக்கு தேவன் ஆணையிட்டு அருளின வாக்குத்தத்தம் நிறைவேறுங்காலம் சமீபித்தபோது, | அப் 7:6 ஆதி 15:13-16 2பேது 3:8 2பேது 3:9 |
| 18 | யோசேப்பை அறியாத வேறொரு ராஜா தோன்றின காலமளவும், ஜனங்கள் எகிப்திலே பலுகிப் பெருகினார்கள். | யாத் 1:8 |
| 19 | அவன் நம்முடைய ஜனங்களை வஞ்சனையாய் நடப்பித்து, நம்முடைய பிதாக்களின் குழந்தைகள் உயிரோடிராதபடிக்கு அவர்கள் அவைகளை வெளியே போட்டுவிடும்படி செய்து, அவர்களை உபத்திரவப்படுத்தினான். | யாத் 1:9-22 சங் 83:4 சங் 83:5 சங் 105:25 சங் 129:1-3 வெளிப் 12:4 வெளிப் 12:5 |
| 20 | அக்காலத்திலே மோசே பிறந்து, திவ்விய சவுந்தரியமுள்ளவனாயிருந்து, மூன்று மாதமளவும் தன் தகப்பன் வீட்டிலே வளர்க்கப்பட்டான். | யாத் 2:2-10 |
| 21 | அவன் வெளியே போட்டுவிடப்பட்டபோது, பார்வோனுடைய குமாரத்தி அவனை எடுத்துத் தனக்குப் பிள்ளையாக வளர்த்தாள். | யாத் 2:2-10 உபா 32:26 |
| 22 | மோசே எகிப்தியருடைய சகல சாஸ்திரங்களிலும் கற்பிக்கப்பட்டு, வாக்கிலும் செய்கையிலும் வல்லவனானான். | 1இரா 4:29 2நாளா 9:22 ஏசா 19:11 தானி 1:4 தானி 1:17-20 |
| 23 | அவனுக்கு நாற்பது வயதானபோது, இஸ்ரவேல் புத்திரராகிய தன்னுடைய சகோதரரைக் கண்டு சந்திக்கும்படி அவனுடைய இருதயத்தில் எண்ணமுண்டாயிற்று. | யாத் 2:11 யாத் 2:12 எபிரெ 11:24-26 |
| 24 | அப்பொழுது அவர்களில் ஒருவன் அநியாயமாய் நடத்தப்படுகிறதை அவன் கண்டு, அவனுக்குத் துணைநின்று, எகிப்தியனை வெட்டி, துன்பப்பட்டவனுக்கு நியாயஞ்செய்தான். | அப் 7:28 யோவா 18:10 யோவா 18:11 யோவா 18:25-27 |
| 25 | தன்னுடைய கையினாலே தேவன் தங்களுக்கு இரட்சிப்பைத் தருவாரென்பதைத் தன்னுடைய சகோதரர் அறிந்து கொள்வார்களென்று அவன் நினைத்தான்; அவர்களோ அதை அறியவில்லை. | அப் 14:27 அப் 15:4 அப் 15:7 அப் 21:19 1சாமு 14:45 1சாமு 19:5 2இரா 5:1 ரோம 15:18 1கொரி 3:9 1கொரி 15:10 2கொரி 6:1 கொலோ 1:29 |
| 26 | மறுநாளிலே சண்டைபண்ணிக்கொண்டிருக்கிற இரண்டுபேருக்கு அவன் எதிர்ப்பட்டு: மனுஷரே, நீங்கள் சகோதரராயிருக்கிறீர்கள்; ஒருவருக்கொருவர் அநியாயஞ்செய்கிறதென்ன என்று, அவர்களைச் சமாதானப்படுத்தும்படி பேசினான். | யாத் 2:13-15 |
| 27 | பிறனுக்கு அநியாயஞ்செய்தவன் அவனைப் பிடித்துத் தள்ளி: எங்கள்மேல் அதிகாரியாகவும், நியாயாதிபதியாகவும் உன்னை ஏற்படுத்தினவன் யார்? | அப் 7:54 அப் 5:33 ஆதி 19:19 1சாமு 25:14 1சாமு 25:15 நீதி 9:7 நீதி 9:8 |
| 28 | நேற்று நீ அந்த எகிப்தியனைக் கொன்றதுபோல என்னையும் கொன்றுபோட மனதாயிருக்கிறாயோ என்றான். |
| 29 | இந்த வார்த்தையினிமித்தம் மோசே ஓடிப்போய், மீதியான் தேசத்திலே சஞ்சரித்துக்கொண்டிருந்தான்; அங்கே இருக்கும்போது அவனுக்கு இரண்டு குமாரர்கள் பிறந்தார்கள். | யாத் 2:14-22 யாத் 4:19 யாத் 4:20 |
| 30 | நாற்பது வருஷம் சென்றபின்பு, சீனாய்மலையின் வனாந்தரத்திலே கர்த்தருடைய தூதனானவர் முட்செடி எரிகிற அக்கினிஜூவாலையிலே அவனுக்குத் தரிசனமானார். | அப் 7:17 யாத் 7:7 |
| 31 | மோசே அந்தத் தரிசனத்தைக் கண்டு, அதிசயப்பட்டு, அதை உற்றுப்பார்க்கும்படி சமீபித்துவருகையில்: | யாத் 3:3 யாத் 3:4 |
| 32 | நான் ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாகிய உன் பிதாக்களுடைய தேவனாயிருக்கிறேன் என்று கர்த்தர் திருவுளம்பற்றின சத்தம் அவனுக்கு உண்டாயிற்று, அப்பொழுது மோசே நடுக்கமடைந்து, உற்றுப்பார்க்கத் துணியாமலிருந்தான். | அப் 3:13 ஆதி 50:24 யாத் 3:6 யாத் 3:15 யாத் 4:5 மத் 22:32 எபிரெ 11:16 |
| 33 | பின்னும் கர்த்தர் அவனை நோக்கி: உன் பாதங்களிலிருக்கிற பாதரட்சைகளைக் கழற்றிப்போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமியாயிருக்கிறது. | யாத் 3:5 யோசு 5:15 பிரச 5:1 2பேது 1:18 |
| 34 | எகிப்திலிருக்கிற என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து, அவர்கள் பெருமூச்சைக்கேட்டு, அவர்களை விடுவிக்கும்படி இறங்கினேன்; ஆகையால், நீ வா, நான் உன்னை எகிப்திற்கு அனுப்புவேன் என்றார். | யாத் 2:23-25 யாத் 3:7 யாத் 3:9 யாத் 4:31 யாத் 6:5 யாத் 6:6 நியா 2:18 நியா 10:15 நியா 10:16 நெகே 9:9 சங் 106:44 ஏசா 63:8 ஏசா 63:9 |
| 35 | உன்னை அதிகாரியாகவும் நியாயாதிபதியாகவும் ஏற்படுத்தினவன் யார் என்று சொல்லி அவர்கள் மறுதலித்திருந்த இந்த மோசேயைத்தானே தேவன், முட்செடியில் அவனுக்குத் தரிசனமான தூதனாலே தலைவனாகவும் மீட்பனாகவும் அனுப்பினார். | அப் 7:9-15 அப் 7:27-15 அப் 7:28-15 அப் 7:51-15 1சாமு 8:7 1சாமு 8:8 1சாமு 10:27 லூக் 19:14 யோவா 18:40 யோவா 19:15 |
| 36 | இவனே அவர்களை அங்கேயிருந்து அழைத்துக்கொண்டுவந்து, எகிப்து தேசத்திலேயும் சிவந்த சமுத்திரத்திலேயும், நாற்பது வருஷகாலமாய் வனாந்தரத்திலேயும், அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான். | யாத் 12:41 யாத் 33:1 |
| 37 | இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்கள் சகோதரரிலிருந்து என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக எழும்பப்பண்ணுவார், அவருக்குச் செவிகொடுப்பீர்களாக என்று சொன்னவன் இந்த மோசேயே. | அப் 7:38 2நாளா 28:22 தானி 6:13 |
| 38 | சீனாய்மலையில் தன்னுடனே பேசின தூதனோடும் நம்முடைய பிதாக்களோடுங்கூட வனாந்தரத்திலே சபைக்குள்ளிருந்தவனும், நமக்குக் கொடுக்கும்படி ஜீவவாக்கியங்களைப் பெற்றவனும் இவனே. | யாத் 19:3-17 யாத் 20:19 யாத் 20:20 எண் 16:3-35 எண் 16:41-35 எண் 16:42-35 |
| 39 | இவனுக்கு நம்முடைய பிதாக்கள் கீழ்ப்படிய மனதாயிராமல், இவனைத் தள்ளிவிட்டு, தங்கள் இருதயங்களில் எகிப்துக்குத் திரும்பி, | அப் 7:51 அப் 7:52 நெகே 9:16 சங் 106:16 சங் 106:32 சங் 106:33 எசே 20:6-14 |
| 40 | ஆரோனை நோக்கி: எகிப்து தேசத்திலிருந்து எங்களை அழைத்துக்கொண்டுவந்த அந்த மோசேக்கு என்ன சம்பவித்ததோ அறியோம்; ஆதலால் எங்களுக்கு முன்செல்லும் தெய்வங்களை எங்களுக்கு உண்டுபண்ணும் என்று சொல்லி; | யாத் 32:1 |
| 41 | அந்நாட்களில் ஒரு கன்றுக்குட்டியை உண்டுபண்ணி, அந்த விக்கிரகத்திற்குப் பலியிட்டு, தங்கள் கையின் கிரியைகளில் களிகூர்ந்தார்கள். | யாத் 32:2-8 யாத் 32:17-20 உபா 9:12-18 நெகே 9:18 சங் 106:19-21 |
| 42 | அப்பொழுது தேவன் அவர்களை விட்டு விலகி, வானசேனைக்கு ஆராதனை செய்ய அவர்களை ஒப்புக்கொடுத்தார். அதைக்குறித்து: இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் வனாந்தரத்திலிருந்த நாற்பது வருஷம்வரையில் காணிக்கைகளையும் பலிகளையும் எனக்குச் செலுத்தினீர்களோ என்றும், | சங் 81:11 சங் 81:12 ஏசா 66:4 எசே 14:7-10 எசே 20:25 எசே 20:39 ஓசி 4:17 ரோம 1:24-28 2தெச 2:10-12 |
| 43 | பணிந்துகொள்ளும்படி நீங்கள் உண்டாக்கின சொரூபங்களாகிய மோளோகினுடைய கூடாரத்தையும், உங்கள் தேவனாகிய ரெம்பான் என்னும் நட்சத்திர சொரூபத்தையும் சுமந்தீர்களே; ஆகையால் உங்களைப் பாபிலோனுக்கு அப்புறத்திலே குடிபோகப்பண்ணுவேன் என்றும், தீர்க்கதரிசிகளின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறதே. | லேவி 18:21 லேவி 20:2-5 2இரா 17:16-18 2இரா 21:6 |
| 44 | மேலும் நீ பார்த்த மாதிரியின்படியே சாட்சியின் கூடாரத்தை உண்டுபண்ணுவாயாக என்று மோசேயுடனே பேசினவர் கட்டளையிட்டபிரகாரமாக, அந்தக் கூடாரம் வனாந்தரத்திலே நம்முடைய பிதாக்களோடு இருந்தது. | யாத் 38:21 எண் 1:50-53 எண் 9:15 எண் 10:11 எண் 17:7 எண் 17:8 எண் 18:2 யோசு 18:1 2நாளா 24:6 |
| 45 | மேலும், யோசுவாவுடனேகூட நம்முடைய பிதாக்கள் அதைப் பெற்றுக்கொண்டு, தேவன் அவர்களுக்கு முன்பாகத் துரத்திவிட்ட புறஜாதிகளுடைய தேசத்தை அவர்கள் கட்டிக்கொள்ளுகையில், அதை அந்த தேசத்தில் கொண்டு வந்து தாவீதின் நாள்வரைக்கும் வைத்திருந்தார்கள். | யோசு 3:11-14 யோசு 18:1 நியா 18:31 1சாமு 4:4 1இரா 8:4 1நாளா 16:39 1நாளா 21:29 |
| 46 | இவன் தேவனிடத்தில் தயவு பெற்றபடியினால், யாக்கோபின் தேவனுக்கு ஒரு வாசஸ்தலத்தைத் தான் கட்டவேண்டுமென்று விண்ணப்பம்பண்ணினான். | அப் 13:22 1சாமு 15:28 1சாமு 16:1 1சாமு 16:11-13 2சாமு 6:21 2சாமு 7:1 2சாமு 7:8 2சாமு 7:18 2சாமு 7:19 1நாளா 28:4 1நாளா 28:5 சங் 78:68-72 சங் 89:19-37 சங் 132:11 |
| 47 | சாலொமோனோ அவருக்கு ஆலயத்தைக் கட்டினான். | 2சாமு 7:13 1இரா 5:1-18 1இரா 6:1 1இரா 6:37 1இரா 6:38 1இரா 7:13-51 1இரா 8:20 1நாளா 17:1 2நாளா 2:1-4 சகரி 6:12 சகரி 6:13 |
| 48 | ஆகிலும் உன்னதமானவர் கைகளினால் செய்யப்பட்ட ஆலயங்களில் வாசமாயிரார். | உபா 32:8 சங் 7:17 சங் 46:4 சங் 91:1 சங் 91:9 சங் 92:8 தானி 4:17 தானி 4:24 தானி 4:25 தானி 4:34 ஓசி 7:16 |
| 49 | வானம் எனக்குச் சிங்காசனமும் பூமி எனக்குப் பாதபடியுமாயிருக்கிறது; எனக்காக நீங்கள் எப்படிப்பட்ட வீட்டைக் கட்டுவீர்கள்; நான் தங்கியிருக்கத்தக்க ஸ்தலம் எது; | 1இரா 22:19 சங் 11:4 எரே 23:24 மத் 5:34 மத் 5:35 மத் 23:22 வெளிப் 3:21 |
| 50 | இவைகள் எல்லாவற்றையும் என்னுடைய கரம் உண்டாக்கவில்லையா என்று கர்த்தர் உரைக்கிறார் என்று தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே. | அப் 14:15 யாத் 20:11 சங் 33:6-9 சங் 50:9-12 சங் 146:5 சங் 146:6 ஏசா 40:28 ஏசா 44:24 ஏசா 45:7 ஏசா 45:8 ஏசா 45:12 எரே 10:11 எரே 32:17 |
| 51 | வணங்காக் கழுத்துள்ளவர்களே, இருதயத்திலும் செவிகளிலும் விருத்தசேதனம் பெறாதவர்களே, உங்கள் பிதாக்களைப்போல நீங்களும் பரிசுத்த ஆவிக்கு எப்பொழுதும் எதிர்த்துநிற்கிறீர்கள். | யாத் 32:9 யாத் 33:3 யாத் 33:5 யாத் 34:9 உபா 9:6 உபா 9:13 உபா 31:27 2நாளா 30:8 நெகே 9:16 சங் 75:5 சங் 78:8 ஏசா 48:4 எரே 17:23 எசே 2:4 சகரி 7:11 சகரி 7:12 |
| 52 | தீர்க்கதரிசிகளில் யாரை உங்கள் பிதாக்கள் துன்பப்படுத்தாமலிருந்தார்கள்? நீதிபரருடைய வருகையை முன்னறிவித்தவர்களையும் அவர்கள் கொலைசெய்தார்கள். இப்பொழுது நீங்கள் அவருக்குத் துரோகிகளும் அவரைக் கொலைசெய்த பாதகருமாயிருக்கிறீர்கள். | 1சாமு 8:7 1சாமு 8:8 1இரா 19:10 1இரா 19:14 2நாளா 24:19-22 2நாளா 36:16 நெகே 9:26 எரே 2:30 எரே 20:2 எரே 26:15 எரே 26:23 மத் 5:12 மத் 21:35-41 மத் 23:31-37 லூக் 11:47-51 லூக் 13:33 லூக் 13:34 1தெச 2:15 |
| 53 | தேவதூதரைக்கொண்டு நீங்கள் நியாயப்பிரமாணத்தைப் பெற்றிருந்தும், அதைக் கைக்கொள்ளாமற்போனீர்கள் என்றான். | யாத் 19:1-20 உபா 33:2 சங் 68:17 கலா 3:19 எபிரெ 2:2 |
| 54 | இவைகளை அவர்கள் கேட்டபொழுது. மூர்க்கமடைந்து, அவனைப் பார்த்துப் பல்லைக் கடித்தார்கள். | அப் 5:33 அப் 22:22 அப் 22:23 |
| 55 | அவன் பரிசுத்த ஆவியினாலே நிறைந்தவனாய், வானத்தை அண்ணாந்துபார்த்து, தேவனுடைய மகிமையையும், தேவனுடைய வலதுபாரிசத்தில் இயேசுவானவர் நிற்கிறதையும் கண்டு: | அப் 2:4 அப் 4:8 அப் 6:3 அப் 6:5 அப் 6:8 அப் 6:10 அப் 13:9 அப் 13:10 மீகா 3:8 |
| 56 | அதோ வானங்கள் திறந்திருக்கிறதையும், மனுஷகுமாரன் தேவனுடைய வலதுபாரிசத்தில் நிற்கிறதையும் காண்கிறேன் என்றான். | அப் 10:11 அப் 10:16 எசே 1:1 மத் 3:16 மாற் 1:10 லூக் 3:21 வெளிப் 4:1 வெளிப் 11:19 வெளிப் 19:11 |
| 57 | அப்பொழுது அவர்கள் உரத்த சத்தமாய்க் கூக்குரலிட்டுத் தங்கள் காதுகளை அடைத்துக்கொண்டு, ஒருமனப்பட்டு அவன்மேல் பாய்ந்து, | அப் 7:54 அப் 21:27-31 அப் 23:27 |
| 58 | அவனை நகரத்துக்குப் புறம்பே தள்ளி, அவனைக் கல்லெறிந்தார்கள். சாட்சிக்காரர் தங்கள் வஸ்திரங்களைக் கழற்றி, சவுல் என்னப்பட்ட ஒரு வாலிபனுடைய பாதத்தினருகே வைத்தார்கள். | எண் 15:35 1இரா 21:13 லூக் 4:29 எபிரெ 13:12 எபிரெ 13:13 |
| 59 | அப்பொழுது: கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளும் என்று ஸ்தேவான் தொழுதுகொள்ளுகையில், அவனைக் கல்லெறிந்தார்கள். | அப் 2:21 அப் 9:14 அப் 9:21 அப் 22:16 யோவே 2:32 ரோம 10:12-14 1கொரி 1:2 |
| 60 | அவனோ, முழங்காற்படியிட்டு: ஆண்டவரே, இவர்கள்மேல் இந்தப்பாவத்தைச் சுமத்தாதிரும் என்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னான். இப்படிச் சொல்லி, நித்திரையடைந்தான். | அப் 9:40 அப் 20:36 அப் 21:5 எஸ்றா 9:5 தானி 6:10 லூக் 22:41 |